Friday, January 22, 2010

காதலியின் (அ) காதலின் அளவுகோல்

சிரிக்கும் விழிகள்
கூர் நாசி
சற்றே விரியும் இதழ்கள்
சிவந்த மடல்கள்
கையில் அடங்கும் முகம்
பேசும் விரல்கள்
மெட்டியில்லாத கால்கள்
தேடலின் தோல்விகள்
சொல்லும் முடிவுகள்
இல்லாமல் போகும் ஏதோ ஒன்று
அல்லது கூடவே இருக்கும்
எவனோ ஒருவன்

சில பெண்களைப் பார்த்தால் மட்டும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றும்.அப்படி சமீபத்தில் பார்த்த மூன்று பெண்கள்.

1.இசையருவி தொலைக்காட்சியில் காட்டிய எத்திராஜ் கல்லூரியின் ஏதோ ஒரு விழா.அதில் பாடிய ஒரு பெண்.கூர் நாசி.கண்களில் தான் உணர்வில்லை.இல்லாமல் போன ஒன்றின் கீழ் இந்த பெண் வருகிறார்.

2.கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் போட்டியில் கலந்து கொண்ட குறும்படத்தில் நடித்தப் பெண். சிரித்த விழிகள் - இறுதி காட்சியில் அந்த பெண் இறக்க மருத்துவராக அந்த பெண்ணின் கண்ணோடு வாழும் காதலன்.கொஞ்சம் பொறாமை மிச்சம் இருக்கிறது அவனை பார்த்து.கூடவே இருக்கும் ஒருவன் அந்த அடிப்படையில் இந்த பெண் வருகிறார்.

3."பெண்களின் கையைப் பிடித்துக் கொண்டு என்ன தான் பேசுவார்களோ.." இப்படி அடிக்கடி என் மேலாளர் சொல்வார்.அவருக்கு இந்த காதல்,கத்திரிக்காய் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.இன்று தான் பார்த்தேன்.அந்த பெண்ணின் விரல்களும் பேசியது.

விரல் வழியே வழியும் வார்த்தைகள்
குறுக்கே நடப்பவன் செருப்பில் ஒட்டுகிறது
கண் வழியே பாயும் மின்சாரம்
தூரத்தில் இருப்பவன் மீதும் தொற்றுகிறது
குறுக்கே நடப்பவன் பார்வையும்
தூரத்தில் இருப்பவன் பெருமூச்சும்
எரிக்க முயன்று தோற்கிறது
கவனத்தைக் கலைக்க
நடுவே அடுத்த விரல்கள் கடக்கிறது.

இந்த கவிதையில் பிழை இருக்கிறது என்று சொல்லி என்னை கொஞ்சம் வளர்த்து விடுங்கள்.

8 comments:

லோகு said...

ரொம்ப அட்டகாசமா இருக்குண்ணா..

எறும்பு said...

//இந்த கவிதையில் பிழை இருக்கிறது என்று சொல்லி என்னை கொஞ்சம் வளர்த்து விடுங்கள். //

எனக்கு கவிதையே புரியாது,நான் எங்க போய் பிழை கண்டு பிடிக்கறது... வேணும்னா சொல்லுங்க ஒரு மைனஸ் ஓட்டு போடறேன்..
:)

சங்கர் said...

//இந்த கவிதையில் பிழை இருக்கிறது என்று சொல்லி என்னை கொஞ்சம் வளர்த்து விடுங்கள். //

இது கவிதையே இல்லைன்னு சொன்னா, இன்னும் வளரலாம்ல :))

Chitra said...

அந்த பெண்ணின் விரல்களும் பேசியது. .......... very nice!அருமையாய் இருக்குங்க.

Yoginetradio said...

கவி (கொலை)ஞர் அரவிந்த் வாழ்க

Yoginetradio said...

கவி(கொலை)ஞர் அரவிந்த் வாழ்க

அன்புடன்
அத்திரி

gulf-tamilan said...

//எனக்கு கவிதையே புரியாது,நான் எங்க போய் பிழை கண்டு பிடிக்கறது... வேணும்னா சொல்லுங்க ஒரு மைனஸ் ஓட்டு போடறேன்//

:)))))

sathishsangkavi.blogspot.com said...

//விரல் வழியே வழியும் வார்த்தைகள்
குறுக்கே நடப்பவன் செருப்பில் ஒட்டுகிறது
கண் வழியே பாயும் மின்சாரம்
தூரத்தில் இருப்பவன் மீதும் தொற்றுகிறது//

கலக்கல் வரிகள்...