Saturday, July 18, 2009

லக்கியை அழைத்தீர்களா?

இது ஒரு தொடர் பதிவு. இதை தொடர்ந்து எழுத நான் எனது குரு லக்கி மற்றும் பதிவுலகில் என்னுடைய ஆதர்ஷமான அதிஷா,நர்சிம் அழைக்க எனக்கு ஆசை. லக்கியின் நெருங்கிய நண்பரான அதிஷா தொடர்பதிவு எழுத அவரை அழைத்த பொழுது "சாருவை அழைத்தீர்களா" என்று பதிவு போட்டு அதை நையாண்டி செய்தார். இப்பொழுது அதிஷா இந்த தலைப்பைக் கொண்டு எனக்கு டேக்கா கொடுக்க கூடாது என்று நான் முந்தி கொண்டேன் (இப்படி தலைப்பு வைத்தாலாவது பின்னுட்டம் கிடைக்குமா என்று பார்ப்போம் என்பதும் ஒரு காரணம்).

எப்பூடி?. இந்த பதிவை எழுத இன்னொரு காரணம், ஆப்பு(ஐயா நான் ஒன்னும் பிரபலம் இல்லை) என்பவர் எனக்கு பின்னுட்டம் போட்டுள்ளார். சார் என்னை நீங்கள் அடித்தால் உங்களுக்கு ஒரு வெங்கல கிண்ணி கூட கிடைக்காது.கிடையாது .

தொடர் பதிவின் தலைப்பு "கடைசியாக அழுத ஆறு திரைப்படங்கள்" (ஆறு தான் என்னுடைய ராசியான எண் .) நல்ல வேளை 100 என்னுடைய ராசியான நம்பராக இல்லாமல் போனது. (உண்மைத்தமிழனக்கு போட்டியாக இருந்திருக்கும்.)

1. 7ஜி ரெய்ன்போ காலணி

எப்பொழுதும் என் கருத்தும் என் அப்பாவின் கருத்தே ஒத்துப் போகாது.கடந்த புதன் மற்றும் வெள்ளி அன்று கூட பெரிய வாக்குவாதம். இந்த படத்தில் ரவிகிருஷ்ணாவிற்கு வேளை கிடைத்த பிறகு விஜயன் நடிப்பு மற்றும் ரவியின் அழுகையோடு நானும் அழுது கொண்டு இருந்தேன். எந்த சென்டிமெண்ட் காட்சியிலும் சிருத்து கொண்டே படம் பார்க்கும் .அப்பா - மகன் காட்சிகளின் பொழுது மட்டும் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன் இன்று வரை. அது உன்மைதானா என்று சோதித்து பார்க்க இன்னொரு கல்லூரி நண்பர்களுடம் தேவியில் படம் பார்க்க சென்று இருந்த பொழுது அதே காட்சியில் அழுது கொண்டிருந்தேன். நண்பர்கள் பார்த்தால் கேலி செய்வார்கள் என்று பயந்து கண்ணைத் துடைக்க திரும்பிய பொழுது எல்லோரும் யாருக்கும் தெரியாமல் கண்ணைத் துடைத்தார்கள். அப்போழுது தெரிந்தது பிள்ளைகள் யாருமே அப்பா பேச்சைக் கேட்பதில்லை ஆனால் பாசத்தை வெளிக்காட்ட தெரியாமல் அலையும் பாவப்பட்ட ஜீவன் கள் என்று.

2. அறிந்தும் அறியாமலும்

வீட்டில் சாப்பிட சொல்லியும் கேட்காமல் நண்பனின் இல்லதிற்க்கு சாப்பிட சென்ற தம்பி அங்கு ஏதோ காரணதினால் சாப்பிட முடியாமல் போக அந்த கோபத்தில் இருவருக்கும் கைக்கலப்பு ஆகி விட்டது. அம்மா அவனை அடித்து விட போகிறேன் என்ற பதற்றத்தில் என்னைப் பிடித்து கொள்ள அவன் அந்த சைக்கில் டயர் கேப்பில் என்னை இரண்டு அடி அடித்து விட்டான். அந்த கோபத்தில் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் கீழே கிடந்த ஸ்டெம்பை எடுத்து அடித்து விட்டேன். அப்பொழுது என்னை அவன் பார்த்த பார்வையை இன்று வரை நேரில் யார் கண்ணிலும் பார்த்தது கிடையாது. ஒரு படத்தை தவிர (சுவாதி தான் காட்டி கொடுத்தது என்று தெரிந்ததும் ஜெய் அசைவில்லாமல் இமை கொட்டாமல் பார்ப்பது). அன்று தான் என் அப்பா அழுது நான் பார்த்தேன்.சண்டையில் வீடு முழுக்க சாதமும், சாம்பாரும் கொட்டி கிடந்தது. அடுத்த நாள் அவன் இங்கு இருக்க பிடிக்காமல் திருநெல்வேலி போய் விட்டான். பத்து நாட்கள் கழித்து நான் அங்கு சென்ற உடன் அவனிடம் கேட்ட முதல் வாக்கியம் "படத்துக்கு போலாமா?" சென்ற படம் அறிந்தும் அறியாமலும். தம்பியிடம் பாசத்தை கொட்டும் ஆர்யாவின் கதாபாத்திரத்தில் அழுது கொண்டே நான் என்னை பார்த்தேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு என் தங்கச்சங்கிலியை அவன் கழுத்தில் போட்டேன். காரணம் அந்த சண்டையில் அவன் செயின் என்னால் அறுந்து அவன் வெறும் கழுத்தோடு இருந்தான்.

3. உள்ளம் கேட்குமே

இந்த படத்தை பார்க்க நானும் என் தம்பியும் 2004லாம் வருடத்தில் இருந்து அலைந்து கொண்டு இருந்தோம்.ஒரு வழியாக 2005 லில் வெளி வந்த பொழுது நான் கல்லூரி முடித்து இருந்தேன். நங்கநல்லூர் வேலனில் நான் + இன்னும் ஆறு பேர் மட்டும் அந்த படத்தை பார்த்தோம்(தம்பி ஊரில் இருந்தான்). ஷாம் க்டைசி நாளில் பேசிய பிறகு வரும் ஒ மனமே மனமே பாடலில் நான் அழுது கொண்டு இருந்தேன். காரணம் கல்லூரியில் நான் இழந்த சில நட்புகள் மற்றும் சில "நட்பூக்களை" நினைத்து . அந்த படம் குறுந்தகடில் கிடைத்த பிறகு சுமார் ஒரு மாத காலம் தினமும் அந்த படத்தைப் பார்ப்பேன்.

4.தவமாய் தவமிருந்து

அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் என் பால்ய காலம் ஞாபகத்திற்கு வரும். கோவில் திருவிழா, உறவினர் வீடுகளைப் பார்க்க கழுத்து அளவு தண்ணீரில் என்னை தலையில் சுமந்து கொண்டு திரிந்த என் அப்பாவின் பாசம்,நேசம் எல்லாம் ஞாபகம் அழ தேவை இல்லாத இடத்தில் கூட அழுது கொண்டு இருந்தேன். படம் பார்த்து விட்டு திருவான்மியூரில் இருந்து வேளச்சேரிக்கு நடந்து வந்தேன். படத்தின் தாக்கம் என்று யாரும் நினைக்க வேண்டாம் கையில் 50 பைசா மட்டுமே இருந்தது.

5. வெயில்

மகன் இறந்த பிறகு அவனை புரிந்து கொள்ளும் ஒரு தகப்பனின் கதை.இதிலும் பல இடத்தில் கண்கள் கலங்கி கொண்டே இருந்தது .
பெரிதாக அழவில்லை. அன்று நிறைய நண்பர்கள் சேர்ந்து அலுவலகத்தில் பார்த்ததால் வெளிச்சத்தில் அழ வெட்கமாக இருந்தது.


6.நாடோடிகள்

படம் என்னை அவ்வளவாக கவரவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் கண் கலங்கியது . அது விஜயின் அப்பா நம்ம குடும்பத்துக்கே கால்ல தான் ஏதோ பிரச்சனை என்று சொல்லும் இடம் அருமை. விஜயின் காதலியை பார்க்க போகும் காலையில் மகனும் சாயங்காலத்தில் அப்பாவும் காலை ஆட்டிக் கொண்டு இருப்பார்கள்.

இந்த பதிவு பிடித்து இருந்தால் யார் வேண்டுமானாலும் தொடர்ப்பதிவாக எழுதலாம்.

காரணம் ஒரு தொடர்பதிவு எழுத யாரும் என்னை அழைக்காததால் என்னால் எழுத முடியாத ஆதங்கம் தான் .

14 comments:

Unknown said...

eppadi thalaippu vaithalum ungallu pinnuttam varaathu

enna neenga oru piralapa pathivae illainnu neengale vakku moolam koduthu irukeenga

இரும்புத்திரை said...

thanks cibi

ஊர்சுற்றி said...

நானும் ஏதோ ஏடாகூடமா நடந்துபோச்சோன்னு நினைச்சேன். :)

நான் அழுததெல்லாம் பார்த்தா பலவருடங்களுக்கு முன்னாடி வரை போயிடுமே. அப்படியும் 6 தேறுமான்னு தெரியல.

இரும்புத்திரை said...

அன்பின் ஊர்சுற்றி

ஆறு என்பது என் ராசியான எண்

நீங்கள் ஒன்று எழுதினாலும் எனக்கு மகிழ்ச்சியே

நர்சிம் said...

Aravind, லேசானா காமெடியோட நல்லா எழுதுறீங்க..

இந்தத் தொடர் பதிவை நான் தொடர்வேன்..நன்றி.

அழுகைப் படங்களா இல்ல ஏண்டா வந்தோம்னு அழுத படங்களா? விளக்கவும்...

இரும்புத்திரை said...

தல நீங்களா ?

நான் உங்க ......... என்ன வார்த்தை சொன்னா விளக்க முடியும்

ரசித்து ரசித்து அழுத படங்கள் தான்

எழுதுங்கள் தல

யுவகிருஷ்ணா said...

//சார் என்னை நீங்கள் அடித்தால் உங்களுக்கு ஒரு வெங்கல கிண்ணி கூட கிடைக்காது//

ஹா... ஹா...

அருமை :-)

Nathanjagk said...

அன்பு அர்விந்த், அட்டகாசம்!! அப்பா-மகன் பாசம், சகோதர இணக்கம் என ஒரு அபூர்வ சிறுகதை தொகுப்பை அழுத திரைப்படங்கள் வரிசையில் புகுத்திவிட்டீர்கள்!! அதேசயமம் படிப்பவனையும் (அப்கோர்ஸ் பின்னூட்டத்தையும்) மனசில் ​வைத்து காமடி தெளித்து இடுகையை அருமையாக்கிவிட்டீர்கள்!! வாழ்த்துக்கள்!!!!

Cable சங்கர் said...

எல்லாரையும் கூப்டுருங்க அப்புறம் கோச்சுக்க போறாங்க..

நாமக்கல் சிபி said...

நல்ல விமர்சனங்கள்!

வில்லங்கம் said...

சமீபத்தில் நான் அழுதது " மாசிலாமணி" என்ற திரைகாவியத்தை காணும் போது
என் நண்பனின் காலில் விழுந்து கதறி அழுதேன்... இந்த படத்துக்கு போவ வேணாம்டானு,
அதுக்கு அவன் சொன்னான் " சன் டிவில சொன்னாங்க இந்த படம் சூப்பர் ஹிட்டாம்னு..
விதி வலியது !!

இரும்புத்திரை said...

thanks lucky

naan unkalukku call panninen cut aayiduchi busya thala?

thanks jekannath

adikadi vanga

thanks cableji

nichchayam ellorum vanga intha pathiva eluthutha

thanks pirapala pathivar

unga perum en thambi perum onnu

thanks jk

ithu sellathu sellathu

Nathanjagk said...

ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கி​றேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் ​பெருமகிழ்ச்சியடைகிறேன்!

இரும்புத்திரை said...

thanks jeganath