Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன் - காமசூத்ரா பார்ட் டூ விமர்சனம்

உலக சினிமாக்களின் தொகுப்பு,நாட்டு நடப்பு,இந்திய சரித்திரம்,சுயநலம்,வெற்றி படத்தின் தலைப்பு மற்றும் ஒரு பாடல் எல்லாம் கலந்து அடித்த உப்பு சப்பு இல்லாத கலவை தான் ஆயிரத்தில் ஒருவன்.

முதலில் இதில் நடித்த துணை நடிகர்களுக்கு நிறைய பாராட்டுக்கள்.முதலில் அவர்களுக்கு குடுக்க வேண்டிய பணத்தை குடுங்கள்.குடுக்காத உங்களுக்கு எல்லாம் ஏண்டா நாட்டு நடப்பு.

கிங் சாலமன்ஸ் மைன்ஸ்,மம்மி,மம்மி ரிடர்ன்ஸ்,300,கிளாடியேட்டர்,அபோகல்பிட்டா, ஹிட்டன் டிராகன் க்ரவுச்சிங டைகர் இந்த படத்தில் இருந்து கற்பனை எல்லாம் சொந்த சரக்காக மாற்றி எடுத்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

இலங்கை போர் - சிங்கள வீரர்கள் அல்லது இந்திய அமைதி படையினர் செய்த்தது போல கொலை,குண்டுவீச்சு,ஆடை அவிழ்ப்பு,கற்பழிப்பு என்று இறுதி கட்டத்தில் நான் அந்த அக்கிரமத்தில் நெளிந்தேனோ இல்லையோ வீட்டில் இருந்து கொண்டு அயல் நாட்டு படங்களில் வரும் காட்சிகளை சூட்டு படம் எடுப்பவர்கள் எல்லாம் காட்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்ட ஏன் இந்த நாட்டு நடப்பு.இன ஒழிப்பு நடக்கும் போது நீங்கள் எல்லாம் என்ன புடுங்க போனீர்கள்.இதில் ஏதாவது லாபம் வந்தால் இந்தியாவில் இருக்கும் அகதி முகாம்களுக்கு ஏதாவது செய்யுங்கள்.அப்படி செய்ய மனது வரவில்லை என்றால் அந்த மாதிரி காட்சிகள் இல்லாமல் படம் எடுத்து தொலையுங்கள்.பெயரும் புகழும் வாங்க இப்படி செய்வது தான் உச்சக்கட்ட அவமானம்.

இதில் வரலாறு பாடங்களை எல்லாம் திரித்து பாண்டிய மணிமகுடம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் சொல்படி பாண்டிய மன்னர்கள் நடப்பார்கள்.சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டை ஜெயித்து மணிமகுடத்தை இலங்கையில் கொண்டு பதுக்கி வைத்தார்களாம்.அதை திருட தொடர்ந்து பாண்டிய நாட்டு இளவரசர்கள் முயர்சித்து வந்தார்கள்.அது போல இலங்கைக்கு பதில் வியட் நாம் பக்கத்தில் ஒரு தீவு.மணிமுகுடத்திற்கு பதில் சிலை.வரலாறு முக்கியம்.

உலகத்தின் தீராத கட்டடக் கலையின் புதிர்களான மச்சு பிச்சு போல சில செட் இதில் என்ன இருக்கிறது என்று மூன்று வருடம் என்று தெரியவில்லை.கிராபிக்ஸ் வேலைகள் முற்று பெறாமல் அங்கங்கே பிய்ந்து கிடக்கிறது.

முதல் பாகத்திற்கும் இரண்டாவது பாகத்திற்கும் அவ்வள்வு வித்தியாசம் - கற்பனை தொய்வு தெரிகிறது.இரண்டு பாகத்திற்கும் உள்ள வித்தியாசம் ரீமா சென்னிற்கும் ஆன்டிரியா இருவரும் இருக்கும் முக்கியத்துவம் போல தனியாக தெரிகிறது.

கார்த்தி,அழகம் பெருமாள் எல்லாம் சொன்னதை செய்து இருக்கிறார்கள்.பார்த்திபனின் பல காட்சிகளில் காட்டிய ஓவர் அக்டிங்கும்,நெல்யாடிய நிலமெங்கே பாடலுக்கு அமைக்கப்பட்ட நடனமும் மிக மிக எரிச்சலை தந்தது.விளைவு இனி நெல்லாடிய நிலமெங்கே பாடல்களைக் கேட்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்.

இரண்டாம் பாதியில் வந்த பிண்ணனி இசை எனக்கு பிடித்து இருந்தது.பாடல்கள் என்னை கவரவில்லை ஆனால் பிண்ணனி இசை எனக்கு பிடித்தது.

ரீமா சென் பார்த்திபனிடம் நான் தான் சோழ நாட்டின் தூதுவன் என்று சொல்லிக் கொண்டு அடிக்கும் கூத்து எல்லாம் காமசூத்ரா பாகம் இரண்டு மாதிரி இருந்தது.

32 கோடி வசூல் கிடைப்பது சந்தேகம் தான்.காணாமல் போனவர்கள் பட்டியலில் இது சேரும் நாள் தூரத்தில் இல்லை.

ஆக மொத்தம் ஆயிரத்தில் ஒருவன் - அவசரத்தில் தயாரிக்கப் பட்ட மூக்குப்பொடி.கிச்சுகிச்சு எல்லாம் மூட்ட முயன்று நெடி தான் மிஞ்சி இருக்கிறது.

24 comments:

இரும்புத்திரை said...

நானூறு ரூபா போச்சு.பரவாயில்லை இந்த காசைக் கொண்டு ஒரு துணை நடிகருக்காவது பணத்தைக் கொடுக்கவும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ரீமா சென் பார்த்திபனிடம் நான் தான் சோழ நாட்டின் தூதுவன் என்று சொல்லிக் கொண்டு அடிக்கும் கூத்து எல்லாம் காமசூத்ரா பாகம் இரண்டு மாதிரி இருந்தது.//

good

அண்ணாமலையான் said...

உண்மைய சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...

CS. Mohan Kumar said...

ரொம்ப கோபமா எழுதியிருக்கீங்க. நானும் கூட பார்த்துட்டு second half -ல் நொந்து போய் விமர்சனம் எழுதியிருக்கேன். முடியும் போது வாசியுங்கள்

அகல்விளக்கு said...

அதேதான் இங்கயும்....

காதுல புகை....

Unknown said...

என்ன ஆச்சு நண்பரே?

தம்பி.... said...

No boss,நானும் நேற்று இந்த படத்தை பார்த்தேன், Atleast அதை எடுத்த விதத்திர்காவது பாராட்டியே ஆகவேண்டும், இன்றைய தமிழ் சினிமா ரசனையை பொறுத்த வரை, இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து வந்திருக்க வேண்டிய படம்....காலத்தை மீறிய கனவு என்று சொல்லலாம்

KenZoom said...

டை டுபுக்கு நீ இந்த படம் எல்லாம் பாத்து இர்ருகேன் சொல்ல்றிய ( கிங் சாலமன்ஸ் மைன்ஸ்,மம்மி,மம்மி ரிடர்ன்ஸ்,300,கிளாடியேட்டர்,அபோகல்பிட்டா, ஹிட்டன் டிராகன் க்ரவுச்சிங டைகர்).... முதல உன்னால ஒரு படம் எடுக்க முடியுமா உன் மொபைல் போன்ல..

Unknown said...

நண்பா...உங்க ரசனையோட அளவு என்னன்னு கொஞ்சம் கூட எனக்கு புரியல...வேட்டைக்காரன் வந்தாலும் திட்டுறீங்க, ஆயிரத்தில் ஒருவன் எடுத்தாலும் அதே கதை தான்னா எப்படி தான் படம் எடுக்கறது....சும்மா அரச்ச மாவையே அரைக்காம புதுசா ஒரு விஷயத்தை யோசிச்சதுகாகவாது செல்வாவ பாராட்டனும்...அப்படி பாராட்ட மனசு வரலியா இப்படி கேவலமாவாது எழுதாம இருங்க..தமிழ் சினிமா உருப்பட நீங்க செஞ்ச ஒரு உதவியாவாது இருக்கும்...
ஹாலிவுட் காரங்க 300 கோடில இதே கதையை எடுத்தான்னா வாயப்பொளந்து பாப்பீங்க...நம்மாளுங்க 32 கோடில எடுத்தா காரி துப்புவீங்க...இப்படி இருந்ததா எங்கிருந்து நல்ல படம் வரது :(:(

Karthikeyan Tamilmani said...

திரைப்படத்தை நீங்கள் விமர்சனம் செய்து விட்டீர்கள்........ அதே போல் நானும் உங்களது விமர்சனத்தை விமர்சனம் செய்கிறேன்...... உங்களால் பொறுமையாக இருக்க முடிகிறதா என்று பாருங்கள்........

பல்வேறு இன்னல்களை அனுபவித்த/ அனுபவித்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு தாங்கள் என்ன சொத்தையே எழுதி வைத்து விட்டீர்களா? இல்லை போராட்டத்தில் ஏதேனும் கலந்து கொண்டீர்களா? வெறும் பெயரும் புகழும் வாங்க இப்படி விமர்சனம் எழுதுவதுதான் உச்சகட்ட அவமானம்........

இந்த படத்தில் பெயரும் புகழும் செல்வா வாங்கினாலும் கூட இத்தனை நாளாக ஈழத்தில் நடக்கும் கொடூரங்களை பற்றி முழமையாக தெரியாதவர்களுக்கு அவர்களின் வலி என்னவென்பதை இந்த படம் காட்டி விடும் :(........

மம்மி, கிலாடியேட்டோர் போன்ற படங்களில் எதுவும் காப்பி அடிக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?

ஒரு திரைப்படத்தை உருவாக்க அவர்களிடம் உள்ள துறைகள், ஆட்கள் எவ்வளவு என்று தெரியுமா? எல்லாவற்றிற்கும் மேல் அவர்களின் வணிக பலம் மற்றும் மார்க்கெட் என்ன என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்? இதே பட்ஜெட்டை கொண்டு இதே போல் திரைப்படத்தை ஹாலிவுட்டில் தயாரிக்க சொல்லுங்கள் பார்க்கலாம்?

இந்த படத்துக்கும் உண்மையான வரலாற்றிற்கும் உண்மையான தொடர்பு இல்லை என்று டைட்டில் கார்டு போடும்முன்பு போட்டதை நீங்கள் கவனிக்க வில்லை என்று நினைக்கிறேன் :(

நீங்கள் இன்றைய மக்களின் மனநிலை மட்டும் வாழ்க்கை முறையை மனதில் கொண்டு பார்த்திபனின் காட்சிகளை கிண்டல் அடித்துள்ளீர்கள்...... உண்மையோ பொய்யோ ஆனால் இப்போதைய முக/மன பாவங்களை விட்டு வித்தியாசமாகதான் இருந்திருக்கும் என்பதை மனதில் கொண்டே அவ்வாறு காட்டப்பட்டுள்ளது..... இது பாராட்டுக்குரியதே அன்றி இகழக்கூடியது அல்ல.......

இதே வகைதான் ரீமா சென்னின் மோகன நர்த்தனமும்........ அவனோடு ஊடல் கொண்டால் தன்மேல் அவனுக்கு ஈர்ப்பு அதிகமாகும் அதன் பொருட்டு அவன் தான் சொல்வதை எல்லாம் செய்வான் என்று நினைக்கும் விதமாகத்தான் அதை காட்டியுள்ளனர்......... இது ஒன்றும் சிலந்தி போலவோ ஜகன் மோகினி போலவோ தொலை காட்டி சம்பாதிக்க எடுக்கப்பட்ட படம் இல்லை........

கிராபிக்சில் சில குறைகள் உள்ளது...... ஒரு சில காட்சிகளில் லாஜிக் இடிக்கிறது என்று விமர்சனம் எழுதினால் அது ஏற்று கொள்ள கூடியது...... அதே நேரம் அந்த குறைகலஎல்லாம் தாண்டி செல்வாவின் கடின உழைப்புக்காகவே இதை பார்ட்டஹான் வேண்டுமேயன்றி குறைகளை பெரிது படுத்துதல் கூடாது.......

Unknown said...

good comment Karthikeyan :)

Raju said...

நான் நினைத்தமாதிரியே எழுதியிருக்கீங்க இயக்குனரே...!

Mohan said...

don't write reviews to increase your hit rate man

Valaakam said...

இதெல்லாம் ஒரு விமர்சனம்.
தானும் முன்னேற மாட்டாங்க, முன்னேறுறவனையும் விடமாட்டாங்க.
நன்றி கார்த்திகேயன்.

அத்திரி said...

நீயும் விமர்சனம் எழுதிட்டியா?.................எப்படியோ படத்தை கண்டிப்பா பார்ப்பேன்

சாமக்கோடங்கி said...

ப்ளாக்'ஐ எல்லோரும் பார்கிறார்கள்.ப்ளாக் உலகம், தற்போது மிடுந்த பலத்துடன் இருக்கிறது.அதாவது ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு. பல கோடி செலவு செய்து படம் எடுக்கிறார்கள். எங்கோ முகம் தெரியாமல் உக்கார்ந்து கொண்டு பல லட்சம் பேர் பார்க்கக் கூடிய அளவு சிறந்த தொடர்பு முறையை, இந்த ப்ளாக் உலகம் நமக்குக் கொடுத்திருக்கிறது. அதை தயவு செய்து தவறாக உபயோகப் படுத்தாதீர். இது உங்களுக்கு மட்டுமானதல்ல. ப்ளாக் என்ற சொல்லை எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்தலாம் என நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு அன்பு வேண்டுகோள்.எதிர்மறை விமர்சனம் எழுதும்போது, கருத்தை உங்களுடைய சொந்த பார்வையில் எழுதுவது போல் எழுதுங்கள்.பார்வை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.
தவறை அடுத்த முறை திருத்திக் கொள்ளுங்கள்.என்ன செய்வது, எந்த ஒரு ஊடகத்திலும், நல்லது என்று ஒன்று தோன்றும் போதே, கேட்டதும் தோன்றி விடுகிறதோ.? இது தான் இயற்கையின் நியதி போல.
இனி மேற்கொண்டு, பல நல்ல இடுகைகள் எழுதும்படி, உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

இரும்புத்திரை said...

டை டுபுக்கு உங்க பேரே ரொம்ப வித்தியாசமாக இருந்தது.ஆனால் உங்க ப்ரோபைல் தான் காணவில்லை.முதலில் அதை போடுங்கள்.திட்டுவதாக இருந்தால் டேய் டுபுக்கு என்று சொல்ல வேண்டும்.கோபத்தில் கை நடுங்கி விட்டதா ?

மூக்கு என்ற பெயரில் குறும்படம் எடுக்க இருக்கிறேன்.நடிக்க தான் ஆள் தேவை

இரும்புத்திரை said...

// Mohan said...

don't write reviews to increase your hit rate man//

ஹிட்ஸ் சர்ச்சை எழும் போதெல்லாம் வால் பையன் யாருடைய பின்னூட்டத்தில் சொன்னது தான் ஞாபகம் வருகிறது."ஹிட்ஸை வைத்து ஒண்ணும் பண்ண முடியாது.. அதுவே பட்ஸாக இருந்தால் காது குடையலாம்.".என்னுடைய கருத்தும் அதேதான்.

இரும்புத்திரை said...

நன்றி வளாகம்.நான் எழுதுவதால் இந்த படம் ஓடாமல் இருக்கப் போவதில்லை.ஈரம் படத்திற்கு நல்ல விதமாக பதிவு போட்டதால் அது ஓடியதாக யாரும் என்னிடம் குறிப்பாக ஷங்கர் என்னிடம் சொல்லவில்லை

இரும்புத்திரை said...

நன்றி சுரேஷ், அண்ணாமலையான்

நன்றி மோகன் படித்து விட்டேன் தல

நன்றி அகல்விளக்கு அங்கேயுமா

நன்றி ரவிசங்கர்

நன்றி கைப்பிள்ள

நன்றி ராஜூ எதிர்ப்பது உண்டா

நன்றி அத்திரி

நன்றி பிரகாஷ் முயற்சி செய்கிறேன்

நன்றி கார்த்திகேயன் தமிழ்மணி,கமல் நாளை தனிப் பதிவில் பதில் சொல்லட்டுமா

மாயோன் ! said...

படம் பார்த்தவர்களுக்காக மட்டும் எழுதி இருக்கிறேன்.. பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும்..

ஒரு மொக்கை கதையை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க படக்குழுவினர் அரைகுறைகள் இல்லை..

சொல்லவந்த உருக்கமான உறையவைக்கும் கதையை மேலே மெழுகு தடவி.. விறுவிறுப்பு ஏற்ற சில அம்புலிமாமா டைப் வியுக அலங்காரங்கள் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்..

கதை இது தான்..

கடுமையான போரில் தமது மண்ணை இழந்த கூட்டம் ஒன்று என்றாவது தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையை உணவாக்கி கண்காணாத இடத்தில் பதுங்கி கிடக்கிறது.. தாயகம் திரும்ப வேண்டிய வழியை உரைக்க - தூது வரும் - என்றுகாத்துக்கொண்டு தம்மை சுற்றி பாதுகாப்பு அரண் ஏற்படுத்திகொண்டு வாழ்கிறது..

யாரும் சுலபமாக அவர்களை நெருங்கி விட முடியாது.. நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தூது ஒன்று வந்து சேர்கிறது.. அந்த தூது சொல்லவதை நம்பி மறைவிடம் விட்டு வெளியேறியபின் தான் தெரிகிறது -தலைமை துரோகிகளிடம் ஏமாந்துவிட்டது என்று..

அசுர பலமும், சர்வ வல்லமையும் கொண்ட எதிரிகளிடம் நடக்கும் பொருந்தாத போரில் மோதி.. கடைசி வரை போராடுகிறார்கள்.. இழப்பு..இழப்பு.. தாங்கமுடியாத இழப்பு.. இறுதியில் தோற்று சிறை எடுக்கப்பட்டு அவமான படுத்தப்பட்டு.. தலைவன் இறக்கின்றான்.. தலைமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு அடுத்தகட்ட போராட்டததுக்கான நம்பிக்கை விதைக்கப்படுவதுடன் முடிகிறது கதை..

எல்லோரும் சொல்வது போல அவ்வளவு விறுவிறு முன்பாதி தந்த இயக்குனருக்கு.. பின்பாதி இப்படி தர என்ன அவசியம்?

முதல் பாதி நம்மை ஆயத்தப்படுத்த வரும் விறுவிறு/துருதுரு அட்டைப் படம் / முன்னுரை..
இரண்டாம் பாதி தான் சொல்லவந்த கதை..

பட ஆரம்பைதிலேய சொன்னபடி.. உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இங்கே அவர்கள் வெறும் உவமைகள்..

நிகழ்காலவரலாறு - அதுவே சற்று குழப்பமானது தான் - அதை சற்று படத்தோடு பொருத்தி பாருங்கள் - சொல்லவந்த செய்தி என்னவென்று புரியும்..

சும்மா நானும் விமர்சனம் எழுதுகிறேன் என்று ஒரு சிறந்தபடைப்பை மேலோட்டமாக குறைகூற வேண்டாம்.. தயவுசெய்து..

Kumky said...

காரம் ரொம்ப கம்மி...

வியாதி முற்றிவிட்டது...
இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது.
வன்முறை வெறியாட்டம் ஆடியிருக்கும், எந்த சினிமா வறையறைகளுக்குள்ளும் அடங்காமல்,எந்த உண்மையினடிப்படையும் இல்லாமல், பொழுது போக்கு என்றும் சொல்ல முடியாமல் இதைவிட மோசமாக ஒரு திரைப்படம் வந்ததாக நினைவில் இல்லை..

இந்த படத்தினையும் ஆதரித்து கமெண்ட் போடும் புன்னியவான்கள் வாழ்க..

கிள்ளிவளவன் said...

sir sorry for tanglish.
chozhana villanaa kaatina paartuveenga (dasaavatharam). athe herova kaatina kurai solluveenga. eksi.
Please manasaatchiyooda vimarsanam pannunga...

Unknown said...

உங்கள் விமர்சனமும் சரி, படம் எடுத்த விதமும் சரி பார்ராட்டுகிறேன் .இயக்குனரின் நல்ல முயற்சி முதலில் அதை பாராட்டுவோம்