இப்படி ஒரு தலைப்பு வைப்பேன் என்று யாராவது ரெண்டு நாட்களுக்கு முன்னால் சொல்லியிருந்தால் நான் சிரித்திருப்பேன்.என்ன கொடுமை அரவிந்த் இது.இப்படி ஒரு அரிய முயற்சியை என் விமர்சனத்தால் நான் செல்வராகவன் முன்னேறுவதை தடுத்து விட்டேன் என்று சொன்னவுடன் பின் நவீனத்துவப் பாணியில் சிரிப்பது எப்படி என்று என் ஆசான் தண்டோராவிடம் கேட்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.காரணம் நான் எவ்வளவோ தடுத்தும் அந்த படத்தை பார்க்கலாம் என்று வற்புறுத்தியதால் தான் போனேன்.என்னால் என் நெருக்கமானவர்களே தடுத்து நிறுத்த முடியவில்லை.நான் போய் மக்களை - போங்க பாஸ் ஆனாலும் ரொம்ப தான் குறும்பு.
அதிக ஹிட்ஸ் கிடைக்க இப்படி எல்லாம் எழுதுகிறேன் என்று சொன்னால் அதற்கு ஒரே வார்த்தையில் தான் என் பதில் வரும் - ஸாரி.எனக்கு ஹிட்ஸ் இதில் நம்பிக்கை கிடையாது.இதை எழுதி பிரபலம் ஆவேன் என்று சொன்னால் அதற்கு இரண்டு வார்த்தையில் பதில் - வெரி ஸாரி.என் நண்பர்களுக்கு கூட நான் ஒரு ப்ளாக்கர் என்று தெரியாது.இதில் வருவது என்னுடைய கருத்து மட்டுமே.நான் வேட்டைக்காரனை கூட தான் விமர்சனம் செய்தேன்.உடனே ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்படி விமர்சனம் செய்ய மாட்டேன் என்று அர்த்தம் ஆகி விடாது.
ஹாலிவுட் படத்தில் பிரமாண்டம் இருக்கிறது தவிர நாம் செய்யாத ஒன்றும் இருக்கிறது - கதை,திரைக்கதை,வசனம் எல்லாம் முடித்தப் பிறகு தான் படம் எடுக்க செல்வார்கள்.நாம் மட்டும் தான் ஸ்கிரிப்ட் முடிவு செய்யாமல் சென்று விட்டு அடுத்தவன் கற்பனையை சுரண்டுவோம்.அப்படி செய்யாமல் 32 கோடியில் சாதனை படம் எடுத்து விட்டார் என்று யாராவது சொன்னால் - அது எல்லாமே விழலுக்கு இறைத்த பீர் மன்னிக்க நீர் தான்.வெளியே வரும் போது தம்பியின் நண்பன் சொன்னான் - "இதற்கு வேட்டைக்காரன் படம் பார்த்து இருக்கலாம்.".நானும் ஆமோதிப்பது போல் சிரித்தேன்.வேட்டைக்காரன் படமாவது தலைவலியை தான் தரும்.ஆயிரத்தில் ஒருவன் நம் மீது ஒருவன் குடித்து விட்டு வாந்தி எடுத்தால் எப்படி மனது வலிக்குமோ அப்படி இருக்கிறது.நான் அந்த தாக்கத்தில் எடுத்தது தான் இல்ல எழுதியது தான் விமர்சனம்.
அப்படி அபத்தம் செய்து கேவலமாக படத்தை எடுத்து விட்டு இந்த படம் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் என்று சொன்னால் நான் நண்பர் கமல் கேவலமான விமர்சனம் என்று சொன்னதை விட கேவலமாக விமர்சனம் செய்யவும் தயங்க மாட்டேன்.ப்ளாக்கர் என்பது ஒரு ஆயுதம்.இது பத்து வருடங்களுக்கு முன் இல்லாத காரணத்தால் தான் கண்டதையும் எடுத்து ஏமாற்றினார்கள்.இனி இது மாதிரி விமர்சனங்கள் வலுப்பெறும்.கேபிள் சங்கரும் இது மாதிரி தான் சொல்லி இருக்கிறார்.நானும் அந்த கட்சியில் நின்றுக் கொள்கிறேன்.வாழைப்பழத்தில் வலிக்காத மாதிரியான விமர்சங்கள் குமுதம்,ஆனந்த விகடனில் வரும்.இங்கு வாழை மரத்தையே சாய்க்கும் அரிவாள் மாதிரியான விமர்சனங்கள் தான் வரும்.
இனி கார்த்திகேயன் தமிழ்மணிக்கு என் பதில்கள்
//பல்வேறு இன்னல்களை அனுபவித்த/ அனுபவித்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு தாங்கள் என்ன சொத்தையே எழுதி வைத்து விட்டீர்களா? இல்லை போராட்டத்தில் ஏதேனும் கலந்து கொண்டீர்களா? வெறும் பெயரும் புகழும் வாங்க இப்படி விமர்சனம் எழுதுவதுதான் உச்சகட்ட அவமானம்........//
என்னால் முடிந்த உதவியை செய்வேன் ஒரு வேளை உணவு கொடுத்திருக்கிறேன்.சொத்து இருந்தால் எழுதி வைக்க முயற்சி செய்வேன்.என்ன செய்ய என்னைடம் சொத்தைப் பல் கூட கிடையாது.இப்படி பின்னூட்டம் போட்டு பெயரும் புகழும் வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டீர்களா என்று நான் சொன்னால் அது எவ்வளவு நகைச்சுவை ஆக இருக்கும்.
//இந்த படத்தில் பெயரும் புகழும் செல்வா வாங்கினாலும் கூட இத்தனை நாளாக ஈழத்தில் நடக்கும் கொடூரங்களை பற்றி முழமையாக தெரியாதவர்களுக்கு அவர்களின் வலி என்னவென்பதை இந்த படம் காட்டி விடும் :(........//
என்னால் செய்ய முடியவில்லை பின் நவீனத்துவையும்,முன் நவீனத்துவையும் காட்டாமல் மறைத்து வைப்பேன்.ஈழத்தின் வலியை இந்த காட்டுமா - வாட் எ ஜோக்.ஈழம் பற்றி மகேந்திரனின் மகன் ஜான் எடுத்த ஆணிவேர் பெட்டியில் தூங்குகிறது.அது வரட்டும் அது சொல்லும்.இப்படி கேவலமாக படம் எடுத்து சொன்னால் நான் ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை.என்னுடன் நடித்த இலங்கைத் தமிழர்கள் இன்று உயிரோடு இருப்பார்களா என்று கண் கலங்கிய நந்தாவுக்கு தான் பெயர்,புகழ் எல்லாம் கிடைக்க வேண்டும்.ஆடை அவிழ்ப்பு இயக்குனருக்கு அல்ல.
//மம்மி, கிலாடியேட்டோர் போன்ற படங்களில் எதுவும் காப்பி அடிக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?//
காப்பி அடியுங்கள்.தப்பில்லை ஆனால் சரியாக செய்யாமல் இருந்து மூலப் படத்தை சிதைத்தால் அது மன்னிக்க முடியாத குற்றம்.ஏன் வெயில்,ஈரம் படங்கள் கூட வெளி நாட்டு படங்களில் இருந்து எடுத்தார்கள்.நான் ஏதாவது சொன்னேனா.
//ஒரு திரைப்படத்தை உருவாக்க அவர்களிடம் உள்ள துறைகள், ஆட்கள் எவ்வளவு என்று தெரியுமா? எல்லாவற்றிற்கும் மேல் அவர்களின் வணிக பலம் மற்றும் மார்க்கெட் என்ன என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்? இதே பட்ஜெட்டை கொண்டு இதே போல் திரைப்படத்தை ஹாலிவுட்டில் தயாரிக்க சொல்லுங்கள் பார்க்கலாம்?//
ஹாலிவுட்டில் ஒருமுறை பட்ஜெட் போட்டால் அப்படியே தான் இருக்கும்.வேண்டும் என்றால் அதுவும் தவிர்க்க முடியாத காரணத்தால் சிறிது ஏறும்.இப்படி ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஆறு கோடியில் இருந்து ஆறு மடங்கு உயர்ந்து 32-36 கோடியில் நிற்காது.
//இந்த படத்துக்கும் உண்மையான வரலாற்றிற்கும் உண்மையான தொடர்பு இல்லை என்று டைட்டில் கார்டு போடும்முன்பு போட்டதை நீங்கள் கவனிக்க வில்லை என்று நினைக்கிறேன் :(//
அப்படி என்றால் பாண்டிய நாடு சோழ நாடு என்று சொன்னல் இரண்டு அரசு என்று சொல்லி இருக்க வேண்டும்.பாண்டிய அரசு,சோழப் பரம்பரை என்று இருந்தால் வரலாறு ஒழுங்காக இருக்க வேண்டும்.
//நீங்கள் இன்றைய மக்களின் மனநிலை மட்டும் வாழ்க்கை முறையை மனதில் கொண்டு பார்த்திபனின் காட்சிகளை கிண்டல் அடித்துள்ளீர்கள்...... உண்மையோ பொய்யோ ஆனால் இப்போதைய முக/மன பாவங்களை விட்டு வித்தியாசமாகதான் இருந்திருக்கும் என்பதை மனதில் கொண்டே அவ்வாறு காட்டப்பட்டுள்ளது..... இது பாராட்டுக்குரியதே அன்றி இகழக்கூடியது அல்ல.......//
பார்த்திபனின் நடிப்பு அப்படி தான் இருந்தது.அதுவும் சில காட்சிகள் என்று தான் சொல்லி இருக்கிறேன்.அதில் ஒன்று ராணுவம் சூழ்ந்த உடன் தற்கொலை செய்ய நினைக்கும் பார்த்திபன் மக்களை விட்டு விட்டு.போர்க்களத்தில் தனியாக நிற்கும் போது சிரிக்கிறார்.
//இதே வகைதான் ரீமா சென்னின் மோகன நர்த்தனமும்........ அவனோடு ஊடல் கொண்டால் தன்மேல் அவனுக்கு ஈர்ப்பு அதிகமாகும் அதன் பொருட்டு அவன் தான் சொல்வதை எல்லாம் செய்வான் என்று நினைக்கும் விதமாகத்தான் அதை காட்டியுள்ளனர்......... இது ஒன்றும் சிலந்தி போலவோ ஜகன் மோகினி போலவோ தொலை காட்டி சம்பாதிக்க எடுக்கப்பட்ட படம் இல்லை........//
சில நடன அசைவுகள் நிகழ்காலத்தில் ஆடும் குத்து போல இருந்தது.அது நடன இயக்குனரின் பிரச்சனை.செல்வராகவனுக்கே என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத போது அவர் என்ன செய்வார்.பார்த்திபன் ஆடுவதை சொன்னேன்.இன்றைய மக்களின் மனநிலை மட்டும் வாழ்க்கை முறையை மனதில் கொண்டு பார்த்திபனின் நடனக் காட்சிகள் இருக்கிறது.
//திரைப்படத்தை நீங்கள் விமர்சனம் செய்து விட்டீர்கள்........ அதே போல் நானும் உங்களது விமர்சனத்தை விமர்சனம் செய்கிறேன்...... உங்களால் பொறுமையாக இருக்க முடிகிறதா என்று பாருங்கள்........//
நான் கோபத்தில் எழுதி இருந்தால் எப்படி எழுதி இருப்பேன் என்பதற்கு தண்டோரா அண்ணன் பதிவில் வந்த கும்க்கி பின்னூட்டம் தான் சாட்சி.
//கும்க்கி said...
தலைவரே.,
கொஞ்சமாச்சும் மனசாட்சியோட விமர்சனம் போடனும்..
பைத்தியக்காரப்பயலுவ....
மூன்று ஆண்டுகள் மயிரை பிடுங்கியது இதற்காகத்தானா...?
நல்லபடி வளர்ந்திருக்கவேண்டிய கார்த்தி என்கிற நடிகனின் கேரியரை நாசம் பன்னியது எதற்காக..?
சரித்திரத்தின் உண்மைகள் எங்கே..?
இவர்கள் பூ சுற்றுவது எங்கே...?
எந்தக்காலத்தில் சோழ மன்னர்கள் வியட்நாமுக்கு போனார்கள்..?
கிடக்கட்டும்.....
எங்கேயாவது ஒரு மயிரளவிற்காவது லாஜிக் உண்டா...?
செல்வராகவன் உடனடியாக ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்க்க வேண்டியது இந்த நாட்டிற்க்கு நல்லது....
அது போலவே கண்மூடித்தனமாக விமர்சனம் எழுதும் ப்ளாகர் புன்னியவான்களும்....
இதை விட வன்முறையாக நிச்சயம் யாராலும் படம் எடுத்து கிழிக்க முடியாது என்பது மட்டுமே அந்த பைத்தியத்தின் சாதனை....
கொடுமை....
ரீமாசென்னின் உடல் மொழி மட்டுமே படத்தை தூக்கி நிறுத்திவிடாது என்பது எல்லோருக்குமே தெரியும் படம் பார்த்த பின்பு...
சென்சார் பொர்டுனுடைய சாவை பாராட்டியே ஆக வேண்டும்....
கடுமையான பின்னூட்டத்திற்க்கு மன்னிக்க....
எவ்வளவு முட்டாள்கள் மீதான நம்பிக்கையில் இவன் 7ழிலிருந்து35கோ வரை மூட்டை ஏற்றியிருப்பான் என நினைக்கையில்.....
மைனர் குஞ்சைசுட்டிருக்க வேண்டும்.//
இப்படி இருந்திருக்கும்.நன்றி கும்க்கி அண்ணா என் மனதின் ஓட்டம் மாதிரி இருந்த பின்னூட்டத்திற்கு.
Saturday, January 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
ஒரு பாலோயரை காணவில்லை.ரீமா,ஆண்ட்ரியா சீக்கிரம் வாங்கள்.கண்டுப் பிடிக்க வேண்டும்.பஸ் சார்ஜ் ஆறு ரூபாய் தர முடியும்.
பின்னூட்டத்தின் தொடர்ச்சி - 32 ரூபாய் எல்லாம் எனக்கு கட்டுப்படியாகாது.
என்ன வெயில் படம் காப்பி அடிக்கபட்டதா?? எந்த படம்யா அது ?
hello allaluku pariya parupu mathiri pasa kudathu 5 pattu, 3 fightu oru centementu, oru love scenenu pora cinemavula oru puthu muyarchi itha poi thapa solathingapa
/என்ன வெயில் படம் காப்பி அடிக்கபட்டதா?? எந்த படம்யா அது ?
//
பாதி படம் சிறுவனாய் தியேட்டரில் வேலைக்க்கு சேர்ந்து அந்த தியேட்டரிலேயே வளர்ந்து காதல், பின்பு தியேட்டர் இடிக்கப்படுவது எல்லாமே உலக புகழ் சினிமா பாரடைஸோ..
கேபிள் சங்கர்
dont mistake me i have read somewhere as a good reviewer always tries to find mistakes
என் பார்வையும் இதே போன்றதுதான் சகா.
நல்ல படம் எடுப்பவர்கள் முழு ஸ்கிர்ப்பட்டையும் தயார் செய்த பின்னே படமெடுக்க செல்வார்கள். அந்த பால பாடம் கூட தெரியாமல் அடுத்தவன் காசில் தன் அரிப்பை தீர்த்துக் கொள்ளும் செல்வாக்களால் தமிழ்சினிமா நிச்சயம் உயராது. இதில் கொடுமை என்னவென்றால் செல்வா போன்றோர் எடுத்தால் அது ஒலகப்படமென்று நம்பும் இ.வாக்களின் சப்பைக்கட்டு. என்ன சொல்வது? 19930 அவதார் ஸ்க்ரிப்ட் தயார் செய்துவிட்டு 17 வருடங்கள் காத்திருந்தார் கேமரூன். இந்த அறிவுஜீவிகளுக்கு அது நன்றாக தெரியுமே?
மொக்கை ஸ்க்ரிப்ட்டால் கார்த்தின் வாழ்க்கை, ஆயிரமாயிரம் தொழிலாளர்களின் உழைப்பு, தயாரிப்பாளரின் கோடிக்கணக்கான படம்.. செல்வா போதுமா?
அன்றும் இன்றும் என் ஆதரவு உங்களுக்குத்தான்.. நீங்க தொடருங்க.. கும்க்கி சூப்பர்..
தற்போது இந்த படத்தை சப்போர்ட் செய்பவர்களில் பலர் இந்த படம் பார்க்கலை. பார்க்கா விட்டாலும் பரவாயில்லை தியேட்டர் வாசலில் நின்று பார்த்து விட்டு வருபவர்கள் படத்தை திட்டுவதையாவது கேட்கட்டும். அவர்களிடம் போய் சப்போர்ட் செய்யட்டும். படம் பார்த்த effect-ல் அவர்கள் இவர்களை என்ன செய்வார்களோ தெரியாது.
படம் இலங்கை தமிழர்கள் இன்னலை காட்டுவதாக சொல்வதெல்லாம் நமது கற்பனையே. அவர்கள் வலியை சொல்ல அதனை நேரடியே எடுக்க வேண்டும். இப்படி அல்ல.
இன்னும் இது போல நிறைய விமர்சனங்கள் அவசியம் தேவை.. நீங்கள் உலகத்திரைப்படங்களின் திரைக்கதைப் பற்றி சொல்வதெல்லாம் மிக மிக உண்மை. உலகப்படங்களின் DVD-களில் உள்ள “Director's comment” - உடன் படங்களைப் பார்த்தால் அவர்கள் ஒவ்வொரு frame-யும் எவ்வளவு கவனத்துடன் எடுக்கிறார்கள் என்பது புரியும். சில நேரங்களில் மிக அருமையான காட்சிகளைக் கூட திரைக்கதை ஓட்டத்திற்கு ஒத்துவராது என்று வெட்டிப்போட்டதைப் பார்த்தால் அவர்களுடைய seriousness புரியும். ஒரு காட்சிகூட அவ்வளவு ஏன் ஒரு frame - கூட தேவையில்லாமல் வைக்க மாட்டார்கள்.
நம்ம இயக்குனர்களை ஒவ்வொரு காட்சியாக விளக்கம் சொல்லச் சொன்னால்தான் குட்டு வெளிவரும்..
உலகத்திரைப்படம் என்றால் பெரும்பாலான நம்மாட்கள் Mummy, 100 million years, Jurassic Park, king kong என்ற Graphics கன்றாவிகளை மட்டுமே என்று எண்ணுகிறார்கள்.. ஆனால் மிகக் குறைந்த செலவில் வெறும் 3,4 முக்கிய கதாப்பாத்திரங்களை வைத்துப் பல படங்கள் வந்திருக்கிறது..
டிஸ்கி: நான் இன்னும் படம் பார்க்கவில்லை.. இருந்தாலும் நீங்கள் என்ன சொல்றிங்க.. உங்கள் ஆதங்கம் என்னவென்று நன்றாகப் புரிகிறது..
வலைப்பூ என்பது ஒரு தனி மனிதனுடைய மன எண்ணங்களைச் சொல்வதற்கு வசதியாக உள்ள நவீன யுக்தி என்றே நான் கருதுகிறேன். இங்கே அரவிந்த் தன் மனத்தில் பட்டதை எழுதுகிறார். இதை ரசிக்க முடிந்தவர்கள் ரசிக்கலாம். உங்களுக்கு ஏதேனும் எதிர்மறை எண்ணங்கள் இருந்தால், அதையும் எழுதலாம். அதற்காக, தரக்குறைவாக பின்னூட்டங்கள் போடுபவர்கள் தயவு செய்து தங்கள் வலைப்பூக்களிலேயே அப்படி விமரிசனங்களை எழுதலாம். அரவிந்த், தயவு செய்து தரக்குறைவான பின்னூட்டங்களை மட்டறுத்து ரிஜெக்ட் செய்து விடுங்கள்.
பி.கு.: நான் இன்னமும் படம் பார்க்கவில்லை எனவே, விமரிசனம் பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை.
// காப்பி அடியுங்கள்.தப்பில்லை ஆனால் சரியாக செய்யாமல் இருந்து மூலப் படத்தை சிதைத்தால் அது மன்னிக்க முடியாத குற்றம்.ஏன் வெயில்,ஈரம் படங்கள் கூட வெளி நாட்டு படங்களில் இருந்து எடுத்தார்கள்.நான் ஏதாவது
சொன்னேனா. .... //
இந்த படத்தில் அப்படி எதை காபி அடித்திருக்கிறார்கள்? எதை சிதைத்து விட்டார்கள்?
// என்னால் செய்ய முடியவில்லை பின் நவீனத்துவையும்,முன் நவீனத்துவையும் காட்டாமல் மறைத்து வைப்பேன்.ஈழத்தின் வலியை இந்த காட்டுமா - வாட் எ ஜோக்.ஈழம் பற்றி மகேந்திரனின் மகன் ஜான் எடுத்த ஆணிவேர் பெட்டியில் தூங்குகிறது.அது வரட்டும் அது சொல்லும்.இப்படி கேவலமாக படம் எடுத்து சொன்னால் நான் ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை.என்னுடன் நடித்த இலங்கைத் தமிழர்கள் இன்று உயிரோடு இருப்பார்களா என்று கண் கலங்கிய நந்தாவுக்கு தான் பெயர்,புகழ் எல்லாம் கிடைக்க வேண்டும்.ஆடை அவிழ்ப்பு இயக்குனருக்கு அல்ல. ....//
எத்தனை சினிமா ரசிகர்கள் புத்தகம் வாசிக்கிறார்கள்? எல்லோரும் ஆணிவேர் படிக்க முடியுமா? ஈழத்தின் வலியை இந்த படம் காடும் என்று சொன்னால் இப்படிதான் கொடுமைகள் நடந்திருக்கும் எம்று எல்லோரையும் ஒரு நிமிடம் கண்டிப்பாக யோசிக்க வைக்கும்..... அதற்கு பல வலைப்பதிவுகளே சாட்சி...... மேலும் படம் பார்த்த பலருக்கு இது ஏற்பட்டுள்ளது...... செல்வாவை ஆடை அவிழ்ப்பு இயக்குனர் என்று சொல்லி கொச்சை படுத்தாதீர்கள்....... கவர்ச்சி வேறு... உணர்ச்சி வேறு..... எனக்கு தெரிந்த வரை செல்வ்வவின் படங்களில் காட்டப்படுவது எல்லாமே உணர்ச்சிகள்தான்....... காதலை வசனத்த மாளிகை மாதிரி சொன்னால் அது காவியம்...... அதையே காதல் கொண்டேன், ரெயின்போ காலனி போல சொன்னால் அது ஆடை அவிழ்ப்பு என்றால் நீங்கள் பல்வேறு விதமான காதலை பற்றி அறிந்திருக்கவில்லை என்றுதான் அர்த்தம்......
// ஹாலிவுட்டில் ஒருமுறை பட்ஜெட் போட்டால் அப்படியே தான் இருக்கும்.வேண்டும் என்றால் அதுவும் தவிர்க்க முடியாத காரணத்தால் சிறிது ஏறும்.இப்படி ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஆறு கோடியில் இருந்து ஆறு மடங்கு உயர்ந்து 32-36 கோடியில் நிற்காது. ....//
மீண்டும் ஹாலிவுட் ஆட்களை தூக்கி வைத்தே பேசாதீர்கள்...... அவதார் படம் என் தாமதமானது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறன்? வாட்டர் வேர்ல்ட் என்ற ஆங்கிலப்படம் பட்கேட்டை விட அதிகம் செலவானது என்று எனக்கு தெரியும்........... இதற்கெல்லாம் மேல் படத்தின் தரம் வேண்டுமானால் இதை விட அதிகம் செல்வா செய்யத்தான் வேண்டும்..... இதற்கு முன் யாரும் இதை போன்ற படம் தமிழில் பண்ணியதில்லை என்பதே இந்த பட்ஜெட் குழப்பத்திற்கு காரணம்....... எந்திரன் என்ற தரமான படம் 160 கோடிகளில் தயாராகிறது....... அதை பார்த்து விட்டு ரஜினிகாந்த் சிறந்த பொழுது போக்கு நடிகர் என எல்லோரும் பாராட்டுங்கள்! தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் செல்லும்......
//பார்த்திபனின் நடிப்பு அப்படி தான் இருந்தது.அதுவும் சில காட்சிகள் என்று தான் சொல்லி இருக்கிறேன்.அதில் ஒன்று ராணுவம் சூழ்ந்த உடன் தற்கொலை செய்ய நினைக்கும் பார்த்திபன் மக்களை விட்டு விட்டு.போர்க்களத்தில் தனியாக நிற்கும் போது சிரிக்கிறார்...... //
இங்குதான் உங்களுக்கு பிரச்சினை..... நீங்கள் நினைப்பதை போலதான் பார்த்திபனின் செயல்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு...... ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களும் செயல்களும் வெவ்வேறு விதமாக இருக்கும்...... அதை நம்மால் கணிக்க இயலாது. யார் எப்போது எந்த முடிவை என் எடுப்பார்கள் என்பதேர்க்கெல்லாம் இங்கு விளக்கம் கிடையாது...... பல தஹ்ர்கொலைகள் மிகவும் கேவலமான எளிதில் தீர்க்க கூடிய பிரச்சினைகளுக்க்காகதான் நிகழ்ந்திருக்கும்..... அனால் அந்த நொடி அது எளிது என்பது தெரியாது.........
//நான் கோபத்தில் எழுதி இருந்தால் எப்படி எழுதி இருப்பேன் என்பதற்கு தண்டோரா அண்ணன் பதிவில் வந்த கும்க்கி பின்னூட்டம் தான் சாட்சி........ //
மன்னிக்கவும்!!!!!!! கோபம் என்பது பொதுவுடைமை என்பதை நான் நம்புகிறேன்....... ஆனால் என்னுடைய கோபத்திற்கும் சில பின்னூட்டங்களை உதாரணமாக சொல்ல விரும்பவில்லை...... தங்கள் கருத்துகளை நான் மறுப்பது பிடிக்கவில்லை என்று கண்ணாடி இதயம் சொன்னால் நான் நிறுத்தி விடுகிறேன்!
தமிழ் வேந்தன்
இந்த ஊருக்கு பழி சொல்ல தெரியும் வழி சொல்ல தெரியாது இப்படி ஒரு படம் எடுப்பது தம்ழ் சிணிமாவில் சாத்தியம் எனறு யாரும் இது வரை எடுதது காட்டியது இல்லை, வாழ்க செல்வா, முகததில் சாயம் பூசிகொள்வது, பாலததிற்கு சாயம் பூசுவதுதான பிரமாண்டம் எண்பவர் மத்தீயில் உண்மையிலேயே பிரமாண்டம் எனறால் என்னவெண்று காட்டிவிட்டீர்கள். வாழ்க செல்வா,வலார்க் உம் பணி...
தமிழ் வேந்தன்
இந்த ஊருக்கு பழி சொல்ல தெரியும் வழி சொல்ல தெரியாது இப்படி ஒரு படம் எடுப்பது தம்ழ் சிணிமாவில் சாத்தியம் எனறு யாரும் இது வரை எடுதது காட்டியது இல்லை, வாழ்க செல்வா, முகததில் சாயம் பூசிகொள்வது, பாலததிற்கு சாயம் பூசுவதுதான பிரமாண்டம் எண்பவர் மத்தீயில் உண்மையிலேயே பிரமாண்டம் எனறால் என்னவெண்று காட்டிவிட்டீர்கள். வாழ்க செல்வா,வலார்க் உம் பணி...
This is a very good movie dont criticise this movie. It really set a path for a tamil cinema
Post a Comment