Monday, January 4, 2010

துவையல் - நாவல் ஸ்பெஷல்

தொழில் நுட்பங்களின் முன்னேற்றமா என்று தெரியவில்லை.1990களில் இருந்த கற்பனை இப்போது இல்லை.2000களில் இருந்த கற்பனையும் இன்னும் குறைந்து உண்மையான கற்பனை வறட்சியை அசிங்கமாக போட்டு உடைக்கும் நாள் வரும்.2010களில் இது நடக்கும்.சுஜாதாவை மிஞ்சும் அளவிற்கு யாராவது வர வேண்டும் இதுதான் என் எதிர்பார்ப்பு.அது முடியாது அவர் அடுத்த இடத்தையாவது நெருங்க வேண்டும்.

அப்படி 1990 - 2003 வரை படித்த சில நாவல்களின் தொகுப்பு.

சுபாவின் முதல் நாவல் - பெரியம்மா பையனுக்கும்(கதையின் நாயகிக்கு) ,சித்திப்பெண்ணும் (கதையின் நாயகனுக்கு) இடையே இருக்கும் காதல் தான் கதை.ராதா என்று நாயகியின் பெயர் மட்டும் தான் ஞாபகத்தில் உள்ளது.காதலுக்கு எதிர்ப்பு,நாயகன் வெளியூர் பயணம்,பெரிய படிப்பு மற்றும் உத்தியோகம்,ராதாவின் விதவை கோலம் (ஆணியம்..),அவளுக்கு அவன் தரும் பாதுகாப்பு என்று முடியும் நாவல்.படிக்கும் போது வயது பத்தொன்பது என்னை விட மூன்று வயது குறைவான தம்பிக்கும் இதை சிபாரிசு செய்தேன்.கத்தி மேல் நடக்கும் கதையில் ஆபாசம் இல்லாதது பெரிய பலம். சுரேஷும்,பாலாவும் ஆளுக்கொரு அத்தியாயம் எழுதினார்களாம்.

ஈரம் படத்தின் கதையைக் கொண்டு சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வந்த கதை.அக்கா,தங்கை இருவரையும் மணக்கும் ஒருவன்.அக்கா,தங்கை இருவருக்கும் காதல்கள் உண்டு.அக்காவை கொன்றப் பிறகு சூழ்ச்சி செய்து தங்கையும் திருமணம் செய்து கொடுமை செய்யும் ஒரு சைக்கோவின் கதை.அக்காவின் கொலையைக் கண்டுப்பிடிக்க களத்தில் இறங்கும் டிடெக்டிவ் காதலன்.இறுதியில் தங்கையை கொல்லப் போகும் போது இரண்டு பெண்களின் முன்னாள் காதலர்களும் இன்னாள் கணவனிடன் இருந்து காப்பாத்தும் கதை.

இரயில் ஓட்டும் ஜேம்ஸ் தினமும் சிக்னலுக்காக ஒரு இடத்தில் அரை மணி நேரம் இருக்கும் போது பக்கத்தில் இருக்கும் ரயில்வே குடியிருப்புக்குள் சைக்கிள் கேப்பில் போய் நண்பனின் மனைவியிடம் காதல் வயப்படும் கதை.துரோகம் தெரிந்த பிறகு அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள,வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி கொண்டு குடும்பத்துடன் தப்பிக்கப் பார்க்கும் ஜேம்ஸ் மற்றும் அவன் குடும்பத்தினரை மட்டும் ஆவியாக வந்து கொல்லும் கதை.

சின்ன வயதில் எட்டாவது படிக்கும் போது ஒரு ஆசிரியை மீது மட்டும் பெரிதாக ஈர்ப்பு உண்டு.காரணம் சங்கு கழுத்து என்று ஒரு நாவலில் வந்த கற்பனை எழுத்துகள்.நாயகனுக்கு பாடம் எடுக்கும் டீச்சர் மீது இனம் புரியாத நேசம்.காரணம் சேலை உடுத்தும் பாங்கு,சங்கு கழுத்து.படித்து பெரியவனாகி ஒரு கல்லூரியில் விரியுரையாளனாக சேரும் அவனுக்கு முதல் நாளே அதிர்ச்சி காத்திருக்கிறது.அவனிடன் மாணவியாக படிக்கும் எல்லாம் இழந்து விட்டு தெருவில் நிற்கும் சங்கு கழுத்து ஆசிரியை.மனப்போராட்டங்களை சொன்ன கதை.

அனுராதா ரமணனின் இரண்டு கதைகள் - கதையின் நாயகனை காதலிக்கும் பெண் அவள் அப்பாவின் கடனால் கை நழுவி கூடப் படிக்கும் தோழிக்கே அம்மாவாக போகும் கதை.பிறகு முதல் பிரசவத்தில் இறந்து விட, தோழி தன் தங்கையை சொந்த பெண் போல அவளை கரை சேர்க்கும் கதை.நாயகனுக்கு கண் பார்வை போய் விடும்(பெண்ணியம்) பிறகு அவனை திருமணம் செய்யும் என்று நிறைவடையும்.

சின்ன வயதில் தாழ்ந்த ஜாதி பையனுடன் காதல்.ஊருக்கு ஒதுக்குப்புரமான வீட்டில் அவசரமாக கூடல்.அவளின் அப்பாவின் அச்சுறுத்தல் காரணமாக ஊரை விட்டு ஓடிப் போகும் கதையின் நாயகன்.அமெரிக்காவுக்கு இரண்டு வருடங்கள் நாடு கடத்தப்படும் நாயகி கூடவே அவள் குடும்பமும்.பத்து வருடங்கள் கழித்து பெரிய தொழிலதிபராய் திரும்பும் நாயகன் இல்லாத குடைச்ச்ல் எல்லாம் குடுத்து நாயகியின் சொத்துகளை அடைகிறான். அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது நாயகிக்கு ஒரு தங்கை புதிதாக பிறக்கிறாள்.கதையின் முடிவில் தான் தெரியும் குழந்தை யாருடையது என்று அதுவும் அந்த ஒதுக்குப்புறமான வீட்டில் இருவரும் சந்திக்கும் போது.

இப்படி எல்லாம் கதை எழுத எனக்கும் ஆசை தான்.ஆனால் என்ன செய்ய நானும் தொழில் நுட்பங்களுக்கு அடிமை ஆகி விட்டேனே.இன்னும் இருக்கிறது பதிவு எழுதும் ஞாபகத்தில் வரவில்லை.

5 comments:

இரும்புத்திரை said...

சுயகயமை.பின்னூட்டம் வராதப்போ இப்படி தான் போடணும்னு நிறைய அனுபவசாலிகள் சொன்னாங்க

இரும்புத்திரை said...

சுயகயமை.பின்னூட்டம் வராதப்போ இப்படி தான் போடணும்னு நிறைய அனுபவசாலிகள் சொன்னாங்க

ஆர்வா said...

வாழ்க்கை வேகத்தில் எத்தனையோ சந்தோஷமான விஷயங்களை இழந்திட்டோம். அதுல நாவல்
படிக்கும் பழக்கமும் ஒண்ணு. அதிலும் குறிப்பா ராஜேஷ்குமாருடைய நாவல்கள்'ன்னா எனக்கு உயிர். அதிலும் விவேக், ரூபலா,விஷ்ணு, எப்ப வருவாங்கன்னு ரொம்ப ஆர்வமா படிச்ச காலங்கள் இப்பவும் பசுமையா நியாபகத்துல இருக்கு. உங்க பதிவு பழைய நினைவுகளை தூண்டி விட்டு இருக்கு. Nice

Marimuthu Murugan said...

► 2009 (202)
► 2010 (4)
► 2010 (365) என்று வர வாழ்த்துக்கள்...புத்தாண்டு வாழ்த்துக்கள்...

thamizhparavai said...

நல்ல நினைவாற்றல் .. எனக்குப் பிடித்தவர்கள் சுபாதான்....
//பெரியம்மா பையனுக்கும்(கதையின் நாயகிக்கு) ,சித்திப்பெண்ணும் (கதையின் நாயகனுக்கு) //
பால் சரியா இருக்கான்னு செக் பண்ணுங்க அரவிந்த்...