குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததை காண்போமா
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில்
ஒளிந்த கதை தெரியுமோ
ஆங்கிலப் படம் என்று நிரூபித்தால்
படமெடுப்பதை ஆயிரத்தில் ஒரு பாம்பு நிறுத்துமோ
வியட் நாமில் ஒட்டகம் - கூகுளிட்டால்
பகடி செய்யுதே இணையத்தளங்கள்
வெள்ளை எருமை தின்னப் பிடிக்காதோ
பாண்டிய வாரிசுக்கும்,சோழத் தூதுவனுக்கும்
தூரத்தில் அழகாய் தெரியும் பெரிய பெண்கள் தான்
பேரிளம் பெண்கள் என்றால் பின் நவீனத்துத்தின் சூத்திரமோ
இராஜஸ்தானில் படப்பிடிப்பு என்பதால்
வியட் நாமில் பெரிய பாலைவனமும்,ஒட்டகமும் சாத்தியமோ
இதில் வருவது அனைத்தும் கற்பனையே என்றால்
மேலே சொன்னது அனைத்தும் பொய்யாகுமோ
Tuesday, January 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அடுத்த வட ...! ஹம்ம்... நடத்துங்க...
பாடல் - வட ஸ்பெஷல் :))
ராஜு உடனடியாக மேடைக்கு வரவும், திருவிழாவில் காணமல் போன உங்கள் நண்பர் இங்கே இருக்கிறார் :))
உலக சினிமாவுக்கும் எங்களுக்கும்
பல மீட்டர் தூரமுங்க..
கிலேடியேட்டரும் மம்மியும்
கிலோ என்னவிலைன்னு கேட்ட கூட்டமுங்கோ..
ஜுராசிக்கு பார்க்கை மட்டும்
ஒருவாட்டி பார்த்தேனுங்க..
ஒத்த அடியில பத்து பேரு விழுறதை
மொத்தமா ரசிச்ச ஆளுங்க நாங்க..
புளிச்ச மாவையே அரச்சாலும்
சலிக்காம பார்க்கற கூட்டத்துக்கு
புது சேதி சொல்ல வந்த
பேராண்மை புதுசாத்தான் இருந்துச்சுங்க..
தாலி செண்டிமெண்டும், தங்கச்சி செண்டிமெண்டும்,
தவறாம ரசிச்ச கூட்டத்துக்கு
ஆயிரத்தில் ஒருவன் கொஞ்சம்
அதிசியமாத்தான் இருக்குதுங்க..
ஒலக அறிவு இல்லாத முட்டாப்பய
ஒண்ணுந்தெரியாம ஒளரிப்புட்டேன்..
விவரம் தெரிஞ்ச மேதாவி நீங்க
வித்தியாசமா நெனச்சுக்காதீங்க மகராசா..
அரவிந்தின் கவிதை, லோகுவின் எதிர் கவிதை இரண்டுமே அருமை...!
உண்மையாக சொன்னால் என்னை ஈர்த்தது லோகுவின் கவிதை தான்..!
தவறுகள் நிறைய உள்ளது தான். எதோ, இயக்குனரின் வித்தியாசமான முயற்சிக்காவது ஆதரிக்கலாமே அரவிந்த்...?! முதல் படிதானே.., இது வெற்றியடைந்தால் போக போக நல்ல படங்கள், வித்தியாசமான முயற்சிகள் ஆரம்பிக்கும் அல்லவா..?
இரும்புத்திரை
மோட்டாரு இல்லாத காட்டாறு
Arivu GV..... Nan idha solla poithaanga innamum vidaama indha padatha kili kilinu kilikkiraaru.....
avaru vettaikarane indha padatha vida paravayillanu soldra alavukku vandhuttaaru..... avar vijaya paratti oru padhivu podrathukulla nammale niruthikkalamnu vittuten....... adhunaala logukku konjam parthu support pannunga!
super logu
Post a Comment