இண்டியானா ஜோன்ஸ் - நாலு பாகத்தையும் நேற்று பத்து மணிக்கு ஆரம்பித்து பார்த்து முடித்தேன்.படுக்கும் போது மணி நாலாக பத்து நிமிடம் பாக்கி இருந்தது.ஏற்கனவே பொங்கலுக்கு ஹாலிவுட் தரத்தையும் மிஞ்சி எடுத்த படத்தின் மீது இருந்த கொலைவெறி இன்னும் அதிகம் தான் ஆனது.காரணம் அந்த தீடிர் மந்திர சக்தி,காட்டுவாசிகள் கூண்டோடு கொலை,பெண் இராணுவ அதிகாரி,கூடவே இருக்கும் சிடுமூஞ்சி அதிகாரி இதெல்லாம் அந்த படத்தில் வந்தது.லாஜிக்கில் வெளுத்து எடுத்து விடலாம் என்று பார்த்தால் அது 1957ல் நடக்கும் கதையாம்.பெண் அடுத்த நாட்டை சேர்ந்த அதிகாரி அமெரிக்க இராணுவ மையத்தையே சூரையாடும் போது காட்டுவாசிகள் எல்லாம் எம்மாத்திரம் என்று தோன்றியது.லாஜிக் சரியாக இருப்பதாக தெரிந்தது. இது இண்டியானா ஜோன்ஸ் படத்தின் நாலாம் பாகம்.அப்பா-மகன் உறவு இந்த படத்தில் இருந்தது.பெரிதாக ஈர்க்கவில்லை.காரணம் எனக்கு தான் கல்யாணம் இன்னும் ஆகவில்லையே.நான்காம் பாகத்தை பெரிதாக எழுதினால் பொங்கல் படத்தின் முயற்சியை நான் தடுத்து விடுவதாக அமைந்து விடும்.அதனால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன் முயற்சி தொடரட்டும்.
முதல் பாகமும்,இரண்டாம் பாகமும் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை.முதல் பாகத்திற்கும் நான்காம் பாகத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அதில் நடித்த நாயகி நான்காம் பாகத்தில் திரும்ப வருவார்.ஒரு மகனும் கூடவே வருவார்.மகன் எப்படி வந்தார் என்பதற்கு லாஜிக் தேவையில்லை என்று நினைக்கிறேன்.முதல் பாகத்தைப் பற்றி எழுதினால் பொங்கலுக்கு திரும்ப போய் கைமா வைக்க வேண்டி வரும்.அதனால் இதோடு நிறுத்தி விடுகிறேன்.ஆரம்ப காட்சியை தான் தம்ஸ் அப் விளம்பரத்தில் உபயோகித்தோம்.குரு சிஷ்யன் தங்கம்,உருண்டு வரை பெரிய பாறை போன்ற இறுதி காட்சிகள் இந்த பாகத்தில் ஆரம்பத்தில் வந்தது.
இரண்டாம் பாகம் - இந்தியாவில் நடக்கும் கதை.அம்பிரிஸ் பூரி நடித்த படம்.சிவலிங்கத்தை மீட்டு இழந்த கிராமத்தினரிடம் கொடுக்கும் கதை. உயிரோடு எரிக்கும் சதி,கண்கட்டி வித்தை,பொம்மையில் ஊசிக் குத்தி நாயகனைத் துன்புறுத்துவது,மன வசியம்,பாலத்தில் தொங்கி சண்டை இப்படி போன கதை.பெரிதாக பிடிக்கவில்லை.ஒரு வேளை இந்தியாவில் எடுத்த காரணத்தால் இருக்கும் என்று பின்னூட்டம் வந்தால் நான் பொறுப்பேற்க முடியாது.
இண்டியானா ஜோன்ஸ் உருவான விதம் - சினிமா பற்றி பேசவே கூடாது என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டு விடுமுறையை கழிக்க ஒரு தீவிற்கு சென்ற ஸ்பீல்பெர்க் அவர் நண்பகளுடன் ஒப்பந்தத்தை மீறி அடுத்த அரை மணி நேரத்தில் பேசி உருவாக்கிய கதை தான் இண்டியானா ஜோன்ஸ்.
மூன்றாம் பாகம் - உயிரை காப்பாற்றும் புனித நீரை தேடும் கதை.இந்த ஒரு பாகத்திற்காக மற்ற எல்லா பாகங்களையும் பொறுத்துக் கொண்டேன். காரணம் அப்பா-மகன் உறவு.மகனின் புத்திசாலித்தனத்திற்கு கூட லேசாக தலையாட்டும் தந்தை.மகனால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிக்கும் போது காட்டும் பெருமிதம்.மகன் இறந்து விட்டான் என்று நம்ப மறுத்து திரும்ப நம்பும் உணர்வுகள்,அப்பாவிற்காக எந்த ஆபத்தையும் எதிர் கொள்ளும் மகன்,அப்படி மறுக்கும் போது அப்பா அறைந்து விடும் போது காட்டும் முக பாவங்கள். இதெல்லாம் சொல்கிறது நாம் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.அதையெல்லாம் செய்ய மாட்டோம்.நாயகியை வைத்து நாயகனை மிரட்டும் காட்சி கந்தசாமி நொந்த சாமியில் வந்தது.
படத்தில் எனக்கு எரிச்சல் தந்த விஷயம் - இண்டியானா என்பதற்கு தரும் விளக்கம்.அந்த பெயரை கேலி செய்யும் அப்பாவே பிறகு அதே பெயரில் இண்டியானா,இண்டியானா அந்த கிண்ணம் வேண்டாம் என்று சொல்லும் போது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு.
படத்தில் வரும் ஒரு அழுத்தமான முத்தக்காட்சி - இது மாதிரி நாம் ஆபாசமில்லாமல் எடுக்க கூட இன்னும் ஐம்பது ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்.வல்லவன் படத்தில் உதட்டை கடித்து இழுப்பது போல் பேனர் வைத்த போது அது பெரிய விஷயமாக பேசப்பட்டு படத்தின் விளம்பரத்திற்கு உதவியது.சரி இதுவும் ஒரு புது முயற்சி என்று படத்திற்கு போனவர்கள் கதி.அதோ கதி - பார்த்தவர்களுக்கும்,தயாரிப்பாளருக்கும் நேர்ந்தது.நமக்கு முயற்சிகளுக்கும் அயற்சிகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
எங்கோ எவனோ உழைத்த,சிந்தித்த தருணங்களை கஷ்டப்படாமல் திருடி நான் எடுத்தது,என் மூளையில் உதித்தது என்று சொல்லும் போது வரும் எரிச்சல்களுக்கு அளவேயில்லை.எங்கு இருந்து எடுத்தேன் என்று அவர்கள் சொல்லும் போது அந்த முயற்சிகளுக்கு நான் ஆதரவு தருவேன்.
Saturday, January 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
enna yaarume illaiyaa
NAAN IRUKKIREN
//நான்காம் பாகத்தை பெரிதாக எழுதினால் பொங்கல் படத்தின் முயற்சியை நான் தடுத்து விடுவதாக அமைந்து விடும்//
//பொங்கலுக்கு திரும்ப போய் கைமா வைக்க வேண்டி வரும்.அதனால் இதோடு நிறுத்தி விடுகிறேன்//
ரைட்டு...நடக்கட்டும்
//எங்கோ எவனோ உழைத்த,சிந்தித்த தருணங்களை கஷ்டப்படாமல் திருடி நான் எடுத்தது,என் மூளையில் உதித்தது என்று சொல்லும் போது வரும் எரிச்சல்களுக்கு அளவேயில்லை.எங்கு இருந்து எடுத்தேன் என்று அவர்கள் சொல்லும் போது அந்த முயற்சிகளுக்கு நான் ஆதரவு தருவேன்.//
ரைட்டு..
//
ஒரு வேளை இந்தியாவில் எடுத்த காரணத்தால் இருக்கும் என்று பின்னூட்டம் வந்தால் நான் பொறுப்பேற்க முடியாது.
//
ஐயர்ன் கர்டன் சார்,
அதில் இந்தியர்கள் குரங்கு மூளை, கண் சூப், உயிருள்ள பாம்பு போன்றவற்றைத் தின்பதாகக் காட்டுவார்கள். அதுவே எனக்குப் படம் பிடிக்காமல் போனதுக்குக் காரணம்.
ஆனாலும் இண்டியானா ஜோன்ஸ் 1,3 மற்றும் 4 பாகங்கள் தான் என்னை மிகவும் கவர்ந்த படங்கள். இண்டியானா ஜோன்ஸுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை இருவருக்கும் கம்யூனிஸ்டுகள் என்றாலே பிடிக்காது!
மேலும் உங்கள் மற்ற கருத்துக்களுடன் முழுவதும் உடன்படுகிறேன். தமிழ் சினிமாகாரர்கள் உலக சினிமாவைப்பார்த்து உலக சினிமா ரேஞ்சுக்கு எடுக்கணும்னு நெனச்சா...இப்புடித்தான் இருக்கும்.
இண்டியானா என்ற பெயர்க்காரணத்தால் உங்களுக்கு ஏன் எரிச்சல் ஏற்பட்டது. அவர்கள் வீட்டு நாயின் பெயரை அவர் அப்படி வைத்துக்கொண்டார். மேலும் இண்டியானா என்பது அமேரிக்க மாநிலம். இந்தியா அல்ல.
//ஒரு வேளை இந்தியாவில் எடுத்த காரணத்தால்//
Think the second part shot in Sri Lanka (probably kandy).The villagers they speak Sinhala, and they r Sinhala film artist.
Greatest adventure movie i've loved to see that....still one more part to see..lets expect for the 5th part!!
3 வது பாகம் தான் டாப்.
4 வது எனக்கு பிடிக்கவில்லை.
Post a Comment