சின்ன வயதில் இருந்தே அடிக்கடி என்னுடைய சுற்றத்தில் ஒலிக்கும் வார்த்தைகள்.
"ஊருக்கே ஒரு வழி..உனக்கு மட்டும் தனி வழியா.."
"பாம்பு திங்கிற ஊருக்குப் போனால் முதல்ல நடுத்துண்டை நீ சாப்பிடணும்.."
"அம்மணமா அலையிற ஊர்ல கோமணம் கட்டாதே.."
"பிழைக்கத் தெரியாதவன்.."
இன்னும் தீராமல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.அதற்கு நான் சொல்லும் பதில்களும் மாறவில்லை.
"ஆமா.."
"முடியாது.."
"என் இஷ்டம்.."
"பரவாயில்லை.."
சொன்னவர்கள் யார் என்று பார்த்தால் - தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,மாமா,அத்தை,வாத்தியார்,பிறந்த வாண்டு,அது கூட சுத்தும் கோண்டு,நட்பு, நட்பு(இரண்டு தடவை வந்து விட்டதோ சரி இருக்கட்டும்)
தம்பியிடம் கடைசியாக நடந்த கதையை விவரித்தப் போது கண்கள் விரிய சிரித்துக் கொண்டே சொன்னான். "அடப்பாவி நீ யாரையுமே விட்டு வைக்க மாட்டாயா.."
என் இரசனையின் வெளிப்பாடு
உனக்கோ அதில் குறைபாடு
விவரிக்க நான் பட்டபாடு
புரியாத கோட்பாடு
கிடைக்குமா நல்ல சாப்பாடு
கலைந்து கிடக்கும் இடிபாடு
தெரியாத சமன்பாடு
சரியாக்க பெரும்பாடு
என்னைத் திட்டும் மனசாட்சியின் கூப்பாடு
"போடா பா.."
"பிழைக்கத் தெரியாதவனே.." யாரோ அவருடைய சொந்த பெயரில் என்னை கூப்பிடுவது போல் இருக்கிறது.போய் பார்த்து விட்டு முடிவு செய்கிறேன். நடுத்துண்டு கறியா இல்லை கோமணம் அவிழ்ப்பா என்று.
Thursday, January 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தல.., என்ன ஆச்சு.., இதெல்லாம் நமக்கு சாதாரணம் இல்லையா..., அந்த பாடு பாடு பாடு சூப்பர் அடுத்த டி.ஆர் நீங்க தான்... கன்க்ராட்ஸ்
உங்க பாணிய தான் நான் கடைப்பிடிக்கறேன். தூள் கிளப்புங்க
உங்க வழி தனி வழின்னு தெரியுது..
கோட்பாடு கூப்பாடு எல்லாம் நல்லாத்தான் இருக்கு................சரி ஒரு நல்ல பதிவா எழுது
//லோகு said...
உங்க வழி தனி வழின்னு தெரியுது..//
ரிபீட்ட்ட்ட்
Post a Comment