Sunday, August 8, 2010

திட்டக்குடி - முடிவில்லாத திருப்பங்கள்

சின்ன வயதில் சினிமா பார்க்க காசியில்லாமல் வேலைக்கு போய் சினிமா பார்த்து வளர்ந்த பின் பருத்திவீரன் கார்த்தியையும்,மிருகம் ஆதியையும் கலந்து செய்த செய்த கலவையாக கதையின் நாயகன். எதிர்கொள்ளும் பெண்களை எல்லாருக்கும் காசு கொடுத்து விட்டு போக, அப்படியே தொழில் கற்றுத் தந்த குரு வீட்டிலும் இதே வேலையை காட்ட பிரச்சனை காவல் நிலையம் வரை போகிறது. நாயகி பூ படத்தில் வரும் பார்வதியை விட எதார்த்தமாக இருக்கிறார்.( பிரபலங்கள் இயக்கி,நடித்தால் தான் படம் பார்ப்போம் என்று துடிக்கும் தமிழ்ச்சமூகம் இருக்கும் வரை விஜய் போன்றவர்கள் வருடத்திற்கு பத்து படம் நடித்தாலும் ஆச்சர்யமில்லை.)

நாயகி அவனை காட்டி கொடுக்காமல் போக, காட்டி தந்திருந்தால் கல்யாணம் செய்து வைத்திருப்பார்கள் பணம் தந்தவுடன் எப்படி குடும்பம் நடத்த என்று கேட்பது உண்மையிலே நல்லத் திருப்பம்.அதிலிருந்து திருப்பதிலேயே படம் பயணிக்கிறது.

1. நாயகன் அவன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணின் பேச்சைக் கேட்டு திருந்துவது.

2.வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் செய்ய நினைத்ததை ஒருவர் போட்டுக் கொடுப்பது.

3.அதனால் அப்பா விஷம் குடிப்பது.

4.கல்யாணத்திற்கு நேரத்திற்கு போக முடியாதது.(ஒரு போன் பண்ணி சொன்னா என்ன கெட்டு போயிரும். சிவாஜி படம் வெளியான காலக்கட்டத்தில் கிராமத்தில் ஏறக்குறைய எல்லார் வீட்டிலும் செல்போன் உண்டு.படத்தில் சிவாஜி படம் வெளியாகி கொஞ்ச நாள் ஆனது போல் ஒரு காட்சி உள்ளது)

5.வேறு ஒருத்தன் திடீர் மாப்பிள்ளையாக மாறுவது.

6.அவனே அவன் மனைவியை விலை பேசும் போது நாயகன் பார்ப்பது.

7.குடித்து விட்டு வரும் வழியில் அண்ணியின் தவறான நடத்தை.(பசங்க படத்தில் நாயகனின் அண்ணியாக வருபவரின் கட்டமைக்கப்பட்ட பிம்பம் அந்த ஒரு காட்சியில் நொறுங்கி விட்டது)

8.கொழுந்தன் தான் தவறாக நடந்து கொண்டான் என்று பழி போடுவது.

9. அம்மா கூட தன்னை பிள்ளை தப்பாக பார்க்கிறான் என்று நினைப்பது

10.நாயகன் தற்கொலை செய்து கொள்வது.

செல்போன் இருக்கும் காலக்கட்டத்தில் இப்படி இப்படி டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்ததும்,அதீதமான கிளிஷே காட்சிகளும் படத்தின் மவுத் டாக்கைக் குறைத்து விட்டதாகவே நினைக்கிறேன். நண்பனாக நடித்தவர் நன்றாக நடித்திருக்கிறார்.எந்த படத்தில் பார்த்தேன் என்று ஞாபகம் வரவில்லை. அவருக்கும் மிருகம் படத்தில் வரும் கஞ்சா கருப்பின் கதாப்பாத்திரத்திற்கும் அதிக வித்தியாசமில்லை.

கடைசி பிள்ளைக்கும் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகளிருக்கும்.அப்படி ஒற்றுமைகள் இந்த படத்திலும் கொட்டிக் கிடந்தது.

1. பிரச்சனைகளும்,அவமானங்களும் உச்சக்கட்டத்தை நெருங்கும் போது விஷம் குடிப்பது.

2. வீம்பு என்று வந்து விட்டால் வீட்டில் உள்ள மற்றவர்களையும் எதிரியிடம் பழக விடாமல் தடுப்பது.

3.கோபத்தில் வீட்டில் உள்ள சட்டிகளை உடைப்பது.

4. காரியம் முடிக்க கெஞ்சுவது அப்புறம் தூக்கி எறிவது.
இப்படி நிறைய கதைக்களனுக்கான உழைப்புகளைத் தேவையில்லாத திருப்பங்கள் அடித்து நொறுக்குகிறது.

இதை விட நல்ல,இதே மாதிரியான கதையை ஜெகநாதன் எழுதி இருக்கிறார்.

5 comments:

நீ தொடு வானம் said...

"தமிழில் எழுத்துக் கூட்டி நாலு வாக்கியம் எழுதத் தெரிகிறதா, உடனே ஒரு வலைப்பூ ஆரம்பித்து ஒரு சினிமா விமர்சனமும் எழுதி இங்கே எழுத்தாளன் ஆகி விடலாம். அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது"

இரும்புத்திரை said...

சாரு அடுத்து எந்திரனுக்கு தான் விமர்சனம் எழுதுவார்..திட்டக்குடிக்கு இல்ல..அதனால எனக்கு அவர் சொன்னது பொருந்தாது..

anbarasan said...

click and read the link
"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

ஆ.ஞானசேகரன் said...

//இப்படி நிறைய கதைக்களனுக்கான உழைப்புகளைத் தேவையில்லாத திருப்பங்கள் அடித்து நொறுக்குகிறது.//

பார்க்க முயற்ச்சிகின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

//இப்படி நிறைய கதைக்களனுக்கான உழைப்புகளைத் தேவையில்லாத திருப்பங்கள் அடித்து நொறுக்குகிறது.//

பார்க்க முயற்ச்சிகின்றேன்...