என்னை மாதிரி சின்னப்பசங்க சொன்னா யாருமே காது கொடுத்து கேக்குறதேயில்லை.போட்ட சண்டையால பரிந்துரை போச்சு.இப்பவாது நான் சொல்றதை கேளுங்க.முகப்பில் தெரிந்து கொண்டேயிருக்கலாம்.
நமக்கு யாருமே பின்னூட்டம் போடலையேன்னு வருத்தப்பட்டு மூலையில் முடங்கி விடக்கூடாது.நமக்கு நாமே திட்டம் மாதிரி பத்து நிமிஷத்து ஒருமுறை நமக்கு நாமே திட்டத்தில் பின்னூட்டம் போடணும்.ஒரே பெயர்ல போட முடியலையா வேற வேற பெயர்ல போடணும்.நம்ம பதிவு முகப்பில் தெரிந்து கொண்டேயிருக்கும்.இல்லை யாருக்காவது பின்னூட்டம் போடலாம்.டெரர் மாதிரி பின்னூட்டம் இருக்கணும்.அப்படி பதிவைப் படிக்கிற கூட்டம் புரோபைல் வழியா நமக்கு வந்துரும்.இப்படி வழியிருக்கான்னு ஆச்சர்யப்படக் கூடாது.அதனால் யாருக்காவது பின்னூட்டம் போட்டுகிட்டேயிருந்தா வேலை போயிரும்.பின்ன முழு நேரமா அதே வேலையை செய்யலாம்.
இன் முழு பதிவும் ஒரே தடவையில் எழுதுறதை விட ஒவ்வொரு பத்தியா தனித்தனி பதிவா போடலாம்.(உண்மைத்தமிழன் அண்ணன் இந்த மாதிரி போட்டியில் ஜெயிப்பார்.அதனால் கப்பை தனியா எடுத்து வைத்து விடவும்).சரி அவர பீர் பண்ண ஒரே வழி தான்.ஒவ்வொரு வரியா பதிவு போடலாம்.பதிலுக்கு அவரும் போட்டா என்னவாகும்.
இல்லை லேபிள் இப்படி வைங்க - அனுபவம்,நையாண்டி,மொக்கை,நகைச்சுவை,நிகழ்வுகள்,சினிமா,திரைப்படம்,விமர்சனம்,சமையல்,கவிதை, சிறுகதை,அரசியல்,சமூகம் - இப்படி தமிழ்மணத்தில் தெரியும் குறிஸ்சொல்லை எல்லாம் நம்ம லேபிளில் போடணும்.சினிமாவுக்கு தனியா தமிழ்மணம் ஒரு பக்கம் ஒதுக்கி இருக்காங்க.அதை தூக்கிற வரைக்கும் நாம ஒயக்கூடாது.
பாஸ் தமிழிஸ்ல பிரபலம் ஆக என்ன வழியா எல்லாத்தையும் நானே சொல்லணுமா.ஒரு பத்து பெயர்ல ஐடி கிரியேட் பண்ணுங்க.ஓட்டை குத்துங்க.
இன்னும் ஒரு வழி இருக்கு - தமிழிஸ்ல டிரெண்டுக்கு ஏத்த மாதிரி குறிச்சொற்கள் மாறும்.உதாரணம் சச்சின்,சிங்கம்,சுறா,நித்யானந்தா இப்படி அதனால பதிவு தலைப்பு இப்படி வைக்கணும்.சிங்கம் எழுதும் பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய அல்லது சிங்கம் - பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய இப்படி வைக்கணும்.அவசரக்குடுக்கை மாதிரி நித்யானந்த எழுதும் பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய அப்படி வைச்சுக்கிட்டு மிதி வாங்க கூடாது.அடுத்த் வார டிரெண்ட் ராவணன்.எழுதப் போகும் எல்லா பதிவின் தலைப்பிலும் ராவணன் என்றே வைக்கவும்.
பிரபலம் ஆகணும் என்ற ஆசையில் எல்லா திரட்டியிலும் இணைக்க ஆசைப்படக்கூடாது.அப்புறம் உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா மாதிரி பதிவு மட்டுமல்ல உங்க ப்ளாக்கே போயிரும்.
இதை படிச்சுட்டு இதே மாதிரி எல்லாம் பண்ணாதீங்க.எதையும் ப்ளான் போடாம பண்ணப்புடாது.
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
.பாஸ் உங்களுக்கு நாதாரித்தனத்தை கூட நாசூக்கா பண்ண தெரியாதா.சமையல் லேபிள் கூட விடக் கூடாதா.வாயில் எச்சில் ஊருது.வித் யுவர் பெர்மிஷன் எங்கே துப்பணும்.
துப்பலாம்.ஆனா ஒரே ஒரு கண்டிஷன் தான்.மல்லாந்து படுத்துகிட்டு துப்பணும்.
Crazy. I am talking about you two only =))
அனாமிகா நான் குழுமம் இல்லை.தனி ஆள்.தனி ஆள்(ஐயோ ரெண்டு தடவை சொல்லிட்டேனே)
பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.
எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கு..
சமையல் label வழியா தான் இந்த பதிவுக்கு வந்தேன் .. சரி , profile ல "குறு குறு நு முறைக்கிறது " யாருங்க ?
நான் அவன் ஆமா
Post a Comment