இடி அமீன் முதலில் உதவி சமையல்காரனாக பிரிட்டன் துப்பாக்கி பிரிவில் சேர்ந்தார்.அதிலிருந்து அவர் உகாண்டாவின் ஜனாதிபதி ஆனது உலக வரலாற்றிலேயே அதிசயம் தான். தபால் பெட்டியில் தீயைக் கொளுத்தி போடும் போது வேடிக்கை பார்த்து மாட்டிக் கொண்டவன் எல்லாம் சுதந்திரப் போராட்டத் தியாகி என்று நக்கல் அடிப்பார்கள்.அது மாதிரி தான் இடி அமீனும் பர்மீயப் போரில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டார்.பிரிட்டீஷ் அவர்கள் அறியாமலே இடி அமீனை வளர்த்து விட்டார்கள். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக பதவி உயர்வும் பல்வேறு நாடுகளில் நடந்த போரில் பங்கேற்ற அனுபவமும் இடி அமீனை முழுமையாக உருவாக்கியது.
பிரதமர் ஓபோடேவும் சேர்ந்து அவரை வளர்ந்து விட, கடத்தலில் ஈடுபடுத்த, எதிர்ப்பவர்களை அழிக்க என்று இடி அமீனை எல்லா விஷயத்திலும் முன்னிருந்த வளர்த்த கிடா மார்பில் பாயயிருப்பது தெரிந்து கொஞ்சம் கட்டிப் போட்டு கசாப்பு கடைக்கு அனுப்பும் நேரத்தில் அமீன் பாய்ந்து முட்டி ஆட்சியை பிடித்து விட்டார்.
புரட்சியாளர்கள் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் இழக்கும் முன் மூன்று ஆண்டுகள் கடந்திருக்கும். அது தான் அமீன் விஷயத்திலும் நடந்தது. சுதாரித்தவர்கள் கொல்லப்பட்டார்கள். அதன் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையிருக்கும்.ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கைக்குட்டையால் கொலை செய்வது எப்படி என்று செய்து காட்டினாராம்.
அவருடைய மூன்று மனைவியையும் ஒரே நேரத்தில் ரேடியோ மூலம் விவாகரத்து செய்தார். அவர் இரண்டாவது மனைவிக்கும் டாக்டருக்கும் ஏற்பட்டத் தொடர்பில் உருவான கருவை கலைக்கும் போது இரண்டாவது மனைவி இறந்து விட அதை மறைக்க துண்டுத் துண்டாக வெட்டி மறைக்க முடியாமல் டாக்டரும் தற்கொலை செய்து கொள்கிறார்.இது புனைவில் எப்படி மாறியது என்று அடுத்த பதிவில் பார்ப்போம். இப்படித்தான் வண்ணாந்துறையில் நாடா திருடிய கேஸ் எல்லாம் மாறி விடுகிறது.
இடி அமீன் மனிதர்களைத் தின்பவர் என்ற வதந்தி கூட உண்டு.வாயும் கொஞ்சம் நீளம் தான்.ஹிட்லர் யூத மக்களைக் கொன்றது சரி தான் என்று சொல்லி வம்பிழுத்தவர். தான்சேனியாவுடன் ஏற்பட்ட சண்டையில் நாட்டை விட்டு ஓடி சவுதி அரேபியாவில் தஞ்சமைந்தார்.
1976ம் ஆண்டு நடந்த ஏர்-பிரான்ஸ் விமான கடத்தல் வரைக்கும் தான் அடுத்த இரண்டு பதிவுகளும் விவாதிக்கப் போவதால் இதோடு இடி அமீன் முடிவடைகிறார்.
Sunday, August 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தங்களிடம் வேலை செய்பவர்களைக் கட்டுக்குள் வைக்க பிரிட்டீஷார் தகுதியில்லாத ஒருத்தனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முன்னுக்கு கொண்டுவருவார்கள்.
அப்படி கொண்டுவரப்படுவர் அவர்களுக்கு அடிமையாக இருப்பார்.நல்ல தகுதியுள்ளவர்களோ அதை எதிர்த்தால் உள்ளதும் போய்டுமோ என்ற பயத்தில் இருப்பதால் அமைதியாய் சகித்துக் கொள்வார்கள்
தற்போது சில பண்னாட்டு நிறுவனங்களில் கூட அதைப் பார்க்கமுடியும் .
உண்மை தான் ரிஷபன்..
Post a Comment