ரஜினி படப்பெயர்களை எழுதி விளையாட
சேகரித்த சிகரெட் அட்டைகள்
நாடுகளின் எண்ணிக்கையைக் கூட்ட
நண்பனிடம் திருடிய தபால்தலைகள்
ஒளிந்து ஒளிந்து காதலித்த
மொட்டை மாடி பெண்களின் பெயர்கள்
வேலை தராத நிறுவனங்கள்
அம்மா,அப்பா,ஆட்டுக்குட்டி காட்டிய
கையாலாகாத தருணங்கள்
எதுவுமே நினைவிலும் இல்லை
நினைப்பதுமில்லை
யாராவது,ஏதாவது நினைவு படுத்தும் வரை
நினைவிருக்கும் வரை.
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//abels: அனுபவம், அரசியல், கவிதை, சினிமா, நையாண்டி//
எல்லாம் கலந்துதான் இருக்கிறது..,
அன்பின் இரும்புத்திரை
நினைவில் இருப்பது இல்லை - உண்மை - மறக்க வேண்டியவைகள் மறந்துதான் போகும் . நினைக்க் வேண்டும் என்பது நினைவில் இருக்கும்
நல்ல கவிதை
நல்வாழ்த்துகள்
ரொம்ப பிடிச்சிருக்கு.
நண்பரே மன்னிக்கவும்.இது இந்த ப்திவு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. என் பதிவில் நீங்கள் பின்னூட்டம் போட முடியவில்லை என்று சொன்னீர்கள்.இதேயே இன்னொரு பதிவரும் சொன்னார். ஆனால் நிறைய பேர் போடுகிறார்கள்.
இந்த பிரச்சனைக்கு நான் என்ன செய்ய வேண்டும்.தீர்வு என்ன? அல்லது பிரச்சனை உங்களிடமா?
யாரிடம் கேட்க வேண்டும்.
நன்றி.
நல்ல கவிதை.
இந்தாப்பா அர்விந்தூ... தெளிவா சொல்லிப்போடு நா இனிமே இந்தப் பக்கம் வரவா வோணாமா..??? சொம்மா கவித கிவிதன்னு கம்முகூட்டுக்குள்ள கம்பளிப்பூச்சி ஊற விடறே???
ம்ம்ம்.. நல்லாத்தான் இருக்கு!
என்சாய்!!!!!!!!
நன்றி சுரேஷ்
நன்றி சீனா சார்
நன்றி பா.ராஜாராம்.வசிஷ்டர் வாய் மொழி
நன்றி அக்பர்
நண்டை ஜெகநாதன்.அண்ணா இனி கொலைவெறி தாக்குதல் தொடரும்
ரவிசங்கர் தல.கமென்ட் செட்டிங்க்ஸ் போய் open in new window அப்படி ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதை தேர்வு செய்யுங்கள்.தற்போது உங்களுக்கு பின்னூட்டப் பெட்டி அதே விண்டோவில் இருக்கிறது
நன்றி அரவிந்த்.சே! இதனால் நான் 1,00,00,00,000 பின்னூட்டங்களை இழந்திருக்கிறேன். இப்ப ”பாப்-அப் விண்டோ பார் கமெண்ட்ஸ்” செட் செய்து விட்டேன்.
தயவு செய்து முயற்சித்துப் பார்க்கவும்.
காமெடி பீஸ்: யாரோ ஒருவர் “பாப்-அப்” விண்டோவில் கமெண்ட் போட முடியவில்லை என்றுதான் “embeded below" செய்தேன்.
நன்றி.
நல்லாத்தானிருக்கு அரவிந்த்... உரையாடல் போட்டிக்கு கவிதை அனுப்பி விட்டீர்களா?
இந்தக் கவிதை நன்றாக வந்துள்ளது. உங்கள் வலைத்தளம் இன்று தான் முதன் முதலாகப் பார்த்தேன்.நல்ல தனித்துவமான சிந்தனைகள் தங்களிடம் தெரிகிறது. தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்
இந்தக் கவிதை நன்றாக வந்துள்ளது. உங்கள் வலைத்தளம் இன்று தான் முதன் முதலாகப் பார்த்தேன்.நல்ல தனித்துவமான சிந்தனைகள் தங்களிடம் தெரிகிறது. தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்
Post a Comment