Tuesday, August 24, 2010

துவையல் - வெளுப்பு ஸ்பெஷல்

இன்னொரு முறை கௌதம் மேனனைப் பிடித்து தொலைக்கிறது.கற்றது தமிழ் ராம் இயக்கி நடிக்கும் அல்லது கருணாஸ் நடிக்கும் தங்க மீன்கள் படத்தைத் தயாரிக்கிறாராம். அஜித் படம் நடிக்கவில்லை என்று முடிவாகி விட்டது.இன்னும் குமுறுகிறார்.குமுறுவார்.அடுத்து அஜித்,விஜய் யார் கூப்பிட்டாலும் போய் நிற்பார்.இதே மாதிரி தான் சில ஜீவன்களுக்கு படிக்காமலிருக்க முடிவதில்லை போலிருக்கிறது. என்னை ரொம்ப திட்டாதீங்க.நாளைக்கே ஒரே இரவில் புரட்சி ஏற்பட்டு நானும் தோழராக மாறி விட்டால் என்ன எழுதினாலும் கொஞ்சும் போது ஒரு மாதிரியாக இருக்கும். அடுத்த அனானி பின்னூட்டம் தயாராகுது போல.

நான் மகான் அல்ல படம் பார்த்தேன்.அதில் எனக்கு எந்த குறுயீடுகளும் தெரியாமல் போனது எனக்கே வருத்தமாக இருக்கிறது.நல்ல வேளை சென்சார் போர்டில் நான் வேலை செய்யவில்லை (என்னை சொன்னேன்) செய்திருந்தால் நிறைய படமும் வந்திருக்காது. எந்திரனை தொடக்கத்திலே புறக்கணித்திருப்பேன்.(அட பார்த்து விட்டு தான்).இந்த படத்தில் எனக்கு ஏற்பட்ட மிக பெரிய அதிர்ச்சியால் படமே நினைவில் நிற்காமல் போய் விட்டது.அந்த அதிர்ச்சி அந்த அதிர்ச்சி அந்த அதிர்ச்சி அதிர்ச்சி நைட்டிக்குள் பேண்ட் இருந்தது என்று ஜாக்கி அண்ணன் சொன்னதால் வரவில்லை. (உனக்கு இதெல்லாம் தேவையாடா.

ஜெயமோகன் தளத்தில் பின்னூட்டம் நிறுத்தப்பட்டது எனக்கு வருத்தமே.இனி அவர் சொல்வது மட்டும் சத்தமாக கேட்கும். ஆனால் இன்னொரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சியே.இனி சாருவை எல்லோரும் பிரித்து மேய்வது போல எதிர்வினைகள் கொடி கட்டிப் பறக்கும்.என்னிடம் கூட ஜெயமோகனுக்கு "ஆதரவாக" எழுதிய ஸ்கீரின் ஷாட் பதிவு இருக்கிறது.என்ன செய்ய. பாலகுமாரனை விவாதித்தால் ஏற்கனவே உதை வாங்கியவர் ஜெயமோகன் என்று ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். இன்று வெட்ட வெளிச்சமாகி விட்டது.நல்லவேளை சுஜாதா இருக்கும் போது அவரை பற்றி எழுதவில்லை. எழுதியிருந்தால் வைக்கும் எதிர்வினைகளால் எழுதவே மாட்டேன் என்று சொல்லியிருப்பார். பாலகுமாரனும் இல்லாமல் இருந்தால் மீண்டும் பின்னூட்டப் பெட்டி திறக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் சாருவை பார்த்து ஜெயமோகன் காப்பியடிப்பார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.மீண்டும் ஒருமுறை பின்னூட்டப் பெட்டியை மூடி உறுதி செய்துள்ளார். என்ன செய்தாலும் சாருவின் பாசத்தை என்னால் மறைக்க முடியவில்லை என்று வால்பையன் வந்து பின்னூட்டம் போட்டால் நானும் பின்னூட்டப் பெட்டியை அடைத்து எழுத்தாளராகி விடுவேன் என்று எச்சரிக்கை விடுகிறேன்.

ராம்ஜி யாஹூ பின்னூட்டதில் தோழர்களே தெறித்து விழுவார்கள்.ஜெமோ ஏம்மாத்திரம்.என்னையும் ஒரு ஆளாக மதித்து அல்லது எரிச்சலில் ஒரு பத்து முறை பின்னூட்டம் போட்டது. ஆஸ்கார்,ஆம்பாசிடர் கார், பென்ஸ் கார், மாருதி கார் என்று எல்லா காரிலும் ஒரே நேரத்தில்(நித்தி மாதிரி அல்ல) பயணித்தது போல ஒரு உணர்வு.எழுத வந்ததில் ஒரு லட்சியம் நிறைவேறி விட்டதடா.

பாணா காத்தாடி தொடங்கி நான் மகான் அல்ல,இராவணன் என்று எல்லா படத்திலும் திறமையான உதவி இயக்குனர்கள் இல்லை என்று தெரிகிறது.நான் ரெடி.ஆனா நான் கேக்குற சம்பளம் அவர்களால் கொடுக்க முடியாத வருத்தத்தில் சோகத்தில் இன்னும் பல தில்களோடு படம் இயக்கத் தெரியவில்லை அது தெரியவில்லை,இது தெரியவில்லை என்று நான் (நான் மட்டுமே) புறக்கணிக்க தெரியாமல் பார்த்து தொலைக்கிறேன். இல்லை சில படங்களின் டிஸ்கசன் நடக்கும் போது அதே உதவியாளர்கள் வேலை செய்திருப்பார்கள்.ரீப்பிட் காட்சிகள்.

விஷ்ணுபுரம் படித்த ஏதோ ஒரு உதவி இயக்குனர் தான் கிறிஸ்டோபர் நோலனிடம் வேலை பார்த்திருக்கிறார். பாருங்க பயபுள்ள பொய் சொல்லியிருக்கு.இந்த கதை மட்டும் ஜெயமோகனுடையது என்று சொன்னால் நாய் சேகர் மட்டுமல்ல கிறிஸ்டோபர் நோலனே அடுத்த படம் எடுக்க இருக்க மாட்டார். அடுத்து மணிரத்னமுடன் ஜெயமோகன் சேர்வதால் ஐயோ பாவம் மணிரத்னம் என்று சொல்ல முடியாமல் ஐயோ பாவம் இரும்புத்திரை என்று முடித்து கொள்கிறேன்.

6 comments:

Kolipaiyan said...

all are nice!

இரும்புத்திரை said...

இப்படி சொல்லாதீங்க.தோழர்களுக்கு கோபம் வரும்.

Jackiesekar said...

இன்னைக்கு நானா???

இரும்புத்திரை said...

எனக்கு ஒரு குறியீடு கிடைக்கவில்லை.அதான் நீங்க சொன்னதை எடுத்துக் கொண்டேன்

வால்பையன் said...

//அஜித் படம் நடிக்கவில்லை என்று முடிவாகி விட்டது.இன்னும் குமுறுகிறார்.குமுறுவார்.அடுத்து அஜித்,விஜய் யார் கூப்பிட்டாலும் போய் நிற்பார்.//

சாரு திரும்பவும் விஜய் டீவியில் கூப்பிட்டால் போவாரா, போகமாட்டாரா?
அந்த மாதிரி ஒரு சோப்ளாங்கிக்கு அடிபொடியாய் இருந்தோமே என நீங்கள் வருத்தபட்டதுண்டா!
உங்கள் ரசிகர்களிடம் அதற்காக மன்னிப்பு கேட்பீர்களா?

ஜால்ஜாப்பு வேண்டாம், கேட்பீர்களா, மாட்டீர்களா?

(எப்படியோ நாலு பதிவுக்கு மேட்டர் கொடுத்தாச்சு)

வால்பையன் said...

// என்ன செய்தாலும் சாருவின் பாசத்தை என்னால் மறைக்க முடியவில்லை என்று வால்பையன் வந்து பின்னூட்டம் போட்டால் நானும் பின்னூட்டப் பெட்டியை அடைத்து எழுத்தாளராகி விடுவேன் என்று எச்சரிக்கை விடுகிறேன்.//


நாட்டில் மக்கள் தொகையாவது குறையட்டும், சீக்கிரம் எழுத்தாளர் ஆகுங்க! ஆனா நாய் மட்டும் வளர்க்காதிங்க, எங்களால தாங்க முடியாது!