Monday, January 11, 2010

சுஜாதாஆஆஆஆஆவும்,சென்னை கொலையும்

பத்து வருடங்களுக்கு முன் சுஜாதா நாவல்களை எல்லாம் சட்டை செய்த்தேயில்லை.பாலகுமாரன்,பாலகுமாரன் என்று புலம்பி திரிந்த காலம்.அவர் ஒரு செக்ஸ் எழுத்தாளர் என்று அப்பா சொன்னாலும் இந்த காதில் வாங்கி எந்த காதில் விட்டு விட்டு காயலான் கடைகளில் பாலகுமாரனைத் தேடி அலைந்தேன்.ஆனால் டீன் ஏஜ் முடிந்த சமயம் பாலகுமாரனை ஒட்டு மொத்தமாக நிராகரித்தேன்.கடந்த ஏழு ஆண்டுகளில் பாலகுமாரனை மனம் தேடவில்லை.காரணம் அவர் எழுத்தில் இருந்த வசீகரத்தை இருவருமே(நானும் அவரும்) தொலைத்தது தான்.நிச்சயம் அவர் எழுத்தில் ஏதோ ஒரு தொய்வு தெரிகிறது.

இந்த பாணியிலான விமர்சனத்தை சுஜாதா மீது வைக்க முடியவில்லை.காலம் கடந்து அவர் எழுத்தின் வீச்சு வெவ்வேறு பரிமாணத்தில் மிளிர்கிறது.அதற்கு ஒரு உதாரணம் தான் ஆ என்ற நாவல்.ஆனந்த விகடனில் தொடராக வந்து எல்லா அத்தியாயத்திலும் முடியும் போது ஆ என்று முடிந்த்து.கணேஷ்,வசந்த் இருவரும் இடைவெளிக்கு பிறகு வரும் நாவல்.

மண்டையில் ஏதோ குரல் கேட்கிறது என்று சென்னையில் ஆரம்பித்து டெல்லி வழியாக திருச்சியைத் தொட்டு சென்னைக்கு திரும்பும் கதை.கூடவே டெல்லிக்கும், திருச்சிக்கும் லொங்கு லொங்கு என்று நானும் ஓடினேன்.

1990களில் கணினியைப் பற்றி எதுவும் தெரியாத காலத்தில் கணினித் துறையில் வேலை பார்க்கும் நாயகன் உள்ளுக்குள் கேட்கும் குரலால் த்ற்கொலைக்கு முயன்று பிறகு கொலை செய்யும் கதை.மருந்துகள்,நோயின் பெயர்கள் என்று துல்லியமான ஆராய்ச்சி.

சமீபத்தில் படித்த ஒரு ஆராய்ச்சி - உயிர் பிரியும் போது உடம்பில் இருந்து 21 கிராம் எடை குறைகிறதாம்.உயிரின் எடை 21 கிராம் என்று சொல்கிறார்கள்.

கனவு,ஆழ்மனக்குரல் என்று சகாப்தம் இந்த நாவலில் தெரிந்தது.கண்வன் மனைவி நெருக்கத்தைக் காட்ட வீட்டிற்கு வந்த உடன் டையை கழற்றாமல் கட்டிலில் சரித்தான் என்று வரும்.நானும் சரிந்தேன்.

அது மாதிரி ஒரு குரல் கேட்டு த்ன்னுடைய அம்மாவை கொலை செய்துள்ளான் ஒரு இருபது வயது வாலிபன்.அது சிவபெருமானின் குரல் என்று சொல்கிறான்.

அந்த கதையில் மனைவி தேவகியைக் கொன்று விட்டு விடுதலை ஆகும் சமயத்தில் இன்னொரு நபரால் கொலை செய்யப்படுகிறான்.அவளுக்கும் குரல் கேட்டு இருக்குமோ என்று கேள்வியுடன் அந்த நாவல் முடிந்தது.

இன்னும் பத்து வருடம் கழித்து படித்தாலும் அந்த வீச்சு மாறாது என்பது மட்டும் நிதர்சனம்.

எல்லோருக்கும் உச்சம் உண்டு.அவர்களின் உச்சத்தில் இருக்கும் அடைந்த வெற்றியை நாம் எளிதாக சொல்லி விடலாம்.ஆனால் சுஜாதாவின் உச்சம் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.மேலே பறந்தாலும் தெரியவில்லை.தாழ்ம்பூ கொண்டு சாட்சி சொல்லலாம் என்று பார்த்தால் தாழம்பூவும் உச்சத்தைத் தொடவில்லை போலும்.

7 comments:

Jawahar said...

//சமீபத்தில் படித்த ஒரு ஆராய்ச்சி - உயிர் பிரியும் போது உடம்பில் இருந்து 21 கிராம் எடை குறைகிறதாம்.உயிரின் எடை 21 கிராம் என்று சொல்கிறார்கள்.//

சுவாரஸ்யமான தகவல்.

ஆனால், செத்த உடலை ரொம்ப நேரம் வைத்திருந்தால் எடை கூட ஆரம்பித்து விடும்.

எனக்கு பாலகுமாரனை அவர் சிறுகதைகள் எழுதிய காலத்தில் பிடிக்கும். அவருடைய நாவல்களில் எனக்கு அத்தனை ரசனை இருந்ததில்லை.

http://kgjawarlal.wordpress.com

Marimuthu Murugan said...

//உயிரின் எடை 21 கிராம் //
இந்த பேருல ஒரு படம் கூட எடுத்துக்கிட்டு இருக்காங்க...

http://cinema.dinamalar.com/tamil-news/1562/cinema/Kollywood/yurin-weight-21-gram-movie-preview.htm

கண்ணகி said...

ஆமாம் அரவிந்த் ..பாலகுமாரன் எழ்த்துக்கள் முன்புபோல் இல்லை. சுஜாதாவின் எழுத்து என்றுபடித்தாலும் அதே சுவாரஸ்யம் இருக்கும்.

பாலாஜி சங்கர் said...

நானும் இந்த நாவலை படித்து இருக்கேறேன் மிக சுவாரசியமாக இருக்கும்

வால்பையன் said...

மனச்சிதைவு வியாதிக்கு ஆளானவர்களுக்கு குரல் கேட்பது வழக்கம், உளவியலில் ஆர்வம் உள்ள சுஜாதாவிற்கு அது தெரியும் என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!, சிக்மண்ட் ஃப்ராய்டு காலத்திலிருந்தே காதுகளீல் குரல் கேட்கும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, நமக்கு அம்மாதிரி தோன்றுமாயின் உடனே மன்நல மருத்துவரை அனுகுவது நலம், அல்லது நாமும் ஒரு கொலை செய்ய நேரிடும்!

Balaji Thirumoorthy said...

wall paiyya ithu nijam thana

வரதராஜலு .பூ said...

ஆ - சுவாரஸ்யமான நாவல்

பாலகுமாரன் விஷயத்தில் உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன். இப்போழும் நான் பாலகுமாரன் படிக்கவேண்டும் என்று தோன்றினால் அவருடைய பழைய நாவல்களை மட்டும்தான் படிக்கிறேன்.

ஆனால் சுஜாதா விஷயத்தில் அவருடைய கட்டுரைகளை கூட பலமுறை படிக்கிறேன். அலுக்கவில்லை