Monday, August 9, 2010

எந்திரன் பற்றி பேச நமக்கு என்ன தகுதி இருக்கு

பிரகாஷ்ராஜ் இனிது இனிது படத்தின் பாடல்களை சென்னை,திருச்சி,மதுரை என்று எல்லா ஊர்களிலும் போய் வெளியிட்டார். அதோடு நிறுத்தி கொள்ளலாம். உடனே நான் தமிழர்கள் இருக்கும் இடத்தில் தான் என் பாடல்களை வெளியிடுவேன் என்று எதையோ நினைத்து இடத்து கொண்டார். ரஜினியை தான் சொல்லியிருப்பார் என்று சின்ன குழந்தைக்கே தெரியும். ரஜினிக்கும்,அவருக்கும் ஆகாது அதனால் தான் படையப்பாவில் ஒரு சின்ன காட்சியில் பிரகாஷ் ராஜ்,மன்சூர் அலிகான் இருவரும் சின்ன வேடத்தில் அவர் புகழ் பாடும்படி நடிக்க வைத்தார்கள். படம் இல்லாத சூழ்நிலை நடித்து கொடுத்தனர் இருவரும். இன்னும் நன்றாக கூர்ந்து கவனித்தால் அந்த ஒரு படத்தில் மட்டுமே இருவரும் நடித்திருப்பார்கள். தமிழர்கள் இடத்தில் ரீலிஸ் செய்வது சரி அந்த படத்தின் மூலம்,படத்தின் இசையமைப்பாளர் எல்லாம் தெலுங்கு தானே என்று கேள்வி வைக்கலாம்.ஆனாலும் பிரகாஷ்ராஜ் அளவிற்கு யோசிக்க முடியவில்லை.யோசித்திருந்தால் இரண்டு பெண் குழந்தை வைத்து கொண்டு தோழியோடு பாடல் ரீலிஸ் செய்வதில்லை என்று கேட்கலாம். அது பிரகாஷ்ராஜின் சொந்த விஷயம் என்றால் இது சன் பிக்சர்ஸ்,ரஜினி,ஷங்கர், ஏ.ஆர்,ரகுமான் அவர்களின் சொந்த விஷயம்.

சரி பிரகாஷ்ராஜ் சொன்னதை விட்டு தள்ளுவோம். பதிவுலகத்திற்கு வருவோம். எந்திரன் பற்றி என்ன  எழுதினாலும் கிடைக்கும் ஹிட்ஸ்,ஓட்டு,பரிந்துரை,மகுடம் இந்த அற்ப விஷயங்களுக்காகவே கண்டபடி எழுதும் போது கிடைக்கும் உலகளாவிய பெயர்,புகழுக்கு அவர்கள் எத்தனை கோடியில் படம் எடுத்தால் நமக்கென்ன.நாம் வழக்கம் போல டவுண்டோட் செய்து பார்த்து விட்டு அக்குவேறாக ஆணிவேறாக ஒரு மாதம் கழித்து தான் கழற்ற போகிறோம். இதனால் சிறு முதலில் தயாரிக்கப்பட்ட படங்கள் காலியாகி விடும் என்று சொன்னால் எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.எத்தனை பேர் களவாணி,திட்டக்குடி போன்ற சிறு முதல் போட்ட படங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். யானை இருக்கும் காட்டில் தான் எறும்பும் வாழ்கிறது என்று "நிறைய பேருக்கு" பிடித்த எழுத்தாளர் ஒரு படத்தில் வசனமாக வைத்தார். அது மாதிரி நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம்.எறும்பும் பிழைத்துக் கொள்ளும். இதிலும் சற்று யோசித்தால் தெரியும் உள்குத்தை நாம் கண்டுக்கொள்ளலாம்.நேற்று ஒரு ஆண் பதிவர் பெண் பதிவர் மீது வைத்த குற்றச்சாட்டின் மீது கவனம் இல்லாமல் போக எந்திரன் உதவி இருக்கிறான் என்றால் அதுதான் எந்திரன் மகிமை.

நம் ஹிட்ஸ்,பரிந்துரை,மகுடம்,இத்துப் போன ஆமாஞ்சாமி பின்னூட்டங்களுக்காக எந்திரன் இல்லை அடுத்து வரும் மூன்னூறு கோடி பட்ஜெட் ரஜினி படம் உதவும். ஆயிரம் பேர் பதிவுலகத்திலேயே இத்தனை அக்கப்போர் முடியும் என்றால் கோடியில் அவர்கள் அக்கப்போர் செய்தால் நமக்கென்ன. இதை படித்து விட்டு துப்ப வருபவர்கள் ஜீலை மாதம் நான் எழுதிய போலி பதிவுகளை எடுத்து படித்து மகிழலாம்.

இந்த பதிவை மகுடத்தில் எல்லாம் ஏற்ற வேண்டாம்.அது எனக்கு பிடிக்காது.நான் இப்படித்தான் சொல்வேன்.ஊருக்கு மட்டும் தான் ஊபதேசம்.நமக்கு என்றால் வாயை மூடிக் கொள்வேன்.

28 comments:

ஸ்ரீ.... said...

நல்ல இடுகை.

ஸ்ரீ....

Santhappanசாந்தப்பன் said...

பிரகாஷ்ராஜ் அவரு படத்தை மலேசியாவுக்கு அனுப்பவே மாட்டாரா? அங்கே இருந்து வர வருமானத்தை வேணாம்னு சொல்லிடுவாரா?

மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் கொடுக்கும் வருமானம் மட்டும் இவருக்கு வேண்டும். ஆனால் அவர்கள் நட்சித்திரங்களை கண்டு மகிழ அங்கே விழா நடத்துவதை குறை சொல்வார்

நீ தொடு வானம் said...

எல்லோரும் முதல் பத்தியிலே நிற்கிறார்களே.இரண்டாவது பத்தி சும்மா இருக்கே

Santhappanசாந்தப்பன் said...

மிகச் சரியான பதிவு.

வியாபார தந்திரம், இம்சை, மண்ணாங்கட்டி, புடலங்காய் என்று பரபரப்புக்காக தலைப்பிட்டு பாடல் வெளியான ஒரு மணி நேரத்தில் (அதையும் திருட்டுதனமாக டவுன்லோடு செய்து) பதிவு போடுவார்கள். இவர்கள் பதிவு/எழுத்து பிரபலமாகவேண்டும், அது கூட வியாபாரம் தான்)

அகல்விளக்கு said...

சரியாச் சொன்னீங்க தல.... :)

எல் கே said...

en manathil irunthathai arumaya eluthi irukeenga .. vaalthukkal

அ.முத்து பிரகாஷ் said...

தீராத பக்கத்தில் நேற்றிரவு நானிட்ட பின்னூட்டம் ... இன்று வரை வெளியாகவில்லை ... பலமுறை மாதவராஜ் அவர்களை பாராட்டி வக்காலத்து வாங்கி நானிட்ட பின்னூட்டமெல்லாம் வெளியாகிவிட இது மட்டும் வெளியாகாததில் தோழரின் ஜனநாயகம் புல்லரிக்கிறது !

"முப்பத்தைந்து வாக்குகள் வாங்கி தமிழ் மண உச்சியில் அமர்வதற்கு இந்த பதிவிற்கு என்ன தகுதியிருக்கிறது என பல முறை உங்கள் பதிவை படித்துப் பார்த்தும் எனக்கு ஒன்றும் புரிபடவில்லை... மொக்கை பதிவு ஒன்று உச்சியில் அமர்வது குறித்து எனக்கு வருத்தமில்லை தான்;ஆனாலும் லேபிளில் மொக்கை என்று இல்லாததால் தான் வருத்தம் ! கோவி கண்ணன் அவர்கள் உங்களை குறித்து எழுதிய பதிவு ஒன்று மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் கம்யூனிச உறுப்பினர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிரம்பி வழிவதற்கு என்ன காரணம் என்று இந்த பதிவை படிக்கும் போதே தெரிகின்றது.

//சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! //
உங்களின் அறிவும் என் உச்சந்தலையை குளிரச்செய்கிறது ... வணிக சினிமா நிகழ்வொன்றில் சத்யஜித்ரேயை கண்டுபிடிக்கும் ஆற்றல் ....

//அதன் வெளியீடு நடப்பதற்குள், என்ன திகிடுதத்தங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ! அதையெல்லாம் அவரவர் புத்திசாலித்தனத்துக்கேற்ப கலர் கலராய் வாந்தியெடுத்து, பிரமாதப்படுத்துவதற்கு என்று பலரும் இருக்கிறார்கள். சமூகப் பார்வையும், சினிமா குறித்து அக்கறையும் அற்ற இந்த ஜென்மங்களை என்ன செய்வது? //

யோவ்..மாதவராஜ் ... வேலை வெட்டி இல்லாம சுரணை கெட்டு எந்திரன் நிகழ்வு ஒண்ணு விடாம எல்லாத்தையும் பாத்துட்டு நீர் பேசுற பேச்சு குமட்டிகிட்டு வர்துய்யா ... ஐநூறு ரூவா குடுத்து போயிட்டு வந்தவன் சொன்னானாம் இனி யாரும் போகாதீங்க அவளுக்கு அங்கேசொறின்னு !

பி கு : நான் ரஜினி,ரகுமான்,சங்கர் ,கலாநிதி மற்றும் கோவி கண்ணனின் ரசிகன் அல்ல! ரஜினி,சங்கர் படங்கள் எதையும் திரையரங்குக்கு போய் இதுவரை பார்த்ததில்லை;இனியும் தான்.

ஆயிரம் ரூபா கொடுத்து எந்திரன் முதல் காட்சி பார்த்துவிட்டு மாதவராஜ் எழுதப்போகும் "எந்திரன்:தமிழ் ரசிகனுக்கு ஒரு எச்சரிக்கை" பதிவிற்கு ஓட்டுப் போடும் படி இப்போதே நண்பர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்."

Rajkumar said...

அடபோங்கப்பா... ஒன்னும் புரியல...

Anonymous said...

தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம்.

எல் கே said...

@neo
lol.. sema comment...

ராம்ஜி_யாஹூ said...

எந்திரனை நினைத்து எனக்கு இப்போவே பயமாக இருக்கிறது. எட்டாயிரம் விமர்சனப் பதிவுகள் வந்து விடும்.

ராம்ஜி_யாஹூ said...

எந்த விகடனால் ரஜினியின் படத்திற்கு (முத்து) ரஹ்மானின் இசை ஓட்ட வில்லை என்று தூற்றப் பட்டாரோ அதே ரஹ்மானின் ரசிகன் நான்.
அதே போல முதல் படத்திலேயே ஒரு எழுத்தாளரை தைரியமாக வசன கர்த்தாவாக பயன் படுத்த துணிந்த ஷங்கரின் ரசிகனும் நான்.

Unknown said...

சினிமா என்பது ஒரு தொழில். அதில் லைட் தூக்கும் லைட்பாயில் இருந்து தியேட்டரில் முறுக்கு கடலை மிட்டாய் விற்கும் சிறுவர்கள் வரை அனைவருக்கும் சம்பாத்தியத்திற்கு வழி இருக்கிறது. 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் போது இவர்கள் அனைவருக்கும் நல்ல வருமானம் கிடைக்கவும் வழி இருக்கிறது.

எல்லாரும் சத்யஜித் ரே மாதிரி கலைப்படங்கள் மட்டுமே எடுத்துவந்தால் தியேட்டரில் காத்தாடுவது மட்டுமில்லாமல் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும். வழமை போலவே முதலாளிகளை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே எண்ணம் கொண்ட ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளர்களின் குடும்பம் மண்ணாய்ப்பொவதைப் பற்றிய கவலை இல்லாதவர் என்று தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது மாதவராஜின் இடுகை.

மதார் said...

சன் பிக்சர்ஸ் 150 கோடியில் என்ன 1000 கோடியில் படம் எடுத்தாலும் நாம் பார்க்காமல் இருக்கப் போவதில்லை . அதிலும் இருக்கும் லாஜிக் ஓட்டைகள் , எந்தெந்த ஆங்கிலப்படங்களின் தழுவல்கள் என்று குத்தம் குறை சொல்லவாவது கண்டிப்பாய் அனைவரும் படம் பார்ப்போம். இதில் அவர்கள் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியா என்ன விண்வெளியில் கூட நடத்துவார்கள் . அதையும் நாம் சன் டிவி சேனல் மாற்றாமல் பார்கத்தான் செய்வோம் . அது அவர்களின் வியாபார யுக்தி . SC ,ST மக்களின் வளர்ச்சி நிதிக்கென ஒதுக்கிய 700 கோடிகளுக்கு மேலான் பணம் காமன் வெல்த் விளையாட்டுக்கு திருப்பி விடப்பட்டு அரசே அவ்வளவு ஊழல் செய்துள்ளது . மக்களின் பணமே மக்களுக்கு சரியாக வந்து சேராத நிலையில் சன் குழுமத்தின் பணம் மட்டும் மக்களுக்காக செலவழிக்கப் பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த ஊரு நியாயம் ? அவர்களுக்கு தெரிய வேண்டும் இது , நல்லா கேட்பாங்க யார் வீட்டு பணத்தை எடுத்து யாருக்கு செலவு செய்வது என்று ? . அவர்கள் மக்களை ஏமாற்றியும் சம்பாதிருக்கலாம் அது அவர்களின் வித்தை. நீ எப்படி இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்று யாரையாவது நம்மால் கேள்வி கேட்க முடியுமா ?

மதார் said...

சன் பிக்சர்ஸ் 150 கோடியில் என்ன 1000 கோடியில் படம் எடுத்தாலும் நாம் பார்க்காமல் இருக்கப் போவதில்லை . அதிலும் இருக்கும் லாஜிக் ஓட்டைகள் , எந்தெந்த ஆங்கிலப்படங்களின் தழுவல்கள் என்று குத்தம் குறை சொல்லவாவது கண்டிப்பாய் அனைவரும் படம் பார்ப்போம். இதில் அவர்கள் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியா என்ன விண்வெளியில் கூட நடத்துவார்கள் . அதையும் நாம் சன் டிவி சேனல் மாற்றாமல் பார்கத்தான் செய்வோம் . அது அவர்களின் வியாபார யுக்தி . SC ,ST மக்களின் வளர்ச்சி நிதிக்கென ஒதுக்கிய 700 கோடிகளுக்கு மேலான் பணம் காமன் வெல்த் விளையாட்டுக்கு திருப்பி விடப்பட்டு அரசே அவ்வளவு ஊழல் செய்துள்ளது . மக்களின் பணமே மக்களுக்கு சரியாக வந்து சேராத நிலையில் சன் குழுமத்தின் பணம் மட்டும் மக்களுக்காக செலவழிக்கப் பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த ஊரு நியாயம் ? அவர்களுக்கு தெரிய வேண்டும் இது , நல்லா கேட்பாங்க யார் வீட்டு பணத்தை எடுத்து யாருக்கு செலவு செய்வது என்று ? . அவர்கள் மக்களை ஏமாற்றியும் சம்பாதிருக்கலாம் அது அவர்களின் வித்தை. நீ எப்படி இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்று யாரையாவது நம்மால் கேள்வி கேட்க முடியுமா ?

நிலவகன் said...

சும்மா ஆயிரம் பேர் பார்க்கும் வலைப்பூவிலே பெயர் வாங்க இவனுகள் பண்ணுற பித்தலாட்டத்தை விட கலாநிதி மாறனோ, ஷங்கரோ, ரஜனியோ செய்து விடப்போவதில்லை.

அப்பப்பா கூட்டணி அமைச்சு வாக்குப் போடுறது, பெண் பதிவர்களுக்கு காக்கா பிடிக்கிறமாதிரி பதிவு போடுறது, ஏ ஜோக்கு என்ற பேரிலே கண்ட கண்றாவியெல்லாம் எழுதுறது அப்பப்பா ....
இப்ப ஜோக்கியன் மாதிரி எந்திரன் பற்றி எழுதுறானுகள்.....

இவனுகள் உருப்படியாக மேலே சொன்ன எந்த சுத்து மாத்தும் இல்லாமல் ஒரு பதிவு எழுதி ஒரு நூறு பேரை படிக்க வைக்கட்டும் , பிறகு எந்திரன் பற்றி எழுதட்டும் நாங்களும் கேட்கிறோம்.

ஏ ஜோக் எழுதாமல் ஒருநாளைக்கு அவரேஜ் கிட்ஸ் 700 க்கு மேல் வாங்கும் ஒரு வலைப்போவை சொல்லுங்கள் பார்ப்போம்!

நிலவகன் said...

சும்மா ஆயிரம் பேர் பார்க்கும் வலைப்பூவிலே பெயர் வாங்க இவனுகள் பண்ணுற பித்தலாட்டத்தை விட கலாநிதி மாறனோ, ஷங்கரோ, ரஜனியோ செய்து விடப்போவதில்லை.

அப்பப்பா கூட்டணி அமைச்சு வாக்குப் போடுறது, பெண் பதிவர்களுக்கு காக்கா பிடிக்கிறமாதிரி பதிவு போடுறது, ஏ ஜோக்கு என்ற பேரிலே கண்ட கண்றாவியெல்லாம் எழுதுறது அப்பப்பா ....
இப்ப ஜோக்கியன் மாதிரி எந்திரன் பற்றி எழுதுறானுகள்.....

இவனுகள் உருப்படியாக மேலே சொன்ன எந்த சுத்து மாத்தும் இல்லாமல் ஒரு பதிவு எழுதி ஒரு நூறு பேரை படிக்க வைக்கட்டும் , பிறகு எந்திரன் பற்றி எழுதட்டும் நாங்களும் கேட்கிறோம்.

ஏ ஜோக் எழுதாமல் ஒருநாளைக்கு அவரேஜ் கிட்ஸ் 700 க்கு மேல் வாங்கும் ஒரு வலைப்போவை சொல்லுங்கள் பார்ப்போம்!

Renga said...

//எந்திரன் பற்றி பேச நமக்கு என்ன தகுதி இருக்கு//

போலி கம்யூனிஸ்ட்: அது மட்டும் தான் தகுதி.... எந்திரன் என்ன எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம்..

Renga said...

//தீராத பக்கத்தில் நேற்றிரவு நானிட்ட பின்னூட்டம் ... இன்று வரை வெளியாகவில்லை ... பலமுறை மாதவராஜ் அவர்களை பாராட்டி வக்காலத்து வாங்கி நானிட்ட பின்னூட்டமெல்லாம் வெளியாகிவிட இது மட்டும் வெளியாகாததில் தோழரின் ஜனநாயகம் புல்லரிக்கிறது//

நியோ, நீங்கள் மட்டுமல்ல எனக்கும் இதை போன்ற அனுபவம் மாதவராஜுடன் உண்டு... இதுதான் அவருடைய "maturity level"

கோவி.கண்ணன் said...

//அதோடு நிறுத்தி கொள்ளலாம். உடனே நான் தமிழர்கள் இருக்கும் இடத்தில் தான் என் பாடல்களை வெளியிடுவேன் என்று எதையோ நினைத்து இடத்து கொண்டார்.//

பிரகாஷ் இராஜ் ஏன் உளறினார் என்றே தெரியவில்லை. மலேசியாவிலும் தமிழர்கள் மத்தியில் தானே வெளி இட்ட்டார்கள், மாலாய்காரர்களிடமோ, சீனர்களிடோ வெளி இடவில்லையே. பிரகாஷ் இராஜ் மலேசிய தமிழர்களை தமிழர்களாக நினைக்கவில்லையோ....... ?

எப்பூடி.. said...

கண்ட நாயும் ஆயிரம் பேசும், டேக் இட் ஈசி........
காகம் திட்டி மாடு சாகுமா?
சந்திரனை பாத்து நாய் குலைச்சா என்ன ஆகப்போகுது?

ரஜினியை விமர்சித்தே அப்பப்ப தங்களை இருப்பதாக காட்டிக்கொள்பவர்கள் அதிகம். ராமதாஸ், அன்புமணி, சத்தியரகஜ், ராஜேந்தர், ஞானி, ஜாக்குவார்.... என ஒரு பெரிய லிஸ்டில் இப்ப கூகிள் குடுத்த ஓசி பக்கத்தில நானும் விமர்சிக்கிறன் என்று நாலு நாய்கள் குரைப்பதை பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம்.

அப்படி செய்தால் அதுவும் தப்பு, இப்படி செய்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம், தன்நிழல் பார்த்து தானே குரைக்கும்.

இது வைரமுத்து சொன்னது.

தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரன் வீழ்வதில்லை

வேழமுகன் said...

nice to see positive views.

Unknown said...

மாதவராஜுக்கு நான் போட்ட கமெண்ட் ..
//
லூசாப்பா நீ? வினைவுல போட வேண்டிய பதிவு இது ..
எத்தனை நாளுக்குத்தான் இப்படியே.. அட போங்கப்பா..
//
இதுல என்ன சாமி தப்பு ..இதைக்கூட publish பண்ண மாட்டேங்கிறாரு .ஊருல எல்லோரையும் பத்தி கண்ணா பின்னானு கிறுக்கிற மனுஷன் ,தன்னை பற்றி ஒரு சின்ன கமெண்ட் தப்பா வந்தாலும் பதுங்குவது ஏன்?
மாதவராஜை புறக்கணிக்கிறேன் ....

பொன் மாலை பொழுது said...

அண்ணாத்த 'எப்பூடி ' அழகா சொன்னார்.

Unknown said...

//நேற்று ஒரு ஆண் பதிவர் பெண் பதிவர் மீது வைத்த குற்றச்சாட்டின் மீது கவனம் இல்லாமல் போக எந்திரன் உதவி இருக்கிறான் என்றால் அதுதான் எந்திரன் மகிமை.
//

link .please.

பொன் மாலை பொழுது said...

அம்மா கண்ணு நீங்க Too late.

sweet said...

எஸ் உங்க கட்டுரை அருமை
மாதவராஜ் ஒரு சைக்கோ என்று தெரிஞ்ச டாக்டர் ஒருவர் சொன்னார்
பைத்தியம் சொல்றதை எல்லாம் ஏன் பெருசா எடுத்து இருக்கீங்க
எங்களுடைய கருத்துக்களுடன் மோதுங்கள்... எங்களோடு மோதாதீர்கள்... கேட்டால் கம்யூனிசம் என்று அரை வேக்காடு இல்லை முழு வேக்காடு மாதிரி பேசுவது
பைத்தியம் என்று சொல்றேன் அப்புறம் எப்படி அவரோட கருத்துக்களுடன் நாம் மோதுவது?
அவன் அரை கிறுக்கன் இல்லை பாஸ் முழு கிறுக்கன்
அவரை நான் ஒரு விவேகானந்தர் என்று சொல்லி பின்னோட்டம் போட்டேன்
அதை கூட அந்த பைத்தியம் போட வில்லை
விமர்சனங்கள் பின்னூட்டங்களாக வந்தால் அதை தாங்கும் மன பக்குவம் கூட இல்லை அவருக்கு
பின்ன எதுக்கு அவர் எழுதுறார் என்று கேக்குறீங்களா? ரெண்டாவது வரியை படிங்க

பொல்லாதவன்-ல வில்லன் ஒரு வசனம் பேசுவார்
அவனை எல்லாம் அப்படியே விட்டு விடணும் என்று...

அது மாதிரி அந்த கேஸ்-களை விட்டு விடுங்க பாஸ்

புதிய மனிதா பாட்டை வெள்ளி திரையில் பார்க்க ஆயத்தமாவோம்

மதுமிதா
madhumidha1@yahoo.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாரு யாரைப்பத்தியும் எதுவும் பேசுங்க...எழுதுங்க, ஆனா சினிமாக்காரனுங்களப் பத்தி நாம தேவையில்லாம அலட்டிக்கிறோம்னு நெனக்கிறேன். பொதுவாழ்க்கையிலேயும் தனிவாழ்க்கையிலேயும் சினிமாவோட தாக்கத்தைக் கண்டிப்பா நாம எல்லாரும் குறைக்கனும். (அப்பா ஒருவழியா தம்கட்டி பெரிய மனுசன் மாதிரி நம்மலும் எதையோ பேசி வெச்சாச்சு!)