Saturday, August 7, 2010

ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை

முன்பொரு காலத்தில் பம்பாயில் நடந்த கதை.நானெல்லாம் பம்பாயில் ஆஃபாயில் சாப்பிட்டு இருப்பதால் இன்னும் மும்பை மீது ஈர்ப்பு குறையாமல் தானிருக்கிறது. ஆஃபாயில் என்று சொல்லி நான் லோக்கல் என்று காட்டி விட்டேனே.ஜெயமோகன் படித்து எனக்கு லிங்க் தராவிட்டால் வரும் ரெண்டு ஹிட்ஸூம் போய் விடுமே.

ஹாஜி மஸ்தான்,தாவூத் கதையில் மசாலா தடவி பொறித்து தந்திருக்கிறார்கள். அப்பர் ஹேண்டாக வருவதற்கு அஜய் தேவ்கனை விட்டால் ஆள் கிடையாது போல.(ஓம்காரா,கம்பெனி).மனுஷன் தூக்கி நிறுத்துகிறார். எண்பதுகளில் நடக்கும் கதையில் சிக்ஸ் பேக்ஸ் வைத்து கொண்டு சோயப் என்று தாவூத் கதாபாத்திரத்தில் முத்த ஸ்பெஷலிஸ்ட் இம்ரான் ஹாஸ்மி.இந்த படத்தில் அந்த பட்டத்தை தக்க வைக்க முடியவில்லை.

முதல் முறையாக கங்கனா ரனாவத்தைப் பிடித்து தொலைக்கிறது.எண்பதுகளில் இருந்த கதாநாயகிகள் இப்போது இருக்கும் தமன்னா,திரிஷா என்ற மொக்கைப் பிகர்களை விட அழகு தான் என்று கங்கனா மூலம் தெரிந்து கொண்டேன்.படத்திலும் நடிகையாக வருகிறார். இம்ரானுக்கு ஜோடி பிராச்சி தேசாய். போய் தொலையிராங்க இரண்டாவது ரேங்க். இம்ரான் ஹாஸ்மியிடம் பாரில் அறிமுகமாகும் பெண்ணுக்கு மூன்றாவது ரேங்க்.அதே ஆர்டரில் தான் படத்தில் வருகிறார்கள்.நீ வேற தனியான்னு கேக்க கூடாது.ஹிந்தி படம் எல்லாம் நான் சொல்றது தான் விமர்சனம்.அது தப்புன்னு இது தப்புன்னு எனக்கு மெயில் அனுப்பாதீங்க.

ரந்தீப் ஹூடா (சுஷ்மிதா சென்னுக்கு கொஞ்சம் ரசனை இருக்கு) மிடுக்கான போலீஸ் ஆபிசர். அவர் பார்வையில் கதை விரிகிறது.எப்படி சுல்தாம் பாயும்,ஷோயப்பும் வளர்ந்தார்கள் என்று சொல்லி கொண்டே வருகிறார். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை தான். அதில் ஒரு தமிழ் தாதா ஒருவர் வருகிறார். யாரை சொன்னார்கள் என்று யோசித்து கொண்டிருக்கிறேன்.காரணம் ஹாஜி மஸ்தான் அலைஸ் சுல்தான் பாய் ஒரு தமிழர். செட்,இசை (இசைன்னா இசை தான்) எல்லாம் எண்பதுகளை நினைவுப்படுத்துகிறது.

மும்பையில் அந்த சமயத்தில் கோலோச்சிய எல்லா தாதாவின் கதைகளையும் எடுத்திருக்கிறார்கள். உதாரணம் வரது பாய் அடித்து கொன்ற டிராபிக் போலீஸ். இன்னும் பத்து வருடம் கழித்து நான் ப்ளாட்பார கடையில் முட்டை தோசை சாப்பிட்டது ஏதாவது படத்தில் வந்தால் ஆச்சர்யப்படாதீர்கள்.

ஹலோ லேடன் கிட்ட பேசுறீங்களா.

5 comments:

நீ தொடு வானம் said...

விமர்சனம் எங்கே யாரையோ குறி வைச்ச மாதிரி இருக்கு

இரும்புத்திரை said...

அப்புறம் எதையாவது விட்டுட்டா வாசகர் கடிதம் எல்லாம் வரும்.நான் லிங்க் தரணும்..அடுத்த பதிவுல வெளுக்கணும்..

நடுவில தோல்வியை ஒத்துக்கிட்டேன்னு பஸ்ல எல்லாம் லிங்க் தருவாங்க..

அப்புறம் ஏன் முழு கதையை சொன்ன முக்கா கதைய சொன்னேன்னு சண்டைக்கு வருவாங்க..

நான் அவ்ளோ வோர்த் கிடையாது பாஸ்.

ராவணன் said...

இது என்ன படம்....? ஒன்னுமே புரியல?

Guruji said...

முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன்

http://ujiladevi.blogspot.com/

சி.பி.செந்தில்குமார் said...

தங்கத்தலைவி தமனாவையும்,திரிலோக சுந்தரி திரிஷாவையும் மொக்கை ஃபிகர் என உரைத்ததால் நான் வெளி நடப்பி செய்கிறேன்.(மறுபடி அடுத்த பதிவுக்கு வருவோமில்லை?)