"தலை"ப்பில் இருக்கும் கேள்வி என் மேல் அடிக்கடி பாய்ந்ததுண்டு.காரணம் விஜய் படங்களை அதிகளவில் நான் தோரணம் கட்டியிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு விஜய் படங்களில் எனக்கு "மிகவும்" பிடித்த படங்கள் ரெண்டு.அது புதிய கீதை மற்றும் வேட்டைக்காரன். அசல் படத்திலும் பில்லா ஹாங்க் ஒவர் மீதமிருப்பது போல் தெரிகிறது.ஷூட் எம் அப் மற்றும் ஜாக்கி சான் படத்தில் வந்தது போல துப்பாக்கி கழட்டி மாட்டும் காட்சிகள் அசலும் யோகி,ஆயிரத்தில் ஒருவன்,நந்தலாலா படத்தின் மீது நான் வைத்த விமர்சனங்கள் போல ஆகி விடுமோ என்ற பயம் இருந்தாலும் நான் அதை செய்ய மாட்டேன்.காரணம் இரண்டு.
1.நான் விஜய் இரசிகன் கிடையாது.
2.என்னை விட அஜித் படத்தை சீரும் சிறப்பாக பதிவுலகத்தில் விமர்சனம் செய்ய ஆள் இருக்கிறது.
ரெண்டு காரணங்களிலும் உண்மையும்,பொய்யும் சரி சமமாக கலந்திருக்கிறது.மேலும் அஜித்தை காலி செய்ய நான் வேண்டுமா என்ன.அதுதான் மோதி விளையாடி காலி செய்ய சரண் இருக்கிறாரே.
இன்னும் சரியாக புரியாமல் நீங்க அஜித் இரசிகரா என்று திரும்பவும் கேட்டால் என் பதில் - "ஜெயமோகனை பற்றி நான் ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது.அப்போ நான் ஜெயமோகன் இரசிகனா.."
ஜெயமோகன் என்று சொன்னவுடன் ஞாபகம் வருகிறது.குருஜியும் சுரேஷ் கண்ணனும் சிலாகித்திருந்த அவர் மொழிப்பெயர்த்த விவேக் என்பவரின் கன்னட சிறுகதைகள் மூன்றை படிப்பதற்குள் கண்ணை கட்டி விட்டது.காரணங்கள் உண்டு.இன்னமும் நான் எழுத்துகளில் மூழ்கி மூச்சுத் திணர விரும்புவேன்.அப்படி இருக்க முடியவில்லை.எழுத்துப் பிழைகளும் நிறைய இருக்கிறது.இந்த குற்றத்தை சொல்ல எனக்கு அருகதை கிடையாது. சொல்வதற்கு காரணம் நான் எழுத்துப் பிழைகள் வரவே கூடாது என்று முயற்சி செய்கிறேன்.
கண்ணை கட்டி விட்டது என்று சொன்னவுடன் தான் ஞாபகம் வருகிறது.தேசிய விருதுகள் எவ்வள்வு கேலிக் கூத்தாக மாறி வருகிறது என்பதற்கு உதாரணம் தான் ஒரே ஒரு விருது தான்.பாலாவிற்கு சேது அல்லது பிதாமகன் படத்திற்கே கொடுத்திருக்க வேண்டும்.நான் கடவுள் அவர் திறமைக்கு தீனி போட்ட படம் அல்ல என்பது என்னை பொறுத்த வரை சர்வ நிச்சயம்.அடுத்து வாரணம் ஆயிரம் இதற்கு தேசிய விருது கிடைக்க காரணமும் ரெண்டு.
1.தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த நக்மா(என்ன கொடுமை சாமி..பின்ன ஏன் புயல் வராது)
2.தேர்வு செய்யும் குழுவில் இருந்த மேன நாயர்களின் எண்ணிக்கை.
அஞ்சாதே படங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியாதே.போங்கடா நீங்களும் உங்க விருதும்."அவனை போடணும்..எனக்கே சாவு பயத்தை காட்டிட்டாங்க.." என்று சொன்னால் தமிழில் விருது கிடைக்குமா."கிடோ,புடோ,கொடோ.." என்று ஆங்கிலத்தில் ஏதாவது உளறினால் கண்டிப்பாக தமிழில் விருது கிடைக்கும்.
படம் என்றவுடன் ஏதாவது ஞாபகம் வந்திருக்குமே ஆமா அதே தான்.இன்று வெளியாகும் ஐந்து படங்கள்.
தமிழ்படம் - எனக்கு பிடித்த படம்.காரணம் ஒரு பாட்டு.பாட்டில் கிழவிகளின் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைக்கும் சிவா இது யாரோ செய்தது போல் ஞாபகம்.ஆனால் அளவுக்கு மிஞ்சினால் மாதிரி தெரிகிறது.இப்படி தான் குவிக் கன் முருகன் பப்படம் ஆகியது.சரி பார்ப்போம்.
கோவா - பி,சி செண்டர்களில் கேள்விக் குறியாகுமா என்பது என் மனதில் எழுந்த பெரிய கேள்வி.அந்த அளவிற்கு ரீச்னெஸ்.வெங்கட் பிரபுவின் திறமையை உணர்த்துமா,உலர்த்துமா என்று பார்ப்போம்.ரஜினி படம் சில்வர் ஜூப்ளி என்று சொல்லியுள்ளார்.இது தான் அடுத்த சந்தேகம்.அவர் எந்த படத்திற்கு தான் இப்படி சொல்லவில்லை.கேடி என்ற படத்திற்கும் அவர் சிலாகித்து பாராட்டு பத்திரம் வாசித்தார்.
கதை - சசிகுமார் பணம் கட்டிய கறுப்புக் குதிரை.சசிகுமார் வினியோகித்து பணம் பார்ப்பாரா என்பது தான் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.படத்தின் வெற்றியை விட இது தான் மில்லியன் டாலர் கேள்வி.ஆனால் ஏன் வாங்கினார் என்று துருவிப் பார்த்தால் தயாரிப்பாளர் - நந்தா,மௌனம் பேசியதே படங்களை தயாரித்தவர்.
ஜக்குபாய் - வசாபி,திருட்டு டிவிடி,பதினைந்து கோடி,ராதிகாவின் கண்ணீர்,சேரனின் கொதிப்பு,ஜீ டிவியின் அக்கப்போர்,கலைஞர் டிவி வாங்கியது இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் களத்தில் இருக்கும் படம்.பொங்கலுக்கு வெளியீடாக செய்து இருக்கலாம்.
தைரியம் - ரொம்ப தைரியம் தான்.தயாரிப்பாளர்,நடிகரின் (அட ரெண்டு பேரும் ஒண்ணு தான் - பட்டியலில் இயக்குனராக கூட பெயர் சேரலாம்) தைரியத்தை பாராட்டி படகோட்டி படத்துல எம்.ஜி.ஆர் யூஸ் பண்ண கைக்குட்டை(ரொம்ப காஸ்ட்லியாக இருக்கிறதே) சரி தமிழக அரசின் கலைமாமணி பட்டம் குடுத்து விடலாம்.
படம் பார்க்காமலே ஐந்து படத்திற்கும் லட்டு மாதிரி விமர்சனம் எழுதலாம்.
விமர்சனம் என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது.கேரளாவில் முதல் காட்சியே படத்தை நிர்ணயம் செய்யும்.நன்றாக இல்லை என்றால் அடுத்தக் காட்சிக்கு வரிசையில் இருப்பவர்களிடம் படம் சரியாகயில்லை என்று கலைத்து விடுவார்களாம்.அது தமிழகத்தில் வருமா என்றால் சர்வ நிச்சயமாக வராது.இங்கு என்ன செய்வோம் படம் ஒரு முறை பாருங்கள்.பார்த்து விட்டு சொல்லுங்கள் என்று பெற்ற துன்பத்தை வையகத்திற்கும் கொடுத்து விட்டு இணையத்தில் நன்றாகயில்லை என்று விமர்சனம் செய்தால் டுபுக்கு என்பவரிடம் திட்டு வாங்குவோம்.அனானி பின்னூட்டங்கள் எல்லாம் இருந்தால் டோட்டல் டேமேஜ் தான்.கெட்ட வார்த்தைகளும் இருந்திருக்குமோ.
கெட்ட வார்த்தை என்றவுடன் ஞாபகம் வருவது.யோகி படத்தில் கொலை செய்து விட்டு வரும் போதும் ஒரு ஆங்கிலப் பாடல் ஒலிக்கிறது.உற்று கவனித்தால் ஆங்கில கெட்ட வார்த்தை அப்படியே காதில் விழுகிறது.சென்ஸார் செய்தவர்களுக்கு காது கேட்காதா இல்லை ஆங்கிலம் தெரியாதா.இதுக்கு தேசிய விருது கொடுங்க.அல்லது தமிழ் நாடு அரசு விருது குடுங்க.அதான் பெயர் தமிழில் இருந்தால் வரிவிலக்காமே.ஏதோ பழமொழி எல்லாம் ஞாபகம் வரவில்லை.அதனால இதோட முடியுது.
Thursday, January 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஒரு பத்தியிலிருந்து ஒரு வார்த்தை எடுத்து அடுத்த பத்தியை எழுதி, இதென்ன அந்தாதியா?
இல்ல, பதிவுக்குள்ளேயே ஒரு தொடர் பதிவா?
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப ஞாபகம் வருது
Mr.IRUMBUTHIRAI,
PLS GROW UP
@selva
sari officer
Post a Comment