எந்திரன் - வி.தா.வ,ராவணன் படத்திற்கு பிறகு ரகுமான் போட்டிருக்கும் அசுர மொக்கை தான் இது என்ற உண்மையை சி.டி வாங்காத காரணத்தாலும்,என்னிடம் ஹெட் செட் இல்லாத காரணத்தாலும் ஆகா ஓஹோ என்று பொய்யாக வாயால் வெடிக்கிறேன்.எதுல கேட்டா என்ன,எப்படி கிடைச்சா என்ன மொக்கை மொக்கை தான். ஆடத் தெரியாத ஆட்டக்காரி தெருக்கோணல் என்று சொன்னாளாம். ஆஸ்கர் தான் ரகுமான் உச்சம் என்று நினைத்து விட்டார் போலும்.அதனால் உச்சத்திலிருந்து சரிய ஆரம்பித்திருக்கிறார். எங்கே பிடிக்கவில்லை என்று சொன்னால் அன்னம்,தண்ணி புழங்கக் கூடாது என்று சொல்லி விடுவார்களோ என்று பயம் பதிவுலகிலும் இருக்கிறது.
சாரு இன்று கேப்டன் டிவியில் வருகிறாராம். கலக்குவேன்,கலக்குவேன்,கட்டம் கட்டிக் கலக்குவேன் என்று சொல்லி விட்டு விஜய் டிவிக்கு போனார்.ஆனால் அவர் கலங்கி போய் மன்னிப்பு கேள் சீரிஸ் எழுதினார். கேப்டன் டிவியில் எதுவும் ஏடாகூடமாக கேட்டு விடக்கூடாது. பிறகு அடுத்த சீரிஸ்.ஒரே அடியில் அடித்து வெளுத்துக் கொண்டிருந்த சாரு இன்று பல முறை அடிக்கிறார்.அவரும் பார்ம் இழந்து விட்டாரா என்ன.
சாரு கடற்கரையில் அவசரத்திற்கு ஒதுங்கி மண் போட்டு மூடினால் கூட போட்டோ போட்டு சுற்றுப்புறச் சூழலையே கெடுத்து விட்டார் என்று விமர்சனம் செய்கிறவர்கள் அவர்களை விமர்சனம் செய்தால் மட்டும் தாங்க முடியாமல் பஸ்ஸில் ஏற மாட்டேன்.டாக்ஸி ஓட்ட மாட்டேன் என்று ஒதுங்குவது சரியா.எல்லா நாளும் நாமே அடிக்க முடியுமா என்ன.ஒரு நாள் நமக்கும் அடி விழத்தான் செய்யும்.அப்படி விமர்சனத்திற்கு பயந்தால் யாரையும் அடிக்காமல் இருக்க வேண்டியது தானே.
கௌதம் மேனன் தோளுக்கு மேல் தலை இருப்பவர்களுடன் தான் வேலை செய்வாராம்.தலைவர் இங்கிலீஸ் படத்தை அடிக்கிறார் என்று பார்த்தால் விஜய் டிவியில் அவர் எங்கிருந்து அடித்தார் என்று டப்பிங் படங்கள் மூலம் காட்டி விடுகிறார்கள். காக்க காக்க - பேக் லாஷ் என்ற படம். நடுநிசி நாய்கள் பீரிட் என்று படத்திலிருந்து அடித்திருக்கலாமா என்ற சந்தேகம் வராமலில்லை.
ஜாக்கி அண்ணனின் பதிவை சுட்டு விட்டார்கள் என்றதும் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தானிருந்தது. பாக்யாவில் போட்டால் கண்டுப்பிடிக்க முடியாது என்று நினைத்து விட்டார் போலும்.தண்ணிக்குள் விட்ட காத்து வெளியே வந்து தான் தீரும். காலஹாரி இலக்கியத்திற்கு அனுப்பும் என்னுடைய இலக்கியமான குறிப்புகளை எல்லாம் திருட வேண்டாம். பிறகு தமிழ் நாட்டில் எனக்கு கட் அவுட் வைத்து விடுவார்கள். எனக்கு அலாஸ்காவே போதும்.
ஜெயமோகன் தரத்திற்கு சுஜாதாவால் விஞ்ஞானச் சிறுகதை எழுத முடியாதது உண்மை தான் போல. அதை சுஜாதா இருக்கும் போதே சொல்லியிருக்கலாம். இத்தனை வருடம் கழித்து தான் தெரிந்து போல. ஜெயமோகன் இலக்கிய உலகின் சிம்பு போல. வம்பு இழுத்தே காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது.சுறா படத்தில் விஜய டி.ராஜேந்தரை நக்கல் விட்டதால் பொறுத்திருந்து ஒரு காரணம் காட்டி 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டாராம். காலக் கொடுமையடா சாமி.அது மாதிரி நீங்கள் அடுத்து குறி வைத்திருப்பது யார் என்று ஒரு க்ளூ கிடைத்தாலும் ஸ்கீரின் ஷாட் எடுக்க வசதியாகயிருக்கும்.
Tuesday, August 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த ஸ்கீரின் ஷாட் கலாச்சாரம் தமிழனைப் பிடித்த வியாதியா.
வியாதி தான்..இலக்கியவியாதி..
கொடியும், தோலை உரிச்சிப்புடுவேனும் டேலி ஆகல # ஸ்க்ரீன் ஷாட்!
Post a Comment