Saturday, November 21, 2009

யோகி,கோவா,நந்தலாலா,ஆயிரத்தில் ஒருவன்,வேட்டைகாரன்

தலைப்பில் உள்ள படங்களின் இயக்குனர்களுடன் ஒரு பேட்டி..

முதலில் அமீர்..

அ : யோகி படத்தின் கதை என்ன ?

அமீர் : நாயகனின் அப்பா ஒரு தொழு நோய் வந்த பிச்சைகாரன்..மகன் ஒரு ரவுடியாக மாறுகிறான்..

அ : லாஜிக் இடிக்குதே..பிச்சைகாரன் பையன் பிச்சை தானே எடுப்பான்..(அமீர் முறைக்கிறார்..) இல்ல.. இல்ல.. நடிகர் பையன் நடிகனா, அரசியல்வாதி பையன் அரசியவாதியா மாறும் போது இதுவும் இப்படி தானே இருக்கனும்..

அமீர் : அங்கன தான் கதையோட திருப்பமே இருக்கு..

அ : உங்களை விட சினேகன் அழகா இருக்காரு..

அமீர் : ஏதோ பேட்டி எடுக்கணும்னு சொன்ன..சரின்னு வர சொன்னா..இப்படி எல்லாம் எழுதுற..உன் ப்ளாக்குன்னா இப்படி தான் எழுதுவியா..என்ன பாத்தா ரவுடி மாதிரி தெரியலையா..

அ : (மனதுக்குள்) என்னடா இது பெரிய ராவடியா போச்சு..(சத்தமாக) எதுக்கு சுப்பிரமணிய சிவா..நீங்களே இயக்கி இருக்கலாமே..

அமீர் : (மனதுக்குள்) படம் பப்படம் ஆச்சுன்னா பழி போட ஒரு ஆள் வேண்டாம்..

அ : (மனதுக்குள்) பழியா இல்ல பலியா.. (சத்தமாக) படம் பாத்தா ஒரு சென்னையில் இருந்த ரவுடி கதை மாதிரி இருக்கு..இல்ல ஈரான் பட காப்பியா?

அமீர் : தம்பி எல்லாமே காப்பி தான்..எல்லா படத்திலையும் காதல் இருக்கு..அதுக்காக காதல் வந்தாலே காப்பியா..

அ : அடுத்த முதல்வர் நீங்க தானா ?

அமீர் : கதவு அந்த பக்கம் இருக்கு..ஓடிப் போயிரு..

நேராக கோவா சூட்டிங்..

அ : டிரைலர் பாத்தேன்..படத்தை தில் சாத்தா ஹை அதுல இருந்து உருவி இருக்கிங்க போல..

வெங்கட் பிரபு : இப்போ தான் அமீர் பேசுனார்..அது நீங்க தானா..

அ : ஜெய் சொன்ன மாதிரி ரெண்டு படம் அவுட்..இந்த படமும் அது மாதிரி ஆகுமா..

வெங்கட் பிரபு : என்ன கொடும பிரேம்ஜி இது..

அ : அங்க அங்க சீனை சுடுறீங்க..தமிழ் படத்தில் இது மாதிரி வந்ததே இல்லை பில்டப் வேற..

வெங்கட் பிரபு : என்ன சொல்றீங்க..

அ : சரோஜா படத்துல ஒரு பாட்டுல சின்னத்திரை நடிகர்கள் எல்லாம் வர்றாங்க..இது ஷாரூக் கான் படத்தில் இருந்து அடிச்சது தானே..

வெங்கட் பிரபு : (சத்தமாக) பிரொடுஸர் வர்றாங்க..நீங்க போயிட்டு அப்புறம் வாங்க..மிஸ்கின் சும்மா தான் இருக்காரு..அங்க போங்க..

மிஷ்கின் அலுவலகத்தில் அவர் எதையோ தேடி கொண்டு இருக்கிறார்..

அ : உங்களுக்கு தேடுறதே வேலையா போச்சு..அஞ்சாதே படத்தில் நரேன் பிரசன்னாவை தேடினார்..நந்தலாலா படத்தில் அம்மா தேடுறதா சொன்னீங்க.. இப்போ புத்தர் பல்லை தேடுறீங்களா ?

மிஷ்கின் : பவர் கிளாஸ் கீழே விழுந்த மாதிரி ஒரு பீலிங்..அதான் தேடுறேன்..

அ : ஏன் நந்தலாலா படத்தில் நீங்க நடிச்சீங்க..

மிஷ்கின் : எழுத்து வந்து ஒரு படைப்பாளியோட குருதி மாதிரி..அது வீணாக விடக் கூடாது..அதான் நானே..

அ : என்னது குருவி மாதிரியா ?

மிஷ்கின் : ரத்தம் மாதிரி..ஒவ்வொரு எழுத்தும் என் ரத்ததில் உருவானது..

அ : இது ஜப்பான் இயக்குனர் ரத்ததில் உருவானதா எல்லோரும் சொன்னாங்க..

மிஷ்கின் : (மனதுக்குள்) எந்த நாட்டு டிவிடில இருந்து சுட்டாலும் கண்டுப் பிடிக்காம விட மாட்டாங்க போல..அவர் என்னுடைய போட்டியாளர்..அவருடன் நான் சேர்ந்து நந்தலாலா படத்தை பாக்க வேண்டும்..

அ : வேண்டாம் ஏன் இந்த கொலைவெறி..அவர் உயிரோடு இருந்தா ரத்தம் சுரக்கும்..

மிஷ்கின் : கமல் சார் வர்ற நேரம் ஆச்சு..நீங்க இருந்தா அவ்வளவு தான்..

செல்வராகவனை பிடிக்க லடாக் பயணம்..

அ : ஆயிரத்தில் ஒருவன் என்ன கதை..

செல்வராகவன் : இந்த காலத்தில் இருந்து பனிரெண்டாம் நூற்றாண்டை நோக்கி கதை பயணிக்கிறது..

அ : படம் இண்டியானா ஜோன்ஸ் மாதிரி இருக்கு..

செல்வராகவன் : அப்படி யார் சொன்னா..

அ : கார்த்தி தான் ஒரு பேட்டியில சொன்னாரு..

செல்வராகவன் : (கத்துகிறார்) நான் சொன்னேனா..மம்மி ரிடன்ஸ் படத்தில் இருந்து சுட்டது..நானே உளறிட்டேனே..

அ : அதானே பாத்தேன்..நான் கூட ஏதோ பிரன்ச் படம் காப்பின்னு நினைச்சேன்..

செல்வராகவன் : அதை விடுங்க..விக்ரம் படத்தை பத்தி கேளுங்க..

அ : இரண்டு பேரும் சேர்ந்தாச்சு இல்ல..ஆறு வருசம் கழிச்சி வந்து கேக்குறேன்.

சுமோவில் வந்த ஆட்கள் "அ"வை கடத்துகிறார்கள்.கண் கட்டை அவிழ்த்து பார்த்தால்..

விஜய் : மத்தவங்க கிட்ட கேட்டீங்க..எங்கிட்ட கேக்கவே இல்லையே..

அ : எதை பத்தி கேக்கணும்..

விஜய் : வேட்டைகாரன் கதை சொல்லவா..

அ : வேண்டாம் நானே சொல்றேன்..

விஜய் : உங்களுக்கு தெரியுமா..எங்க சொல்லுங்க பாப்போம்..

அ : நீங்க கிராமத்தில் இருந்து வர்றீங்க..சரியா..

விஜய் : சரி மேல சொல்லுங்க..

அ : சென்னையில் ஒரே ரவுடி கூட்டம்..காவல்துறை கூட வேடிக்கை தான் பாக்குது..

விஜய் : அட ஆமா..

அ : நீங்க வேட்டைகாரன் அவதாரம் எடுத்து வேட்டையாடி ரவுடிகளை அழிக்கிறீங்க..

விஜய் : எப்படி உங்களுக்கு தெரியும்..நெட்ல ரீலிஸ் பண்ணிட்டாங்களா..

அ : இது அஞ்சு வருசத்துக்கு முன்னாடி திருப்பாச்சி படம்..

விஜய் : சரி விடுங்க..வேற ஏதாவது கேளுங்க..

அ : இல்ல வேண்டாம்..

விஜய் : கேக்க மாட்டீங்களா..சுறா படம் எடுத்த வரக்கும் இருக்கு பாக்குறீங்களா..

அ : வேண்டாம் நான் கேள்வியே கேக்குறேன்..வேட்டைகாரன் படத்தில் இருந்த பஞ் டயலாக்கை எல்லாம் வெட்டி பஞ்சர் பண்ணிட்டாங்களாமே..

விஜய் : அவனை பிடிங்கடா..

டிஸ்கி :

ஆறு வருடம் கழித்து

அ : ஆயிரத்தில் ஒருவன் எப்போ ரீலிஸ்

செல்வராகவன் : அதுதான் 1968லில் ரீலிஸ் ஆகி விட்டதே..

அ : ரவீந்திரன் கேட்டிங்களா..

செல்வராகவன் : இன்னும் கொஞ்சம் பேட்ச் ஓர்க் பாக்கி இருக்கு..இன்னும் ஒரு அஞ்சு கோடி இருந்தா எடுத்து விடலாம்.

14 comments:

இரும்புத்திரை said...

ஒரு விளக்கம்

இயக்குனர்களுக்கு எல்லாம் திருப்பாச்சி,சிவகாசி டிவிடி கொடுப்பதால் பாபு சிவனிடம் கேள்வி கேக்காமல் விஜயிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அகல்விளக்கு said...

டிஸ்க சூப்பரு தல.

:-)

புலவன் புலிகேசி said...

நல்ல ஒரு பேட்டிதான்.....நல்ல நகைச்சுவை...

Prathap Kumar S. said...

ஹஹஹஹ. சான்ஸே இல்ல... செம கலக்கல்...
விஜய் பேட்டி டக்கர்.

Prathap Kumar S. said...

//அ : என்னது குருவி மாதிரியா ?//

ஹஹஹஹ

//(மனதுக்குள்) எந்த நாட்டு டிவிடில இருந்து சுட்டாலும் கண்டுப் பிடிக்காம விட மாட்டாங்க போல..//

டாப்பு

//விஜய் : எப்படி உங்களுக்கு தெரியும்..நெட்ல ரீலிஸ் பண்ணிட்டாங்களா..

அ : இது அஞ்சு வருசத்துக்கு முன்னாடி திருப்பாச்சி படம்..

விஜய் : சரி விடுங்க..வேற ஏதாவது கேளுங்க..//

ஹஹஹஹ... தனியா உக்காந்து சிரிக்க வச்சுட்டீங்களே தல...

க‌ரிச‌ல்கார‌ன் said...

/அ : வேண்டாம் நான் கேள்வியே கேக்குறேன்..வேட்டைகாரன் படத்தில் இருந்த பஞ் டயலாக்கை எல்லாம் வெட்டி பஞ்சர் பண்ணிட்டாங்களாமே..

விஜய் : அவனை பிடிங்கடா../

Eriyira kolliyila nalla PETROL uthuringa????

யூர்கன் க்ருகியர் said...

விஜய் பேசுவதெல்லாம் நல்ல தமாசு ...

thamizhparavai said...

:-)த்தேன்....
மிஸ்கின் பாவம். அவர்தான் ஒத்துக்கிட்டாரே...

Toto said...

ஹா..ஹா.. விஜ‌ய், செல்வ‌ராக‌வ‌ன் சூப்ப‌ர்..

-Toto
www.pixmonk.com

Azhagan said...

"NAA (N)ADICHA THAANGAMAATTE,
4 MASAM THOONGAMAATTE,
PADAM PARU, VEEDU POI SERAMATTE"
:-)

Marimuthu Murugan said...

எல்லாமே ரொம்ப அருமை...

குறிப்பா..

//இரண்டு பேரும் சேர்ந்தாச்சு இல்ல..ஆறு வருசம் கழிச்சி வந்து கேக்குறேன்//...சூப்பர்..

முரளிகண்ணன் said...

கலக்கல்

Unknown said...

சரியான கலாய்.. :-)

இதுல விளக்கம் வேறயா..?

பாலாஜி சங்கர் said...

நான் அறிந்தவரை ஆங்கில படங்கள் நாவலிலிருந்து எடுத்ததாக சொல்வார்கள்

அதே போல் இங்கேயும் நல்ல நாவல்கள் இருக்கின்றன அதை உரிய உரிமை வாங்கி எடுக்கலாம்