Friday, August 20, 2010

தோழர்,புரட்சி - நான் சொல்லக்கூடாத கெட்ட வார்த்தைகளாம்

தினம் தினம் தோழர்கள் (கெட்ட வார்த்தை ஒரு முறை) மாதிரி எதையாவது படித்து விட்டு (முகிலன் பாயிண்ட் நம்பர் ஒன்) ஏன் எதிர்க்கிறோம் என்று தெரியாமலே அதற்கு எதிர்வினை வைத்து விட்டு எல்லா தோழர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி ஓட்டுப் போட சொல்லி விட்டு பரிந்துரையில் நின்றோமா ஐந்து பத்து வாங்கிக் கொண்டு அடுத்த நாள் பேப்பரைப் படித்து எதையாவது எழுதி வைக்கலாம் என்ற முயற்சியில் குவைத்தில் இன்போசிஸ் கட்டி வரும் கோப்ரா டவர்ஸைக் காறித் துப்பலாம் என்று முடிவு செய்திருந்தேன்.அந்த டவர் எப்படியிருந்தால் என்ன ஏற்கனவே இந்தியாவை பாம்புகள் தேசம் என்று சொல்கிறார்கள்.அதை உறுதி செய்வது போலவே இந்த இன்போசிஸ் செயல் படுகிறதே.இனி வெளி நாட்டுக்காரன் என்ன நினைப்பான். நான் என்ன இன்போசிஸ் கொம்பெனியிலா வேலை செய்கிறேன் அதற்கு ஜிங்கு சாங்கு அடிக்க சேர்ந்தாலும் நான் ப்ளாக் எழுதுவது எப்படி தெரியப் போகிறது. அவர்கள் என்ன எனக்கு ஓட்டுப் போட்டு பரிந்துரையிலா நிறுத்துகிறார்கள்.அவர்கள் என்ன கட்டினாலும் ஆகா ஏகோ என்று எக்கோவில் கதற இப்படி எழுதி கொண்டிருந்தவனை கொஞ்சம் இங்க வாங்க இங்க வாங்க என்று நான் களப்பணி செய்வதை தடுத்தால் நான் எப்படி புரட்சி(கெட்ட வார்த்தை ரெண்டு) செய்வேன். எப்படி நாளைய புரட்சியாளர் ஆவேன்.(புரட்சியாளர் என்று சொன்னாலே உன்னை வைச்சி காமெடி பண்றாங்கன்னு அர்த்தம் - இப்படி யார் அங்க சொல்றது) காமெடியோ ஏதோ காமெடிக்கு கூட அந்த கெட்ட வார்த்தையை என் மேல் பயன்படுத்தலாமா. கண்டவர்கள் எல்லாம் இந்த கெட்ட வார்த்தையை உபயோகப்படுத்த இதென்ன காமன் டாய்லெட்டா போலிகளான எங்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு கழிப்பிடம்.

நிற்க நான் எந்திரனை விமர்சித்தால் பொங்குகிறேனாம்.பாடல் மொக்கை என்று தான் சொல்லியுள்ளேன். எந்திரனை மட்டும் அடித்தால் ஹிட்ஸ் மட்டுமே குறிக்கோள்.கம்யூனிஸ்ட் தான் பாரபட்சம் பார்க்காதவர்கள் ஆயிற்றே ஏன் திட்டக்குடி,விருந்தாளி என்று கவர்ச்சி காட்டிய படங்களை ஒன்றும் சொல்லவில்லை. அது சரி இதை சொன்னால் எவன் படிப்பான். நானாவது படம் பார்த்து விட்டு வெளுக்கிறேன்.ஒரு நாளும் அதை புறக்கணியுங்கள் என்று சொல்ல மாட்டேன்.அப்படி நாம் புறக்கணிக்க வேண்டுமானாம் ஏதோ ஒரு வெள்ளைக்காரன் கண்டுப்பிடித்த ப்ளாக்,டிவிட்டர் இதை தான் புறக்கணிக்க வேண்டும்.என்னது அடிமடியிலே கை வைத்தால் எப்படி. நான் எந்திரன் பற்றி எழுதினால் ரஜினிகாந்தே அலறுவார் தெரியுமா.

கார்த்தி சொல்லியிருக்கிறார்.நான் புரட்சி,தோழர் என்று சொல்வது அருவெறுப்பாக இருக்கிறதாம்.இது முதல் எடிசனில் வந்தது.அடுத்த எடிசனில் அந்த கெட்ட வார்த்தைகளை நான் எளிமையாக சொல்வது கொச்சையாக உள்ளதாம். இது நிச்சயம் மண்டபத்தின் வேலையாகத்தானிருக்கும். பத்து பேர் கொண்ட குழுக்கள் ஓட்டுப் போட மட்டுமல்ல எடிட் செய்யவும் இருக்கிறது என்று  அடிக்கடி ஒத்துக் கொண்டு போலி என்று நிரூப்பிக்காதீர்கள். பெண்களை வல்லுறவு செய்த போது நான் பொங்கவில்லையாம். கேரளாவில் திருநெல்வெலியை சேர்ந்த பெண்கள் ஆடைகளை களைந்து விடியோ எடுத்ததைப் பற்றி பேசுங்கள் என்று கேட்ட சமயம் தோழர்கள் வாயில் நேந்திரம் பழம் அடைத்து விட்டதாம்.அதற்கு நண்பர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா உனக்கு கேரள வெறுப்பு என்று. இன்று சொல்கிறார் அவர்கள் பெண்களுக்கு ஒன்று என்றால் பொங்குவாரார்களாம். ஆமாம் நீங்கள் உங்களுக்கு வேண்டிய பெண்களாகயிருந்தால் பொங்குவது வழக்கம். அதனால் உங்களை புரட்சியாளர்,தோழர் என்று முகிலன்,அது சரி எல்லோரும் சொல்கிறார்கள். இன்று அடுத்த பதிவில் இரும்புத்திரை என்று போட்டு வந்தது அது ஏன் கொஞ்ச நேரத்தில் நீக்கப்பட்டு முகிலன்,அது சரி என்ற பெயர்கள் மட்டும் இருந்த காரணம் ஏற்கனவே சாருவின் அபிமானி என்று சொல்லி வாங்கி கட்டிக் கொண்ட மண்டப எழுத்தாளர்கள் சொல்லியிருப்பார்கள். இரும்புத்திரையை நீக்கி விட வேண்டும் என்று. முதலில் உண்மையான புரட்சியாளர் ஆக வேண்டும் என்றால் தைரியம் வேண்டும்.எழுதி விட்டால் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதை நான் பார்த்து விடுவேனோ என்று தூக்குவது இன்னும் உங்களுடைய போலித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இன்னும் நிறைய பேசலாம்.பிறிதொரு சந்தர்ப்பத்தில்.

அடுத்து நண்பர் புலிகேசி.தோழர்களிடம் (நாளைய தோழர்களிடம்) நாம் ஒன்று கேட்டால் அவர்கள் ஒன்று சொல்வார்கள்.முதலில் கம்யூனிசம் என்றால் என்ன எல்லோருக்கும் சமமாக எல்லாம் கிடைப்பது. இங்கு பரிந்துரையே எல்லோருக்கும் கிடைக்க மாட்டேன் என்கிறது.அப்புறம் இது போலி கம்யூனிசம் தானே. முகிலனுக்கும் புலிகேசிக்கும் பொதுவான ஒருவர் இருவருக்கும் ஓட்டுப் போட்டார்.அதனால் புலிகேசிக்கு அவர் மேலிருந்த மரியாதை குறைந்து விட்டதாம். அவர் தான் ஆரம்ப காலத்தில் புலிகேசிக்கு ஓட்டளித்து வருபவர்.யார் என்று எதற்கு கிசுகிசு பாணியில் எழுத வேண்டும்.நாளை அவர் வந்து கேட்டால் உங்களை சொல்லவில்லை என்று சொல்வதற்கு தான்.இன்னும் கிசுகிசு எழுதிக் கொண்டு இருந்தால் புரட்சியாளர் என்று நக்கல் அடிப்பதில் என்ன தப்பு. அடுத்து நர்சிம் விவகாரத்தில் யாருக்கு என்ன பலனோ தெரியாது.கார்த்தி மட்டும் புலிகேசி காட்டில் மழை தான்.இந்த விவகாரம் நடக்கும் வரை கார்த்தி பதிவுக்கு பதிவு புலம்புவார் விதர்பா பற்றி எழுதினேன். யாரும் ஓட்டுப் போடவில்லை. படிக்கவில்லை.பொறுப்பில்லை என்று சொல்வார்.இப்போது சொல்வதில்லையே ஏன். நர்சிமை எதிர்த்ததும் வாக்களிக்க தோழர்கள் கிடைத்து விட்டார்கள். அந்த நன்றி கடனுக்கு பார்க்கும் எல்லோரையும் வெளுத்தால் தானே நன்றிக்கடன் தீரும். கார்த்தி முதலில் தோழர் தியாகுவைப் பற்றி தெரிந்து கொள்வது நலம்.அவருக்கு துரோகம் செய்தது யார் என்றெல்லாம் தெரிந்து கொண்டாம் பின்னாளில் உபயோகப்படும். அடுத்து புலிகேசி அவருக்கு இப்பொதெல்லாம் புரிதல் ஏற்பட்டு விட்டதாம்.அதனால் நர்சிம் பிரச்சனை நடந்து  பதினாறு நாட்கள் ஆனப்பின் பன்னாடை என்று சொன்னார். உடனே தோழர்கள் மகிழ்ந்து இன்னொரு ஆள் கிடைத்து விட்டார் என்று அவருக்கும் வாக்களிக்க ஆரம்பித்து விட்டார்கள். நானும் நர்சிம் பிரச்சனை பதினாறு நாள் முடிந்தாலும் தட்டிக் கேட்ட புலிகேசி நேர்மையானவர் என்று நம்பி அப்துல்லா என்ற பதிவர் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கேட்கிறார்.நீங்கள் தான் பன்னாடை என்று பதினாறு நாள் கழித்து திட்டுவீர்களே இதற்கும் திட்டுங்கள் என்று சொன்னால் அது அப்துல்லாவுடைய தனிப்பட்ட பிரச்சனையாம். எப்படி அப்துல்லா பதிவை அப்துல்லா மட்டுமே படிக்க முடியுமாம்.மற்றவர்கள் கண்ணுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஒன்று என்றால் பொங்கும் பொங்குமா சமுத்திரமான தோழர்களுக்கு தெரியாதாம். எச்சில் சுரப்பி வேலை செய்வதை நிறுத்தி விட்டதாம். இதை கேட்டால் நான் எந்திரனை சொன்னேன்.புரட்சி என்று சொன்னேன்.புண்ணாக்கு என்று சொன்னேன் என்று இன்றைய பொழுதிற்கு எழுதி முடித்தாகி விட்டார்கள்.பரிந்துரையிலும் வந்து விட்டது. நீங்க எந்திரனை அடிங்க ஏன் கலாநிதி மாறனை வேண்டுமானாலும் திட்டுங்கள் எனக்கு என்ன.ஆனால் நான் நேர்மையாக இல்லாதவர்களை வெளுப்பேன். அப்புறம் கார்த்தி,புலிகேசி நீங்கள் இருவரும் நாளைய கெட்ட வார்த்தைகள் (அதாம்பா புரட்சியாளர்கள்) கிசுகிசு எல்லாம் எழுதாதீர்கள்.நேரடியாக இது மாதிரி சொல்ல வேண்டும்.அப்புறம் பதிவு போட்டு விட்டு தூக்கக்கூடாது.ரீடரில் பல்லைக் காட்டுகிறது.

இனி முகிலன் மற்றும் அது சரி இவர்களுக்கு. இனி புரட்சியாளர்களை கிண்டல் செய்யாதீர்கள். பிறகு ப்ளாக் எழுதாமல் இருந்து விடுவார்கள்.பதிவுலக சுப்ரமணிய சாமிகளை இயங்க விடாமல் செய்த பாவம் உங்களுக்கு வேண்டாம்.குறிப்பாக எதிர்வினை எழுத தெரியாமல் காணாமல் போனவர்கள் என்று அறிவித்து இருப்பதற்கு இந்த குழந்தைகளையா அடித்தோம் என்று தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டாம் அப்புறம் ரொம்பவும் சீண்டினால் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்தார் என்று ஏதாவது பெண்ணை விட்டு சொல்ல வைத்து உங்களை பன்னாடை என்று சொல்லி துப்புவார்கள்(அப்போது எச்சில் சுரந்து விடும்.காரணம் நீங்கள் அடுத்தவர்கள் தானே) அதுவும் கல்யாணம் ஆனவர்களை மட்டும் தான் கையைப் பிடித்து இழுத்த கேஸில் உள்ளே தள்ளுவார்களாம். நல்ல வேளை எனக்கு கல்யாணம் ஆகவில்லை. இது ஜன நாயக ஆட்சியாக இருந்த காரணத்தால் காணாமல் போன அறிவிப்போடு நிற்கிறது. கம்யூனிஸ்ட் ஆட்சியாகயிருந்தால் நீங்கள் நிஜமாகவே காணாமல் போய் இருப்பீர்கள். தோழர்களுக்கு துப்ப மட்டும் தான் அடுத்தவர் ஆட்சியில்.இதுவே அவர்கள் ஆட்சியாக இருந்தால் கொலை தான். புரிந்ததா முகிலன்.

இந்த பதிவு என்றும் நிரந்தரமாகயிருக்கும்.என்னை அடுத்த பதிவிற்கும் இழுக்கலாம்.இன்னும் ஆதாரத்தோடு ஏவி விட்ட வில்லை உடைப்பேன்.நாளை இணையப்புரட்சி நடக்கவிருக்கிறது. அப்போதாவது நம்புங்கள் முகிலன் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் புரட்சி வரும் என்று. தமிழில் அதை எழுதாதே. புரட்சி,தோழர் என்று சொல்லாதே. இந்த பதிவை பற்றி தான் எழுத வேண்டும் இதெல்லாம் உங்கள் ஆட்சி நடக்கும் சீனாவில் போய் ப்ளாக்கில் எழுதுங்கள்.என்னிடம் சொல்ல வேண்டாம். பாருங்க சீனாவில் ப்ளாக் கிடையாது என்பதையே மறந்து விட்டேன். ஜூலை மாதம் நான் எழுதிய போலி என்று தலைப்பு வரும் எல்லா பதிவையும் படித்து பார்த்தால் இன்னும் தோழர்களின் உண்மை முகம் நன்றாக தெரியும்.


21 comments:

vasu balaji said...

wow. i luvd it:)))

Muthukumar said...

well said...

குடுகுடுப்பை said...

அந்தப்பதிவில் பின்னூட்டம் இடலாம் என்று நினைத்தேன், லெனின்,ஸ்டாலின் , மாவோ , போல்பாட் போன்ற புரட்சியாளர்களின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியிருக்கவேண்டும். மற்ற அரசியல்வாதிகளை விட நலிந்தவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருபவர்கள்(அவர்கள் கொடுக்கும் கம்யூனிசத்தீர்வில் உடன்பாடில்லை) என்ற மரியாதை இருந்தது. அது சரி, முகிலன் போன்றவர்கள் எனக்குத்தெரிந்து சமூகத்துக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள் புரட்சி ஏதும் செய்யாமலேயே, அது தொடரட்டும்.

இரும்புத்திரை said...

ஒருநாளும் பதில் சொல்ல மாட்டார்கள்.அவர்களுக்கு தெரிந்தது தனி மனித தாக்குதல் தான்.

நசரேயன் said...

//தெரிந்தது தனி மனித தாக்குதல்//

இதுதான் புரட்சியோ ?

இரும்புத்திரை said...

அது தான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே பன்னாடை என்று திட்டியப்பின் தான் ஒரு தோழர் பக்குவமடைந்தாராம்.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

Splendid !!!!!!!! irumbuthirai

இரும்புத்திரை said...

ஐயோ வர்ற எல்லோரும் ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டால் அமெரிக்கனைத் தூக்கில் போட முடியாதே.தோழர்கள் அடுத்த போராட்டம் தொடங்குவார்களே.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// முதலில் உண்மையான புரட்சியாளர் ஆக வேண்டும் என்றால் தைரியம் வேண்டும்.எழுதி விட்டால் அப்படியே வைத்திருக்க வேண்டும்./////

அருமையான விமர்சனம் .......,

கிரி said...

//அப்புறம் ரொம்பவும் சீண்டினால் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்தார் என்று //

என்ன கைய பிடிச்சி இழுத்தியா! :-))

Unknown said...

காம்ரேட்களை, விடுதலை பதிவர்களை எதிர்த்து, அதுவும் அவர்களின் வழியிலே!.... அட்டகாசம்..அபாரம்!

அது சரி(18185106603874041862) said...

//
ஒரு நாளும் அதை புறக்கணியுங்கள் என்று சொல்ல மாட்டேன்.அப்படி நாம் புறக்கணிக்க வேண்டுமானாம் ஏதோ ஒரு வெள்ளைக்காரன் கண்டுப்பிடித்த ப்ளாக்,டிவிட்டர் இதை தான் புறக்கணிக்க வேண்டும்.
//
புறக்கணி புறக்கணி என்று இவர்கள் எதையும் புறக்கணிப்பதாக தெரியவில்லை. அப்படி புறக்கணிப்பதாக இருந்தால் முதலில் புறக்கணிக்க வேண்டியது இன்டர்னெட்டும், மைக்ரோசாஃப்டும், கூகிளும் தான். இதை ஒன்றும் க்யூபா நடத்தவில்லையே?

அது சரி(18185106603874041862) said...

//
அதனால் உங்களை புரட்சியாளர்,தோழர் என்று முகிலன்,அது சரி எல்லோரும் சொல்கிறார்கள்.
//

அய்ய...அவர் யார்னே எனக்கு தெரியாது. இதுவரைக்கும் ஒரே ஒரு போஸ்ட் கூட படிச்சதில்லை. யார் யாரோ இருக்க, நான் போய் எதுக்கு இவரை புரட்சியாளர்னு சொல்லணும்?

அடுத்து தோழர்ங்கிற வார்த்தையை கூட யூஸ் பண்ணதா ஞாபகம் இல்லை. என்னய்யா இது தோழர் தோலர்னு :)))

அது சரி(18185106603874041862) said...

//
இன்று அடுத்த பதிவில் இரும்புத்திரை என்று போட்டு வந்தது அது ஏன் கொஞ்ச நேரத்தில் நீக்கப்பட்டு முகிலன்,அது சரி என்ற பெயர்கள் மட்டும் இருந்த காரணம் ஏற்கனவே சாருவின் அபிமானி என்று சொல்லி வாங்கி கட்டிக் கொண்ட மண்டப எழுத்தாளர்கள் சொல்லியிருப்பார்கள். இரும்புத்திரையை நீக்கி விட வேண்டும் என்று
//

இது வேறையா? ஒரு போஸ்ட்டுக்கு எத்தனை வெர்ஷன் தான் இருக்கு? இதுக்குன்னே ஒரு எடிட்டிங் டிபார்ட்மென்ட் இருக்கோ?

அது சரி(18185106603874041862) said...

//
அவர் தான் ஆரம்ப காலத்தில் புலிகேசிக்கு ஓட்டளித்து வருபவர்.யார் என்று எதற்கு கிசுகிசு பாணியில் எழுத வேண்டும்.நாளை அவர் வந்து கேட்டால் உங்களை சொல்லவில்லை என்று சொல்வதற்கு தான்
//

:)))))

அது சரி(18185106603874041862) said...

//
அதுவும் கல்யாணம் ஆனவர்களை மட்டும் தான் கையைப் பிடித்து இழுத்த கேஸில் உள்ளே தள்ளுவார்களாம். நல்ல வேளை எனக்கு கல்யாணம் ஆகவில்லை.
//

என்னவோ நான் மட்டும் பத்து தடவை கல்யாணம் பண்ணி பன்னிரண்டு தடவை டிவோர்ஸ் பண்ண மாதிரி. யோவ், எனக்கும் தான் கல்யாணம் ஆகலை. இதெல்லாமா போஸ்ட் போட்டு சொல்வாங்க? :))

அது சரி(18185106603874041862) said...

//
பாருங்க சீனாவில் ப்ளாக் கிடையாது என்பதையே மறந்து விட்டேன்
//

சைனாவில் புரட்சின்னு சொன்னாலே கவர்மெண்ட் "புரட்சி" பண்ணி விட்ரும். தெரியும்ல?

அது சரி(18185106603874041862) said...

அதெல்லாம் இருக்கட்டும். அன்னைக்கு குருஜி பஸ்ல சொல்ல சொல்ல கேக்காம மொக்கை போட்டு, என்னையும் மொக்கை போட வச்சி , எனக்கும் சேர்த்து திட்டு வாங்கி வச்சிட்டீங்களே? இருக்கட்டும், இனிமே எப்பனா பஸ்சுல பார்த்தா பிடிச்சி தள்ளி விட்டுடறேன். :)))

அது சரி(18185106603874041862) said...

//
கிரி said...
//அப்புறம் ரொம்பவும் சீண்டினால் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்தார் என்று //

என்ன கைய பிடிச்சி இழுத்தியா! :-))

//

கிரி, அதாரு உங்க கைய பிடிச்சி இழுத்தது?

கலகலப்ரியா said...

|| குடுகுடுப்பை said...
அந்தப்பதிவில் பின்னூட்டம் இடலாம் என்று நினைத்தேன், ||

நானும்.... நினைத்ததோட சரி..

இரும்புத்திரை said...

அது சரி வளர்த்த கிடா மார்ல பாயும்.அது தோழர்களுக்கும் பொருந்தும்.