Saturday, January 30, 2010

கோவா படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வேண்டாமே ப்ளீஸ்

கோவா படத்திற்கு அதிகமான எதிர்மறை விமர்சனங்கள்.இப்படி எல்லாம் செய்தால் ரஜினியின் மகள் போட்ட காசை எப்படி எடுப்பார்.ரஜினி நிச்சய வெற்றி என்று சொன்ன உத்திரவாதம் என்னாவது.இப்படி எல்லாம் பண்ணக் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன்.நாம் தான் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறோம்.அவர்களை ஏற்றி விடுகிறோம்.கீழே மிதித்து தள்ளுகிறோம்.இதற்கு யாரும் விதிவிலக்கில்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் வெங்கட் பிரபு அண்ட் கோ.யாரையும் பார்க்காதீர்கள்.வெளுத்து வாங்குங்கள்.

நான் என்ன விமர்சனம் செய்தேன் என்று கொஞ்சம் பழைய பதிவுகளைப் புரட்டி பார்த்ததில் இருபது ஆண்டுகள் படம் பார்த்த அனுபவம் நன்றாகவே வேலை செய்கிறது. கீப் இட் அப் பாய் என்று என்னை நானே தட்டிக் கொண்டேன்.அப்படி என்ன எழுதினேன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா.

1.கோவா - இந்த வருடத்தின் மிக பெரிய ஏமாற்றம்.வெங்கட் பிரபுவின் மீது கொண்ட ஈர்ப்பு குறைவது போல் தெரிகிறது.அவர் பாணியை கொஞ்சம் மாற்றி கொண்டால் பரவாயில்லை.இல்லை கரகாட்டக்காரன்,தெம்மாங்கு பாட்டுக்காரன்,வில்லு பாட்டுக்காரன் என்று இயக்கி அவர் அப்பாவை போல் காணாமல் போய் விடக் கூடாது.கங்கை அமரன் காணாமல் போன போது கூடவே ராமராஜனும் போனார்.இவர் கூட செல்லப் போவது யார் ஜெய் இல்லை வைபவ் இல்லை என்ன கொடுமை சாரா

2.கோவா - நிச்சயமாக பல்ப் வாங்கும் என்று தெரிகிறது.காரணம் மூன்று முதலாவது போட்டியில் இருக்கும் தமிழ்படம்.ஏ செண்டர் ரசிகர்களுக்கான படம் போலத் தெரிகிறது.பி,சியில் எடுபடுமா என்று தெரியவில்லை.பாட்டு பல்லிளித்து விட்டது.தமிழ் சினிமாவின் ராசி பெரும்பாலும் மூன்றாவது படத்தில் தான் வெற்றி இயக்குனர்கள் பல்ப் வாங்குவார்கள்.இதெல்லாம் எனக்கு தோன்றிய கோல்மால்கள்.இது எதுவும் நடக்கவில்லை என்றால் ஆட்டோ அனுப்ப வேண்டாம்.நடந்தது என்றாலும் ஆட்டோ வேண்டாம்.

3.கோவா - பி,சி செண்டர்களில் கேள்விக் குறியாகுமா என்பது என் மனதில் எழுந்த பெரிய கேள்வி.அந்த அளவிற்கு ரீச்னெஸ்.வெங்கட் பிரபுவின் திறமையை உணர்த்துமா,உலர்த்துமா என்று பார்ப்போம்.ரஜினி படம் சில்வர் ஜூப்ளி என்று சொல்லியுள்ளார்.இது தான் அடுத்த சந்தேகம்.அவர் எந்த படத்திற்கு தான் இப்படி சொல்லவில்லை.கேடி என்ற படத்திற்கும் அவர் சிலாகித்து பாராட்டு பத்திரம் வாசித்தார்.

4.நேராக கோவா சூட்டிங்..

அ : டிரைலர் பாத்தேன்..படத்தை தில் சாத்தா ஹை அதுல இருந்து உருவி இருக்கிங்க போல..

வெங்கட் பிரபு : இப்போ தான் அமீர் பேசுனார்..அது நீங்க தானா..

அ : ஜெய் சொன்ன மாதிரி ரெண்டு படம் அவுட்..இந்த படமும் அது மாதிரி ஆகுமா..

வெங்கட் பிரபு : என்ன கொடும பிரேம்ஜி இது..

அ : அங்க அங்க சீனை சுடுறீங்க..தமிழ் படத்தில் இது மாதிரி வந்ததே இல்லை பில்டப் வேற..

வெங்கட் பிரபு : என்ன சொல்றீங்க..

அ : சரோஜா படத்துல ஒரு பாட்டுல சின்னத்திரை நடிகர்கள் எல்லாம் வர்றாங்க..இது ஷாரூக் கான் படத்தில் இருந்து அடிச்சது தானே..

வெங்கட் பிரபு : (சத்தமாக) பிரொடுஸர் வர்றாங்க..நீங்க போயிட்டு அப்புறம் வாங்க..மிஸ்கின் சும்மா தான் இருக்காரு..அங்க போங்க..


இது எனக்கும் பொருந்தும் - விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.நண்பன் என்று எல்லாம் பார்க்க வேண்டாம்.லோகுவும்,ராஜூயும் செய்கிறார்கள். செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

6 comments:

அகல்விளக்கு said...

படம் பிளாப்பா???

சூப்பரு...

க.பாலாசி said...

//லோகுவும்,ராஜூயும் செய்கிறார்கள். செய்வார்கள் என்று நினைக்கிறேன். //

ம்ம்ம்....

kailash,hyderabad said...

தலைப்புக்கும் பதிவுக்கும் உல்டாவ இருக்கு.
ஐயா, எனக்கொரு உம்ம (உம்மா இல்லை ) தெரிஞ்சாகணும்.
படம் நல்லாருக்கா ? இல்லையா ?
படத்தை ஒருதடவ பாக்கலாமா கூடாதா ?
படம் ஓடுமா ,ஓடாதா?
(வடிவேலு ரஜினியிடம் கேட்பதுபோல் படிக்கவும்.)

சாமக்கோடங்கி said...

ஒரு அடி விழுந்தால் எல்லாமே சரியாகி விடும்.. அநேகமாக கோவா அந்த அடி என்று நினைக்கிறேன்..

நன்றி...

Anonymous said...

தலைப்புக்கும்,பதிவுக்கும் சம்பந்தமே இல்லை. இருந்தாலும் நீங்கள் நினைத்தது போலவே கோவா go-வா தான்.

ப.கந்தசாமி said...

பதிவுலக எழுதப்படாத விதி-தலைப்பிற்கும் பதிவிற்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது.