Thursday, August 12, 2010

சொல்ல முடியாத ஈர்ப்பு - பெயர்கள்

உலகில் அதிகப்பட்ச வெறுப்பும்,நேசமும் ஏதோ ஒரு ஈர்ப்பினாலே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று யாருமில்லாத தனிமையில் நானிருக்கும் போது நிழலாடித் தொலைத்தது. சில பெயர்கள்,சில குரல்கள், சில மனிதர்கள், சில விஷயங்கள் மீதெல்லாம் காட்டப்படும் வெறுப்பிற்கும்,நேசத்திற்கும் பிண்ணனியில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்து வேடிக்கை காட்டி காட்டியே என்னை களைத்துப் போக செய்கிறது.

சின்ன வயதிலிருந்தே கார்த்திக் என்ற பெயரின் மீது அதிக ஈர்ப்புடன் இருந்திருக்கிறேன். அதனாலே நடிகர் கார்த்திக்கைப் பிடித்து மனம் தொங்கியதோ என்னவோ.இராவணன் படத்தில் அவர் தொங்கியது தனிக்கதை. அப்படி வளர்ந்த பின்னால் ஏதோ காலக்கட்டத்தில் அமர் என்ற பெயரின் மேல் அதீத ஈடுபாடு காட்டித் தொலைக்கிறேன்.அதுவும் கார்த்திக் நடித்த அமரன் படத்தின் சுருக்கமான அமராகயிருக்கும் என்று லேசான காரணத்தையே எந்த காரணமுமில்லாமல் ஏற்கிறேன்.

ஒற்றை இலக்க செம்களின் போது வெளியே தெரியும் வயல்களில் காற்றில் ஆடும் நாத்துகளை வேடிக்கை பார்ப்பது தான் என் வழக்கம். நடுநடுவே கவனம் இன்று படத்தில் மட்டுமே இருக்கும் கொக்கின் வருகையின் போது மட்டும் சிதறும். அப்படி வெளியே வேடிக்கை பார்க்காமல் ஒரு வகுப்பை மட்டும் தீவிரமாக கவனிப்பேன்.காரணம் எடுத்த அசிரியையின் பெயர் பிருந்தா. அதிகம் பேர் இந்த பெயரை ஏன் வைப்பதில்லை என்றே தெரியவில்லை. இந்த பெயரை எப்படி சுருக்கி கூப்பிடுவது என்று யோசித்தும் இன்று வரை சுருங்காமலேயிருக்கும் பெயராக இது இருந்து வருகிறது.

என்னை விட இரண்டு மூன்று வருட சீனியராக இருந்திருப்பாள். இது மாதிரி இரண்டு கதைகள் பள்ளியிலே ஓடியதால் என் மனது கொஞ்சம் தடுமாறிக் கொண்டேயிருந்தது. அதில் ஒரு பெண் அடிக்கடி சொல்வாள் என் பெயர் ரொம்ப யூனிக்கான பெயர் என்று.இன்னொருத்திக்கு பெயரே கவிதை தான். இங்கு ரெண்டும் சேர்ந்து தனியாவர்த்தனம் நடத்திக் கொண்டிருந்தது.

அவள் நடத்துவதையே கவனித்துக் கொண்டிருப்பேன்.(பாடத்தை சொன்னேன்)."என்ன சார் நீங்க என் கிளாஸ் மட்டும் தான் கவனிப்பதாய் ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று ரெகார்ட் எழுதாமல் வெளியே நின்று கொண்டிருந்த போது கேட்டு வைத்தாள்."ஆமா பிருந்தா..உண்மை தான்.." சொல்லிக் கொண்டிருந்தேன். "அப்புறம் உனக்கு என்ன கேடு..எழுதிட்டு வர வேண்டியது தானே.." கோபம் கண்ணில் தெரிந்தது. "இல்ல மேடம் அது வேற இது வேற..பசங்க வெளியே நிற்கும் போது நான் மட்டும் எப்படி.." என்று சொன்னது தான் தாமதம் இனிமே என் லேப்புக்கு வராதே என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.உம் என்று ஒரு வார்த்தை சொன்னாலே அன்று ரெக்கார்ட் எழுதித் தர நண்பர்களிருந்தார்கள்.கோபத்தில் அடுத்து வந்த தேர்வில் அவள் நடத்தும் பேப்பரில் மட்டும் பெயிலானது இன்னும் கோபத்தை வரவழைத்திருந்தது.

அடுத்த நாள் வந்து நீ முதல் பெஞ்சில் தான் இருக்க வேண்டும் என்று கட்டளை வேறு.அதுக்கு நான் வெளியவே நிற்கிறேன் என்று சொல்லி விட்டு ஒரு ஐந்து பேர் மட்டும் வெளியே நின்றுக் கொண்டிருந்தோம்.வழக்கம் போல லேப் போகும் போது எனக்கு மட்டும் அர்ச்சனை நடந்தது வேறு விஷயம்.

ஒரு செமஸ்டர் தேர்வின் போது அவள் சூப்பர்வைசராக வந்திருந்தாள். ஒரு சந்தேகம் என்றேன். "தெரியுமே படித்திருக்க மாட்டாயே..இந்த சம்முக்கு இதுதான் பார்மூலா என்று குவெஸ்டின் பேப்பரில் எழுத "அதெல்லாம் இல்ல..என் உங்க கிளாஸ் மட்டும் கவனிக்கிறேன் என்று அடிக்கடி கேட்பீங்களே.. அதுக்கு பதில் சொல்லட்டுமா.." முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். "ம்..சீக்கிரம்.." அவசரம் தெரிந்தது. "பிருந்தா.."என்று ஒற்றை வார்த்தையில் முடிக்க "சீக்கிரம் சொல்லித் தொலையேன்.." குரலில் கடுமை தெறித்தது. "அதான் சொன்னேனே பிருந்தா.." சொல்லி முடிக்கும் முன் கோபத்தில் "மொக்கை போடாத சனியனே..என்னை சொல்லணும்..என் வேலை எல்லாம் விட்டுட்டு உங்கிட்ட கதைக் கேக்குறேன் பாரு.." திட்டி முடித்ததும் சொன்னேன். "பிருந்தா இந்த பெயர் தான் காரணம்.." நான் சொன்னதை நம்பவேயில்லை. "சைட் அடிச்சேன்னு உண்மையை சொல்ல வேண்டியது தானே..நான் அழகாயிருக்கிறேன்னு நேரா சொல்ல வேண்டியது தானே..ஏன் பொய் சொல்ற.." கோபத்தில் பொறியத் தொடங்க  "உண்மை தான் அதற்கு காரணமா ஒரு கதையிருக்கு.." என்று அந்த கதையை சொன்னேன். (சத்தியமாக அது இன்னொரு காதல் கதையில்லை.அது ஒரு புராணக்கதை.நம்புங்களேன் ப்ளீஸ்.) அந்த கதை சொன்னப்பின் இன்னும் இரண்டு கேள்விக்கு பதில் சொல்லித் தந்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் நண்பன் ஒருவன் அந்த மூலையிலிருந்து "மேடம் அடிஷனல் ஷீட் தாங்க.." என்று குரல் கொடுக்க "டேய் அண்ணா யூனிவர்சிட்டில ஏதுடா அடிஷனல் சீட்..ஒழுங்கா எழுது.." நிமிராமல் பதில் சொல்லித் தந்தபடியே சொன்னாள். பல்ப் வாங்கினியா என்று கைக்காட்டினேன். உடனே "அங்க என்ன செய்ற..ஒழுங்காக எழுதிட்டு ரப்பரால் அழித்து விடு.." என்று பக்கத்து பெண்ணிடமிருந்த பெண்ணிடம் ரப்பர் வாங்கித் தந்து விட்டு போனாள்.நான் என்னைக்கு ரப்பர் எல்லாம் கொண்டு போயிருக்கிறேன். அவளுக்கு கடைசி வரை தெரியாது எனக்கு அந்த கேள்விக்கு எல்லாம் பதில் தெரியும் என்று.குவெஸ்டின் பேப்பரில் அந்த ரப்பரை மடித்து பின்னாலிருந்த நண்பனுக்கு பாஸ் செய்தேன். தேர்வு முடிந்தப்பின் அந்த  பெண் வந்து ரப்பரைக் கேட்க நீ யாரு என்று கேட்டு வைத்து விட்டேன். திட்டிக் கொண்டே போனது தெரிந்தது. அவள் பெயரை கேட்க மறந்திருந்தேன்.

"பிருந்தா இந்த பெயரால் தான் அவள் அழகாகயிருந்தாள்.." என்று வேலை கிடைக்காமல் மனது உடைந்திருந்த நாளில் எனக்குள் நானே முணுமுணுத்துக் கொண்டேன். பிறகொரு நாள் தொட்டி ஜெயா என்ற படம் பார்க்கும் போது ஞாபகம் வந்து தொலைத்தது.அதில் கோபிகாவின் பெயர் பிருந்தா. அந்த பெயருக்காகவே அவள் அழகாகயிருந்தாள் என்று நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

10 comments:

நீ தொடு வானம் said...

அந்த கதை என்ன.சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறோம்.

இரும்புத்திரை said...

கோகுலத்தில் கோபிகா ஸ்திரீ கிருஷ்ணன் தன்னைக் கவனிக்கவில்லை என்று சினம் கொள்ள, அதற்கு ராதை, "சாதாரண மானிடப் பெண்போல நீ கோபம் கொண்டதால் பூலோகத்தில் நீ பெண்ணாய்ப் பிறப்பாய்' என சாபம் இட்டாள். கோபிகா ஸ்திரீ வருந்தி சாபவிமோசனம் கேட்க, "பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தவுடன் நீ கோகுலம் வருவாய்' என வரம் அளித்தாள்.

அந்தப் பெண் பூலோகத்தில் பிறந்து பிருந்தா என்ற பெயருடன் வளர்ந்து வருகையில், அசுரனாகிய சங்கசூடனைத் திருமணம் செய்து கொண்டாள். சங்கசூடன் பெரிய சிவபக்தன். அவனை அழிக்க வேண்டிய சூழல் விஷ்ணு பகவானுக்கு ஏற்பட்டது. அவன் சிவபெருமானிடம் வாங்கிய வரத்தின் மகிமையால் அவனை எளிதில் அழிக்க முடியவில்லை. பிருந்தாவின் கற்புத்தன்மையும் அவனைக் காப்பாற்றி யது. யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், மகாவிஷ்ணு சங்கசூடன் போல் உருமாறி பிருந்தா இருக்கும் இடத்திற்கு வந்தார். தன் கணவன் யுத்தத்தில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்ததாக எண்ணி பிருந்தா அவருக்குப் பாத பூஜை செய்தாள். மகாவிஷ்ணுவாகிய அன்னியரின் பாதத்தை பிருந்தா தொட்டவுடன் சங்கசூடன் பலம் இழந்தான். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மகாவிஷ்ணு அவனை அழித்தார்.

பிருந்தா விஷ்ணுவிடம், "நீர் தேவாம்சம் பெற்றவராய் இருந்தும் மானிடர் போல் நடந்து கொண்டீர். நேர்மையாக நீர் என் கணவரை ஜெயிக்கவில்லை. கல் மனம் கொண்ட நீர் கல்லாய்ப் போவீர்' என்று சாபமிட்டாள். அதைக் கண்ட ராதை, "கிருஷ்ணனைச் சபித்த நீ சாதாரண செடியாகப் பிறப்பாய்' என சாபமிட்டாள்.

நாரதர் அங்கு வந்து கடந்த கால நிகழ்வு களைச் சொல்ல, பூர்வ ஜென்மத்தை உணர்ந்த பிருந்தா மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டு சாபவிமோசனம் கேட்டாள். விஷ்ணு பகவான், "நான் கண்டகி நதியில் கல்லாய்ப் பிறப்பேன். என்னை சாளக்கிராமம் என்று அழைப்பார்கள். செடியாய் பிறந்த நீ துளசியாய் மாறுவாய். என்னைத் துளசியால் பூஜிப்பவர்களுக்கு மறுஜென்மம் கிடையாது. துளசி தீர்த்தம் பருகியவருக்கு மறுஜென்மம் இல்லை. துளசி தளம் வாடியிருந்தாலும் அதைக் கொண்டு என்னைப் பூஜிக்கலாம்' என்று பலவகையில் வரம் அளித்து மோட்சம் அளித்தார்.

அதிலிருந்து பிருந்தா என்று பெயரின் மீது ஒரு ஈர்ப்பு.

இதில் இன்னொரு வெர்ஷனைப் பார்ப்போம். இராவணம் சீதையை அசோகவனத்தில் வைத்திருக்கும் போது யாரோ சொன்னார்களாம்."இராமனாக மாறி சீதையை அடைய வேண்டியது தானே.." . அதற்கு ராவணம் அதை யோசிக்காமலிருப்பேனா இராமனாக மாறும் போது என் மனம் அடுத்தவன் மனைவியை நாட மறுக்கிறது.இப்படி ராவணன் சொல்ல காரணமான இன்னொரு கதை இன்னுமொரு வெர்ஷனில்.

கதையின் நீதி வில்லன் நிஜத்தில் ஹீரோ.ஹீரோ என்று நாம் நினைப்பவர் நிஜத்தில் வில்லன்.

நீ தொடு வானம் said...

ஏதோ கொஞ்சம் விஷயமிருக்கு உங்களிடம்.இப்படி எழுதுவதை விட்டு விட்டு ஏன் சண்டை போட கங்கணம் கட்டிக் கொண்டு திரியணும். இப்படியே எழுதினால் இன்னும் முப்பது வருடத்தில் ஆனந்த விகடனில் எழுதலாம்.

இரும்புத்திரை said...

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க..

என்னுடைய இருபத்தியாறு ஆறு வருட எழுத்தை எல்லாம் படித்திருக்கிறீர்களா அப்புறம் நான் எப்படி எழுத வேண்டும் என்பதை நிர்ணயிக்க நீங்கள் யார் இப்படி அவர் மாதிரி பதில் சொன்னாலும் தப்பில்லை மாதிரி தான் தெரிகிறது..

இரகுராமன் said...

yen thala .. exam hall la vachaa vilakkam tharuveenga ??

irunthaalum ungalukku kusumbu thaan oruthen additional sheet ketkura alavukku eluthittu irukaan neenga kadala potutu irukeenga .. hmm

இரும்புத்திரை said...

raghu anna universityla additional sheet kidaiyaathu..

pinkurippu

அட எனக்கு கூட 4000 கமெண்ட்.ஒவ்வொரு கமெண்டிற்கும் நன்றி சொல்லியிருந்தால் இந்த நேரம் எண்ணிக்கை பீம்பிளிக்கி பிலாப்பியாகிருக்கும் (10000)

R. Gopi said...

//சொல்ல முடியாத ஈர்ப்பு - பெயர்கள்//
தலைப்பு அருமை. ஆனால் எக்ஸாம் ஹாலில் அவ்வளவு பெரிய கதை எப்படிச் சொல்ல முடியும் என்று புரியவில்லை.

Srividhya R said...
This comment has been removed by the author.
இரும்புத்திரை said...

பாஸ் அது அரியர் எக்ஸாம்..யாரும் இருக்க மாட்டாங்க..இதுல மட்டும் லாஜிக் பார்ப்பீங்க..விஜய் படத்துல என்னைக்காவது பார்த்து இருக்கீங்களா கோபி

மகாவிஷ்ணுவா - இந்த சிறுகதை கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையில் நடந்தது.

Raju said...

யோவ்..அவனா நீயி..?