Thursday, January 14, 2010

துவையல் - சர்ச்சை ஸ்பெஷல்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது,கிராமி நாமினேஷன் என்று கிடைத்தப் பிறகு அவருக்கு திருஷ்டி கழிய வில்லையோ என்று நினைத்திருந்தேன்.அப்படி திருஷ்டி கழிக்க வந்தது தான் விண்ணைத் தாண்டி வருவாயோ.கேட்டு விட்டு இன்னும் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறேன்.போக போக அல்லது கேட்க கேட்க ஈர்க்கும் என்று அவரின் ரசிகர்கள் சொல்லலாம்.அது அவர்கள் செய்து கொள்ளும் சமரசம்.கௌதம் மேனன் கண்ணில் தூசியோடு அடுத்தவர் கண்ணைப் பார்த்தால் இப்படித்தான் இருக்கும்.போங்க பாஸ் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை கெடுக்காதீங்க.என் உடம்புக்கு ஒண்ணும் ஆகவில்லை.அதுதான் என்னுடைய இப்போதைய சந்தோஷம்.வாரணம் ஆயிரம் படத்தில் வருவது போலவே இருக்கிறது ஹோசான்னா பாடல்.அது சரி அமெரிக்காவுல எடுத்தா அப்படி இல்லாமல் எப்படி இருக்கும்.ஆக மொத்தம் எல்லா மொக்கைகளும் சேர்ந்து ஆஸ்கர் நாயகனை காலி செய்ய பார்க்கிறது.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் ஒரு பாட்டு எனக்கு பிடித்திருக்கிறது.எதுக்கு மூணு ஹீரோயின்.ஒ சரி ரன்பீர் கபூர் நடித்த ஹிந்தி படம் என்று சொன்னார்கள்.தனுஸ்ரீ தத்தாவை வீணடித்து இருப்பார்கள் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.தனுஸ்ரீ தத்தாவின் பாடல் ஒன்று யூ டூயுப்பில் பார்த்து அந்த கல்வெட்டில் எழுதியதை எழுத்து கூட்டிப் படித்து தெரிந்து கொள்ளவும்.த்னுஸ்ரீ தத்தா - இம்ரான் ஹாஸ்மி என்று அடித்து பார்க்கவும்.நான் மும்பை முதல் தடவை சென்ற சமயம் தெரிந்து கொண்ட முதல் பெயர் இம்ரான் ஹாஸ்மி தான்.படத்தில் ஒரு வசனம் வருகிறது "எதுவுமே இல்லாவிட்டாலும் நான் ஆம்பளை.எதுமே இல்லாவிட்டாலும் நீ பொம்பள." முடியலடா சாமி.சன் பிக்சர்ஸ் வாங்கி இருக்கிறார்களாம்.இது மாதிரி யாராவது இணையத்தில் எழுதி இருந்தால் போர்க்கொடி தூக்கும் நபர்கள் இந்த படத்தை என்ன செய்ய போகிறார்கள்.பட் எனக்கு விஷால் பிடிக்கும்.பின்ன சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டால் யாருக்கு தான் பிடிக்காது.

கோவா - இந்த வருடத்தின் மிக பெரிய ஏமாற்றம்.வெங்கட் பிரபுவின் மீது கொண்ட ஈர்ப்பு குறைவது போல் தெரிகிறது.அவர் பாணியை கொஞ்சம் மாற்றி கொண்டால் பரவாயில்லை.இல்லை கரகாட்டக்காரன்,தெம்மாங்கு பாட்டுக்காரன்,வில்லு பாட்டுக்காரன் என்று இயக்கி அவர் அப்பாவை போல் காணாமல் போய் விடக் கூடாது.கங்கை அமரன் காணாமல் போன போது கூடவே ராமராஜனும் போனார்.இவர் கூட செல்லப் போவது யார் ஜெய் இல்லை வைபவ் இல்லை என்ன கொடுமை சாரா.

ஹிட்ஸ் சர்ச்சை எழும் போதெல்லாம் வால் பையன் யாருடைய பின்னூட்டத்தில் சொன்னது தான் ஞாபகம் வருகிறது."ஹிட்ஸை வைத்து ஒண்ணும் பண்ண முடியாது.. அதுவே பட்ஸாக இருந்தால் காது குடையலாம்.".என்னுடைய கருத்தும் அதேதான்.

விராத் கோலி நன்றாக ஆடுவதால் சச்சின் திரும்பியதும் கத்தி யார் மேல் விழப் போவது என்று பார்ப்போம்.பலியாடு ரைய்னாவா இல்லை ஜடேஜாவா என்று தெரியும். யாராவது கீழே விழுந்தாலும் அல்லது அவருடைய பேண்ட் அவிழ்ந்து விட்டால் விழுந்து விழுந்து சிரிக்கும் குழந்தைத்தனம் என்றுமே போகாது என்பதற்கு யுவராஜ் சாட்சி. விராத் கோலி தான் இந்த கேலிக்கு ஆளானார்.பைனல்ஸ் பார்க்கவில்லை எப்படியும் தோற்று விடுவார்கள் என்று தோன்றியது.அதுதான் நடந்தது.கடைசி இருபது பைனல்களில் நாம் ஜெயித்தது நாலே நாலு தான்.போங்கடா நீங்களும் கிரிக்கெட்டும்.கொஞ்சம் ஹாக்கி பக்கம் திரும்புங்கள்.

புத்தகக் கண்காட்சி முடிந்தது - யாருடைய புத்தகம் அதிகம் விற்றது என்று தெரிந்தால் அடுத்த சண்டைக்கு வடை தந்து உதவியது போல் இருக்கும்.நானும் ஏதாவது கட்சியில் நின்றுக் கொள்வேன்.எதுக்கு வேடிக்கை பார்க்கத்தான்.இந்த முறை புத்தகம் கிழிக்கப்படுமா,உயிர்மையில் ஜெயமோகன் திரும்புவாரா என்பதைப் பார்க்க டிசம்பர் வரைக்கும் காத்திருக்க வேண்டும் என நினைக்கும் போது கொஞ்சம் ஆயாசமாக இருக்கிறது.அது சரி கச்"சேரி" எல்லாம் டிசம்பரில் தான் நடக்குமாம்.

இரும்புத்திரையில் இந்த பொங்கலில் இருந்து ஒரு நட்டு கூடி இருக்கிறது என்பதும் வராத ஆயிரத்தில் ஒருவன் படமும் அன்றே வருவதால் எனக்கு கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியே.(அப்பத்தானே ஒரு பதிவு தேறும்)

பிறந்த நாள் வாழ்த்துகள் இரும்புத்திரை என்று சொல்லி பொங்கல் அன்று யாரும் ஆட்டோவில் வர வேண்டாம்.மீட்டருக்கு குடுக்க கூட காசு லேது.அதனால் முன்னிட்டு அனைவரும் தலா ஆயிரம் ரூபாய் எடுத்து அவரவர் அக்கவுண்ட்டில் போட்டுக் கொள்ளவும்.

9 comments:

இரும்புத்திரை said...

இருந்ததும் ஒரு பெண் பாடாசிரியர் தான்.அவரும் காணாமல் போய் விட்டார்.விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இருந்து

Chitra said...

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
பிறந்த (திரு)நாள் வாழ்த்துக்கள்.

Romeoboy said...

\\எனக்கு விஷால் பிடிக்கும்.பின்ன சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டால் யாருக்கு தான் பிடிக்காது//

எவ்வளவு உண்மையான வரிங்க பாஸ்.. ச்சே இவ்வளவு பெரிய உண்மையை யாருமே என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் :( .. சொல்லி இருந்தா என்னோட காசுல நானே சூனியம் வச்சி இருக்க மாட்டேன்.

cheena (சீனா) said...

அன்பின் அரவிந்த்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகளுடன் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளும்

நட்புடன் சீனா

சங்கர் said...

//இவர் கூட செல்லப் போவது யார் ஜெய் இல்லை வைபவ் இல்லை என்ன கொடுமை சாரா.//

கண்ணுலேயே படாதவங்க எப்படி காணாமல் போகமுடியும், ஆமா, இவுங்களோட எப்புடி ராமராஜன ஒப்பிடலாம்?? (இந்த வட ஓகேவா??)

சங்கர் said...

//ஆக மொத்தம் எல்லா மொக்கைகளும் சேர்ந்து ஆஸ்கர் நாயகனை காலி செய்ய பார்க்கிறது.//

மொக்கைன்னு யாரை சொன்னீங்க? பதிவர்களையா?? (அடுத்த வடை??)

சங்கர் said...

//புத்தகக் கண்காட்சி முடிந்தது - யாருடைய புத்தகம் அதிகம் விற்றது என்று தெரிந்தால் அடுத்த சண்டைக்கு வடை தந்து உதவியது போல் இருக்கும்.நானும் ஏதாவது கட்சியில் நின்றுக் கொள்வேன்//

போன சண்டையில எந்தப்பக்கமும் இருந்த மாதிரி தெரியலையே (நானும் அங்க தான் நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன்)

சங்கர் said...

//பிறந்த நாள் வாழ்த்துகள் இரும்புத்திரை என்று சொல்லி பொங்கல் அன்று யாரும் ஆட்டோவில் வர வேண்டாம்.//

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அரவிந்துனு சொன்னா என்ன கிடைக்கும்?

Beski said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அரவிந்த்.

அதுவே நாளையாக இருந்திருந்தால் இன்னொரு பதிவுக்கு வழிவகுத்திருக்கும்...