இதில் வருவது அனைத்தும் என் கற்பனையே.யாரும் என்னை திட்ட வேண்டாம்.நானும் போட்டு விட்டேன்.
அக்கீலிஸ் - சின்ன வயதில் இந்த கதையை படிக்கும் போதும் என்னை அறியாமல் நான் இந்த கதாபாத்திரத்தை நேசிக்க ஆரம்பித்தேன்.கிருஷ்ணரை சாயலில் உள்ளவன்.தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்று அவன் தலைவனால் ஒதுக்கி வைக்கப் படுபவன்.கிருஷ்ணரை அப்படி சொல்லும் சிசுபாலன் வதம் செய்யப்படுவான்.இருவருக்கும் நிறைய பெண்களின் சகவாசம் உண்டு.விஸ்வாமித்திரை பாயாசத்தில் அபிஷேகம் செய்யும் போது உள்ளங்காலை மட்டும் விட்டு விட,அதில் அடித்தால் மட்டும் இறக்க நேரிடும்.அக்கீலிஸ் பிறந்தவுடன் அவன் காலை பிடித்துக் கொண்டு தலைகீழாக ஆற்றில் மூக்க உள்ளங்கால் மட்டும் நனையாது.இறுதியில் ட்ராய் இளவரசன் பாரீஸால் கொல்லப்படுவான் - உள்ளங்கால் அம்பு மூலமாக.இருவரும் நயவஞ்சகமாக எதிரிகளை கொல்வார்கள்.கொல்லப்படுவார்கள்.
ட்ராய் நகரத்தின் உண்மையான கதை - இளவரசன் ஹெக்டர் இருக்கும் வரை ட்ராய் நகரத்தை ஒன்றுமே செய்ய முடியாது என்று தெரிந்தவுடன் குதிரை பயிற்சி எடுக்கும் ஹெக்டரை மறைந்து இருந்து கொல்லும் அக்கீலிஸ் மீது தீராத வன்மம் கொண்டார்கள் ட்ராய் மன்னனின் பிற வாரிசுகள். மகளில் ஒருவளே அக்கீலிஸ் மீது காதல் கொள்வதாக நடித்து கோவிலுக்கு வெறுங்காலுடன் வர செய்து பாரீஸால் கொலை செய்யப்படுவான்.ட்ராய் நகரத்தை வென்றப் பிறகு அந்த பெண்ணை அதே இடத்தில் வைத்து அக்கீலிஸின் மகன் கையால் பலியிட்டார்களாம்.
சுவராஸ்யமான தகவல் - ட்ராய் போருக்கு போனால் மகன் திரும்ப மாட்டான் என்று தெரிந்து அக்கிலீஸ் தாய் அந்தபுரத்தில் பெண் வேடத்தில் ஒளித்து வைத்தார்களாம்.அங்கு வந்தி ஒடிஸி அவனை கண்டுப்பிடிக்க அந்தபுரம் சென்று வாள்,வில் அம்பு,ஈட்டி எல்லாம் வைத்து ஒவ்வொரு பெண்ணாக அழைத்து உனக்கு பிடித்ததை எடுத்துக் கொள் என்று சொல்ல ஒரு பெண் மட்டும் எல்லா அயுதங்களையும் எடுத்தாளாம்.அது யார்.
இது எதுவுமே படத்தில் இல்லை.ஹெக்டர் அக்கீலிஸின் தம்பியை கொன்றப் பின் துவந்த யுத்தம் செய்ய அழைத்து அவனை கொல்வது,ட்ராய் நகருக்குள் குதிரையில் செல்வது எல்லாமே பொய் - குதிரை யோசனை ஒடிஸியுடையது.அந்த சமயத்தில் அக்கீலிஸ் கொல்லப்பட்டிருந்தான்.படம் பார்க்கும் போது தம்பியிடம் லேசாக முணுமுணுத்தேன் எல்லாமே மாற்றி இருக்கிறார்கள் என்று.கதையை தான் மாற்றினார்களே தவிர லாஜிக் எங்கும் மீறப்படவில்லை.
இன்னொரு காரணம் நடிப்பு - பிராட் பிட்(அக்கீலிஸ்) போருக்கு செல்லாமல் இருப்பார்.தம்பி போருக்கு போய் இறந்த செய்தி கேட்டு அழுவார். கண்ணீர் ததும்பும் லேசாக இமைகளை நனைக்கும்.இதுவே தமிழ் சினிவாக இருந்தால் "ஏய்..உய்..ஆய்..அவனை போடணும்" என்று சத்தம் கிளம்பி இருக்கும்.கேட்டா நாங்க எல்லாம் இப்படித்தான் அழுவோம் என்று சொல்வீங்க பரவாயில்லை.தப்பில்லை.
ஹெக்டர் உடம்பை வாங்க வரும் அரசனிடம் பிராட் பிட் சொல்வார் - "நாளையில் இருந்து நீங்கள் எனக்கு எதிரி..இன்று மட்டும் தான் நண்பர்..".அதற்கு அந்த கிழட்டு அரசரின் பதில் - "இப்பவும் நீ என் எதிரி தான்..".எதிரியிடம் பேசும் போது அமைதியாக ஆர்பாட்டமே இல்லாமல் பேசுவது போல் நான் பார்த்தப் படம் - பொல்லாதவன்.இது கூட காப்பி ஸாரி இன்ஸ்பிரேஷன்.
லாஜிக்கைப் பார்ப்போம் - ட்ராய் மண்ணில் முதலில் கால் வைக்கும் எதிரி சாவான் என்று உடனே சொல்வார்கள்.முதலில் கால் வைப்பது அக்கீலிஸ் தான் ஆனால் சாக மாட்டான்.கேடயத்தைப் போட்டு அதில் குதிப்பார்.
இனி ஆயிரத்தில் ஒருவன் லாஜிக்கை பார்ப்போம் - பசி மயக்கத்தில் மயங்கி விழும் கார்த்தி அந்த பெண்களோடு சேர்ந்து கொண்டு பெரிய பாறைகளைத் தள்ளி விடுவாராம்.அதை பார்க்கும் மகாபலிபுரத்தில் தொடுக்கில் இருக்கும் பாறையை நண்பர்கள் ஐம்பது பேர் சேர்ந்து தள்ளப் முயற்சி செய்து முடியாமல் ஒரு புகைப்படம் எடுத்து விட்டு திரும்பினோம்.இதற்கும் அன் லிமிட்டட் மீல்ஸ் கட்டியிருந்தோம்.
தெலுங்கில் பாடும் ரீமாசென் - பாண்டியர்கள் யாருக்கும் தெலுங்கு தெரியாது.தெலுங்கு பேசுபவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டை கைப்பற்றிய களப்பிறையர்கள்.அவர்களுக்கு தான் தெலுங்கு தாய் மொழி.உடனே கார்டு போட்டார்களே என்று சொல்ல வேண்டாம்.சரித்திரம் என்றால் சரியாக சொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் இரண்டு குறு நில மன்னர்கள் என்று சொல்லலாமே.அதுவாவது பரவாயில்லை உடம்பை காட்டி மயக்க பாண்டியப் பெண் அனிதாவிற்கு அம்மா சொல்லிக் கொடுத்தார்களாம்.எவ்வளவு கேவலமான வசனம்.
விஜய்,செல்வராகவன் இருவரும் ஒன்று இல்லை.விஜய் அடுத்தப் படமும் இப்படித்தான் செய்வேன் என்று சொல்லி விட்டார்.செல்வராகவன் இது ஹாலிவுட் என்பது சும்மா என்று பேசுகிறார்.அவதாரில் இல்லாத குறையா என்று கேட்கிறார்.அவதார் நடக்கும் காலகட்டம் என்ன.அது ப்ண்டோரா என்ற புனைவு கிரகம்.மற்றும் அந்த கதை யாருடைய கதையை சார்ந்து இருந்தது எங்கிருந்து நாட் உருவினேன் என்று வெளிப்படையாக ஜேம்ஸ் கேமரூன் சொல்கிறார்.செல்வராகவன் என்ன சொல்கிறார் 30 கோடியில் இதை ஹாலிவுட்டில் எடுக்க முடியுமா என்று காமெடி செய்கிறார்.ஹாலிவுட் படத்திற்கும் நமக்கும் சுமார் முப்பது வருட இடைவெளி இருக்கிறது.இது வித்தியாசமான முயற்சி என்று சொன்னால் அந்த இடைவெளி பெருகுமே தவிர குறையாது.ட்ராய் படத்தில் பிராட் பிட் சண்டையிடும் போது தலைக்கு மேல் ஒரு விமானம் பறக்கும்.பூதக்கண்ணாடி போட்டு பார்த்து அதை கேலி செய்தார்கள். ஆயிரத்தில் ஒருவனில் சாதாரண கண்ணாடியில் பார்த்தாலும் ஆயிரம் தவறு தெரிகிறது.
இது ஈழப் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்.படம் 2009 ஏப்ரலில் வெளியாகி இருந்தால் ஒத்துக் கொள்ளலாம்.ஏன் நீங்கள் தான் அதற்கு முன்னரே படத்தை எடுத்து முடித்து விட்டீர்களே.22 வருடங்களுக்கு முன் நடந்த கொடுமை போய் இருந்தது.அதற்கு முன்னரே இது போல செல்வராகவன் யோசித்து விட்டார் போலும்.ஏன் சோழ அரசியைத் தவிர எல்லோரும் நிறம் கம்மியாக இருக்கிறார்கள் என்று யோசித்தால் அப்போகல்பிட்டா படத்தில் தலைவர் குடும்பத்து பெண்ணைத் தவிர எல்லோரும் நிறம் குறைவாக இருப்பார்கள்.கற்பழிப்பு காட்சிகள் இருக்கும்.அதில் தூங்கும் போது பிடித்து விடுவார்கள்.இதில் மன்னன் தோற்றான் என்று தெரிந்தால் எல்லோரும் தற்கொலை தான் செய்வார்களே தவிர இப்படி சிக்க மாட்டார்கள்.அதுவும் மந்திர சக்திகளை வைத்து கொண்டு சிக்க மாட்டார்கள்.ஆனால் செல்வராகவனை பொறுத்த வரை யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்னால் தற்கொலை செய்ய முயற்சிப்பார்கள்.மெக்கானிக்கல் மாணவன் என்பதால் சரித்திரம் தெரியவில்லை போலும்.
நானே விசிடி கட்டர் உபயோகித்து ஆங்கில படத்தில் வந்த காட்சிகளை எல்லாம் சேர்த்து கொண்டு வந்தால் ஆயிரத்தில் ஒருவனில் பாதி தயாராகி விடும்.அமீர் கான் செய்கிறாரே அதுதான் முயற்சி - தாரே ஜமீன் பர்,3 இடியட்ஸ்.அமீர் கான் சொன்னது மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும் " அமெரிக்கன் எடுத்த படத்தையே மீண்டும் எடுத்து அவனிடம் காட்டினால் ஆஸ்கர் விருது எப்படி கிடைக்கும்.."
இந்த படத்தை ஆதரித்து பின்னூட்டம் இடுபவர்களுக்கு குறிப்பாக கார்த்திகேயன் தமிழ்மணிக்கு - இது விவாதக்களம் தான்.விவாதிப்போம்.நாளையே வேறு விஷயத்தில் இருவரும் ஒரு புள்ளியில் இணையலாம்.யார் என்ன சொன்னாலும் நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் தான்.காரணம் நான் பிடிக்கும் போது மூணு கால் தான் இருந்தது.எனக்கு முன்னாடி ஒரு காலை உடைத்தது யார்.ஈரம்,பசங்க,அஞ்சாதே,சிந்தனை செய்(இதில் மூன்று படங்கள் காப்பி) இது எல்லாம் தான் முயற்சி.ஆயிரத்தில் ஒருவன் அயற்சி.
செல்வராகனுக்கு நன்றிகள் - 7/ஜி ரெயின்போ காலனி என்று படம் எடுத்து டிரெண்ட் செட்டர் ஆனதிற்கு.படுக்கை அறை காட்சிகள் நிறைய அதற்கு பிறகு தான் வந்தது.இதிலும் அவர் டிரெண்ட் செட்டர் ஆகியிருக்கிறார் சென்ஸார் போர்டைக் கொன்று.வாழ்த்துக்கள்.
Wednesday, January 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
ஒய்...ஒய்.. விசிலடிக்கிறேங்க
தல..., ட்ராய் வரலாற்று புனைவு அல்ல ..., வரலாற்று படம்..., ஆனால் அவர்கள் எவ்வளவு மற்ற முடியுமோ அவ்வளவு மாற்றி விட்டார்கள்..., அவர்கள் செய்தது மட்டும் சரியா???? அவர்கள் கார்டு கூட போட மாட்டங்களே ...,
\\மெக்கானிக்கல் மாணவன் என்பதால் சரித்திரம் தெரியவில்லை போலும்.\\
எட்றா அருவாளை, உங்களை நேர்ல பார்க்கும்போது வச்சுக்குறேன்.
அப்ப கட்றேன் ஒரு மெக்கானிக்கல் மாணவனை.
அபோகலிப்டோ படத்த 3 சீன 3 படத்துல காப்பி அடிச்சுட்டாங்க, மீதி உள்ள சீன யாரு எடுத்துக்க போராங்கனு தெரியல. .. எனக்கு தெரிஞ்சு 3 படம்
1.பொல்லாதவன்
2.ஆயிரத்தில் ஒருவன்
3.போர்க்களம்
Enna padradhunne theriyala.... Padam nalla irukkudhaa illayaa ?
Eththana blog thaan padikkiradhu ?
பாண்டியன், சோழன் என்று வைக்காமல் கற்பனையாய் எதாவது பெயர் வைத்து இருக்கலாம்.10 ஆங்கில படங்களின் சீன்கள், 10 அம்புலிமாமா கதை இவைகளுடன் ரீமாசென் கவர்ச்சி தேய்த்து கொடுத்த ஒரு மசாலா இந்த படம். எப்பவும் A படம் எடுக்கும் இந்த டைரடக்டருக்கு இந்த கதை ரீமாவை நன்கு காண்பிக்க ஒரு சான்ஸ் அவ்வள்வுதான்...எந்த சீனை பார்த்தாலும் எதாவது ஆங்கில பட காட்சிதான் நினைவிற்கு வருகிறது. (காப்பி அடிக்க மூன்று வருடமா). பாவம் கார்த்தி..
//பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டை கைப்பற்றிய களப்பிறையர்கள்.//
களப்பிரர்கள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். அவர்களை வென்றவர்கள் தொடங்கிய ஆட்சி பல்லவ ஆட்சி!
ஒரு வேளை நீங்களும் மெக்கானிக்கல் ஸ்டூடண்ட்டோ? :)
இது சும்மா விமர்சனத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை
நன்றி கார்க்கி
நன்றி பேநா மூடி
நன்றி ராஜூ
நன்றி ராஷா
நன்றி தினேஷ்
நன்றி அமுதா கிருஷ்ணா
நன்றி நல்லதந்தி.நாயக்கர் என்று இருக்க வேண்டியது அவசரத்தில் களப்பிரர் என்று ஆகி விட்டது.சுட்டியதற்கு நன்றி.கணிப்பொறியியல் படிப்பு அந்த சமயத்தில் சரியாக வேலை செய்யவில்லை
ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் பிரமாதம்.
ஹெலிகாப்டர், விமானங்கள் எல்லாம் இருக்கும் போது ஏன் காடு மலை தாண்டி போக இவ்வளவு கஸ்டப்படவேண்டும் என புரியவில்லை. லாஜிக் ரொம்ப உதைக்கிறது.
அதை யார் பார்ப்பார்கள்
பல லாஜிக் ஓட்டைகள்.
1. வெற்றுடம்புடன் அறிமுகமாகும் கார்த்திதான் தூதன் என்று ரீமாவுக்குத் தெரியாதா? அந்த தூதன் அவளுடைய எதிரியல்லவா? அப்போதே ஏன் ஒன்றும் செய்யவில்லை?
2. அவ்வளவு அருமையாக சோழத்தமிழ் பேசும் ரீமாவுக்கு ஓலைச் சுவடியைப் படிக்கத் தெரியாதா?
3. ஓலைச் சுவடியை படித்தறியும் ஆன்ட்ரியா சோழ மன்னனுடன் ஏன் "ராஜா ப்ளீஸ்" என்று பேச வேண்டும்?
4. ஒரு துண்டு இறைச்சிக்காக அடித்துக் கொள்ளும் மனிதர்கள் சோழர்கள் என்பது நாம் படித்த வரலாற்றில் இல்லை.
5. என்னதான் டிஸ்க்ளைமர் போட்டாலும் சோழர் பாண்டியர் என்று படத்தில் உபயோகப் படுத்தியிருக்கக் கூடாது.
6. சோழர்கள் நம் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள் தானே. அவர்கள் ஏன் அவ்வளவு கறுப்பாக இருக்கிறார்கள்?
7. கடைசி சண்டை நடப்பது திறந்த வெளியில். பிறகு ஏன் ராணுவம் ஹெலிகாப்டரை உபயோகப் படுத்தவில்லை?
8. அவ்வளவு தெளிவாக தூதன் வருகையை வரைந்து வைத்ததை ஏன் சோழன் நம்பாமல் போனான்?
9. சுவர் ஓவியங்களில் சோழர்கள் கறுப்பாக இல்லையே?
10. ரீமாசென் (தூதர் அல்லது தூதி) ஒரு தூதுவர். தூதுவர் ஏன் மன்னுடன் உடலுறவு வைக்க முயற்சி செய்ய வேண்டும்?
11. ஆன்ட்ரியாவை அழைத்துச் செல்வது அவருடைய ஆர்கியாலஜி அறிவுக்காகவே. ஆனால் ஏன் அழகம் பெருமாள் அவரை கேவலமாக நடத்த வேண்டும்? அதுவும் ஒரு ரிடையர்ட் மிலிடரி ஆபிசர்.
இன்னும் நிறைய இருக்கிறது.
மொத்தத்தில் அரை குறையாக தயாரிப்பாளர் பணத்தை வீணடித்து பிள்ளையார் பிடிக்க முயன்றிருக்கிறார், ஆனால் எப்படி முடிந்திருக்கிறது என்று தெரியவில்லை.
//தெலுங்கில் பாடும் ரீமாசென் - பாண்டியர்கள் யாருக்கும் தெலுங்கு தெரியாது.தெலுங்கு பேசுபவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டை கைப்பற்றிய களப்பிறையர்கள்.அவர்களுக்கு தான் தெலுங்கு தாய் மொழி.//
இது தவறு, சரித்திரத்தை நீங்கள் சரியாக படிக்கவில்லை...
நடுவில் பார்த்திபனும் , ரீமாசென்னும் பாடுகிறார்கள் , அதில் ரீமா சென் தெலுங்கில் பாடுகிறார், சுத்தமான தமிழ் சரித்திர படத்தில் ஏன் தெலுங்கு பாட்டு? ஏனெனில் , பிற்கால சோழர்களில் பிற்பகுதியினர் (குலோத்துங்க சோழன் உட்பட) தெலுங்கு சோழர்கள், கீழை சாளுக்கியருடன் மிக பலமான திருமண உறவு வைத்து இருந்தனர், அதனால் அங்கே தெலுங்கு வரிகள் வருகிறது (சோழ இளவலான பார்த்திபன் நம்ப வேண்டுமென ரீமா சென் கதாபாத்திரத்தின் தந்திரம்)
மேலும் படிக்க ..
http://kulambiyagam.blogspot.com/2010/01/blog-post_19.html
மேலும் ஒரு விஷயம், இந்த படத்தின் ஆரம்பத்தில் வரும் பின்னணி குரல் சோளர்கள் சோளர்கள் என்றே சொல்கிறது, அது சோளர்கள் அல்ல சோழர்கள் என்று யாரும் சொல்லக்கூடாதா... வர வர ழ என்ற ஒரு வார்த்தையே தமிழர்கள் மறந்து விடுவார்கள் போல...
/*...
சரித்திரம் என்றால் சரியாக சொல்ல வேண்டும்
..*/
ஆமா தமிழ் நாட்டில புதுசா ஏதும் கல்வி சீர்த்திருத்தம் ஏதும் கொண்டு வந்திட்டாங்களா...? சரித்திரத்தை தமிழ் படங்கள் மூலமாக கற்போம்னு!! நாங்க எல்லாம் புக் மூலம் தான் இன்னும் படிக்கிறோம்...
படங்கள் பொழுதுபோக்கிற்காக சுவாரசித்துக்காக பார்க்கிறதுன்னுல நா இப்புட்டு நாளும் நினைச்சிருந்தேன்...
Troy திரைப்படத்துக்கும் ஹோமர் 'இலியட்'க்கும் அடிப்படையில் ரொம்ப வித்தியாசம் இருக்கு... ஒரு வேளை ஹோமர் பிழையா எழுதீட்டாரோ!!!
Post a Comment