Tuesday, January 12, 2010

சரக்கு வித் கவுண்டமணி

சமீப காலமாக சிறப்பாக பதிவு எழுதும்(என்ன கொடுமை!) அளவிற்கு யோசிக்க அல்லது யாசிக்க முடியாத காரணத்தால் சரக்கடிக்க கவுண்டமணி செந்திலைத் துணைக்கு அழைக்கிறேன்.சில் கோபங்கள்,அதை சரக்கு விட்டு அணைக்க இதோ கவுண்டமணியுடன் ஒரு கலாட்டா.இது ஏற்கனவே யோசித்து வைத்திருந்த பதிவு.நான் எழுத முடியாத தொடர்பதிவு.(அதான் இந்த வெறியா).

ஆல் இன் ஆல் கடை ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிசோடிக் கிடக்கிறது.கவுண்டமனி பழைய சரக்கு பாட்டிலில் ஏதாவது மிச்சம் இருக்கிறதா என்று துழாவி பார்த்து கொண்டு இருக்கிறார்.பதிவுலகத்தில் இருந்து இரும்புத்திரை சரக்கோடு கவுண்டமணியிடம் பேட்டி வாங்க செல்கிறார்.போகும் வழியில் ஸ்பானர் தட்டி பக்கத்தில் இருக்கும் ஓடாத மோட்டாரில் கொண்டு வந்த பை இடித்து விட..இனி பேட்டி..

கவுண்டமணி - "சரக்கு வாசனை வருது..இருக்குதா கொஞ்சம் குடு டேஸ்ட் பண்ணிட்டு தர்றேன்.."

இரும்புத்திரை - "முதல்ல பேட்டி..அப்புறம் சரக்கு.."

கவுண்டமணி - "கண்ணிலையாவது காட்டு.."

பாட்டிலை காட்டியப் பிறகு பேட்டிக்கு சம்மதம் சொல்கிறார்.

இரும்புத்திரை - "உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு இந்த பெயர் பிடிக்குமா.."

கவுண்டமணி (மனசுக்குள்) - "என்னடா கேள்வி இது.." பிறகு சரக்கை நினைத்துக் கொண்டு (சத்தமாக) என் பெயர் மணியக் கவுண்டன்.ஜாதி நீங்க படிச்சு வாங்குன பட்டமா அப்படின்னு ஒரு தேங்காய் தலையன் கேட்டுப்புட்டான்.பாரதிராஜா அதை சீனா மாத்திக்கிட்டாரு.எனக்கு ராயல்டி தரவில்லை.உடனே கவுண்டன் அதை தூக்கி முன்னாலப் போட்டு கவுண்டன் மணி என்று வைச்சுக்கிட்டேன்.ஷார்ட்டா கூப்பிடுறேன்னு சில டாக்ஸ் மரியாதையே தராம கூப்பிட அதான் ஒரு எழுத்தை தூக்கிட்டேன்.சரி நெக்ஸ்ட்"

இரும்புத்திரை - "அதுல ஒரு துணைக்கேள்வி பாக்கி இருக்கு.."

கவுண்டமணி - "அது வேற இருக்காடா பக்கி..லென் த்தா சொல்ல முடியாது..பிடிக்கும்..இனி ஒரே ஒரு கேள்வி தான் கேட்கணும்..இல்ல படுவா பிச்சிப்புடுவேன்.."

இரும்புத்திரை - "இப்படி எல்லாம் பேச்சு வாங்க நான் செந்தில் இல்ல.."

கவுண்டமணி - "அடுத்த கேள்வியக் கேளு..நச்சுப் பண்ணாத.."

இரும்புத்திரை - "கடைசியாக அழுதது எப்போ.."

கவுண்டமணி - "ஜக்குபாய் நெட்ல ரீலிஸாச்சு இல்ல..அதுக்காக எல்லாம் அழலை.." சொல்லி விட்டு கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்.."

இரும்புத்திரை - "உங்களுடைய கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா.."

கவுண்டமணி - "உனக்கு என்னடா இப்ப வேணும்..இப்ப சரியா சொல்லு..இப்படி சொன்னா கேட்க மாட்ட சொல்லித் தொலை..எனக்கு கை நாட்டு வைக்கிறது தான் பிடிக்கும்..அதை ஞாபகப்படுத்துறதுல அப்படி ஒரு இன்பம்.."

இரும்புத்திரை - "பிடித்த மதிய உணவு.."

கவுண்டமணி - "சொன்னா வங்கி தருவியா..உல்லான் தான் பிடிக்கும்..நடிகன் சூட்டிங்கில் வாங்கி தர்றேன்னு அந்த சத்யராஜ் சொன்னாரு..அதோட ஆளை காணோம்."

இரும்புத்திரை - "வேறு யாருடனாவது நட்பை உடனே வைச்சுபீங்களா.."

கவுண்டமணி - "உடனே வைச்சுக்குவேன்..காசா பண்மா..ஆனா ஒண்ணு..பழகிட்டப் பிறகு தான் மிதிப்பேன்.." கேட்டவுடன் அவர் கால் நீளாத தூரத்தில் தள்ளி அமர்கிறார் இரும்புத்திரை.

இரும்புத்திரை - "கடலில் குளிக்க பிடிக்குமா..இல்லை அருவியில் குளிக்க பிடிக்குமா.."

கவுண்டமணி - "கேள்வியே தப்பு..முதல்ல அது குளிக்க பிடிக்குமா அப்படி இருக்கணும்.."

இரும்புத்திரை - "முதலில் ஒருவரைப் பார்த்ததும் எதை கவனிப்பீர்கள்.."

கவுண்டமணி - "அவங்களோட கு.. குட்டி பர்ஸ் வைக்கிற இடத்தை..ஹேஹ்ஹே..ஏதாவது புரியுதா.."

இரும்புத்திரை - "உங்களிடம் பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன.."

கவுண்டமணி - "கால்கள் - குறி தவறாமல் விழும் உதைகள் நான் குடுத்தால்..அதே கால்கள் மற்றவர்கள் துரத்தும் போது வேகமாக ஓடாமல் இருந்தால்.."

இரும்புத்திரை - "உங்க சரி பாதி கிட்ட பிடித்த விஷயம்..பிடிக்காத விஷயம்.."

கவுண்டமணி - "இடது கைகள்..பந்தியில் யாராவது பார்க்கும் முன்னாடி பக்கத்து இலையில் கை போடுவதால்..அதே தான் இப்போ எல்லாம் லெஃப்ட் அடி சரியா விழ மாட்டேங்குது.."

இரும்புத்திரை - "யார் பக்கத்தில் இல்லாமல் போனதற்கு வருத்தப்படுவீர்கள்.."

கவுண்டமணி - "செந்தில்..இவ்வளவு நேரமா நீ இருக்க..உன்னை உதைக்க முடியல..இதுவே அவனாயிருந்தா.."

இரும்புத்திரை - "இதை எழுதும் போது என்ன ஆடை அணிந்து உள்ளீர்கள்.."

கவுண்டமணி - "டேய் திருடு தப்பில்ல..கொஞ்சமாவது மாத்து..இது பேட்டி.. நான் என்ன ஆடை அணிந்து இருக்கேன்..உனக்கு தெரிய்து தானே விளக்கெண்ண.."

இரும்புத்திரை - "என்ன பாட்டு கேட்பீங்க.."

கவுண்டமணி - "சொர்க்கம் மதுவிலே..சீக்கிரம் முடிச்சு தொலையேன்.."

இரும்புத்திரை - "வர்ண பேனாக்களாக மாறினால் என்ன வண்ணமாக மாற விரு....."

கவுண்டமணி - "டேய் நிறுத்து எத்தனை தடவை சொல்ல..எனக்கு எழுத வராதுன்னு..திரும்ப திரும்ப.."

இரும்புத்திரை - "பிடித்த மணம்.."

கவுண்டமணி - "கோமணம்.."

இரும்புத்திரை - "நீங்க இந்த பேட்டிக்கு கோர்த்து விட போகும் நபர் யார்.."

கவுண்டமணி - "செந்தில் தான்..அவன் அறிவாளியா என்று பார்க்க வேண்டும்.."

இரும்புத்திரை - "உங்களைப் பேட்டி எடுக்கும் என்னிடம் பிடித்த விஷயங்கள்.."

கவுண்டமணி - "ஆமா இவரு பெரிய..பேக்குல வைச்சிருக்கும் சரக்கு தான்.."

பையைப் பிடிங்கி சரக்கை எடுக்கிறார்.பாதி தான் இருக்கிறது.

கவுண்டமணி - "என்ன ஆச்சு..பாதி தான் இருக்கு.."

இரும்புத்திரை - "மோட்டார்லப் பட்டு உடைஞ்சுப் போச்சுன்னு நினைக்கிறேன்.."

தொடரும்..

4 comments:

cheena (சீனா) said...

அட நல்லாருகே பேட்டி - கவண்டரு தூள் கெளப்பறாரு

நல்வாழ்த்துகள் அரவிந்த்

வால்பையன் said...

கவுண்டமணி, கவுண்டர் சாதியை சேர்ந்தவர் கிடையாது!, அவர் எல்லாத்தையும் கவுண்டர் வைத்து பேசுவதால் அந்த் பெயர் வந்தது, மேலும் கவுண்டர் என்பது ஒரு சாதியே கிடையாது, ராஜா காலத்தில் கொடுக்கபட்ட பட்டம் அது!

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் காமெடி....

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx