Sunday, August 1, 2010

கீரிடம்,செங்கோல்

தண்ணியடிப்பதைப் பற்றி பேச்சு எழுந்த போது மோகன்லால் மாதிரி யாருமே தண்ணியடிக்கும் காட்சியில் நடிக்க முடியாது என்று நண்பனொருவன் உத்திரவாதம் கொடுத்ததில் எழுந்த விவாதம் கீரிடம் படத்தில் போய் முடிந்தது. ஏதோ ஒரு உணர்வு அந்த படத்தின் மேல் படியவதை உணர முடிந்தது.ஏதோ ஒரு ஞாயிறு மறுநாள் செமஸ்டர் தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் போது டி.டியில் பிற மொழி படங்கள் வரிசையில் இரவு பனிரெண்டு மணிக்கு பார்த்தாக ஞாபகம்.தேர்வை விட அந்த படமே முக்கியமாக பட்டது.விடிய விடிய பார்த்ததில் இன்னும் பிடித்து போனது.அந்த போதையுடனே தூங்காமல் போய் தேர்வை எழுதி விட்டு வந்தேன். தேர்வு தொடங்கும் முன் கீரிடம் பற்றி பேசலாம் என்றால் எல்லோரும் புத்தகத்தைப்  _______ கொண்டிருந்தார்கள். வரும் போதாவது பேசலாம் என்றால் தேர்வைப் பற்றி பேசவும் எரிச்சலில் அப்படியே தூங்கி போனேன்.

படம் பிடித்தற்கு காரணம் அதில் காட்டப்பட்ட அப்பா மகன் உறவு தான். 7ஜி ரெயின்போ காலனி, அறிந்தும் அறியாமலும் படங்களில் வரும் அப்பா - மகன் செண்டிமென்ட் காட்சிகளுக்கே அந்த படங்களைக் குறை சொல்லாமல் ஏற்றுக் கொள்ள முடிந்ததால் இதை தலையில் வைத்து கொண்டு ஆடாத குறை தான்.

மகனுக்கு சல்யூட் அடிக்க ஆசைப்படும் அப்பா, அப்பாவுக்காக சண்டையிடும் மகன் அதில் ஆரம்பிக்கும் ஆடு புலி ஆட்டம், வாழும் ஆசை, வீட்டில் யாரிடமும் நெருங்க முடியாத நிலை, காதலி பிரிந்த சோகம் என்று மோகன்லால் அடித்து ஆடிய படம். அதுவும் கடைசி காட்சியில் திலகனே மோகன்லாலின் வேலை வாய்ப்பை நிராகரிக்கும் இடம் என்று உணர்ச்சிகளை கொட்டிய படம்.

ரெண்டாவது பாகம் எடுப்பதில் இருக்கும் சிக்கலே முதல் பாகத்தை சிதைக்காமல் இருப்பதே. எம்.எல்.ஏ பையன் என்று மன்னிப்பு கேட்காத கம்பீரமான போலீஸ்காரர், தன் மகன் வேலை என்று தெரிந்தும் அதை நிராகரிக்கும் நியாயமான அப்பா என்று பார்த்த திலகனை ரெண்டாவது பாகமான செங்கோலில் மகளுக்கு மாமா வேலை பார்ப்பவராக காட்டியதில் இருந்தே படம் தோல்வியை உறுதி செய்தது. திலகன் மேலிருந்த,லோகியின் திரைக்கதை மேலிருந்த,சிபி மலையலின் இயக்கத்தின் மேலிருந்த பிம்பம் சரிந்து விழுந்து உடைந்தது. 

எந்த படத்தின் ஒரு வெற்றிக்கும் அதன் முந்தைய படத்தின் முடிவு வெகுவாக துணைப்புரியும் அதனாலே அந்த படம் தோல்வியிலிருந்து தப்பி விடும்.கீரிடம் படத்தால் அது ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பால் செங்கோல் பிழைத்து கொண்டது என்பது தான் உண்மை.

கவித்துவமாக எனக்கு விமர்சனம் செய்யாத காரணத்தாலும், சாரு கேரளா கடற்கரையில் யாரோ கட்டிய மணல் வீட்டை மிதித்து கலைத்ததை கண்டிக்காத காரணத்தாலும் இந்த உலகப் புகழ் பெற்ற கட்டுரை ஜெயமோகன் தளத்தில் வராது.

2 comments:

நீ தொடு வானம் said...

//சாரு கேரளா கடற்கரையில் யாரோ கட்டிய மணல் வீட்டை மிதித்து கலைத்ததை கண்டிக்காத காரணத்தாலும் இந்த உலகப் புகழ் பெற்ற கட்டுரை ஜெயமோகன் தளத்தில் வராது.//

நடக்கட்டும்

தமிழ் கீரிடம் பற்றி ஒண்ணுமில்லை..

இரும்புத்திரை said...

ஏன் இந்த கொலைவெறி அதுக்கு முன்னாடி கவித்துவமாக எழுத தெரியாத என்று சொல்லியிருக்கேனே..தேவையானதை மட்டும் எடுத்து கொண்டு வாதிட்டால் தமிழ் சமூகம் எப்படி முன்னேறும்.

தமிழ் கீரிடம் - அதுக்கு செங்கோல் நூறு மடங்கு மேல்.