Thursday, August 5, 2010

தளபதியோட நூறாவது படத்தோட கதை இதுதான் இயக்கம் நான் தான்

ஒப்பன் பண்றோம்.அமெரிக்காவுல இருந்து இந்தியாவுக்கு ஒரு  விமானம் பறந்து வருது. இருட்டுல இந்திய விமானம் தான் பறக்குதுன்னு நினைச்சி பாகிஸ்தான் ஆட்மி சுட்டு விட விமானத்துல ஓட்டை விழுந்து எல்லா பெட்ரோல்(லாஜிக் இடிக்குதுன்னு சொல்லக் கூடாது) எரிவாயு எல்லாம் காலியாக பைலட்டுக்கு எல்லாம் மறந்து போக அவர் பாராசூட் தப்பிக்கிறாரு. ஒரு கர்ப்பிணி அம்மா, அவங்க புருஷன் இவங்களைத் தவிர எல்லோரும் குதிச்சி தப்பிக்கிறாங்க. பிரசவ வலி வேற உச்சத்துல இருக்கு. காப்பாத்த யாருமே இல்லையா அப்படி நினைக்கிறப்ப ஹீரோ இன்ரோ.(இதுக்கே நாப்பது கோடி அவுட்).

கர்ப்பத்துல இருந்து வெளியே வர்ற குழந்தை அப்படி ஸ்டிரீங்கைப் பிடிச்சி ரெண்டு ஆட்டு ஆட்டி கடலையே ஸ்கேட்டிங் போறாங்க. இவ்வளவு புத்திசாலித்தனமா ஒரு குழந்தையா - இந்த ஆனந்த அதிர்ச்சியில அம்மா இறந்து போக..அப்பாவை பத்திரமா பாத்துக்கோன்னு சொல்லிட்டு சாவுறாங்க.ஒரு செண்டிமெண்ட் சாங். ரத்த வாடையோட எப்படி தப்பிக்கிறதுன்னு பாத்தா ரத்த வாடைக்கு சுறா எல்லாம் இவங்க ரெண்டு பேரையும் அட்டாக் பண்ண வருது. அப்பா கிட்ட ஹீரோ சொல்றார்.சுறாவை விட என்னால வேகமா நீந்த முடியாது ஆனா உன்னை விட வேகமா நீந்துவேன்னு சொல்லிட்டு நீச்சல் அடிக்கிறாரு. ஆனா ஒரு சுறா நீங்க மட்டும் பிள்ளைச்சுறா சாப்பிடுவீங்க.நாங்க குழந்தப்பிள்ளையே சாப்பிடக்கூடாதுன்னு ஹீரோவ விடாமத் துரத்த கிச்சுக்கிச்சு மூட்டிப் பாக்குறாகு.சுறாவும் சிரிக்காம துரத்த பொறுத்து பொறுத்து வாயிலே ஒண்ணுப் போட்டு வயித்துல ஒரு மிதி விட்டு தூக்கி வீசுறாரு. இந்த அடியைப் பாத்து எல்லோரும் ஹீரோவோட அப்பாவ பயந்து போய் விடுறாங்க.

அங்க பாம்பேயில இருந்து இறக்குமதி பண்ண பொண்ணு ஒண்ணு கடல்கன்னியாக இருக்காங்க. ஹீரோ குழந்த தானே அவங்க போட்டு இருக்கிற சின்ன சைஸ் துணியை கிழித்து கொண்டு குத்தாட்டம் போடுறார். அப்பா வந்து மகனே அந்த கடல்கன்னி எங்கூட இருக்கட்டும்னு சொல்ல பாகிஸ்தான் இராணுவத்துக்கிட்ட பிடிச்சிக் கொடுத்துட்டு இவர் தூத்துக்குடியில கரை ஏறுறாரு.

ஹீரோயின் ஒரு ஜூவாலஜி ஸ்டூடண்ட். ஹீரோ தான் குழந்தை ஆச்சே.நீந்தின களைப்புல மைக்ரோஸ்கோப்புல தூங்க அவங்க பாக்காம இடது பக்கமாக திருப்ப ஹீரோ அமீபாவா மாறுறார். என்னமோ வித்தியாசமா இருக்கேன்னு ஹார்மோன் சொல்ல ஹீரோயின் நல்லா புல்லா வலது பக்கம் திருப்ப ஹீரோ வந்து நச்சுன்னு கிழங்கு மாதிரி குதிக்கிறார். வேறன்ன அழகுல மயங்கி பாட்டுத்தான்.(அது யார்டா அது ஹீரோ போட்டு இருக்கிற துணியைப் பத்தி கேக்குறது..அமீபா ஹீரோவா மாறும் போது துணியும் பெருசா மாறாதா என்ன.உங்க தலைவர் படத்துக்கு எல்லாம் லாஜிக் கிடையாது. அப்படியே லாஜிக் வைச்சாலும் சென்சார் தூக்கிரும்)

ஹீரோயின் யாருன்னு பாத்தா பாகிஸ்தான் அப்பா அம்மாவுக்கு பிறந்தவங்க.ஆனா விமானம் இந்தியா மேல பறக்கும் போது அவங்க பிறந்த காரணத்துனால அவங்க இந்தியாகாரங்களா இருக்காங்க. ஹீரோ கூட சுத்துறதைக் கேள்விப் பட்டு சிங்கம் மாதிரி பாகிஸ்தான்ல இருந்து வந்த முறை மாப்பிள்ளை ஹீரோயினை கடத்த..அவர் ஒரு டெடரிஸ்ட்னு தெரிஞ்சும் பாகிஸ்தான் போக ஹீரோ மறுக்கிறாரு.(உங்களுக்கு இது நூறாவது படம்.எனக்கு இது முதல் படம்.காரணம் வலுவா இருக்கணுமா.சரி இப்போ பாருங்க..உங்க படம் எல்லாம் பாத்தது வீண் போகல..)

ஹீரோவோட அப்பாவுக்கும் அந்த கடல்கன்னிக்கும் ஒரு குழந்தை பிறக்குது.அதுதான் விஜய் தங்கச்சி. அந்த வாயில வர்ற நூறு லிங்கத்தை எடுத்தா இந்த பூமியே ஆளலாம்னு யாரோ சொல்ல அவங்களையும் ஹீரோயின் முறை மாப்பிள்ளை கடத்துறாரு.(என்னது குழந்தையா..அதுக்கு ஒரு முப்பது வயசு இருக்கும்) பொங்கி எழுந்த ஹீரோ அங்க போய் துவம்சம் பண்றாரு.

ஹீரோ நல்லவர்னு தெரிஞ்சாலும் எல்லோருக்கும் பொண்ணை கொடுக்க வருத்தம். டக்குன்னு ஹீரோ சொல்றார் நான் பிறக்கும் போது பாகிஸ்தான் பாடர்ல தான் பிறந்தேன்.நானும் இந்த மண்ணின் மைந்தன் தான்.அதுக்கு ஆதாரமா ஒரு ஆயிரம் விஞ்ஞானிகள் சேர்ந்து குழந்தை ஏரோபிளேன் எடுத்ததை சாட்டிலைட் மூலமாக வீடியோ எடுத்து ரீப்ளே போட்டு பாக்க அவர் குதிச்ச இடம் பாகிஸ்தான் தான் முடிவுக்கு வர்றாங்க.ஆனாலும் சந்தேகம் தீரல.அப்போ தான் ஹீரோ கிட்ட அடி வாங்கின சுறா ப்ளாக் பாக்ஸ் எடுத்துட்டு வந்து உண்மையை சொல்ல கல்யாணம் நடக்குது.உலக நாடுகளில் இருந்து எல்லாம் பிரதமர்கள் வர சாப்பாடு தீர்ந்து போக அந்த சுறாவையே சமைச்சி பரிமாற இது தெரிஞ்ச ஹீரோ கதறி அழுது என் பையனை உன் பொண்ணுக்கு தான் கல்யாணம் பண்ணி வைப்பேன் சொல்லி சபதம் எடுக்கிறார்.அப்ப எண்ட் டைட்டில் போடுறோம்.எ பிலிம் பை இரும்புத்திரை.

இந்த படம் உலகம் முழுக்க வசூலை அள்ள பில்கேட்ஸ் டிக்கெட் கிடைக்காம அவர் மொத்த சொத்தையும் கொடுத்து இந்த படம் பாக்குறாரு.அப்படியே இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையும் தீர்ந்து போக ஆஸ்கர்,அம்பாஸிடர் கார் எல்லாம் கிடைக்குது.ஆஸ்கர் மேடையிலே இனிமே நான் நடிக்க மாட்டேன்னு ஹீரோ கண் கலங்கி சொல்ல ஏன்னு உலகமே கதறுது.இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இவரே பிரதமரா பதவி ஏற்கிறார்.இவ்வளத்துக்கும் காரணமான இரும்புத்திரையை உடனே கூப்பிட்டு இவ்ளோ நாளா எங்க இருந்தேன்னு ஹீரோ கேக்க..இங்க தான் பதிவு எழுதி பழகி கிட்டு இருந்தேன்னு சொல்ல என் பையனை ஹீரோவோ நீங்க தான் அறிமுகப்படுத்தணும் என்று கெஞ்ச நான் ஒத்துக்கிட்டு இருக்கும் போதே போன். "டேய் ஆபிஸ்க்கு வராம எவ்ளோ நேரம் வானத்தைப் பார்த்துக்கிட்டு நிப்ப..லேட்டா வந்ததுக்கு முட்டி போடுன்னு சொல்றாங்க.." இதுக்குத்தான் இந்த பசங்களுக்கு ப்ரிவியூ ஷோ போட்டுக் காட்டியிருக்கக்கூடாது.சுறாவை முட்டிக்கு முட்டி தட்டுனதைப் பார்த்த எபெக்ட் இது.

பதிவுலக நண்பர்கள் மட்டும் போன் போட்டு திட்டுறாங்க.."உனக்கு நாங்க என்ன பாவம் பண்ணோம்..நீ ஹீரோவுக்கு ஐம்பதாவது படம் பண்ணியிருந்தா எப்பவே நாங்க தப்பிச்சிருப்போம்..". உங்களை எல்லாம் திருப்தி படுத்தவே முடியாதுன்னு தெரியும்னு மனசுல நினைச்சிக்கிட்டேன். 1000 கோடி பட்ஜெட்ல படம் எடுத்து நீதி சொன்னா தான் புரியுது.கலிகாலமடா இது.

10 comments:

நீ தொடு வானம் said...

எல்லாம் சரி தான் படத்துக்கு டைட்டில் என்ன

இரும்புத்திரை said...

கில்லி - திருப்பாச்சி - போக்கிரி - குருவி எல்லா படத்துலையும் ஒரு எழுத்தை உருவி கிருக்கு கீழ கேப்ஷன் இன்னும் பிடிக்காமல் என்று வைக்கிறோம்.

இப்படி வைக்கலைன்னா சூட்டிங் தடை படும் எனக்கு தேவையா..

நீ தொடு வானம் said...

தலைப்புல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே

இரும்புத்திரை said...

என்ன ஆனாலும் சரி லாஜிக் மட்டும் பாத்துராதீங்க..பாத்தா உலகம் அழிஞ்சிரும்..

அகல்விளக்கு said...

சூப்பரு....

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல்...

raja said...

வீட்டு விலாசம் தெரிஞ்ச கொஞ்சம் நல்லா இருக்கும் உங்களுக்கு ?

பா.ராஜாராம் said...

:-))

"மோட்டாரு இல்லாத காட்டாறு" இந்த தலைப்பே நல்லாருக்கும் டைரக்டர்.

இரும்புத்திரை said...

ராஜா - நம்பர் ஆறு

பா.ரா அண்ணே :-)))))))

மிரட்டல் said...

எங்க தலைவர் மேலுள்ள காழ்புணர்ச்சியினால் நீங்க இப்படியெல்லாம் எழுதறீங்க அதனால் உங்களுக்கு தண்டனை 1)தூக்கு தண்டனை இல்லைன்னா 2)எங்க தலைவர் நடிச்ச 50 படத்தோட CD -யும் பார்க்கனும் உங்களோட சாய்ஸ்.
அப்புறம் படத்துக்கு தலைப்பு வைக்கனும்னா "ஃபீனிக்ஸ்"னு வைங்கப்பா(ஃபீனிக்ஸ் பறவை ஒன்னும் கோச்சிக்காது).