இன்று சுதந்திர தினம் பற்றி யாரும் பேச மாட்டார்கள்.இந்தியா இலங்கை போட்டியைப் பற்றி பேசுவோம். இலங்கை இன்று தோற்கப் போகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமலிருப்பது உத்தமம். நம் எல்லையில் இருக்கும் போது அவர்கள் எல்லையில் இருந்து சிங்கள டாக்ஸ் சுட்டாலும் நாளை பிரணப் சொல்வார்.நாம் தான் எல்லைத் தாண்டக் கூடாது.குண்டு எல்லை தாண்டி வந்து மீனவர்களைத் தாக்கினால் நாம் பாதுகாப்பு தர முடியாது என்று.ஒரு மலையாள மீனவன் சாகட்டும் பார்க்கலாம். நாடாளுமன்றம் அமளி துமளி ஆகி விடும்.அதே நிலை தான் தெலுங்கு பேசும் மீனவன் இறந்தாலும் துமளி அமளி ஆகி விடும்.இப்படி விட்டுக் கொண்டு இருங்கள்.பிறகு மெரினாவில் கால் நனைத்தாலும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் என்று பிரணப் முழங்குவார்.அன்றாவது தந்தி அடிக்காமல் இருக்க வேண்டும்.தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்து விடுவோம் என்று தோழர்கள் பார்வையில் பாப்பானாக இருக்கும் பாரதி சொன்னார்.உணவுக்கே ஜகம் என்றால் உயிருக்கு ராஜபக்சே மயிர் திருப்பதியில் காணிக்கையாக்கப்படும்.
அடிக்கடி சொல்வார்கள்.நானும் அதை நம்புகிறேன்.சினிமாகாரர்கள் வாயில் வருவது எல்லாம் பொய் தான்.சாருவை நீங்கள் இளமையாக இருக்குறீர்கள் என்று சேரன் முதல் மிஷ்கின் வரை சொல்லும் போது சாருவும் சினிமாகாரர் ஆகி விட்டார் என்று தெரிகிறது.எப்படி நான் ஜெயமோகன் தளம் படிப்பதில்லை என்று சொல்கிறார்.பிறகு எப்படு இவ்வளவு நேர்த்தியாக பகடி செய்ய முடியும்.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உண்மை வந்து விடுகிறது.
முற்போக்குவாதிகள் என்று காட்டிக் கொண்டு அடுத்த மதத்தை வெளுக்கும் போது சும்மா இருப்பவர்களும், இல்லை கூட சேர்ந்து வெளுப்பவர்களும் தன் மதம்,ஜாதியை சொல்லும் போது பாய்ந்து வரும் போது செம காமெடியாக இருக்கிறது. ஒன்று எல்லா சந்தர்ப்பத்திலும் எதுவுமே சொல்லாமல் இருப்பது இல்லை எந்த மதத்தை அடித்தாலும் தட்டிக் கேட்டால் மட்டுமே நான் முற்போக்குவாதி என்று ஒத்துக் கொள்வேன் என்று முற்போக்குவாதிகளின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்.
போலி சுதந்திரம் என்று போலித்தனத்தை எல்லாம் சாடுபவர்கள் ஏன் போலியாக இருக்கிறார்களோ தெரியவில்லை. நான் பெண்களை ஏதாவது சொன்னால் கழன்று விடும் நிலையில் டவுசர் இருந்தாலும் இறுக்கிக் கட்டிக் கொண்டு துப்பும் போலிகள் ஆணுக்கு அதே நேரும் போது நல்லாயிருக்கும் டவுசர் பட்டனைப் பிய்த்து ஏன் தைப்பது போல் நடிக்கிறார்களோ தெரியவில்லை. ஆணாதிக்கம் என்று அடுத்தவர்களைக் காட்டிப் பகடி பேசுபவர்கள் வீட்டில் கேட்டால் தெரியும் யார் ஆணாதிக்கவாதி என்று. நான் ஆணாதிக்கவாதி தான்.அதனால் நான் ஆணாதிக்கவாதி என்று யாரையும் சொல்ல மாட்டேன்.
ஆகஸ்ட் மாதமே எனக்கு சம்பந்தமிருக்கும் நாடுகளுக்கு சுதந்திர தினம் வருகிறது.சிங்கப்பூர்,பாகிஸ்தான், இந்தியா, மலேஷியா என்று எல்லாமே ஆகஸ்ட் 9,14,15,31 தேதிகளில் வருகிறது.நல்ல வேளை மலேஷியா சிங்கப்பூர் மாதிரி நமக்கு ஆறுபதுகளில் சுதந்திரம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இன்னும் முன்னேறியிருப்போம். பிரிட்டிஷ் போனப் பின் நாம் போட்ட பத்தாயிரம் கிலோமீட்டர் ரயில் பாதையை அவன் அறுபதுகளிலே போட்டிருப்பான். அவர்கள் நம் நாட்டை விட்டுப் போவதற்கு முன் இருந்த ரயில் பாதை - ஐம்பாதாயிரம் கிலோ மீட்டருக்கும் மேல். என்னா உழைப்பு.நகைச்சுவையான முரண் அவர்கள் விட்டு சென்ற போது நம் மக்களின் எண்ணிக்கை என்ன. இப்போழுது இருக்கும் எண்ணிக்கை என்ன.போகும் இடத்தில் எல்லாம் நாட்டைப் பிரித்து விட்டு செல்வது தான் அவர்கள் வழக்கம் போல.அது சரி நாம் மட்டும் என்ன செய்கிறோம்.தனி தெலுங்கானா, தனி தைலாபுரம் இன்னும் நிறைய தனி வந்தால் தானே என்றாவது ஒரு நாள் முதல்வராக முடியும்.
இன்போசிஸ் ஊழியர் அவர் மனைவியைக் கொன்று விட்டாராம்.தலைப்பு செய்தி.ஏன் கோபம் வந்தால் எவனும் கொலை செய்வான்.நடிகர் கடலில் சண்டை போடும் போது வாந்தி எடுத்து விட்டாராம்.(எத்தனை மாசம்) இப்படி போடுவதை விட்டு விட்டு மது கோடா என்ன செய்கிறான், கொள்ளை அடித்தப் பணம் என்ன ஆயிற்று என்று எழுதலாம். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து மது கோடா முதல்வர் ஆகும் போது வழக்கை அவர் பாகிஸ்தானில் நடத்தலாம் என்று சொல்வார்.நம் ஆளுங்களும் மண்டையை ஆட்டுவார்கள்.பத்திரிக்கைகளும் பாருங்க பாகிஸ்தான் கோர்ட்டில் நடக்கும் முதல் இந்திய வழக்கு என்று முதல் பக்கத்தில் எழுதுவார்கள்.அடுத்த டிசிஎஸ் ஊழியர் எதாவது செய்திருப்பார். செத்து போய் விட்டாரே ஒரு பேட்டி எடுக்க முடியாமல் போச்சே என்று வருத்தம் தெரிவித்து தீனி போடுவார்கள். அரபு நாடு மாதிரி ஒரே ஒரு முறை கற்பழித்தவனுக்கு தண்டனை கொடுத்தால் பயம் வரும்.அது சரி அப்படி பார்த்தால் பெரிய மனிதர்கள் எல்லோருக்கும் ஒரு முறையிலே காணாமல் போய் விடும்.அதை தடிக்க வாய்தா எடுப்பார்கள்.பத்திரிக்கைகளும் வியந்து எழுதும்.
Monday, August 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ரௌத்திரம் பழகு என்று (பாப்பார) பாரதி சொன்னது இதைத் தானோ?
கோபம் நியாயமானது, வெளிப்படுத்திய விதம் அழகானது.
(இப்படி சொல்றதைத் தவிர வேறென்ன நாம் செய்ய முடியும்????????)
வேற பக்கம் வந்துட்டேனா
இன்போசிஸ் ஊழியர் அவர் மனைவியைக் கொன்று விட்டாராம்.தலைப்பு செய்தி.ஏன் கோபம் வந்தால் எவனும் கொலை செய்வான்.
------------------
தப்பேயில்லை.. :)
ஆயுசுக்கும் மாமியார் வீட்டில் நாற்றத்தில் களி திங்கும் எண்ணமிருப்பின்..
ஒன்று எல்லா சந்தர்ப்பத்திலும் எதுவுமே சொல்லாமல் இருப்பது இல்லை எந்த மதத்தை அடித்தாலும் தட்டிக் கேட்டால் மட்டுமே நான் முற்போக்குவாதி ]
தெளிவா சொன்னா விளக்கலாம்..
மிஷ நரின்னு சொல்லியவரிடம் இருந்து இன்னும் வருத்தமோ , பதிலோ இல்லை...
வேளை மலேஷியா சிங்கப்பூர் மாதிரி நமக்கு ஆறுபதுகளில் சுதந்திரம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இன்னும் முன்னேறியிருப்போம். பிரிட்டிஷ் போனப் பின் நாம் போட்ட பத்தாயிரம் கிலோமீட்டர் ரயில் பாதையை அவன் அறுபதுகளிலே போட்டிருப்பான். ]
சரின்னு எண்ண தோணுது..
இன்போசிஸ் ஊழியர் அவர் மனைவியைக் கொன்று விட்டாராம்.தலைப்பு செய்தி.ஏன் கோபம் வந்தால் எவனும் கொலை செய்வான்//
அவன் கொலை செய்யக்கூடாதா..இன்ஃபோசிஸ் ல வேலை செஞ்சா தெய்வ பிறவியா? இப்படித்தான் கிளப்பறானுக பீதிய..
Post a Comment