வழக்கமான தமிழ் படத்தின் ஃபார்மூலா தான்.ஒரு அறிமுகத்துதி பாடல்,இரண்டு டூயட்,ஒரு குத்துப் பாட்டு,ஒரு எழுச்சிப் பாடல் அங்கங்கே சண்டை காட்சிகள்,தமிழ் தெரியாத பேக்கு நாயகி,வயதான நண்பர்கள்,நாயகியின் லூசு அப்பன்.எல்லாம் கலந்து கட்டி வடித்து எடுத்தால் வீ வில்(வில்லு இல்ல) கெட் ஃபெர்பெக்ட் எண்டர்டெயினர்.
அப்படி ஒரு டெரர் படம் தான் இது.நாயகனுக்கே காமடி நன்றாக வரும் அல்லது வர வேண்டும் என்பது தான் தற்போதைய டிரெண்ட்.கதை ரொம்ப சிம்பிள் அல்லது சிம்பல்.நாயகனுக்கு ஒரு தம்பி,ரெண்டு தங்கச்சி,அம்மா உண்டு.அப்பா இல்லை.
அவர் ஒரு படிக்காதவர் ஆனால் நல்லவனுக்கு நல்லவன்.ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி தம்பி,தங்கைகளை நன்றாக படிக்க வைக்கிறார். தம்பி போலீஸ்,தங்கை - டாக்டர்,இன்னொரு தங்கை - குடும்ப இஸ்திரி அந்த வார்த்தை சரியாக தெரியவில்லை.நல்ல பையனுக்கு கட்டி குடுக்க வேண்டும்.
நடுவே நம்ம நாயகனின் அ(ட)ப்பாவித்தனததைப் பார்த்து காதலிக்கும் வில்லனனில் மகள்.குறுக்கே வரும் மார்க்கெட் ரவுடி.முதலில் அடி வாங்கினாலும் பிறகு அதே கம்பத்தில் கட்டி வைத்து உரிக்கிறார்.சாகும் நிலையில் வில்லன்.நாயகனின் உண்மையை சொல்லும் நிஜ முகம் தெரிகிறது.
ப்ளாஷ்பேக் தற்போது நான் இருக்கும் இடத்திற்கு நகர்கிறது.சாதாரணமாக ஊர்சுற்றிக் கொண்டு திரியும் நண்பர்கள்.இடப் பிரச்சனையில் பெரிய வில்லன் குறுக்கே வர இருவரும் எதிர்க்க அவர்கள் நண்பனை கொல்ல இவர் பதிலுக்கு விரட்டி விரட்டி கொல்ல மக்கள் நாயகனாக உயர்கிறார். தானாக கூட்டம் சேர்கிறது.
பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு டானை காலை உடைத்து டன்னாக்கி டின் கட்டி சிறையில் அடைக்கிறார்.அப்பா அந்த போராட்டத்தில் இறக்க வருடத்திற்கு நான் முப்பது நாள் வந்து போகும் நகரில் வந்து ஆட்டோ ஓட்டுகிறார்.
நடுவில் நேரம் கிடைத்தால் காதல்.சிறையில் இருந்து டான் வர,இரண்டு நண்பர்களை இழந்து அடித்து நொறுக்கி குடும்பத்தை மீட்டு பிண்ணனியில் தீ எரிய நடந்து போகிறார்.பின்னால் இருந்து கொல்லப் பார்க்கும் வில்லனை தம்பி சுட்டுக் கொல்கிறார்.
இதுவும் தமிழ்படத்தின் விமர்சனம் தான் என்ன படம் என்று பின்னூட்டத்தில் சொல்லவும்.
அனானி கமெண்ட்,இரண்டு எதிர்பதிவு,மைனஸ் ஓட்டு என்று என்னை வளர்த்து நண்பர்களுக்கு இந்த பதிவில் கிடைக்கும் திட்டு எல்லாம் சமர்ப்பணம்.
அடுத்த பதிவுக்கான டிரெயிலர் - நிர்வாண முகம் - இந்த கதையை நான் பொறாமை கொள்ளும் கென் மற்றும் அண்ணன் ஜெகாவிற்கு சமர்ப்பணம் செய்கிறேன்.ஏற்கனவே அறிவித்த அக்கப்போர் தொடங்கி விட்டது.
Friday, January 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இதுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனைன்னு கேட்டு தெரிஞ்சுக்குங்க... ஆசையா வந்தேன். இப்படி ஏமாத்திட்டீங்களே.
நிஜ தமிழ்படம் விமர்சனம்னு நினைச்சு ஆர்வத்தோட படிச்சா! உம்மை கம்பத்தில் கட்டி வச்சு உதைக்கணும்.
ஆட்டோ வர்றது கேரண்டி!!
மும்பைக்கு ஆட்டோ அனுப்புவாங்களாங்கிறது சந்தேகம்தான். எதுக்கும் வீட்டு அட்ரஸை எழுதி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நடமாட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இங்ஙனம்,
இரும்புத்திரை கொலவெறி ரசிகர்கள்,
பெங்களூரு பிராஞ்சி
(எங்களுக்கு வேறு எங்கும் வைத்தியமே கிடையாதுங் சாமீ)
எதிர்பார்த்து ஏமாந்துட்டேன் :(((
படிச்சுப் பாத்துட்டு ஷாக் ஆகிட்டேன்
ஆமா உம்மை என்ன செய்வது ?....
ok இருக்கட்டும் ஒரு 200 ஆட்டோ ரெடி பண்ணுங்க bombayக்கு அனுப்பனும்
நண்பா நீ தமிழ் படம் பார்த்துட்டு விமர்சனம் போடறனு பார்த்த .....................இது பாட்ஷா தானே
தமிழில் முதல் முறையாக முழு நீழ spoof ஜான்ர் படம் என்றார்கள்.
ஆங்காங்கே, சில படங்களில் பல படங்களை கிண்டல் செய்வது நடக்கும். முழு நீழ படமுமே இப்படி கிண்டல் அடித்து எடுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.
கதை இந்தப்படத்துக்கு தேவையே இல்லை. ஒவ்வொறு காட்சியும் ரசிக்கும் படியாக நகைச்சுவையாக அமைத்திருக்கிறார்களா எனப்தே முக்கியம்.
ஆங்கிலத்தில் scary movie போன்றது...! படத்தில் கதை என்று ஒன்றும் சொல்லும் படி இருக்காது. ஆனால் திகில் படங்கள் அனைத்தையும் போட்டு சரமாரியாக கிண்டல் அடித்திருப்பார்கள்.
வஜ்ராவுக்கு...
படத்தைக் கிண்டல் செய்து படம் பண்ணுவது தமிழுக்குப் புதிதல்ல.
Scary Movie (spoof for I know what u did in last summer) வருவதற்கு முன்பே தமிழில்.. ஆமாங்க தமிழில்தான்.. spoof படம் வந்திருக்கிறது. பாலு மகேந்திராவின் 'நீங்கள் கேட்டவை' தான் அது. இப்படத்தின் தலைப்பிலிருந்தே தொடங்குகிறது நையாண்டி.
ஷாஜி (சொல்லில் அடங்காத இசை - உயிர்மை பதிப்பகம் - நூலாசிரியர், இசை விமர்சகர்) தன் பிளாக்கில் சமீபத்தில் இளையராஜாவை விமர்சித்து எழுதிய
பதிவில்,
.... இளையராஜா இசையமைத்த 4500க்கும் மேற்பட்ட பாடல்கள் யாவுமே தனித்துவமானவையா? அவரது அனைத்துப் பாடல்களுமே முழுமையாகவே அசலானதா? எனில், உப்கார் (Upkaar) எனும் இந்திப் படத்தில் வந்த கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்த 'கஸ்மே வாதே பியார் வஃபா' எனும் பாடலின் நேரடியான நகலாக 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' (நீங்கள் கேட்டவை) என்ற பாடல் வந்தது எப்படி? ....
என்றிருக்கிறது.
நான் நினைப்பது 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' பாடலே ஒரு spoof ('கஸ்மே வாதே..' பாடலுக்கு)தான்.
இளையராஜா காப்பி அடிச்சிருக்க மாட்டாருங்க ,அந்த பாட்டுல இருந்து just reference எடுத்திருப்பாரு அவ்வளவுதான் ,கண்டிப்பா அது பாடல் வரி ஹிந்தி இது தமிழுன்கிரத தவிர்த்து ரெண்டு பாட்டுக்கு நடுவிலயும் வேற ஏதாது ஒரு வித்தியாசம் இருக்கும்...
Post a Comment