Sunday, August 22, 2010

தோழர்கள் அப்டேட்ஸ்

முதல் முறையாக என் பஞ்சரான பஸ்,ப்ளாக்,டிவிட்டர் எல்லாமே தோழர்களால் தான் பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கிறது.(இதோ பார்றா.அந்த பணத்தினால் கடலுக்கு அடியிலிருக்கும் என் வீட்டிற்கு போக பாலம் அமைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது).இனி வாராவாரம் கொத்து புரோட்டா மாதிரி தோழர்கள் புரோட்டா வரும். புரட்சியைப் புரட்டி எடுப்பதே இனி எனக்கு வேலை.

நான் பாட்டுக்கு செவனேன்னு ராஜி,அமர்,ஐஸ் காபி,அலாஸ்கா,லட்டு என்று சொற்சமாதி எழுதிக்கிட்டு இருந்தா ஜூனியர் கென்னு என்று திட்டுகிறார்கள்.. நான் அவர் அளவிற்கு கோபமோ புனைவோ இன்னும் எழுதி தொலைக்கவில்லை.மிக முக்கியமாக குருஜி என்னை பார்த்து "ஐ ல" என்று கூட சொல்லவில்லை. அப்புறம் என்னை எப்படி சொல்லாம் எந்திரனை மட்டும் புறக்கணிக்க வேண்டாம் எல்லா படத்தையும் புறக்கணியுங்கள் என்று சொன்னால் காமெடி செய்யாதே என்று சொல்கிறார்கள். காமெடியில் வினவை மிஞ்ச முடியுமா. நான் ஏதாவது உதாரணம் தந்தால் எப்படி எங்களை குற்றம் சொல்லலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் மங்களூர் சிவா,அபி அப்பா,குசும்பன் என்று ஒரு ஒரமாக நிற்பவர்களை உள்ளே இழுத்து விடுவார்கள்.நியாயம் என்பது அவர்களுக்கு ஒரு மாதிரியும் அடுத்தவர்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கிறது.

அதனால் நான் தோழராக மாற முடிவு செய்து விட்டேன். நானே பெண் பெயரில் எழுதி அவர்கள் தரப்பிலிருக்கும் தோழர்கள் யாராவது கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று பழியைப் போட்டு விட்டு இரும்புத்திரையில் முடிந்த அளவு காறித்துப்பி டிசைன் டிசைனாக மன்னிப்பு கேட்க சொல்லி விட்டு இருபது நாள் பன்னாடை என்று திட்டி இன்னும் முடிந்தால் நாலு மிதிமிதித்து விட்டு மூன்று மாதம் கழித்து நான் தனி மனித தாக்குதல் நடத்துவேனா என்று சொல்லி புரட்சி செய்ய வேண்டியது தான். அப்புறம் அனானியாக மாறி இல்லையென்றால் அனானியாக மாறி ஒருத்தனைத் திட்ட சொன்னால் வழக்கம் போல இன்னொருவரையும் சேர்த்து திட்டு அனானிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.நீங்கள் அனானியைக் கேட்க வேண்டியது தானே என்று சொல்லி விட்டால் புரட்சியாளர் கோர்ஸ் முடிந்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டு புரட்சி செய்யலாம்.

தோழர் ஏழர விரும்பும் ஒரு பின்னூட்டவாதி

மூணு மாசம் முன்னாடி நின்றுக் கொண்டும் தற்போது உட்கார்ந்தபடியே போகிறாராம். இது புரட்சியா என்று கேட்கிறார்.ஏங்கே போகிறார் தனி மனித தாக்குதல் நடத்தவா என்று கேட்டேன்.தோழர் உன்னை காமெடி என்று சொல்வது இதனால் தான்.நான் செல்வது தனி மனித அவசரத்திற்கு என்றார். நான் சொன்னேன் யார் மேலும் தெறித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று.

தோழர்கள் கூட துப்பும் போது யார் மீதும் தெறிக்காதாம்.காரணம் மல்லாக்க படுத்து கொண்டு துப்பினால் எப்படி அடுத்தவர் மீது தெறிக்கும்.

எதில் எல்லாம் புர்ச்சி செய்கிறார் என்று அலுத்தப்படியே ஒரு முட்டை புர்ஜியை உள்ளே தள்ளினேன்.

புரட்சி என்று சொல்வதால் தான் தோழர்களுக்கு கோபம் வருகிறது.உண்மையான வார்த்தை புர்ச்சியாம். இனி அப்படியே சொல்லுங்கள்.தோழர்கள் என்று சொன்னாலும் கோபம் வருகிறது.அதற்காக தோழிகள் என்று சொல்ல முடியுமா.

என்னதான் எனக்கு அவர்கள் மேல் கோபமிருந்தாலும்,அவர்களுக்கு என் மேலிருந்தாலும் அலாஸ்காவை மீட்டுத் தருவேன் என்ற வாக்குறுதியை மீற மாட்டேன்.(நல்ல வேளை கஜகஸ்தான் மீண்டும் சேர்ப்பேன் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால் முந்திரி கொத்து விற்க வேண்டியது தான்)

6 comments:

நீ தொடு வானம் said...

நான் சொன்னதை எல்லாம் எழுதினால் தோழர் ஏழர என்ன நினைப்பார்.

இரும்புத்திரை said...

கூட்டுப் பெருங்காயம் (கூட்டாக சேர்ந்து அடித்தால் பெருங்காயம் ஏற்படும்) என்று நினைப்பார். இனி எந்திரன் தலைப்பில் தமிழ்மணத்தில் புறக்கணிப்பு நடக்கும்.நானும் புறக்கணிக்க போகிறேன்.

thiagu1973 said...

ஏன் இரும்பு திரை இன்னும் வினவு டவுசரை கழட்டிட்டே இருக்கீங்க

இரும்புத்திரை said...

தியாகு தற்போது உங்கள் தளத்தில் தானிருக்கிறேன்.உங்களைப் பற்றி சொன்னதற்கு தான் காமெடி என்று சொல்கிறார்கள்.டிவிட்டரில் விவாதம் போகிறது.

கார்க்கிபவா said...

:))

Anonymous said...

டவுசர் கழற்றும் வாரமோ!