Thursday, August 19, 2010

முகிலனுக்கு தெரியுமா நான் தோல(ள)ர் என்பது

முகிலன் உங்களுக்கு தெரியுமா நான் பிறந்த உடன் தோலர் ஆகி விட்டேன்.(தோலினால் உடம்பு செய்யப்பட்டதால் அல்ல) புரட்சியாளர் என்பதால். நான் பிறந்த உடன் பாளையங்கோட்டை வேளாங்கன்னி மருத்துவமனையில் இருந்த உறவினர்களுக்கு மட்டும் மிட்டாய் கொடுத்தார்கள். எனக்கு கோபத்தில்  தோள் தினவெடுத்து சாக்லேட் தந்து கொண்டிருந்த என் தங்கைக்கு ஒரு உதை விட்டு எல்லோருக்கும் கொடுக்க சொன்னேன்.அதிலிருந்து புரட்சியாளரைத் தோளர் என்று சொல்லி விட்டார்கள்.

நீங்கள் அது தெரியாமல் என்னுடன் பழகி வருகிறீர்கள். நான் தான் என் வலைப்பூ பெயரையே இரும்புத்திரை என்று தோழர்களின் நாட்டைக் குறிக்கும் சொல்லை வைத்திருக்கிறேனே. மேலும் என் புத்தக விற்பனையால் தோழர்கள் விற்ற அலாஸ்காவை வாங்க அங்கு லட்டு என்ற காவியத்தை விற்றுக் கொண்டிருக்கிறேன். அதை தடை செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கலஹாரி இலக்கியம் படிக்க நைச்சியமாக என்னை அழைத்து அழிக்க பார்த்தீர்கள். நல்ல வேளை நான் ஏற்கனவே எந்திரம் படம் பார்த்து விட்ட காரணத்தால் அங்கு ரோபோவை அனுப்பி வைத்து தப்பித்துக் கொண்டேன்.

படம் வெளியாகி நூறு ஒளியாண்டுகள் ஆனப்பின் எந்திரம் விமர்சனம் எழுதினால் மக்களிடம் தாக்கமோ வீக்கமோ ஏற்படாது என்று காரணத்தால் அதை எழுதவில்லை.இதிலிருந்தாவது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா. அதை விட்டு விட்டு புரட்சி என்று எழுதி ஹிட்ஸ் கிடைக்காது என்று பொய் வேறு சொன்னால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.உங்களுக்கு ஹிட்ஸ் கிடைக்காது என்று நீங்கள் கட்டிய புரளியை உடைக்க என்னால் முடிந்த அளவு உங்கள் தளத்தில் குதித்து விளையாடினேன்.தயவு செய்து ஒத்துக் கொள்ளுங்கள் நான் புரட்சியாளன் என்பதை.

எந்திரன் தான் ஏழை மக்களை ஏழை ஆக்குகிறது என்று சொன்னால் உங்களுக்கு ஏன் புரியவில்லை. அது பார்க்காமலிருந்தால் அந்த பணத்தை உழைத்த அலுப்பு தீர டாஸ்மாக்கில் குடுத்து விடுகிறார்கள்.அதை பற்றி நாங்கள் என்றாவது கண்டித்திருக்கிறோமா. எந்திரன் பத்து தடவை மக்கள் பார்க்காமலிருந்தால் அதை வைத்து இன்னொரு எந்திரன் எடுத்து விடலாம் அதாவது உங்களுக்கு தெரியுமா.அப்படி ஏழை மக்கள் எல்லாம் எந்திரம் படம் எடுத்து விடக்கூடாது என்பதற்காக நீங்கள் எந்திரனை  தாங்கிப் பிடிக்கிறீர்கள் என்று தெரிகிறது.இதெல்லாம் உங்கள் நடுத்தர வர்க பேத சிந்தனையைக் காட்டுகிறது. முதலாளித்துவ சிந்தனையில் இருந்து நடுத்தர வர்க்க சிந்தனைக்கு மாற்றியதே தோழரான எனக்கு வெற்றி தான். எப்படியும் போராடி போராடி உங்களுக்கு ஏழை சிந்தனை ஊற்றி மாற்றி காட்டா விட்டால் நான் தோழர் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் இவ்வளவு நாளாக நான் சாருவுக்கு கொடுத்து வந்த ஆதரவு,ஹிட்ஸ்,பட்ஸ் எல்லாம் வாபஸ் வாங்குகிறேன். அவர் எப்படி இப்படி உண்மையை சொல்லி தோழர்களை அதுவும் தோழரான என்னை இப்படி அசிங்கப்படுத்தலாம்."இந்தியாவில் உள்ள எல்லா குடிமக்களையும் பிச்சைக்காரர்களாக்குவதற்கு கம்யூனிஸ்டுகளிடம் உரிய திட்டம் இல்லாததுதான்." இப்படி எல்லாம் சொன்னாலும் போராட்டம் நிற்காது.சாரு மனதிலும் நடுத்தர வர்க்க சிந்தனை ஓடுவது எனக்கு பெரிய அதிர்ச்சி.

இப்படியே எழுதி அமெரிக்க ஏகாபத்தியத்திடமிருந்து ஒரு நாளில்லை ஒரு நாள் நான் அலாஸ்காவை மீட்டு சகத் தோழர்களிடம் கொடுப்பேன்.இல்லா விட்டால் இப்படி எழுதியதற்கு அலெக்ஸாவில் உரிய இடத்தை அடைவேன். எந்திரன் விமர்சனம் ஏதாவது ஒரு தோழர் பதிவில் குறிப்பாக அறிமுக எழுத்தாளர் கம் புரட்சியாளர் வினவு தளத்தில் வந்தால் அன்று வந்து நாக்கைப் பிடுங்குமாறு கேளுங்கள். ஏன் நீங்கள் மட்டும் எந்திரன் பார்த்தீர்கள் என்று உங்கள் வீட்டிலிருக்கும் பியந்து போன விளக்குமாறால் சாத்துங்கள். நாங்கள் வாங்கி கொள்கிறோம்.அதுவரை எந்திரனைப் புறக்கணிப்போம் என்று கோஷத்தில் எங்கள் வேஷத்தில் தலையிட்டு பரிந்துரையில் பங்கு கேட்காதீர்கள். நாங்கள் அலாஸ்காவை தான் விட்டு விட்டோம். தமிழ் மண பரிந்துரையை விட மாட்டோம்.இப்படி தொடர்ந்து புரட்சி எண்டு எழுதினால் உங்களுக்கு மகுடம் கிடைத்து விடும் என்று நினைத்து விட வேண்டாம் .அதற்கு முப்பது தோழர்கள் தேவை.நீங்களும் எந்திரனைப் புறக்கணித்தால் ஒரு நிமிடம் உங்களை மகுடத்தில் உட்கார வைத்து அழகு பார்ப்போம். அதையும் மீறி ஆதரவு தந்தால் உங்கள் வீட்டுக்கு தோழர்கள் வந்து முற்றுகையிருவார்கள்.பிறகு எல்லோரும் ஒரு முறை துப்பினாலே போதும் உங்கள் வீடே எச்சில் வெள்ளத்தில் மூழ்கி விடும். அதுவும் அங்கு வர நீங்கள் எங்கள் எல்லோருக்கும் டிக்கெட் எடுத்து தர வேண்டும்.

11 comments:

நீ தொடு வானம் said...

அது எப்படி நீங்கள் பிறந்ததும் உங்கள் தங்கை மிட்டாய் தந்தாள்

இரும்புத்திரை said...

எந்திரனைப் புறக்கணித்தால் தமிழக மீனவன் பிரச்சனை தீரும் போது நான் பிறந்த அன்று ஏன் என் தங்கை மிட்டாய் கொடுக்கக்கூடாது. இங்க மட்டும் கேள்வி கேக்கப்படாது.எல்லா இடத்திலும் கேட்க வேண்டும்.

Srividhya R said...

Charu nithyanandava pugazhndhutu vaapas vangararu ning avara pugazhdhutu vaapas vangaringa....

Renga said...

//உங்கள் வீட்டுக்கு தோழர்கள் வந்து முற்றுகையிருவார்கள்.பிறகு எல்லோரும் ஒரு முறை துப்பினாலே போதும் உங்கள் வீடே எச்சில் வெள்ளத்தில் மூழ்கி விடும்//

haha.... absolutely you are right...useless communists can do only these sort of non-sense... In toto communists are public nuisance...

Unknown said...

இவங்கள நெனச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது.....எதுக்கெடுத்தாலும் புறக்கணி புறக்கணின்னு சொல்றாங்க...:):):)

Unknown said...

to follow up :)

நசரேயன் said...

காஷ்மீர் பிரச்சனைக்குமே எந்திரன் படம் வரலைன்னா தீர்வு கிடைச்சி இருக்குமுன்னு சொல்லுறாங்களே, உண்மையா இருக்குமோ ?

senthil velayuthan said...

நான் பிறந்த உடன் பாளையங்கோட்டை வேளாங்கன்னி மருத்துவமனையில் இருந்த உறவினர்களுக்கு மட்டும் மிட்டாய் கொடுத்தார்கள். எனக்கு கோபத்தில் தோள் தினவெடுத்து சாக்லேட் தந்து கொண்டிருந்த என் தங்கைக்கு ஒரு உதை விட்டு எல்லோருக்கும் கொடுக்க சொன்னேன்

eppadi aiya eppadi ellam unkalala mattum mudiyuthu------------

senthil velayuthan said...

எந்திரன் தான் ஏழை மக்களை ஏழை ஆக்குகிறது என்று சொன்னால் உங்களுக்கு ஏன் புரியவில்லை. அது பார்க்காமலிருந்தால் அந்த பணத்தை உழைத்த அலுப்பு தீர டாஸ்மாக்கில் குடுத்து விடுகிறார்கள்.அதை பற்றி நாங்கள் என்றாவது கண்டித்திருக்கிறோமா. எந்திரன் பத்து தடவை மக்கள் பார்க்காமலிருந்தால் அதை வைத்து இன்னொரு எந்திரன் எடுத்து விடலாம் அதாவது உங்களுக்கு தெரியுமா

ithuvum eppadi.

Unknown said...

கலக்கிட்ட அர்விந்து..

ஆனாலும் பாரு எந்திரனை நான் புறக்கணிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

நான் ஒருதடவை முடிவெடுத்துட்டேன்னா அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்.

கார்க்கிபவா said...

தோழர்,
முகிலன் என்று சொல்லாமல் தோழர்.முகிலன் என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்புடன்,
தோழர்.கார்க்கி