Wednesday, August 25, 2010

எல்லா கொசுவையும் ஒரேயடியா

நான் மகான் அல்ல - நேற்று சொன்ன அதிர்ச்சி பற்றி சிறுகுறிப்பு. தொண்ணூறுகளின் தொடகத்தில் நாவலாசிரியர்கள் வெளுத்துக் கொண்டிருந்த நேரம். அப்படி ஒரு கதை போலவே ஈரம் படத்தின் திரைக்கதையிருக்கும் மைனஸ் பேய்.உங்களுக்கு பால்ராஜ்,சிரஞ்சீவி, நரேந்திரன்,வைஜெயந்தியை தெரியுமா. நரேந்திரன் பிரபல டிடெக்டிவ்.பால்ராஜ் திறமையான இன்ஸ். சிரஞ்சீவி அதேயளவு திறமையுள்ள சப்-இன்ஸ்.வைஜெயந்தி எல்லாம் நரேந்திரனுக்கு காதலியாக வராத நேரமது.கடற்கரையில் இருக்கும் காதலர்களை ஐந்து பணக்கார மாணவர்கள் அடித்து கற்பழித்து,கற்பழிக்கும் போது வீடியோ எடுக்கும் கதை.லேசான சுய நினைவோடு இருக்கும் அந்த பெண் கேமிராவைத் தட்டி விட அது இருட்டில் எங்கோ விழுந்து விடும்.ஆதாரத்தை விட்டு வைத்தால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து அதை எடுத்து தர நரேந்திரனை அணுகுவார்கள்.நரேந்திரன் அங்கு இருக்கும் புற்றில் அந்த கேமிராவை கண்டுப்பிடித்து அதை போட்டுப் பார்த்து விட்டு கோபத்தில் அந்த மாணவர்களை கொலை செய்ய முடிவு செய்வான்.அதே சமயம் இன்ஸ் பால்ராஜ் கற்பழிப்பு கேஸில் அந்த பசங்களை நெருங்கியிருப்பார். கொலை செய்ய புறப்படும் நரேந்திரனை சாமர்த்தியமாக ஜெயிலில் அடைத்து விட்டு விபத்தில் சாவது போல அந்த ஐந்து மாணவர்களையும் பால்ராஜ் கொன்று விடுவார்.இதே கதை தான் ஏழை மாணவர்கள், நாயகனின் அப்பா கொலை,பழிவாங்கல் என்று மாறி மிக சுமாராக வந்திருக்கிறது.அந்த கதையை எழுதியவர் கொஞ்சம் கண்டுபிடிங்க .தொண்ணூறுகளின் தொடகத்தில் வந்த கிரைம் நாவலை எடுத்தாலே நிறைய சூப்பர் ஹிட் படத்தைத் தரலாம்.

வம்சம் - இந்த படத்தை மட்டும் பாண்டியராஜ் முதல் படமாக எடுத்திருந்தால் இன்னும் பத்து வருங்களுக்கு அடுத்த படமே கிடைத்திருக்காது. அவ்வளவு திராமையான திரைக்கதை. நண்பரின் நண்பரான தாஜ் நூர் (ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர்) மிகவும் ஏமாற்றி விட்டார்.ஏ.ஆர்.ரகுமான் என்று ஆலமரத்திற்கு அடியில் எதுவும் முளைக்காது என்று இன்னொரு முறை உறுதியாகியுள்ளது. முதல் படத்திலேயே சரக்கு தீர்ந்து போவது ஒன்றும் புதிதல்ல. உடன்போக்கு என்று இலக்கியத்தில் சொல்வார்களே அது மாதிரி கிஷோர் அத்தை பெண்ணுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது முறைப்பெண் குதிரையை எடுத்து கொண்டு கிளம்பும் போது அதை கண்டும் காணாமலிருக்கும் அம்மா என்று இயக்குனர் அறியாமலே எடுத்த சில சுவாரஸ்யமான காட்சிகளும் உண்டு.

பாணா காத்தாடி - மெல்லிய உடம்புக்குள் ஒரு முரட்டுத்தனமான குரல் என்பது கதையின் நாயகனுக்கு பொருந்தி வந்தது.முரளியின் வருகை போது ஏற்படும் புன்னகை படம் முழுவதும் வரவில்லை என்பது தான் உண்மை. பிரசன்னா அந்த முஸ்லீம் பையனை(நான் மகான் அல்ல படத்திலும் முதலில் முஸ்லீம் மாணவன் சாவார்) கொன்று விட்டு அழுவாரே - இன்னும் பத்து வருடம் ஆனாலும் பிரசன்னாவை தமிழ் சினிமா பயன்படுத்தாது என்பது தான் உண்மை.கத்தியைத் தூக்க எல்லோருக்கும் ஒரு காரணம் வரும் என்று பட்டியலிடும் காரணத்தை கடந்து வராத மாநகராட்சி பள்ளி மாணவர்கள் குறைவாகத்தானிருப்பார்கள். படிக்கட்டில் தொங்கும் போது கிரிப் போய் விடாமலிருக்க மண்ணைத் தடவி கொள்வார்கள்.கடைசி காட்சியில் ஹீரோ தடவியிருக்க மாட்டார் கீழே விழுந்து விடுவார் என்று லாஜிக் நன்றாகயிருந்தாலும் அப்படி நிற்கும் விழ சாத்தியமேயில்லை என்பது தான் உண்மை. பறந்து வரும் காத்தாடி கையில் வெட்டி விட்டது என்று வைத்தாலும் சர்வம் ஞாபகம் வருமே. அதை விட கதையின் நாயகன் விளையாட்டுப் பையன் என்பதால் பறந்து வரும் காத்தாடி பிடிக்க முயற்சி செய்து விழுந்து இறந்தார் என்று வைத்திருந்தாலும் கொஞ்சமாவது காதில் சுத்தியிருந்த பூவின் எடை குறைவாக மாறியிருக்கும்.

இனிது இனிது - ஹேப்பி டேஸ் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்தை பார்த்திருந்தால் அடுத்த நிமிடம் கூட்டமாக தற்கொலை செய்திருப்பார்கள். ஹேப்பி டேஸ் படத்தில் டைசன்,ராஜேஷ் என்று மனதை ஆக்ரமித்தவர்களை எல்லாம் இந்த படத்தில் நடித்தவர்கள் மிதித்தே வெளியே தள்ளுகிறார்கள். பிரகாஷ் ராஜ் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படத்தைத் தயாரித்திருப்பதை விட அந்த படத்தை டப் செய்து விட்டு இருக்கலாம். தமன்னாவுக்கு இப்போதிருக்கும் மார்க்கெட்டுக்கு அது சாத்தியமே. நல்ல படங்கள் தான் எடுப்பேன் என்ற உத்வேகமிருந்தாலும் மார்க்கெட்டிங் செய்யும் திறமை தெலுங்கு படத்தயாரிப்பாளர்களை விட கம்மி தான் என்று பிரகாஷ் உறுதி செய்துள்ளார். இதே மாதிரியான கதையோடு புகைப்படம் என்ற படம் வந்ததும் இன்னொரு மைனஸ்.

4 comments:

பெசொவி said...

முதல் பாராவில் வரும் நரேன்(திறன்) கதை ஒருவர் எழுதியதல்ல, சுரேஷ், பாலகிருஷ்ணன் என்கிற இருவரும் சேர்ந்து சுபா என்ற பெயரில் எழுதியது!

இரும்புத்திரை said...

சு(ரேஷ்)பா(லகிருஷ்ணன்) தான்

Jerry Eshananda said...

"சுபம்"

ஆர்வா said...

ஆமாம் அர்விந்த். எல்லா கொசுவையும் விட.. இனிது இனிது கொசு என்னை மிகவும் அதிகமாகவே கடித்துவிட்டது. எப்படிப்பட்டதிரைப்படம் திரைப்படம் அது தெலுங்கில்??? தமிழில் கெடுத்து வைத்திருக்கிறார்கள். நல்ல வேளை ஷ்ராவ்ஸ் கேரக்டருக்கும் வேறு யாரையும் போடவில்லை. என்னால் டைசன் கேரக்டருக்கு தெலுங்கில் நடித்த அந்த நடிகரைத்தவிர வேறு யாரையும் நினைத்தேப்பார்க்க முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் அறையும் குறையுமாக கொலை செய்வதற்கு அந்த படத்தை ரீமேக் செய்யாமலே இருந்திருக்கலாம். நீங்கள் சொன்ன ஒரு விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை. ஹேப்பிடேஸை டப்பிங் செய்திருக்கலாம்.