Wednesday, January 27, 2010

அனிதாவின் காதல்கள்,இராமலிங்க ராஜூவின் சத்யமான மோசடி

அனிதாவின் காதல்கள் - சுஜாதாவின் நாவல்களில் ஒன்று.சுவாரஸ்யம் இல்லாமல் ஆரம்பித்து மொத்தமாக படித்து முடித்த போது மராத்தான் ஓடும் வீரன் முதலில் மெதுவாக ஓட ஆரம்பித்து பிறகு எல்லோருக்கும் முன்னால் ஓடுவது போல உணர்வு.சினிமாவாக எடுக்க தகுதியான கதை - சர்வ நிச்சயமாக ஐந்து பாட்டும்,இரண்டு சண்டையும் முயற்சி செய்தால் இன்னும் ஒரு சண்டை கூட திரைக்கதையில் சொருகலாம் என்று என்னுள் இருக்கும் ஏதோ ஒன்று இந்த கதைக்கு திரைக்கதை எழுதிய போது சொன்னது.ஆனந்த தாண்டவம் இயக்குனர் கண்ணில் இந்த கதை படாமல் இருக்க வேண்டும் என்று படிக்கும் போதே ஆண்டவனை வேண்டிக் கொண்டேன்.

சுஜாதாவின் மீதிருந்த பிரமிப்பு கூடிக் கொண்டே போனது.காரணம் பீஸ்ஸா சென்னையில் அறிமுகம் ஆகும் போது சொன்னாராம் - மசாலா சேர்த்தால் இது பெரும் வரவேற்பு பெறும் என்று சொன்னாராம்.அது போல இந்த நாவல் எழுதிய போது அது தொன்னூறுகளின் தொடக்கமாக இருந்தது என்றே நினைக்கிறேன்.கிட்டத்தட்ட என்று சொல்ல ஆசையிருந்தாலும் அது போல என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.2008ம் ஆண்டில் சத்யம் நிறுவனர் இராம் லிங்க ராஜூவின் கதையும் இப்படித்தான் ஆனது.

கதையில் வரும் வர்ணனைகள் அப்பப்பா - "ஈறுகளில் இரத்தம் கசியும் அளவிற்கு அழுத்தமான முத்தம் கொடுத்தான்.." இந்த வரியை படிக்கும் என் முகம் முன்னால் இருக்கும் மானிட்டரை (தண்டோரா அண்ணன் அடிக்கும் மானிட்டர் இல்லை) நோக்கி நகர்ந்தது.

கதை இதுதான் - அனிதாவை துரத்தி துரத்தி கல்யாணம் செய்ய நினைக்கும் வைரவன் - பெரிய பணக்காரன்,ஃபைனான்சியல் மாதயிதழ்களின் அட்டை படத்தில் வரும் அளவிற்கு புத்திசாலி,ஃபார்வர்டு டிரெடியிங்கு செய்து பணம் பார்ப்பவன்.நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் பாடல் ஒன்றில் வருவது போல காலை ஒரு நகரம்,மதியம் ஒரு நகரம்,இரவு ஒரு நகரம் என்று இருப்பவன்.

அவனை பார்ப்பதற்கே முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.இராமலிங்க ராஜூவை பார்க்க விரும்பும் ஆந்திர முதல்வருக்கும் இது பொருந்தும்.

நினைத்தை அடையும் போதும் குறுக்கே வருபவர்களை கூட பணத்தால் வாங்கி பணக்காரத்தனமாக காதலை வெளிப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டவுடன் வீட்டிற்கு கொண்டு வந்து அனிதாவை பூட்டியும் பூட்டாமலும் பார்த்து கொள்கிறான்.

ஒரே நாளில் நேரம் பார்த்து இராமலிங்க ராஜூவிற்கு அடித்தது போல ஒரு ஆப்பு ஒன்று வைக்கிறார்கள் வைரவனுக்கு.எல்லாம் இழந்து சிறையில், குடும்பம் நடுத்தெருவில்,அப்பாவும் இறந்து போக அனிதாவும் பிரிய நினைக்க - அந்த நேரத்திலும் அவளுக்கு வரும் மூன்று கல்யாண விண்ணப்பங்கள்.

இவ்வளவு சீரியஸாக கதை போகும் போது அவள் அக்காவுடன் வேறு நகரத்திற்கு போக அனிதா மறுக்க எல்லோரும் கோபம் கொள்கிறார்கள்.அது சுஜாதா பாணியில் எப்படி என்றால் - "மூன்று வயது நந்து கூட அவளை முறைப்பது போல் இருந்தது".இப்படி பட்ட நிலையிலும் சுஜாதாவால் மட்டுமே இயல்பான நகைச்சுவையை சொருக முடியும்.அதை படிக்கும் போது இதழ் பிரியாமல் கண்கள் விரித்து சிரித்தேன்.

இடைவெளி நிச்சயம் அந்த காலத்திற்கு பொருந்தும்.எனக்கு கொஞ்சம் அது நாடகம் பார்ப்பது போல் இருந்தது.காரணம் கடும் விரக்தியில் பிச்சைக்காரனுக்கு தாலியை போடும் அனிதாவின் மாமா.தங்கம் விற்கும் விலையில் இந்த காலத்தில் அப்படி நடக்குமா.

ஒரு சிறு போராடத்திற்குப் பிறகு கண்வனுடன் இணைகிறாள்.இராமலிங்க ராஜூவின் வேன் ஒன்று ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஹைதை நகரத்தையே சுத்தி சுத்தி வந்ததாம்.இந்த கதையிலும் முக்கிய ஆவணங்கள் ஒரு சுற்று சுற்றி வரும்.இராமலிங்க ராஜூவை இது போல மீட்க அனிதா போல ஒரு பெண்ணாவது முயற்சி செய்தாளா என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.காரணம் ஒரு புனைவு காலம் கடந்து எந்த அளவிற்கு ஒத்துப் போகிறது என்று பார்க்கத்தான்.

சுஜாதா 2005களில் எழுதிய கதையை இன்னும் இருபது வருடங்கள் கழித்து யாராவது எந்த நிகழ்ச்சியுடன் நிச்சயம் ஓப்பீடு செய்வார்கள் என்பது மட்டும் உறுதி.

சின்ன சந்தேகம் - கதையின் நாயகன் பெயர் வைரவனா அல்லது பைரவனா கொஞ்சம் யோசித்து பார்த்தால் தலை சுத்த ஆரம்பித்து விடுகிறது.நானும் ஒரு யூத்தாக மாறி வருகிறேனோ என்னவோ.

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை.

5 comments:

மதார் said...

mm gud comparison

அகல்விளக்கு said...

சூப்பரு.........

இரும்புத்திரை said...

//mm gud comparison//

//சூப்பரு.........//

kiya bath hai

பினாத்தல் சுரேஷ் said...

வைரவன் :-)

வந்தபோது ஹர்ஷத் மேத்தாவின் கதை என்று சொன்னார்கள்.

அத்திரி said...

உன்னை சொல்லி குத்தமில்ல