Sunday, January 31, 2010

அமீர் கான் - ஆச்சர்யப்பட்ட சில விஷயங்கள்

கமல் தமிழ்ப்படங்கள் மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று எப்போழுதும் விரும்புவார்.அப்படி கமல் போல மாற்றுப் பாதையை விரும்பி தனி பாணியில் செல்வது என்று பார்த்தால் அது அமீர் கான் தான்.பழைய இந்தியா டூடேவை புரட்ட நேர்ந்தப் பிறகு அவன் மீதான ஆச்சர்யங்கள் பெருகியிருந்தது.

ஆஸ்கர் - ஒரு அமெரிக்கன் விருது என்று எல்லோரும் சொல்லும் போது அவன் எடுத்த கதையையே நாம் எடுத்தால் நமக்கு எப்படி ஆஸ்கர் கிடைக்கும் என்று சொன்னவர்.

தேசிய விருது - அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.அதை நான் மதிப்பதும் இல்லை என்று வெளிப்படையாக சொன்ன விதம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும்.எனக்கு இந்த வார்த்தைகள் மிகவும் பிடித்தது.காரணம் இந்த ஆண்டு குடுத்த தேசிய விருது பெற்ற தமிழ் மொழியில் வந்த சிறந்த படம்.

ஷாரூக் - இனிய எதிரி.சக் தே இந்தியாவும்,தாரே ஜமீன் பர் படமும் தேசிய விருது பிரிவில் போட்டியிட்டப் போது வென்றது அமீர்.அவர் இயக்கிய முதல் படம்.நான் தான் பெரிய ஆல் என்று இருவரும் சீண்டிக் கொள்வார்கள்.நாய்க்கு ஷாரூக் என்று பெயர் வைத்து அழைத்தேன் என்று பிளாக்கில் எழுதி சொந்த ரசிகர்களிடமே திட்டு வாங்கியதும் உண்டு.

3 இடியட்ஸ் - இவ்வளவு புத்திசாலித்தனம் எல்லாம் வேண்டாம்.எதையும் விளையாட்டாக எடுத்து கொள்ளும் மாணவராக இருந்தால் போது திரைக்கதையில் மாற்றம் கொண்டு வந்தவர்.

படிப்பு - பள்ளியில் படிப்பு முடித்தவுடன் படிப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு உதவி இயக்குனராக நாலு வருடம் வேலை.நடித்த முதல் படம் பம்பர் ஹிட்.அடுத்த ஒன்பது மாதத்தில் பதினாறு படம் என்று அவசரப்பட்டு அவர் முன்னேற்றத்தை அவரே தடுத்துக் கொண்டதாக நினைக்கிறார்.காரணம் கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தாராம்.இயக்குனருக்கு கொடுக்கவில்லை.

ராசி - அவருடன் சேர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து விட்டு அடுத்தது பெரிய தோல்வியாக கொடுப்பார்கள்.உதாரணம் ரந்தே பசந்தி அடுத்தது டெல்லி 6 என்று பல்ப் வாங்கி கொண்ட ராகேஷ்,லகான் கொடுத்து விட்டு சுவதேஸ் பல்ப்.அடுத்தது மிச்சமிருப்பது முருகதாஸூம்,ராஜ் குமார் ஹிராணியும் தான்.பார்ப்போம்.

சாதனை - கொஞ்சமே படித்திருந்தாலும் அவர் கஜினி படத்திற்கு விளம்பரம் செய்த விதத்தை அகமதாபாத் ஐஐஎம்மில் பாடமாக வைக்கிறார்களாம்.தொடர்ந்து ஐந்து ஹிட்.தயாரித்த படம் தனி.500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்சன்.

அதிர்ச்சிகள் - புது இயக்குனர்,தோல்வி படம் குடுத்த இயக்குனர் என்று பார்ப்பது கிடையாது.அதனால் தான் வெற்றிகளை அறுவடை செய்கிறாரோ.

2000 ஆண்டு முதல் அவர் நடித்த எல்லா படங்களுமே வித்தியாசம் தான்.

2001 - லகான்,தில் சாத்தா ஹை.

அடுத்த நாலு வருடங்கள் படமே நடித்து குவிக்கவில்லை.ஒரே ஒரு படம் தான்.ஹேராம் கமல் மாதிரி நீள முடி வளர்த்து சரித்திரப் படம்.இரண்டுமே தோல்வி.

2005 - மங்கள் பாண்டே.

2006 - ரந்தே பசந்தி.(ஆறு நாயகர்களில் ஒருவர்-தமிழில் சாத்தியமா),ஃபனா.

2007 முதல் கிருஸ்மஸ் தோறும் படம் வெளியாயாகும்.வெற்றியும் பெறும்.

2007 - தாரே ஜமீன் பர்.

2008 - கஜினி

2009 - 3 இடியட்ஸ்.

ஷாரூக்கான் படம் ஓடிய திரையரங்குகளில் இவர் செய்த விளம்பரம் பரபரப்பாகப் பேசப்பட்டது.திரையரங்கு ஊழியர்கள் அனைவருக்கும் கஜினி பாணியில் மொட்டை.பெங்களூர் கல்லூரிகளில் அப்படி முடி வெட்டத் தடை.

சொல்ல மறந்து விட்டேன்.அவர் எந்த விருது வழங்கும் விழாவிற்கும் செல்வதில்லையாம்.காரணம் விருது திறமையானவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லையாம்.சரி தான் 2005ல் யாருக்கு விருது என்றால் ஹம் தும் என்ற காமெடி படத்தில் நடித்த சயீப் அலிகான்.அம்மா தேர்வுக் குழு உறுப்பினர் என்பதாலா என்றால் எனக்கு தெரியவில்லை.இந்த வருடமும் கிடைக்காது பா படத்திற்கு அமிதாப் தட்டி செல்வது உறுதி.ஹம் தும் படத்தில் நடித்தற்கே குடுக்கலாம் என்றால் 3 இடியட்ஸ் படத்திற்கும் குடுக்கலாம்.

3 இடியட்ஸ் வெளியான அடுத்த நாளே திருட்டு டிவிடி வந்து விட்டது.அமீர் கான் கதறவில்லை.காரணம் படத்தின் மீதுள்ள நம்பிக்கை.முக்கிய குறிப்பு இந்தி திரையுலகில் யாரும் திருட்டு டிவிடி குறித்து கதறவில்லை.

ஜக்குபாய் போல இரு இந்தி திரைப்படமும் இணையத்தில் வெளியாகி விட்டது.மகராஷ்டிரா முதல்வருக்கு வேலை இருக்கிறதாம்.அதனால் அழுது புலம்ப முடியவில்லை.நான் அவருக்கு சொல்வது ஒன்று தான் நீங்க தமிழ் நாட்டில் பிறந்து இருக்க வேண்டும் பாஸ்.

Saturday, January 30, 2010

கோவா படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வேண்டாமே ப்ளீஸ்

கோவா படத்திற்கு அதிகமான எதிர்மறை விமர்சனங்கள்.இப்படி எல்லாம் செய்தால் ரஜினியின் மகள் போட்ட காசை எப்படி எடுப்பார்.ரஜினி நிச்சய வெற்றி என்று சொன்ன உத்திரவாதம் என்னாவது.இப்படி எல்லாம் பண்ணக் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன்.நாம் தான் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறோம்.அவர்களை ஏற்றி விடுகிறோம்.கீழே மிதித்து தள்ளுகிறோம்.இதற்கு யாரும் விதிவிலக்கில்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் வெங்கட் பிரபு அண்ட் கோ.யாரையும் பார்க்காதீர்கள்.வெளுத்து வாங்குங்கள்.

நான் என்ன விமர்சனம் செய்தேன் என்று கொஞ்சம் பழைய பதிவுகளைப் புரட்டி பார்த்ததில் இருபது ஆண்டுகள் படம் பார்த்த அனுபவம் நன்றாகவே வேலை செய்கிறது. கீப் இட் அப் பாய் என்று என்னை நானே தட்டிக் கொண்டேன்.அப்படி என்ன எழுதினேன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா.

1.கோவா - இந்த வருடத்தின் மிக பெரிய ஏமாற்றம்.வெங்கட் பிரபுவின் மீது கொண்ட ஈர்ப்பு குறைவது போல் தெரிகிறது.அவர் பாணியை கொஞ்சம் மாற்றி கொண்டால் பரவாயில்லை.இல்லை கரகாட்டக்காரன்,தெம்மாங்கு பாட்டுக்காரன்,வில்லு பாட்டுக்காரன் என்று இயக்கி அவர் அப்பாவை போல் காணாமல் போய் விடக் கூடாது.கங்கை அமரன் காணாமல் போன போது கூடவே ராமராஜனும் போனார்.இவர் கூட செல்லப் போவது யார் ஜெய் இல்லை வைபவ் இல்லை என்ன கொடுமை சாரா

2.கோவா - நிச்சயமாக பல்ப் வாங்கும் என்று தெரிகிறது.காரணம் மூன்று முதலாவது போட்டியில் இருக்கும் தமிழ்படம்.ஏ செண்டர் ரசிகர்களுக்கான படம் போலத் தெரிகிறது.பி,சியில் எடுபடுமா என்று தெரியவில்லை.பாட்டு பல்லிளித்து விட்டது.தமிழ் சினிமாவின் ராசி பெரும்பாலும் மூன்றாவது படத்தில் தான் வெற்றி இயக்குனர்கள் பல்ப் வாங்குவார்கள்.இதெல்லாம் எனக்கு தோன்றிய கோல்மால்கள்.இது எதுவும் நடக்கவில்லை என்றால் ஆட்டோ அனுப்ப வேண்டாம்.நடந்தது என்றாலும் ஆட்டோ வேண்டாம்.

3.கோவா - பி,சி செண்டர்களில் கேள்விக் குறியாகுமா என்பது என் மனதில் எழுந்த பெரிய கேள்வி.அந்த அளவிற்கு ரீச்னெஸ்.வெங்கட் பிரபுவின் திறமையை உணர்த்துமா,உலர்த்துமா என்று பார்ப்போம்.ரஜினி படம் சில்வர் ஜூப்ளி என்று சொல்லியுள்ளார்.இது தான் அடுத்த சந்தேகம்.அவர் எந்த படத்திற்கு தான் இப்படி சொல்லவில்லை.கேடி என்ற படத்திற்கும் அவர் சிலாகித்து பாராட்டு பத்திரம் வாசித்தார்.

4.நேராக கோவா சூட்டிங்..

அ : டிரைலர் பாத்தேன்..படத்தை தில் சாத்தா ஹை அதுல இருந்து உருவி இருக்கிங்க போல..

வெங்கட் பிரபு : இப்போ தான் அமீர் பேசுனார்..அது நீங்க தானா..

அ : ஜெய் சொன்ன மாதிரி ரெண்டு படம் அவுட்..இந்த படமும் அது மாதிரி ஆகுமா..

வெங்கட் பிரபு : என்ன கொடும பிரேம்ஜி இது..

அ : அங்க அங்க சீனை சுடுறீங்க..தமிழ் படத்தில் இது மாதிரி வந்ததே இல்லை பில்டப் வேற..

வெங்கட் பிரபு : என்ன சொல்றீங்க..

அ : சரோஜா படத்துல ஒரு பாட்டுல சின்னத்திரை நடிகர்கள் எல்லாம் வர்றாங்க..இது ஷாரூக் கான் படத்தில் இருந்து அடிச்சது தானே..

வெங்கட் பிரபு : (சத்தமாக) பிரொடுஸர் வர்றாங்க..நீங்க போயிட்டு அப்புறம் வாங்க..மிஸ்கின் சும்மா தான் இருக்காரு..அங்க போங்க..


இது எனக்கும் பொருந்தும் - விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.நண்பன் என்று எல்லாம் பார்க்க வேண்டாம்.லோகுவும்,ராஜூயும் செய்கிறார்கள். செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

Friday, January 29, 2010

நிர்வாண முகம்

திரும்பவும் அவள். கனவு மாதிரியும் தெரியவில்லை.அதுவும் குறிப்பாக சலனமற்ற அவளின் ஒரு பக்க முகம் கோபத்தை விட வேறு எதையோ தூண்டுவதாகயிருந்தது.அவள் பார்வையில் இருந்து விலகி என்னில்,என்னுள் அவள் விலகாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.இன்னும் அழகாகியிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

யாருக்காக காத்திருக்கிறேன் என்று தெரியாத அளவிற்கு எரிச்சல் காரணம் வெயிலாக இருக்குமோ என்று சூரியனை முறைத்தால் அதிகம் சுட்டது.காற்றில் கூட அனல் வீசியது.கெட்ட வார்த்தைகளை மனதுக்குள் தெளித்து கொண்டேன்.கொஞ்ச நேரத்தில் எல்லாம் மாறிக் கொண்டிருப்பது தெரிந்தது காரணம் வந்தவனுடன் ஒரு பெண்ணுமிருந்தாள்.அவள் கண்களில் என் முகம் தெரியுமளவிற்கு பார்வைகள் பரிவர்த்தனை நடத்தாதே என்று அவள் கவனிக்காத சமயம் காதில் அவன் சொன்னான்.

ரேகா என்று யாரோ என் பின்னால் இருந்தபடி கூப்பிட திரும்பியவள் கண்களில் கண நேர அதிர்ச்சி தெரிந்தது.எப்படி மறைவது என்று தெரியாமல் சிலையாகிருந்தேன்.

ரேகா....................அவன் சொன்ன குட்டிப் புராணத்தில் பெயர் தவிர ஒன்றும் கேட்காமல் அவளையே பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்து போயிருந்தேன்.காரணம் தெரிந்த புராணத்தைத் தெரிந்து என்ன பிரயோஜனம்.

ரேகாவும் நடுத்தரமும் கதை பேச தொடங்க,அவள் காதையும் வாயையும் அவளுக்கு கொடுத்து விட்டு கண்களால் என்னோடு பேசிக் கொண்டிருந்தாள்."போ..போ.." என்று கெஞ்சுவது போலிருந்ததால் இன்னும் கெஞ்சட்டுமே என்று போக மனமில்லாமல் நின்றேன்.

ரேகாவை பார்த்துக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டேயிருந்தோம்.சாலையின் அடர்த்தி அதிகமாக தொடங்கியது.அறுவை தாங்க முடியாமல் வீட்டுக்கு போகலாம் என்ற எண்ணத்தில் அவளை பார்க்க, கண்கள் விரிய "இன்னும் கொஞ்ச நேரம்.." கண்களால் கொஞ்சினாள். இன்னொரு முறை கொஞ்சலுக்கு இடம் கொடுக்காமல் கதற கதற அவன் அறுவையை பொறுத்துக் கொண்டேன்.

"முகமே சரியில்லையே..யாரு தெரிந்தவனா.." என்று நடுத்தரம் கேட்க முதலில் திடுக்கிட்டாலும் "இல்ல..தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது.." சமாளித்து விட்டாள்.நடுத்தரம் தான் நம்பியது போல் தெரியவில்லை.மாமியார்காரியாக இருக்கும்.அவர்களின் மாமியாரும் இதே கேள்வியை கேட்டிருக்கலாம்.

"ரெண்டு பேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்களா.." அவன் கேள்வியில் ஏமாற்றம் தெரிந்தது."பரவாயில்ல..அறிமுகம் செய்ய வேண்டியது மிச்சம்..ரொம்ப ராவிட்ட மாதிரி தெரியுது.." கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.இப்போ ரேகா முறை எப்படி சந்தித்தோம்.எப்படி எல்லாம் காதல் சொன்னேன் என்று அவள் பங்கிற்கு பழிக்கு பழியாக அறுக்க தொடங்கினாள்.அவனுக்கு தான் இன்னும் நம்பிக்கை வரவில்லை.எப்படி வரும்.எனக்கு இப்படி ஒரு தேவதையா என்ற சந்தேகமாகயிருக்கும்.

போன் பண்ணியிருப்பாள் போல .பத்துக்கும் அதிகமான மிஸ்டு கால்.சாப்பிடாமல் தண்ணியடித்தது மயக்கத்தில் ஆழ்த்தி விட்டது.இன்னும் ஞாபகபிருக்கிறதா யோசிப்பதற்குள் திரும்ப அழைத்து விட்டாள்."இன்னும் நம்பர் மாத்தலையா.." முதலில் கேள்வி சம்பிரதாயமாக ஆரம்பித்தது."நீ வாங்கி கொடுத்தது தானே..அதான் மாத்தல" அவளுக்கு ஞாபகப்படுத்தினேன்."டோன்ட் மீ சில்லி..அண்ட் டோன்ட் எவர் ட்ரை டூ கிரியேட் சீன்.." கோபம் கூட இங்கீலிஸ் பேசுனா தான் வரும் போல என்று நினைத்து கொண்டேன்.பிறகு அவளே சமாதானாமாகி "இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா என் மாமி கிட்ட மாட்டியிருப்பேன்..நான் வர்றேன்..".சமாதானம் தமிழில் செய்தாள். என்னோடு சேர்த்து தமிழும் ஞாபகம் இருக்கிறது என்று நினைத்து கொண்டேன்.

ஏர்டெல் ஜோடி கார்ட் வாங்கி தந்தாள்."கூட்டுத் தொகை உன் சைஸ் சொல்லுது.." என்று சொன்னவுடம் "இப்படி கூட்டி கழித்து பார் செருப்பு சைஸ் வரும்.." சொல்லி விட்டு அவளே சிரித்தாள்.அவள் கோபம் கானல் நீர் போல மறைந்தது.எல்லா செலவும் அவளே செய்வாள்."நீ கொடுத்து வைச்சவன்.." யாராவது சொல்லும் போது கடைவாய் வரை நீண்ட சிரிப்பு மட்டும் தான் பதிலாக இருந்தது.

அதே கடைவாய் சிரிப்பு பட்டம் தான் மாறி விட்டது."இளிச்சவாயன்.." என்று.வந்தவளை முழுதாக பார்த்தேன்.மூக்குத்தி குத்தியிருந்தாள்.இன்னும் அழகாகத் தெரிந்தது அழுக்கு அறை.எடுத்தவுடம் மூக்குத்தியைப் பற்றி அவளே சொன்னாள்.அவனுக்கு பிடிக்குமாம்."பெரிய பெண்ணாகி விட்டாய்.." மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

"மூக்குத்தி போட்டுக் கொள்..அழகாகயிருக்கும்.." வற்புறுத்தினாள் கூட மறுத்து விடுவாள்."பெரிய பெண் மாதிரி தெரிவேன்.." காரணம் கூட மெலிதாகயிருக்கும்.

கொஞ்சம் அதிகமாகவே பதற்றப்பட்டாள்.போனில் அவனாகயிருக்கும்.கொஞ்ச நேரத்தையும் யாராவது இப்படி கெடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டேன்."சரி கண்ணம்மா.." என்பது மட்டும் கேட்டது.பிடிக்காத வார்த்தைகள் மட்டும் காதில் விழுவதேன்.பாரதி போல அவளுடைய அவனும் செத்து போனால் எப்படி இருக்கும் யோசிக்கும் போதே மனது இனித்தது.

"கண்ணம்மா.." கூப்பிட்டால் போச்சு கோபத்தில் பொறிவாள்."கால் மீ ரேகா.." காரணம் அப்படி கூப்பிட்ட பாரதி முப்பதுகளின் தொடக்கத்திலே இறந்து விட்டானாம்.

மடியில் படுத்திருந்தேன்.முத்தம் கொடுக்க முகத்தை நோக்கி முன்னேறினேன்.முகத்தை திருப்பி கொண்டாள் வலுக்கட்டாயமாகத் திருப்பியவுடன் உதட்டை மடித்திருந்தாள்."நான் இப்போ வேறொருத்தன் பொண்டாட்டி..தே... இல்ல..".எனக்கு எப்படி தெரியும் அடுத்தவன் பொண்டாட்டியோ தே...யோ இப்படித்தான் இருப்பாள் என.

உதட்டை குவித்து வைத்து கொண்டு "முத்தமிடேன் முட்டாளே.." சொல்லும் போதே உள்ளுக்குள் ஏதோ கிறங்கும்.அது தாங்க முடியாமல் "ஐட்டம் மாதிரி செய்யாதே.." தெரியாமல் வந்து விட்டது."அங்க எல்லாம் நீ போவியா.." என்று சண்டை.சமாதானம் செய்யவே கொஞ்ச நேரம் ஆனது.முத்தமிட நேரம் எடுத்துக் கொண்டேன்.

"இனிமே நான் இங்க வர மாட்டேன்..ஏதோ என்னால் தான் இப்படி இருக்கிறாய் என்று வந்தேன்..இது தான் கடைசி..என்னை தொல்லை பண்ணாதே..ப்ளீஸ்..இனிமே என்ன பாக்க வராதே.." அழுதவளை அணைத்து கைகளை சற்றே மேய விட்டேன்."ஆடைகளை அவிழ்க்காமல் என்ன வேண்டுமானாலும் செய்.." சொன்னதும் அசிங்கத்தை மிதித்தவனாய் அவள் நிர்வாண முகத்தில் கை வைத்து தள்ளினேன்.

எல்லாம் முடிந்திருந்த காலம்.அவ்வளவு நெருக்கம்.ஆடையில்லாத மேனியை விட தலையில் ஸ்கார்ப் போதை ஏற்றியது.ஒருநாள் அப்பா,அம்மா,நாய்க்குட்டி கதை.அழுத்தி கேட்டேன்."நான் காதலிக்க தான் லாயக்காம்..கல்யாணத்திற்கு இல்லையாம்.." எங்கே கை வைத்தேன் என்று தெரியவில்லை.கோபத்தில் கண் மண் தெரியவில்லை.

அவள் இருக்கும் போதே ஏமாற்றத்தில் கையை அறுத்து கொண்டேன்."செத்து தொலை..ஏன் என்னை இப்படி தொல்லை செய்கிறாய்.." என்று கத்தினாள்.முதல் முறையாக பிழைக்க ஆசைப்பட்டேன்..

வேகமாக பைக் ஓட்டி லாரியில் மோதி இரத்தமிழந்து சில பல எலும்புகள் உடைந்து ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்தேன்.வந்தவள் நிறைய அழுதாள்.எனக்காக ஒருத்தி அழும் போது சந்தோஷமாகயிருந்தது."வீணை அறுந்த உணர்வு.." என்றாள்.இன்னொரு முறை இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.எந்திரிக்க முடியவில்லை பின் எங்கிருந்து இறக்க முடியாமல் மடங்கினேன்.

பிழைத்தால் அவளை கொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.வீணை,அறுந்த தந்தி,பாரதி,கண்ணம்மா,தே..முத்தம்.ஐட்டம், ஸ்கார்ப் என்று கண்டபடி நினைவு ஓடி அறுந்து விடும் போலிருந்தது.

நாலாவது நாள் கல்யாணப் பத்திரிக்கை வைத்து கருணை கொலை செய்தாள்.வேறு வீணை கிடைத்து விட்டது போலும் நினைத்தவுடன் மயங்கி போனேன்.

பிழைத்தால் அவளை கொன்ற கதை சொல்கிறேன்

மயக்கத்தில் இருந்த மீண்டால் புது வீணை எப்படியிருந்தது என்று சொல்லவும்.

பின் குறிப்பு : இப்படி ஆன நான் அப்ப எப்படி இருந்தேன் பாருங்கள்.

நானும் ஒரு ரவுடி தான் என்று ஒத்துக் கொள்வீர்கள் தானே.இந்த கதையைப் படிக்காமல் போன ஃபாலோயரை நினைத்து வருத்தம் அடைகிறேன்.

ஜெகநாதனுக்கும்,கென்னுக்கும்,அபய் தியோலுக்கும்,அனுராக் காஷ்யப்பிற்கும் சமர்ப்பிக்கிறேன்.

தமிழ்படம் விமர்சனம்

வழக்கமான தமிழ் படத்தின் ஃபார்மூலா தான்.ஒரு அறிமுகத்துதி பாடல்,இரண்டு டூயட்,ஒரு குத்துப் பாட்டு,ஒரு எழுச்சிப் பாடல் அங்கங்கே சண்டை காட்சிகள்,தமிழ் தெரியாத பேக்கு நாயகி,வயதான நண்பர்கள்,நாயகியின் லூசு அப்பன்.எல்லாம் கலந்து கட்டி வடித்து எடுத்தால் வீ வில்(வில்லு இல்ல) கெட் ஃபெர்பெக்ட் எண்டர்டெயினர்.

அப்படி ஒரு டெரர் படம் தான் இது.நாயகனுக்கே காமடி நன்றாக வரும் அல்லது வர வேண்டும் என்பது தான் தற்போதைய டிரெண்ட்.கதை ரொம்ப சிம்பிள் அல்லது சிம்பல்.நாயகனுக்கு ஒரு தம்பி,ரெண்டு தங்கச்சி,அம்மா உண்டு.அப்பா இல்லை.

அவர் ஒரு படிக்காதவர் ஆனால் நல்லவனுக்கு நல்லவன்.ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி தம்பி,தங்கைகளை நன்றாக படிக்க வைக்கிறார். தம்பி போலீஸ்,தங்கை - டாக்டர்,இன்னொரு தங்கை - குடும்ப இஸ்திரி அந்த வார்த்தை சரியாக தெரியவில்லை.நல்ல பையனுக்கு கட்டி குடுக்க வேண்டும்.

நடுவே நம்ம நாயகனின் அ(ட)ப்பாவித்தனததைப் பார்த்து காதலிக்கும் வில்லனனில் மகள்.குறுக்கே வரும் மார்க்கெட் ரவுடி.முதலில் அடி வாங்கினாலும் பிறகு அதே கம்பத்தில் கட்டி வைத்து உரிக்கிறார்.சாகும் நிலையில் வில்லன்.நாயகனின் உண்மையை சொல்லும் நிஜ முகம் தெரிகிறது.

ப்ளாஷ்பேக் தற்போது நான் இருக்கும் இடத்திற்கு நகர்கிறது.சாதாரணமாக ஊர்சுற்றிக் கொண்டு திரியும் நண்பர்கள்.இடப் பிரச்சனையில் பெரிய வில்லன் குறுக்கே வர இருவரும் எதிர்க்க அவர்கள் நண்பனை கொல்ல இவர் பதிலுக்கு விரட்டி விரட்டி கொல்ல மக்கள் நாயகனாக உயர்கிறார். தானாக கூட்டம் சேர்கிறது.

பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு டானை காலை உடைத்து டன்னாக்கி டின் கட்டி சிறையில் அடைக்கிறார்.அப்பா அந்த போராட்டத்தில் இறக்க வருடத்திற்கு நான் முப்பது நாள் வந்து போகும் நகரில் வந்து ஆட்டோ ஓட்டுகிறார்.

நடுவில் நேரம் கிடைத்தால் காதல்.சிறையில் இருந்து டான் வர,இரண்டு நண்பர்களை இழந்து அடித்து நொறுக்கி குடும்பத்தை மீட்டு பிண்ணனியில் தீ எரிய நடந்து போகிறார்.பின்னால் இருந்து கொல்லப் பார்க்கும் வில்லனை தம்பி சுட்டுக் கொல்கிறார்.

இதுவும் தமிழ்படத்தின் விமர்சனம் தான் என்ன படம் என்று பின்னூட்டத்தில் சொல்லவும்.

அனானி கமெண்ட்,இரண்டு எதிர்பதிவு,மைனஸ் ஓட்டு என்று என்னை வளர்த்து நண்பர்களுக்கு இந்த பதிவில் கிடைக்கும் திட்டு எல்லாம் சமர்ப்பணம்.

அடுத்த பதிவுக்கான டிரெயிலர் - நிர்வாண முகம் - இந்த கதையை நான் பொறாமை கொள்ளும் கென் மற்றும் அண்ணன் ஜெகாவிற்கு சமர்ப்பணம் செய்கிறேன்.ஏற்கனவே அறிவித்த அக்கப்போர் தொடங்கி விட்டது.

Thursday, January 28, 2010

நீங்க அஜித் ஃபேன் தானே - தொடரும் கேள்விகள்

"தலை"ப்பில் இருக்கும் கேள்வி என் மேல் அடிக்கடி பாய்ந்ததுண்டு.காரணம் விஜய் படங்களை அதிகளவில் நான் தோரணம் கட்டியிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு விஜய் படங்களில் எனக்கு "மிகவும்" பிடித்த படங்கள் ரெண்டு.அது புதிய கீதை மற்றும் வேட்டைக்காரன். அசல் படத்திலும் பில்லா ஹாங்க் ஒவர் மீதமிருப்பது போல் தெரிகிறது.ஷூட் எம் அப் மற்றும் ஜாக்கி சான் படத்தில் வந்தது போல துப்பாக்கி கழட்டி மாட்டும் காட்சிகள் அசலும் யோகி,ஆயிரத்தில் ஒருவன்,நந்தலாலா படத்தின் மீது நான் வைத்த விமர்சனங்கள் போல ஆகி விடுமோ என்ற பயம் இருந்தாலும் நான் அதை செய்ய மாட்டேன்.காரணம் இரண்டு.

1.நான் விஜய் இரசிகன் கிடையாது.

2.என்னை விட அஜித் படத்தை சீரும் சிறப்பாக பதிவுலகத்தில் விமர்சனம் செய்ய ஆள் இருக்கிறது.

ரெண்டு காரணங்களிலும் உண்மையும்,பொய்யும் சரி சமமாக கலந்திருக்கிறது.மேலும் அஜித்தை காலி செய்ய நான் வேண்டுமா என்ன.அதுதான் மோதி விளையாடி காலி செய்ய சரண் இருக்கிறாரே.

இன்னும் சரியாக புரியாமல் நீங்க அஜித் இரசிகரா என்று திரும்பவும் கேட்டால் என் பதில் - "ஜெயமோகனை பற்றி நான் ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது.அப்போ நான் ஜெயமோகன் இரசிகனா.."

ஜெயமோகன் என்று சொன்னவுடன் ஞாபகம் வருகிறது.குருஜியும் சுரேஷ் கண்ணனும் சிலாகித்திருந்த அவர் மொழிப்பெயர்த்த விவேக் என்பவரின் கன்னட சிறுகதைகள் மூன்றை படிப்பதற்குள் கண்ணை கட்டி விட்டது.காரணங்கள் உண்டு.இன்னமும் நான் எழுத்துகளில் மூழ்கி மூச்சுத் திணர விரும்புவேன்.அப்படி இருக்க முடியவில்லை.எழுத்துப் பிழைகளும் நிறைய இருக்கிறது.இந்த குற்றத்தை சொல்ல எனக்கு அருகதை கிடையாது. சொல்வதற்கு காரணம் நான் எழுத்துப் பிழைகள் வரவே கூடாது என்று முயற்சி செய்கிறேன்.

கண்ணை கட்டி விட்டது என்று சொன்னவுடன் தான் ஞாபகம் வருகிறது.தேசிய விருதுகள் எவ்வள்வு கேலிக் கூத்தாக மாறி வருகிறது என்பதற்கு உதாரணம் தான் ஒரே ஒரு விருது தான்.பாலாவிற்கு சேது அல்லது பிதாமகன் படத்திற்கே கொடுத்திருக்க வேண்டும்.நான் கடவுள் அவர் திறமைக்கு தீனி போட்ட படம் அல்ல என்பது என்னை பொறுத்த வரை சர்வ நிச்சயம்.அடுத்து வாரணம் ஆயிரம் இதற்கு தேசிய விருது கிடைக்க காரணமும் ரெண்டு.

1.தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த நக்மா(என்ன கொடுமை சாமி..பின்ன ஏன் புயல் வராது)

2.தேர்வு செய்யும் குழுவில் இருந்த மேன நாயர்களின் எண்ணிக்கை.

அஞ்சாதே படங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியாதே.போங்கடா நீங்களும் உங்க விருதும்."அவனை போடணும்..எனக்கே சாவு பயத்தை காட்டிட்டாங்க.." என்று சொன்னால் தமிழில் விருது கிடைக்குமா."கிடோ,புடோ,கொடோ.." என்று ஆங்கிலத்தில் ஏதாவது உளறினால் கண்டிப்பாக தமிழில் விருது கிடைக்கும்.

படம் என்றவுடன் ஏதாவது ஞாபகம் வந்திருக்குமே ஆமா அதே தான்.இன்று வெளியாகும் ஐந்து படங்கள்.

தமிழ்படம் - எனக்கு பிடித்த படம்.காரணம் ஒரு பாட்டு.பாட்டில் கிழவிகளின் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைக்கும் சிவா இது யாரோ செய்தது போல் ஞாபகம்.ஆனால் அளவுக்கு மிஞ்சினால் மாதிரி தெரிகிறது.இப்படி தான் குவிக் கன் முருகன் பப்படம் ஆகியது.சரி பார்ப்போம்.

கோவா - பி,சி செண்டர்களில் கேள்விக் குறியாகுமா என்பது என் மனதில் எழுந்த பெரிய கேள்வி.அந்த அளவிற்கு ரீச்னெஸ்.வெங்கட் பிரபுவின் திறமையை உணர்த்துமா,உலர்த்துமா என்று பார்ப்போம்.ரஜினி படம் சில்வர் ஜூப்ளி என்று சொல்லியுள்ளார்.இது தான் அடுத்த சந்தேகம்.அவர் எந்த படத்திற்கு தான் இப்படி சொல்லவில்லை.கேடி என்ற படத்திற்கும் அவர் சிலாகித்து பாராட்டு பத்திரம் வாசித்தார்.

கதை - சசிகுமார் பணம் கட்டிய கறுப்புக் குதிரை.சசிகுமார் வினியோகித்து பணம் பார்ப்பாரா என்பது தான் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.படத்தின் வெற்றியை விட இது தான் மில்லியன் டாலர் கேள்வி.ஆனால் ஏன் வாங்கினார் என்று துருவிப் பார்த்தால் தயாரிப்பாளர் - நந்தா,மௌனம் பேசியதே படங்களை தயாரித்தவர்.

ஜக்குபாய் - வசாபி,திருட்டு டிவிடி,பதினைந்து கோடி,ராதிகாவின் கண்ணீர்,சேரனின் கொதிப்பு,ஜீ டிவியின் அக்கப்போர்,கலைஞர் டிவி வாங்கியது இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் களத்தில் இருக்கும் படம்.பொங்கலுக்கு வெளியீடாக செய்து இருக்கலாம்.

தைரியம் - ரொம்ப தைரியம் தான்.தயாரிப்பாளர்,நடிகரின் (அட ரெண்டு பேரும் ஒண்ணு தான் - பட்டியலில் இயக்குனராக கூட பெயர் சேரலாம்) தைரியத்தை பாராட்டி படகோட்டி படத்துல எம்.ஜி.ஆர் யூஸ் பண்ண கைக்குட்டை(ரொம்ப காஸ்ட்லியாக இருக்கிறதே) சரி தமிழக அரசின் கலைமாமணி பட்டம் குடுத்து விடலாம்.

படம் பார்க்காமலே ஐந்து படத்திற்கும் லட்டு மாதிரி விமர்சனம் எழுதலாம்.

விமர்சனம் என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது.கேரளாவில் முதல் காட்சியே படத்தை நிர்ணயம் செய்யும்.நன்றாக இல்லை என்றால் அடுத்தக் காட்சிக்கு வரிசையில் இருப்பவர்களிடம் படம் சரியாகயில்லை என்று கலைத்து விடுவார்களாம்.அது தமிழகத்தில் வருமா என்றால் சர்வ நிச்சயமாக வராது.இங்கு என்ன செய்வோம் படம் ஒரு முறை பாருங்கள்.பார்த்து விட்டு சொல்லுங்கள் என்று பெற்ற துன்பத்தை வையகத்திற்கும் கொடுத்து விட்டு இணையத்தில் நன்றாகயில்லை என்று விமர்சனம் செய்தால் டுபுக்கு என்பவரிடம் திட்டு வாங்குவோம்.அனானி பின்னூட்டங்கள் எல்லாம் இருந்தால் டோட்டல் டேமேஜ் தான்.கெட்ட வார்த்தைகளும் இருந்திருக்குமோ.

கெட்ட வார்த்தை என்றவுடன் ஞாபகம் வருவது.யோகி படத்தில் கொலை செய்து விட்டு வரும் போதும் ஒரு ஆங்கிலப் பாடல் ஒலிக்கிறது.உற்று கவனித்தால் ஆங்கில கெட்ட வார்த்தை அப்படியே காதில் விழுகிறது.சென்ஸார் செய்தவர்களுக்கு காது கேட்காதா இல்லை ஆங்கிலம் தெரியாதா.இதுக்கு தேசிய விருது கொடுங்க.அல்லது தமிழ் நாடு அரசு விருது குடுங்க.அதான் பெயர் தமிழில் இருந்தால் வரிவிலக்காமே.ஏதோ பழமொழி எல்லாம் ஞாபகம் வரவில்லை.அதனால இதோட முடியுது.

ஆயிரத்தில் ஒருவனை கொலை செய்வது எப்படி

தூக்கமில்லா இரவின் நீட்சி
ஆச்சர்யமான கொலைக்கானத் திட்டம்
விஷம் கலந்து வைக்கலாமா
பொறி மட்டும் போதுமா
மயக்க மருந்து கொடுத்து
தண்ணீரில் அழுத்தி ம் ம்
நினைக்கும் போதே பரவசத்தில்
கண் மூடி அரை நிமிட உறக்கம்
செயல் படுத்தப்பட்ட கடைசி திட்டம்
தண்ணீரில் முக்கும் சமயம்
சற்றே மிச்சமிருந்த
பெயர் தெரியாத வருத்தம்
கொசுவாக இருந்தால் ரீமாவாக்கி விடலாம்
எலியாயிற்றே கொஞ்சமாவது லாஜிக் வேண்டுமே
நல்லத் தூக்கத்திற்காக அழுத்தினேன்
ஒருவனின் பெயரை நினைத்து கொண்டு

Wednesday, January 27, 2010

அனிதாவின் காதல்கள்,இராமலிங்க ராஜூவின் சத்யமான மோசடி

அனிதாவின் காதல்கள் - சுஜாதாவின் நாவல்களில் ஒன்று.சுவாரஸ்யம் இல்லாமல் ஆரம்பித்து மொத்தமாக படித்து முடித்த போது மராத்தான் ஓடும் வீரன் முதலில் மெதுவாக ஓட ஆரம்பித்து பிறகு எல்லோருக்கும் முன்னால் ஓடுவது போல உணர்வு.சினிமாவாக எடுக்க தகுதியான கதை - சர்வ நிச்சயமாக ஐந்து பாட்டும்,இரண்டு சண்டையும் முயற்சி செய்தால் இன்னும் ஒரு சண்டை கூட திரைக்கதையில் சொருகலாம் என்று என்னுள் இருக்கும் ஏதோ ஒன்று இந்த கதைக்கு திரைக்கதை எழுதிய போது சொன்னது.ஆனந்த தாண்டவம் இயக்குனர் கண்ணில் இந்த கதை படாமல் இருக்க வேண்டும் என்று படிக்கும் போதே ஆண்டவனை வேண்டிக் கொண்டேன்.

சுஜாதாவின் மீதிருந்த பிரமிப்பு கூடிக் கொண்டே போனது.காரணம் பீஸ்ஸா சென்னையில் அறிமுகம் ஆகும் போது சொன்னாராம் - மசாலா சேர்த்தால் இது பெரும் வரவேற்பு பெறும் என்று சொன்னாராம்.அது போல இந்த நாவல் எழுதிய போது அது தொன்னூறுகளின் தொடக்கமாக இருந்தது என்றே நினைக்கிறேன்.கிட்டத்தட்ட என்று சொல்ல ஆசையிருந்தாலும் அது போல என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.2008ம் ஆண்டில் சத்யம் நிறுவனர் இராம் லிங்க ராஜூவின் கதையும் இப்படித்தான் ஆனது.

கதையில் வரும் வர்ணனைகள் அப்பப்பா - "ஈறுகளில் இரத்தம் கசியும் அளவிற்கு அழுத்தமான முத்தம் கொடுத்தான்.." இந்த வரியை படிக்கும் என் முகம் முன்னால் இருக்கும் மானிட்டரை (தண்டோரா அண்ணன் அடிக்கும் மானிட்டர் இல்லை) நோக்கி நகர்ந்தது.

கதை இதுதான் - அனிதாவை துரத்தி துரத்தி கல்யாணம் செய்ய நினைக்கும் வைரவன் - பெரிய பணக்காரன்,ஃபைனான்சியல் மாதயிதழ்களின் அட்டை படத்தில் வரும் அளவிற்கு புத்திசாலி,ஃபார்வர்டு டிரெடியிங்கு செய்து பணம் பார்ப்பவன்.நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் பாடல் ஒன்றில் வருவது போல காலை ஒரு நகரம்,மதியம் ஒரு நகரம்,இரவு ஒரு நகரம் என்று இருப்பவன்.

அவனை பார்ப்பதற்கே முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.இராமலிங்க ராஜூவை பார்க்க விரும்பும் ஆந்திர முதல்வருக்கும் இது பொருந்தும்.

நினைத்தை அடையும் போதும் குறுக்கே வருபவர்களை கூட பணத்தால் வாங்கி பணக்காரத்தனமாக காதலை வெளிப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டவுடன் வீட்டிற்கு கொண்டு வந்து அனிதாவை பூட்டியும் பூட்டாமலும் பார்த்து கொள்கிறான்.

ஒரே நாளில் நேரம் பார்த்து இராமலிங்க ராஜூவிற்கு அடித்தது போல ஒரு ஆப்பு ஒன்று வைக்கிறார்கள் வைரவனுக்கு.எல்லாம் இழந்து சிறையில், குடும்பம் நடுத்தெருவில்,அப்பாவும் இறந்து போக அனிதாவும் பிரிய நினைக்க - அந்த நேரத்திலும் அவளுக்கு வரும் மூன்று கல்யாண விண்ணப்பங்கள்.

இவ்வளவு சீரியஸாக கதை போகும் போது அவள் அக்காவுடன் வேறு நகரத்திற்கு போக அனிதா மறுக்க எல்லோரும் கோபம் கொள்கிறார்கள்.அது சுஜாதா பாணியில் எப்படி என்றால் - "மூன்று வயது நந்து கூட அவளை முறைப்பது போல் இருந்தது".இப்படி பட்ட நிலையிலும் சுஜாதாவால் மட்டுமே இயல்பான நகைச்சுவையை சொருக முடியும்.அதை படிக்கும் போது இதழ் பிரியாமல் கண்கள் விரித்து சிரித்தேன்.

இடைவெளி நிச்சயம் அந்த காலத்திற்கு பொருந்தும்.எனக்கு கொஞ்சம் அது நாடகம் பார்ப்பது போல் இருந்தது.காரணம் கடும் விரக்தியில் பிச்சைக்காரனுக்கு தாலியை போடும் அனிதாவின் மாமா.தங்கம் விற்கும் விலையில் இந்த காலத்தில் அப்படி நடக்குமா.

ஒரு சிறு போராடத்திற்குப் பிறகு கண்வனுடன் இணைகிறாள்.இராமலிங்க ராஜூவின் வேன் ஒன்று ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஹைதை நகரத்தையே சுத்தி சுத்தி வந்ததாம்.இந்த கதையிலும் முக்கிய ஆவணங்கள் ஒரு சுற்று சுற்றி வரும்.இராமலிங்க ராஜூவை இது போல மீட்க அனிதா போல ஒரு பெண்ணாவது முயற்சி செய்தாளா என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.காரணம் ஒரு புனைவு காலம் கடந்து எந்த அளவிற்கு ஒத்துப் போகிறது என்று பார்க்கத்தான்.

சுஜாதா 2005களில் எழுதிய கதையை இன்னும் இருபது வருடங்கள் கழித்து யாராவது எந்த நிகழ்ச்சியுடன் நிச்சயம் ஓப்பீடு செய்வார்கள் என்பது மட்டும் உறுதி.

சின்ன சந்தேகம் - கதையின் நாயகன் பெயர் வைரவனா அல்லது பைரவனா கொஞ்சம் யோசித்து பார்த்தால் தலை சுத்த ஆரம்பித்து விடுகிறது.நானும் ஒரு யூத்தாக மாறி வருகிறேனோ என்னவோ.

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை.

Tuesday, January 26, 2010

ஹிட்ஸ்,அலெக்ஸா ராங்க்,இன்னும் கண்டது கழியது எல்லாம் அதிகரிக்க

ஹிட்ஸ் பிரச்சனையில் இருந்து பதிவுலகத்தின் போதை அல்லது பார்வை கொஞ்சம் இடம் மாறி அலெக்ஸாவில் குடி கொண்டுள்ளது.வருண் எழுதிய பதிவில் எனக்கு உடன்பாடான ஒரு விஷயம் குருஜி ஜ்யோவ்ராம் சுந்தர் போட்ட பின்னூட்டம்.சில பின்னூட்டத்தில் இருந்த வார்த்தைகளை கொண்டு கொஞ்சம் யோசித்து பார்த்ததில் - "இது அமெரிக்கனின் ஆஸ்கர்..இந்தியர்களுக்கு கிடைக்காது.." என்று சொல்வது போல் உள்ளது.
நான் சொன்னது போல் விரைவில் அவர் ஐம்பதாயிரம் இடத்திற்குள் வரும் நாள் தொலைவில் இல்லை.இதற்கு காரணம் - வெள்ளிக்கிழமை சினிமா விமர்சனத்தையும் தாண்டி அவர் பதிவில் ஏதோ ஒரு வசீகரம் இருப்பது தான்.(இதுக்காவது அடுத்த கொத்து புரோட்டாவில் சுட்டி கொடுக்கவும். முடிந்த அளவு பில்டப் கொடுத்து விட்டேன்.இந்த அரசியல் போதுமா இன்னும் வேணுமா.)

தவிர சாரு போன வருடம் அவருடைய அலெக்ஸா ராங்க் உச்சத்தில் இருந்த போது எழுதிய காமரூபக் கதைகளும்,நிறைய எழுத்துகளும் இந்த வருடம் இல்லை.அது மட்டும் தான் காரணமே தவிர வாசகர்கள் காரணம் அல்ல.இதுவும் நான் சொல்வது மட்டும் தான்.

என் அலெக்ஸா ராங்க் வேற கொஞ்ச நாளாய் சரியத் தொடங்கி இருக்கிறது.காரணம் என்ன என்று யோசித்து பார்த்தால்

1.கவிதை எழுத ஆரம்பித்தது.(என்ன கொடுமை நாராயணா இது..)

2.ஒரு நாளுக்கு ஒரு பதிவு தான் எழுதுவது.(குஜராத் மோடி சொன்னது போல் ஒரு நாளைக்கு ஒன்பது பதிவு எழுதலாம்)

3.சாருவிடம் மிஷ்கின் விஷயத்தில் முரண்பாடு கொண்டு அவர் பெயரை தலைப்பில் சேர்க்காமல் போனது.(யாரு நீ..)

4.வாசகர்கள் இரும்புத்திரையை புறக்கணித்து விட்டது.(வாசகர்களா முடியலைடா சாமி..)

5.மிஷ்கின் பதிவிற்கு அவர் தளத்தில் எனக்கு சுட்டி தராமல் போனது.(ரெண்டாயிரம் ரூபாயாமே வடக்கா இல்ல வோட்கா)

6.வடைகளை சரியாக கேட்ச் பிடிக்காமல் இருப்பது.(கேட்ச் பிடிச்சிட்டாலும் சென்னை - 28 பிரேம்ஜி ஞாபகம் வருது..)

7.தமிழ்மணம்,தமிளிஸ்,சங்கமம் இங்கு ஓட்டு விழாமல் இருப்பது.(இது உனக்கே கொஞ்சம் அதிகமா தெரியல..)

8.கள்ளஓட்டு குத்த இணையத்தளம் இல்லாமல் போனது.(மகுடம் ஏறாமல் அடங்க மாட்ட போல..வாய் முகூர்த்தம் பலித்து சங்கமம் திரட்டியில் புயூஸ் பிடிங்கிட்டாங்க..)

9.ஆணி அதிகம் ஆனது(உனக்கே ஒவராத் தெரியல ஒவர்)

10.எதிர்பதிவுகள் போடாமல் இருப்பது,எதிர்பதிவுகள் போடுபவர்கள் சுட்டி தராமல் இருப்பது.(கொசு மருந்து தீர்ந்து போச்சா..அடிச்சு கொல்லுங்க..)

அலெக்ஸா ராங்கில் ஏதாவது கோல்மால் செய்ய முடியுமா என்று ஆராய்ச்சி செய்து கேபிள் சங்கரை விட எனக்கு அதிகம் வாசகர்கள் இருக்கிறார்கள் என்று நிரூபணம் செய்யும் வரை இப்படி ஏதாவது பதிவு போட்டு காலத்தை தள்ள வேண்டியது தான்.

Monday, January 25, 2010

துவையல் - அக்கப்போர் ஸ்பெஷல்

இண்டியானா ஜோன்ஸ் நான்காம் பாகம் பார்க்கும் போது சற்றே கண் அயர்ந்து விட்டேன்.அதனால் ஒரு விஷயத்தை சரியாக கவனிக்க முடியாமல் போய் விட்டது.சனிக்கிழமை இரவு திரும்ப பார்த்ததில் தான் தெரிந்தது.அதில் வரும் காட்டுவாசிகள் இரண்டு நிறத்தில் இருந்தார்கள்.இது சமீபத்தில் வெளுத்து காயப்போட்ட படத்தில் வருவது போல் இருந்தது.அதில் சாம்பல் மற்றும் மா நிறத்தில் இருந்தார்கள்.இதில் கருப்பு மற்றும் சிவப்பு.திராவிட கொடியின் நிறம் என்று நினைத்துக் கொண்டேன்.இன்னும் அந்த படங்களை உற்றுப் பார்த்தால் என் அக்கப்போர் என்னாலே தாங்க முடியாது என்பதால் அதை அழித்து விட்டேன்.

இனி ஒரு மாதம் பதிவு எழுதாமல் சும்மா இருந்து பதிவுலகத்திற்கு நான் செய்து வரும் சேவைகளை நிறுத்தலாம் என்று இருக்கிறேன்.காரணம் அத்திரி போன்ற பெரிய பெரிய அல்லது இந்தியில் படா படா பதிவர்கள் என் பெயரை இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.அவர் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனத்தில் கேபிள் மற்றும் கார்க்கி பெயரை குறிப்பிட்டதோடு இல்லாமல் சுட்டி வேறு தந்து இருந்தார்.அவர்கள் இருவரும் தான் அந்த படத்தை பிடிக்கவில்லை என்று சொன்னார்கள் என்று சொல்லி என் பெயரை சேர்க்காமல் வளரத் துடிக்கும் ஒரு பதிவருக்கு ஒரு ரெண்டாயிரம் ஹிட்ஸ் கிடைக்காமல் செய்து விட்டார்.அதனால் நான் எழுதுவதை நிறுத்தப் போகிறேன்.இனி யாராவது இப்படி எழுதினால் என் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்.நானும் ஒரு இரவுடியாக பார்ம் ஆகி விட்டேன் என்று கெஞ்ச வைத்து ஜீப்பில் ஏற்றாதீர்கள்.

அலெக்ஸா ராங்க் பற்றி வருண் எழுதிய பதிவிற்கு சுட்டி கொடுத்து இருந்தார் என் அண்ணனும் "யூத்துமான" கேபிள்.நான் காலையில் கேட்டேன். "அண்ணா நீங்க எண்டர் கவிதை எழுதி முதல் ஐம்பதாயிரம் இடத்திற்குள் வருவீர்கள் என்று ஆருடம் சொன்னவனே நான் தான்.என்னைப் பற்றி குறிப்பிடவே இல்லையே.." என்று கேட்டால் "உனக்கு அரசியல் தெரியவில்லை.." என்று பதில் வருகிறது.என் அரசியல் குரு யார் தெரியுமா.அவர் பெயர் நீலப்புலி சாத்தை பாக்யராஜ்.அரசியலில் டி.ராஜேந்தர்,சுப்ரமணிய சுவாமி அளவுக்கு பேட்டி கொடுப்பார்.நிறைய பேருக்கு அவரை தெரியாது என்று நினைக்கிறேன்.அதனால் எனக்கு அரசியல் தெரியும் என்று ஒத்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ்.

நான் என்னால் அப்படி எழுத முடியவில்லையே என்று யாரை பார்த்தும் பொறாமை அடைந்தது கிடையாது என்று சொன்னால் அது பச்சை பொய் என்று எனக்கே தெரியும்.முதலில் அப்படி பொறாமை கொண்டது கென் மீது.இரண்டாவது அப்படி பொறாமை தீ கிளர்ந்து விட்டு எரிகிறது என்றால் அது அருமை அண்ணன் ஜெக நாதனை பார்த்து தான்.ராதிகாவின் கணவனாயிருத்தல் மற்றும் யூகலிடப்ஸ் மணம் கவிதை படித்து விட்டு பொறாமையில் வெந்து அவிந்து நொந்தேன்.இனி என் டார்க்கெட் அவர் தான்.அக்கப்போர் ஸ்டாட்ஸ்.

குஜராத் பினாமி மதுரை சுனாமி(லாஜிக் இல்லையே..மதுரையில் தான் கடல் இல்லையே..) குஜராத் சுனாமி,மதுரை பினாமி(தமிழ்படம் தயாரிப்பாளருக்கா என்று கேட்டால் தெரியாது) எழுதிய பிரபல பதிவர் ஆவது எப்படி தொடரை பார்த்து நான் முயற்சி செய்து வந்தேன்.இந்த கிளையாறு காட்டாறாக மாறக் காரணம் அந்த மோடி மஸ்தான் தான்.இன்று கூட நாலாவது பாகம் எழுதியுள்ளார்.நீங்களும் முயற்சி செய்யுங்கள். காட்டாறுக்கு மொத்த எதிர்ப்பதிவும் அவர் தான் குத்தகை எடுத்துயுள்ளார்.இன்றைய பதிவை படித்து விட்டு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினேன்.

உனக்கு கொஞ்சம் கூட மரியாதையாக பேசத் தெரியவில்லை.குறிப்பாக பெண்களிடம் என்று சண்டை போட்டவர்கள் உண்டு.அதிலிருந்து ரெண்டு சாம்பிள்.என் தம்பி பேசுவதில் எனக்கு நேரெதிர்.இதற்கும் அந்த குறிப்பாக ஒத்து வரும்.நான் ஏதாவது பெண்ணை பற்றிய முதல் வரி ஆரம்பித்தால் அவன் முடித்து வைப்பான்.அதோடு பேச்சு வேறு திசைக்கு திரும்பி விடும்.அல்லது திருப்பி விடப்படும்.

குறிப்பாக வேலை நேரத்தில் (அதாவது பதிவு எழுதும் போது) சாம்பிளுக்கு ரெண்டு.

சின்ன சாம்பிள்.இப்படி எல்லாம் பேசக் கூடாது என்பதற்காக சொல்கிறேன்.மீறினால் நான் பொறுப்பு அல்ல.

"I am having lot of pain.."

"Take some wine.."

"What.."

"Water..Spelling Mistake.."

பதில் சொன்னதில் இருந்து ஆளை காணவில்லை.

பெரிய சாம்பிள் வேண்டுமா - சொல்ல கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது கடைசியாக அவள் சொன்னது மட்டும் - "எப்படி பேச வேண்டும் என்று உங்கள் தம்பியிடம் கற்றுக் கொள்ளுங்கள்.."
"விஜயகாந்த் படம்.. விஜயகாந்த் படம்.."

"என்ன.."

"மரியாதை.. மரியாதை.. "

"திருந்துறதா உத்தேசம் இல்லையா.. "

எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை.இவன் ஒழுங்காகப் பேசி ஏன் என் பெயரை கெடுக்கிறான்.

Sunday, January 24, 2010

எண்டர் தட்டிய கட்டுரை

மகனின் புத்தகத்தில் இருந்த மயிலிறகு
குளியலறை காசில் இருந்த வருடம்
அவள் சாயலில் இருந்த பெண்
சட்டென்று ஞாபகம் வராத பெயர்
ஓரம் நைந்த பழைய கடிதம்
எரிச்சல் தரும் இரைச்சல் பாடல்
எல்லாம் சொல்கிறது
வயதாகி விட்டது என்று

"யூத்" கவிஞர்களுக்கு இந்த கவிதை பாணியிலான கட்டுரை கட்டுடைக்கப்பட்டுள்ளது.

Saturday, January 23, 2010

இண்டியானா ஜோன்ஸ்,லாஜிக்,அப்பா-மகன் உறவு,முத்தக்காட்சி

இண்டியானா ஜோன்ஸ் - நாலு பாகத்தையும் நேற்று பத்து மணிக்கு ஆரம்பித்து பார்த்து முடித்தேன்.படுக்கும் போது மணி நாலாக பத்து நிமிடம் பாக்கி இருந்தது.ஏற்கனவே பொங்கலுக்கு ஹாலிவுட் தரத்தையும் மிஞ்சி எடுத்த படத்தின் மீது இருந்த கொலைவெறி இன்னும் அதிகம் தான் ஆனது.காரணம் அந்த தீடிர் மந்திர சக்தி,காட்டுவாசிகள் கூண்டோடு கொலை,பெண் இராணுவ அதிகாரி,கூடவே இருக்கும் சிடுமூஞ்சி அதிகாரி இதெல்லாம் அந்த படத்தில் வந்தது.லாஜிக்கில் வெளுத்து எடுத்து விடலாம் என்று பார்த்தால் அது 1957ல் நடக்கும் கதையாம்.பெண் அடுத்த நாட்டை சேர்ந்த அதிகாரி அமெரிக்க இராணுவ மையத்தையே சூரையாடும் போது காட்டுவாசிகள் எல்லாம் எம்மாத்திரம் என்று தோன்றியது.லாஜிக் சரியாக இருப்பதாக தெரிந்தது. இது இண்டியானா ஜோன்ஸ் படத்தின் நாலாம் பாகம்.அப்பா-மகன் உறவு இந்த படத்தில் இருந்தது.பெரிதாக ஈர்க்கவில்லை.காரணம் எனக்கு தான் கல்யாணம் இன்னும் ஆகவில்லையே.நான்காம் பாகத்தை பெரிதாக எழுதினால் பொங்கல் படத்தின் முயற்சியை நான் தடுத்து விடுவதாக அமைந்து விடும்.அதனால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன் முயற்சி தொடரட்டும்.

முதல் பாகமும்,இரண்டாம் பாகமும் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை.முதல் பாகத்திற்கும் நான்காம் பாகத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அதில் நடித்த நாயகி நான்காம் பாகத்தில் திரும்ப வருவார்.ஒரு மகனும் கூடவே வருவார்.மகன் எப்படி வந்தார் என்பதற்கு லாஜிக் தேவையில்லை என்று நினைக்கிறேன்.முதல் பாகத்தைப் பற்றி எழுதினால் பொங்கலுக்கு திரும்ப போய் கைமா வைக்க வேண்டி வரும்.அதனால் இதோடு நிறுத்தி விடுகிறேன்.ஆரம்ப காட்சியை தான் தம்ஸ் அப் விளம்பரத்தில் உபயோகித்தோம்.குரு சிஷ்யன் தங்கம்,உருண்டு வரை பெரிய பாறை போன்ற இறுதி காட்சிகள் இந்த பாகத்தில் ஆரம்பத்தில் வந்தது.

இரண்டாம் பாகம் - இந்தியாவில் நடக்கும் கதை.அம்பிரிஸ் பூரி நடித்த படம்.சிவலிங்கத்தை மீட்டு இழந்த கிராமத்தினரிடம் கொடுக்கும் கதை. உயிரோடு எரிக்கும் சதி,கண்கட்டி வித்தை,பொம்மையில் ஊசிக் குத்தி நாயகனைத் துன்புறுத்துவது,மன வசியம்,பாலத்தில் தொங்கி சண்டை இப்படி போன கதை.பெரிதாக பிடிக்கவில்லை.ஒரு வேளை இந்தியாவில் எடுத்த காரணத்தால் இருக்கும் என்று பின்னூட்டம் வந்தால் நான் பொறுப்பேற்க முடியாது.

இண்டியானா ஜோன்ஸ் உருவான விதம் - சினிமா பற்றி பேசவே கூடாது என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டு விடுமுறையை கழிக்க ஒரு தீவிற்கு சென்ற ஸ்பீல்பெர்க் அவர் நண்பகளுடன் ஒப்பந்தத்தை மீறி அடுத்த அரை மணி நேரத்தில் பேசி உருவாக்கிய கதை தான் இண்டியானா ஜோன்ஸ்.

மூன்றாம் பாகம் - உயிரை காப்பாற்றும் புனித நீரை தேடும் கதை.இந்த ஒரு பாகத்திற்காக மற்ற எல்லா பாகங்களையும் பொறுத்துக் கொண்டேன். காரணம் அப்பா-மகன் உறவு.மகனின் புத்திசாலித்தனத்திற்கு கூட லேசாக தலையாட்டும் தந்தை.மகனால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிக்கும் போது காட்டும் பெருமிதம்.மகன் இறந்து விட்டான் என்று நம்ப மறுத்து திரும்ப நம்பும் உணர்வுகள்,அப்பாவிற்காக எந்த ஆபத்தையும் எதிர் கொள்ளும் மகன்,அப்படி மறுக்கும் போது அப்பா அறைந்து விடும் போது காட்டும் முக பாவங்கள். இதெல்லாம் சொல்கிறது நாம் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.அதையெல்லாம் செய்ய மாட்டோம்.நாயகியை வைத்து நாயகனை மிரட்டும் காட்சி கந்தசாமி நொந்த சாமியில் வந்தது.

படத்தில் எனக்கு எரிச்சல் தந்த விஷயம் - இண்டியானா என்பதற்கு தரும் விளக்கம்.அந்த பெயரை கேலி செய்யும் அப்பாவே பிறகு அதே பெயரில் இண்டியானா,இண்டியானா அந்த கிண்ணம் வேண்டாம் என்று சொல்லும் போது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு.

படத்தில் வரும் ஒரு அழுத்தமான முத்தக்காட்சி - இது மாதிரி நாம் ஆபாசமில்லாமல் எடுக்க கூட இன்னும் ஐம்பது ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்.வல்லவன் படத்தில் உதட்டை கடித்து இழுப்பது போல் பேனர் வைத்த போது அது பெரிய விஷயமாக பேசப்பட்டு படத்தின் விளம்பரத்திற்கு உதவியது.சரி இதுவும் ஒரு புது முயற்சி என்று படத்திற்கு போனவர்கள் கதி.அதோ கதி - பார்த்தவர்களுக்கும்,தயாரிப்பாளருக்கும் நேர்ந்தது.நமக்கு முயற்சிகளுக்கும் அயற்சிகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

எங்கோ எவனோ உழைத்த,சிந்தித்த தருணங்களை கஷ்டப்படாமல் திருடி நான் எடுத்தது,என் மூளையில் உதித்தது என்று சொல்லும் போது வரும் எரிச்சல்களுக்கு அளவேயில்லை.எங்கு இருந்து எடுத்தேன் என்று அவர்கள் சொல்லும் போது அந்த முயற்சிகளுக்கு நான் ஆதரவு தருவேன்.

Friday, January 22, 2010

காதலியின் (அ) காதலின் அளவுகோல்

சிரிக்கும் விழிகள்
கூர் நாசி
சற்றே விரியும் இதழ்கள்
சிவந்த மடல்கள்
கையில் அடங்கும் முகம்
பேசும் விரல்கள்
மெட்டியில்லாத கால்கள்
தேடலின் தோல்விகள்
சொல்லும் முடிவுகள்
இல்லாமல் போகும் ஏதோ ஒன்று
அல்லது கூடவே இருக்கும்
எவனோ ஒருவன்

சில பெண்களைப் பார்த்தால் மட்டும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றும்.அப்படி சமீபத்தில் பார்த்த மூன்று பெண்கள்.

1.இசையருவி தொலைக்காட்சியில் காட்டிய எத்திராஜ் கல்லூரியின் ஏதோ ஒரு விழா.அதில் பாடிய ஒரு பெண்.கூர் நாசி.கண்களில் தான் உணர்வில்லை.இல்லாமல் போன ஒன்றின் கீழ் இந்த பெண் வருகிறார்.

2.கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் போட்டியில் கலந்து கொண்ட குறும்படத்தில் நடித்தப் பெண். சிரித்த விழிகள் - இறுதி காட்சியில் அந்த பெண் இறக்க மருத்துவராக அந்த பெண்ணின் கண்ணோடு வாழும் காதலன்.கொஞ்சம் பொறாமை மிச்சம் இருக்கிறது அவனை பார்த்து.கூடவே இருக்கும் ஒருவன் அந்த அடிப்படையில் இந்த பெண் வருகிறார்.

3."பெண்களின் கையைப் பிடித்துக் கொண்டு என்ன தான் பேசுவார்களோ.." இப்படி அடிக்கடி என் மேலாளர் சொல்வார்.அவருக்கு இந்த காதல்,கத்திரிக்காய் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.இன்று தான் பார்த்தேன்.அந்த பெண்ணின் விரல்களும் பேசியது.

விரல் வழியே வழியும் வார்த்தைகள்
குறுக்கே நடப்பவன் செருப்பில் ஒட்டுகிறது
கண் வழியே பாயும் மின்சாரம்
தூரத்தில் இருப்பவன் மீதும் தொற்றுகிறது
குறுக்கே நடப்பவன் பார்வையும்
தூரத்தில் இருப்பவன் பெருமூச்சும்
எரிக்க முயன்று தோற்கிறது
கவனத்தைக் கலைக்க
நடுவே அடுத்த விரல்கள் கடக்கிறது.

இந்த கவிதையில் பிழை இருக்கிறது என்று சொல்லி என்னை கொஞ்சம் வளர்த்து விடுங்கள்.

Thursday, January 21, 2010

இரசனையின் வெளிப்பாடு,குறைபாடு,கோட்பாடு,பெரும்பாடு

சின்ன வயதில் இருந்தே அடிக்கடி என்னுடைய சுற்றத்தில் ஒலிக்கும் வார்த்தைகள்.

"ஊருக்கே ஒரு வழி..உனக்கு மட்டும் தனி வழியா.."

"பாம்பு திங்கிற ஊருக்குப் போனால் முதல்ல நடுத்துண்டை நீ சாப்பிடணும்.."

"அம்மணமா அலையிற ஊர்ல கோமணம் கட்டாதே.."

"பிழைக்கத் தெரியாதவன்.."

இன்னும் தீராமல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.அதற்கு நான் சொல்லும் பதில்களும் மாறவில்லை.

"ஆமா.."

"முடியாது.."

"என் இஷ்டம்.."

"பரவாயில்லை.."

சொன்னவர்கள் யார் என்று பார்த்தால் - தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,மாமா,அத்தை,வாத்தியார்,பிறந்த வாண்டு,அது கூட சுத்தும் கோண்டு,நட்பு, நட்பு(இரண்டு தடவை வந்து விட்டதோ சரி இருக்கட்டும்)

தம்பியிடம் கடைசியாக நடந்த கதையை விவரித்தப் போது கண்கள் விரிய சிரித்துக் கொண்டே சொன்னான். "அடப்பாவி நீ யாரையுமே விட்டு வைக்க மாட்டாயா.."

என் இரசனையின் வெளிப்பாடு
உனக்கோ அதில் குறைபாடு
விவரிக்க நான் பட்டபாடு
புரியாத கோட்பாடு
கிடைக்குமா நல்ல சாப்பாடு
கலைந்து கிடக்கும் இடிபாடு
தெரியாத சமன்பாடு
சரியாக்க பெரும்பாடு
என்னைத் திட்டும் மனசாட்சியின் கூப்பாடு
"போடா பா.."

"பிழைக்கத் தெரியாதவனே.." யாரோ அவருடைய சொந்த பெயரில் என்னை கூப்பிடுவது போல் இருக்கிறது.போய் பார்த்து விட்டு முடிவு செய்கிறேன். நடுத்துண்டு கறியா இல்லை கோமணம் அவிழ்ப்பா என்று.

Wednesday, January 20, 2010

அக்கீலிஸ்,ட்ராய் படத்தின் ஓட்டைகள்,செல்வராகவன்

இதில் வருவது அனைத்தும் என் கற்பனையே.யாரும் என்னை திட்ட வேண்டாம்.நானும் போட்டு விட்டேன்.

அக்கீலிஸ் - சின்ன வயதில் இந்த கதையை படிக்கும் போதும் என்னை அறியாமல் நான் இந்த கதாபாத்திரத்தை நேசிக்க ஆரம்பித்தேன்.கிருஷ்ணரை சாயலில் உள்ளவன்.தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்று அவன் தலைவனால் ஒதுக்கி வைக்கப் படுபவன்.கிருஷ்ணரை அப்படி சொல்லும் சிசுபாலன் வதம் செய்யப்படுவான்.இருவருக்கும் நிறைய பெண்களின் சகவாசம் உண்டு.விஸ்வாமித்திரை பாயாசத்தில் அபிஷேகம் செய்யும் போது உள்ளங்காலை மட்டும் விட்டு விட,அதில் அடித்தால் மட்டும் இறக்க நேரிடும்.அக்கீலிஸ் பிறந்தவுடன் அவன் காலை பிடித்துக் கொண்டு தலைகீழாக ஆற்றில் மூக்க உள்ளங்கால் மட்டும் நனையாது.இறுதியில் ட்ராய் இளவரசன் பாரீஸால் கொல்லப்படுவான் - உள்ளங்கால் அம்பு மூலமாக.இருவரும் நயவஞ்சகமாக எதிரிகளை கொல்வார்கள்.கொல்லப்படுவார்கள்.

ட்ராய் நகரத்தின் உண்மையான கதை - இளவரசன் ஹெக்டர் இருக்கும் வரை ட்ராய் நகரத்தை ஒன்றுமே செய்ய முடியாது என்று தெரிந்தவுடன் குதிரை பயிற்சி எடுக்கும் ஹெக்டரை மறைந்து இருந்து கொல்லும் அக்கீலிஸ் மீது தீராத வன்மம் கொண்டார்கள் ட்ராய் மன்னனின் பிற வாரிசுகள். மகளில் ஒருவளே அக்கீலிஸ் மீது காதல் கொள்வதாக நடித்து கோவிலுக்கு வெறுங்காலுடன் வர செய்து பாரீஸால் கொலை செய்யப்படுவான்.ட்ராய் நகரத்தை வென்றப் பிறகு அந்த பெண்ணை அதே இடத்தில் வைத்து அக்கீலிஸின் மகன் கையால் பலியிட்டார்களாம்.

சுவராஸ்யமான தகவல் - ட்ராய் போருக்கு போனால் மகன் திரும்ப மாட்டான் என்று தெரிந்து அக்கிலீஸ் தாய் அந்தபுரத்தில் பெண் வேடத்தில் ஒளித்து வைத்தார்களாம்.அங்கு வந்தி ஒடிஸி அவனை கண்டுப்பிடிக்க அந்தபுரம் சென்று வாள்,வில் அம்பு,ஈட்டி எல்லாம் வைத்து ஒவ்வொரு பெண்ணாக அழைத்து உனக்கு பிடித்ததை எடுத்துக் கொள் என்று சொல்ல ஒரு பெண் மட்டும் எல்லா அயுதங்களையும் எடுத்தாளாம்.அது யார்.

இது எதுவுமே படத்தில் இல்லை.ஹெக்டர் அக்கீலிஸின் தம்பியை கொன்றப் பின் துவந்த யுத்தம் செய்ய அழைத்து அவனை கொல்வது,ட்ராய் நகருக்குள் குதிரையில் செல்வது எல்லாமே பொய் - குதிரை யோசனை ஒடிஸியுடையது.அந்த சமயத்தில் அக்கீலிஸ் கொல்லப்பட்டிருந்தான்.படம் பார்க்கும் போது தம்பியிடம் லேசாக முணுமுணுத்தேன் எல்லாமே மாற்றி இருக்கிறார்கள் என்று.கதையை தான் மாற்றினார்களே தவிர லாஜிக் எங்கும் மீறப்படவில்லை.

இன்னொரு காரணம் நடிப்பு - பிராட் பிட்(அக்கீலிஸ்) போருக்கு செல்லாமல் இருப்பார்.தம்பி போருக்கு போய் இறந்த செய்தி கேட்டு அழுவார். கண்ணீர் ததும்பும் லேசாக இமைகளை நனைக்கும்.இதுவே தமிழ் சினிவாக இருந்தால் "ஏய்..உய்..ஆய்..அவனை போடணும்" என்று சத்தம் கிளம்பி இருக்கும்.கேட்டா நாங்க எல்லாம் இப்படித்தான் அழுவோம் என்று சொல்வீங்க பரவாயில்லை.தப்பில்லை.

ஹெக்டர் உடம்பை வாங்க வரும் அரசனிடம் பிராட் பிட் சொல்வார் - "நாளையில் இருந்து நீங்கள் எனக்கு எதிரி..இன்று மட்டும் தான் நண்பர்..".அதற்கு அந்த கிழட்டு அரசரின் பதில் - "இப்பவும் நீ என் எதிரி தான்..".எதிரியிடம் பேசும் போது அமைதியாக ஆர்பாட்டமே இல்லாமல் பேசுவது போல் நான் பார்த்தப் படம் - பொல்லாதவன்.இது கூட காப்பி ஸாரி இன்ஸ்பிரேஷன்.

லாஜிக்கைப் பார்ப்போம் - ட்ராய் மண்ணில் முதலில் கால் வைக்கும் எதிரி சாவான் என்று உடனே சொல்வார்கள்.முதலில் கால் வைப்பது அக்கீலிஸ் தான் ஆனால் சாக மாட்டான்.கேடயத்தைப் போட்டு அதில் குதிப்பார்.

இனி ஆயிரத்தில் ஒருவன் லாஜிக்கை பார்ப்போம் - பசி மயக்கத்தில் மயங்கி விழும் கார்த்தி அந்த பெண்களோடு சேர்ந்து கொண்டு பெரிய பாறைகளைத் தள்ளி விடுவாராம்.அதை பார்க்கும் மகாபலிபுரத்தில் தொடுக்கில் இருக்கும் பாறையை நண்பர்கள் ஐம்பது பேர் சேர்ந்து தள்ளப் முயற்சி செய்து முடியாமல் ஒரு புகைப்படம் எடுத்து விட்டு திரும்பினோம்.இதற்கும் அன் லிமிட்டட் மீல்ஸ் கட்டியிருந்தோம்.

தெலுங்கில் பாடும் ரீமாசென் - பாண்டியர்கள் யாருக்கும் தெலுங்கு தெரியாது.தெலுங்கு பேசுபவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டை கைப்பற்றிய களப்பிறையர்கள்.அவர்களுக்கு தான் தெலுங்கு தாய் மொழி.உடனே கார்டு போட்டார்களே என்று சொல்ல வேண்டாம்.சரித்திரம் என்றால் சரியாக சொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் இரண்டு குறு நில மன்னர்கள் என்று சொல்லலாமே.அதுவாவது பரவாயில்லை உடம்பை காட்டி மயக்க பாண்டியப் பெண் அனிதாவிற்கு அம்மா சொல்லிக் கொடுத்தார்களாம்.எவ்வளவு கேவலமான வசனம்.

விஜய்,செல்வராகவன் இருவரும் ஒன்று இல்லை.விஜய் அடுத்தப் படமும் இப்படித்தான் செய்வேன் என்று சொல்லி விட்டார்.செல்வராகவன் இது ஹாலிவுட் என்பது சும்மா என்று பேசுகிறார்.அவதாரில் இல்லாத குறையா என்று கேட்கிறார்.அவதார் நடக்கும் காலகட்டம் என்ன.அது ப்ண்டோரா என்ற புனைவு கிரகம்.மற்றும் அந்த கதை யாருடைய கதையை சார்ந்து இருந்தது எங்கிருந்து நாட் உருவினேன் என்று வெளிப்படையாக ஜேம்ஸ் கேமரூன் சொல்கிறார்.செல்வராகவன் என்ன சொல்கிறார் 30 கோடியில் இதை ஹாலிவுட்டில் எடுக்க முடியுமா என்று காமெடி செய்கிறார்.ஹாலிவுட் படத்திற்கும் நமக்கும் சுமார் முப்பது வருட இடைவெளி இருக்கிறது.இது வித்தியாசமான முயற்சி என்று சொன்னால் அந்த இடைவெளி பெருகுமே தவிர குறையாது.ட்ராய் படத்தில் பிராட் பிட் சண்டையிடும் போது தலைக்கு மேல் ஒரு விமானம் பறக்கும்.பூதக்கண்ணாடி போட்டு பார்த்து அதை கேலி செய்தார்கள். ஆயிரத்தில் ஒருவனில் சாதாரண கண்ணாடியில் பார்த்தாலும் ஆயிரம் தவறு தெரிகிறது.

இது ஈழப் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்.படம் 2009 ஏப்ரலில் வெளியாகி இருந்தால் ஒத்துக் கொள்ளலாம்.ஏன் நீங்கள் தான் அதற்கு முன்னரே படத்தை எடுத்து முடித்து விட்டீர்களே.22 வருடங்களுக்கு முன் நடந்த கொடுமை போய் இருந்தது.அதற்கு முன்னரே இது போல செல்வராகவன் யோசித்து விட்டார் போலும்.ஏன் சோழ அரசியைத் தவிர எல்லோரும் நிறம் கம்மியாக இருக்கிறார்கள் என்று யோசித்தால் அப்போகல்பிட்டா படத்தில் தலைவர் குடும்பத்து பெண்ணைத் தவிர எல்லோரும் நிறம் குறைவாக இருப்பார்கள்.கற்பழிப்பு காட்சிகள் இருக்கும்.அதில் தூங்கும் போது பிடித்து விடுவார்கள்.இதில் மன்னன் தோற்றான் என்று தெரிந்தால் எல்லோரும் தற்கொலை தான் செய்வார்களே தவிர இப்படி சிக்க மாட்டார்கள்.அதுவும் மந்திர சக்திகளை வைத்து கொண்டு சிக்க மாட்டார்கள்.ஆனால் செல்வராகவனை பொறுத்த வரை யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்னால் தற்கொலை செய்ய முயற்சிப்பார்கள்.மெக்கானிக்கல் மாணவன் என்பதால் சரித்திரம் தெரியவில்லை போலும்.

நானே விசிடி கட்டர் உபயோகித்து ஆங்கில படத்தில் வந்த காட்சிகளை எல்லாம் சேர்த்து கொண்டு வந்தால் ஆயிரத்தில் ஒருவனில் பாதி தயாராகி விடும்.அமீர் கான் செய்கிறாரே அதுதான் முயற்சி - தாரே ஜமீன் பர்,3 இடியட்ஸ்.அமீர் கான் சொன்னது மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும் " அமெரிக்கன் எடுத்த படத்தையே மீண்டும் எடுத்து அவனிடம் காட்டினால் ஆஸ்கர் விருது எப்படி கிடைக்கும்.."

இந்த படத்தை ஆதரித்து பின்னூட்டம் இடுபவர்களுக்கு குறிப்பாக கார்த்திகேயன் தமிழ்மணிக்கு - இது விவாதக்களம் தான்.விவாதிப்போம்.நாளையே வேறு விஷயத்தில் இருவரும் ஒரு புள்ளியில் இணையலாம்.யார் என்ன சொன்னாலும் நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் தான்.காரணம் நான் பிடிக்கும் போது மூணு கால் தான் இருந்தது.எனக்கு முன்னாடி ஒரு காலை உடைத்தது யார்.ஈரம்,பசங்க,அஞ்சாதே,சிந்தனை செய்(இதில் மூன்று படங்கள் காப்பி) இது எல்லாம் தான் முயற்சி.ஆயிரத்தில் ஒருவன் அயற்சி.

செல்வராகனுக்கு நன்றிகள் - 7/ஜி ரெயின்போ காலனி என்று படம் எடுத்து டிரெண்ட் செட்டர் ஆனதிற்கு.படுக்கை அறை காட்சிகள் நிறைய அதற்கு பிறகு தான் வந்தது.இதிலும் அவர் டிரெண்ட் செட்டர் ஆகியிருக்கிறார் சென்ஸார் போர்டைக் கொன்று.வாழ்த்துக்கள்.

Tuesday, January 19, 2010

ஆயிரத்தில் ஒரு பின் நவீனத்துவப் பாடல்

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததை காண்போமா
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில்
ஒளிந்த கதை தெரியுமோ
ஆங்கிலப் படம் என்று நிரூபித்தால்
படமெடுப்பதை ஆயிரத்தில் ஒரு பாம்பு நிறுத்துமோ
வியட் நாமில் ஒட்டகம் - கூகுளிட்டால்
பகடி செய்யுதே இணையத்தளங்கள்
வெள்ளை எருமை தின்னப் பிடிக்காதோ
பாண்டிய வாரிசுக்கும்,சோழத் தூதுவனுக்கும்
தூரத்தில் அழகாய் தெரியும் பெரிய பெண்கள் தான்
பேரிளம் பெண்கள் என்றால் பின் நவீனத்துத்தின் சூத்திரமோ
இராஜஸ்தானில் படப்பிடிப்பு என்பதால்
வியட் நாமில் பெரிய பாலைவனமும்,ஒட்டகமும் சாத்தியமோ
இதில் வருவது அனைத்தும் கற்பனையே என்றால்
மேலே சொன்னது அனைத்தும் பொய்யாகுமோ

Monday, January 18, 2010

துவையல் - கோல்மால் ஸ்பெஷல்

தமிலீஷ்,தமிழ்மணம்,சங்கமம் எல்லாவற்றிலும் கள்ள ஓட்டு குத்த முயற்சி செய்தேன்.பக்காவாக எல்லா திரட்டியிலும் விழுந்தது.காரணம் கோல்மால் செய்வது எனக்கு புதிது அல்ல.பழகிய ஒன்று தான்.என்னால் தமிழ்மணத்தில் நாலு ஒட்டுக் குத்தி பரிந்துரையில் நிற்க முடியும்.ஆனால் செய்யவில்லை.இருபது ஓட்டுக் குத்தி மகுடத்திலும் ஏற முடியும்.செய்யப் பிடிக்கவில்லை.தமிழ் மணம் இந்த ஓட்டு முறைகளை நிறுத்தி விட்டு சுழற்சி முறையில் எல்லோருடைய பதிவுகளையும் கொண்டு வரலாம்.நிறைய புதியவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளலாம்.நான் ஏதோ சும்மா சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.சங்கமம்(tamil.blogkut.com) போய் நிறைய ஓட்டு வாங்கிய பதிவுகளைப் பார்க்கலாம்.முதல் ஆறு பதிவும் என்னுடையது தான்.கள்ள ஓட்டே போட முடியாது என்று நினைத்த சங்கமத்திலே இந்த கோல்மால் சாத்தியம் என்றால் தமிழ்மணம்,தமிலீஷ் எல்லாம் என்ன கதியாகும் என்று யோசித்து கொள்ளலாம்.இனி புதியவர்களும் அவர்களே நாலு ஓட்டுக் குத்திக் கொண்டால் பரிந்துரையில் நிற்கும்.எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ரூபாய் ரெண்டாயிரத்தை எனக்கு அனுப்பி வைக்கவும்.குஜராத் பதிவர் என்றால் நாலாயிரம்.பிம்பிளிக்கி பிலாப்பி அதாங்க பத்தாயிரம் ஆவதற்குள் அணுக வேண்டிய முகவரி - 13ம் நம்பர் வீடு, வியட்நாம் காலனி,அண்ணா நகர் முதல் தெரு,சென்னை - 600028.

குமுதம்,ஆனந்த விகடன் இணையதளத்தில் படிக்க காசு தர வேண்டுமாம்.பகீரத முயற்சிக்குப் பிறகு குமுதம் கோடிங்கை உடைத்து விட்டேன். ஒசியில் தான் படிக்கிறேன்.ஆனந்த விகடனை முயற்சிக்க வேண்டும்.பிஹெச்பியை விட ஏ.எஸ்.பி உடைக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.அடுத்த கட்டமாக ஆராய்ச்சி அதை நோக்கித் திருப்பி அதை நன்றாக செய்யப் போகிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் - நிச்சயம் எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் பெயர் இதனால் கெட்டுப் போய் விட்டது.விமர்சனம் செய்த கார்க்கியை விஜய் ரசிகன் என்று கேலி செய்வதைப் பார்த்தால் கொஞ்சம் என்ன நிறையவே பரிதாபமாக இருக்கிறது.அமீர்,செல்வராகவன் எல்லாம் தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகிறேன் என்று உலக சினிமாவை கோல்மால் செய்வதை விட விஜய் செய்யும் ஒரே பாணியிலான படங்கள் எவ்வளவோ மேல்.இதற்கு வேட்டைக்காரன் எவ்வளவோ மேல் என்று சொன்னவனை பார்த்து புன்னகைத்தேன்.காரணம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எல்லாமே கோமாளித்தனங்கள் தான்.அதில் லேட்டஸ்டாக ஒன்று - அழகாக இருக்கும் ஆன்ட்ரியாவை ஏன் இராணுவத்தினர் ஒன்றுமே செய்யவில்லை இந்த கேள்வி என்னிடம் நண்பன் கேட்ட போது மையமாக சொல்லி வைத்தேன் - இன்னும் இரண்டு வருடங்கள் செலவு செய்து இருந்தால் அந்த காட்சி இருந்திருக்கும் என்று.இதை ஆஸ்காருக்கு நாமினேட் செய்து கிடைக்காமல் போனவுடன் அது அமெரிக்கன் விருது என்று யாரும் புலம்ப வேண்டாம். ரீமா நன்றாக நடித்திருக்கிறார் என்று எல்லோரும் சொல்லும் போது எனக்கு மட்டும் சிரிப்பு வந்தது."நன்றாக" நடித்திருக்கிறார் என்னும் வாக்கியம் பின் நவீனத்துவத்தில் வருமா.

தமிழ்படத்தில் வரும் பெயர்கள் கூட ஒரு குறியீடுகள் தான் போல.சிவாவின் நண்பர்களாக வரும் பாஸ்கர்,வெண்ணிற ஆடை மூர்த்தி,மனோ பாலாவின் பெயர்கள் வரிசையாக இல்லாமல் சித்தார்த்,பரத்,நகுல்.என்ன கோல்மால்டா இது என்று நினைக்கும் போதே அடுத்த ஷாக் குத்துவிளக்கு குத்துவிளக்கு என்ற பாடலில் ஆடுவது கஸ்தூரி.அறிமுகமாகும் போது கவர்ச்சியாக நடித்து இருந்தால் இன்று இப்படி நிலைமை மாறியிருக்குமா என்ற கேள்வி எழுந்தது.காரணம் மிஸ் மெட்ராஸ்,ரோஸரி பள்ளியின் முதல் மாணவி.இது தான் விதியின் கோல்மால் போல.வாரமலர் அந்துமணி கூட மதித்து பாராட்டும் நடிகை.

கோவா - நிச்சயமாக பல்ப் வாங்கும் என்று தெரிகிறது.காரணம் மூன்று முதலாவது போட்டியில் இருக்கும் தமிழ்படம்.ஏ செண்டர் ரசிகர்களுக்கான படம் போலத் தெரிகிறது.பி,சியில் எடுபடுமா என்று தெரியவில்லை.பாட்டு பல்லிளித்து விட்டது.தமிழ் சினிமாவின் ராசி பெரும்பாலும் மூன்றாவது படத்தில் தான் வெற்றி இயக்குனர்கள் பல்ப் வாங்குவார்கள்.இதெல்லாம் எனக்கு தோன்றிய கோல்மால்கள்.இது எதுவும் நடக்கவில்லை என்றால் ஆட்டோ அனுப்ப வேண்டாம்.நடந்தது என்றாலும் ஆட்டோ வேண்டாம்.

வலைச்சரம் ஒரு வாரம் நன்றாக இருந்தது.சரியாக செய்தேனா என்று யோசித்து பார்த்தேன்.அதிலும் கோல்மால் செய்து இருக்கிறேன்.அதிரடி வியாழனில் கடைசி அறிமுகம் - எரிமலைக்கு டார்ச் அடித்து விட்டேன்.நல்ல வேளை யாரும் கவனிக்கவில்லை.கவனித்தாலும் பிறந்த நாள் காரணமாக ரெண்டு மிதி மிதிக்கவில்லை.

தமிழ்மணம் விருதுகளுக்கு நானும் பரிந்துரை செய்தேன்.என்ன செய்தேன் என்று தான் ஞாபகம் இல்லை.சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன்.சரியாக செய்து விட்டாலும் என்று சொல்பவர்களுக்கு சரி விடுங்க.ஜெயித்தது எல்லாம் நம்ம நண்பர்கள் விட்டுக் கொடுத்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

என்னால் திரட்டியோ,இணையத்தளமோ உருவாக்க முடியாமல் இருக்கலாம்.ஆனால் புரிந்து கொண்டு கோல்மால் செய்ய முடியும்.இப்படி சொல்ல காரணம் போன பதிவில் உனக்கு படமெடுக்க தெரியுமா என்று கேட்டார்கள் அப்படியும் இந்த பதிவில் இணையத்தளம் அல்லது திரட்டு உருவாக்க முடியுமா என்று யாரவது கேட்டால் என் பதில் முடி...

ஆயிரத்தில் ஒருவன் பதிவு எழுதியதால் இரண்டு ஃபாலோயர்கள் காணவில்லை.இரண்டு பேர் புதிதாக சேர்ந்து இருக்கிறார்கள்.இதை பார்க்கும் போது சின்ன வயதில் பாடிய பாடல் ஞாபகம் வந்தது - "வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும் டும்..".என்ன கோல்மால் செய்தால் யாரும் போகாமல் இருப்பார்கள்.அல்லது இன்னும் 848 ஐடி உருவாக்கி தமிழில் முதன் முதலில் ஆயிரம் ஃபாலோயர்கள் கொண்ட அபூர்வ சிகாமணி ஆகலாம் என்று ஒரு எண்ணம் வந்தது.அது எடுக்கும் நேரத்தை நினைத்து நினைத்து பார்த்தேன்.நெருங்கி அருகில் வராமல் போய் விட்டேன் வேறு வேலையைப் பார்க்க.இதற்கும் யாராவது போய் விடக் கூடாது என்று வேண்டியும் வேண்டாமலும் எனது உரையை அடித்து முடித்து கொள்கிறேன்.

Sunday, January 17, 2010

ஞாயிறு உலக சினிமா திரையிடலில் கலந்து கொள்ளும் மும்பை பதிவர்

நாளை கிழக்குப் பதிப்பகத்தில் உலக சினிமா வெளியிடுகிறார்கள்.அதில் கலந்து கொள்ள மும்பை பதிவர் முடிவு செய்துள்ளார்.இதுவரை அவர் அடித்த லூட்டிகளை மனதில் கொண்டு ஒரு வாசகராய் பிரபலப் பதிவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு முழுப் படத்தையும் சேதாரம் இல்லாமல் பார்த்து விட்டு திரும்புவதாக உத்தேசம்.

எல்லோரும் உஷாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ள்ப் படுகிறார்கள்.உதாரணத்திற்கு அவர் கேபிளிடம் போய் நீங்க தண்டோரா தானே என்று கேட்பார்.அதிலிருந்து நீங்கள் புரிந்து கொண்டு முடிந்த அளவு கவனித்து அனுப்புங்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் பிரதாப் போத்தன் போல் முழிப்பார்.ஆனால் அடுத்த நாளே "என் எதிரே ரெண்டு பீப்பா..கொஞ்சம் எடுத்து குடிச்சா என்ன தப்பா.." என்று ரீமிக்ஸ் வரும்.அதனால் உஷார்.

என்ன நிறத்தில் சட்டை அணிந்து இருப்பார் என்று தெரியவில்லை.நிறம்,குணம்,திசம் எதுவும் தெரியவில்லை.முடிந்தால் டபுள் ஸ்டாராங்காக ரெண்டு போட்டு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி,

நம்பர் 32,6வது குறுக்கு தெரு,
புத்தூர் பஸ் ஸ்டாண்டு,
புத்தூர் மெயின் ரோடு,
புத்தூர்.

அவர் பேரு - வேண்டாம் விடுங்க

Saturday, January 16, 2010

என் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனத்தால் படம் ஊத்தலாம்

இப்படி ஒரு தலைப்பு வைப்பேன் என்று யாராவது ரெண்டு நாட்களுக்கு முன்னால் சொல்லியிருந்தால் நான் சிரித்திருப்பேன்.என்ன கொடுமை அரவிந்த் இது.இப்படி ஒரு அரிய முயற்சியை என் விமர்சனத்தால் நான் செல்வராகவன் முன்னேறுவதை தடுத்து விட்டேன் என்று சொன்னவுடன் பின் நவீனத்துவப் பாணியில் சிரிப்பது எப்படி என்று என் ஆசான் தண்டோராவிடம் கேட்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.காரணம் நான் எவ்வளவோ தடுத்தும் அந்த படத்தை பார்க்கலாம் என்று வற்புறுத்தியதால் தான் போனேன்.என்னால் என் நெருக்கமானவர்களே தடுத்து நிறுத்த முடியவில்லை.நான் போய் மக்களை - போங்க பாஸ் ஆனாலும் ரொம்ப தான் குறும்பு.

அதிக ஹிட்ஸ் கிடைக்க இப்படி எல்லாம் எழுதுகிறேன் என்று சொன்னால் அதற்கு ஒரே வார்த்தையில் தான் என் பதில் வரும் - ஸாரி.எனக்கு ஹிட்ஸ் இதில் நம்பிக்கை கிடையாது.இதை எழுதி பிரபலம் ஆவேன் என்று சொன்னால் அதற்கு இரண்டு வார்த்தையில் பதில் - வெரி ஸாரி.என் நண்பர்களுக்கு கூட நான் ஒரு ப்ளாக்கர் என்று தெரியாது.இதில் வருவது என்னுடைய கருத்து மட்டுமே.நான் வேட்டைக்காரனை கூட தான் விமர்சனம் செய்தேன்.உடனே ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்படி விமர்சனம் செய்ய மாட்டேன் என்று அர்த்தம் ஆகி விடாது.

ஹாலிவுட் படத்தில் பிரமாண்டம் இருக்கிறது தவிர நாம் செய்யாத ஒன்றும் இருக்கிறது - கதை,திரைக்கதை,வசனம் எல்லாம் முடித்தப் பிறகு தான் படம் எடுக்க செல்வார்கள்.நாம் மட்டும் தான் ஸ்கிரிப்ட் முடிவு செய்யாமல் சென்று விட்டு அடுத்தவன் கற்பனையை சுரண்டுவோம்.அப்படி செய்யாமல் 32 கோடியில் சாதனை படம் எடுத்து விட்டார் என்று யாராவது சொன்னால் - அது எல்லாமே விழலுக்கு இறைத்த பீர் மன்னிக்க நீர் தான்.வெளியே வரும் போது தம்பியின் நண்பன் சொன்னான் - "இதற்கு வேட்டைக்காரன் படம் பார்த்து இருக்கலாம்.".நானும் ஆமோதிப்பது போல் சிரித்தேன்.வேட்டைக்காரன் படமாவது தலைவலியை தான் தரும்.ஆயிரத்தில் ஒருவன் நம் மீது ஒருவன் குடித்து விட்டு வாந்தி எடுத்தால் எப்படி மனது வலிக்குமோ அப்படி இருக்கிறது.நான் அந்த தாக்கத்தில் எடுத்தது தான் இல்ல எழுதியது தான் விமர்சனம்.

அப்படி அபத்தம் செய்து கேவலமாக படத்தை எடுத்து விட்டு இந்த படம் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் என்று சொன்னால் நான் நண்பர் கமல் கேவலமான விமர்சனம் என்று சொன்னதை விட கேவலமாக விமர்சனம் செய்யவும் தயங்க மாட்டேன்.ப்ளாக்கர் என்பது ஒரு ஆயுதம்.இது பத்து வருடங்களுக்கு முன் இல்லாத காரணத்தால் தான் கண்டதையும் எடுத்து ஏமாற்றினார்கள்.இனி இது மாதிரி விமர்சனங்கள் வலுப்பெறும்.கேபிள் சங்கரும் இது மாதிரி தான் சொல்லி இருக்கிறார்.நானும் அந்த கட்சியில் நின்றுக் கொள்கிறேன்.வாழைப்பழத்தில் வலிக்காத மாதிரியான விமர்சங்கள் குமுதம்,ஆனந்த விகடனில் வரும்.இங்கு வாழை மரத்தையே சாய்க்கும் அரிவாள் மாதிரியான விமர்சனங்கள் தான் வரும்.

இனி கார்த்திகேயன் தமிழ்மணிக்கு என் பதில்கள்

//பல்வேறு இன்னல்களை அனுபவித்த/ அனுபவித்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு தாங்கள் என்ன சொத்தையே எழுதி வைத்து விட்டீர்களா? இல்லை போராட்டத்தில் ஏதேனும் கலந்து கொண்டீர்களா? வெறும் பெயரும் புகழும் வாங்க இப்படி விமர்சனம் எழுதுவதுதான் உச்சகட்ட அவமானம்........//

என்னால் முடிந்த உதவியை செய்வேன் ஒரு வேளை உணவு கொடுத்திருக்கிறேன்.சொத்து இருந்தால் எழுதி வைக்க முயற்சி செய்வேன்.என்ன செய்ய என்னைடம் சொத்தைப் பல் கூட கிடையாது.இப்படி பின்னூட்டம் போட்டு பெயரும் புகழும் வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டீர்களா என்று நான் சொன்னால் அது எவ்வளவு நகைச்சுவை ஆக இருக்கும்.

//இந்த படத்தில் பெயரும் புகழும் செல்வா வாங்கினாலும் கூட இத்தனை நாளாக ஈழத்தில் நடக்கும் கொடூரங்களை பற்றி முழமையாக தெரியாதவர்களுக்கு அவர்களின் வலி என்னவென்பதை இந்த படம் காட்டி விடும் :(........//

என்னால் செய்ய முடியவில்லை பின் நவீனத்துவையும்,முன் நவீனத்துவையும் காட்டாமல் மறைத்து வைப்பேன்.ஈழத்தின் வலியை இந்த காட்டுமா - வாட் எ ஜோக்.ஈழம் பற்றி மகேந்திரனின் மகன் ஜான் எடுத்த ஆணிவேர் பெட்டியில் தூங்குகிறது.அது வரட்டும் அது சொல்லும்.இப்படி கேவலமாக படம் எடுத்து சொன்னால் நான் ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை.என்னுடன் நடித்த இலங்கைத் தமிழர்கள் இன்று உயிரோடு இருப்பார்களா என்று கண் கலங்கிய நந்தாவுக்கு தான் பெயர்,புகழ் எல்லாம் கிடைக்க வேண்டும்.ஆடை அவிழ்ப்பு இயக்குனருக்கு அல்ல.

//மம்மி, கிலாடியேட்டோர் போன்ற படங்களில் எதுவும் காப்பி அடிக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?//

காப்பி அடியுங்கள்.தப்பில்லை ஆனால் சரியாக செய்யாமல் இருந்து மூலப் படத்தை சிதைத்தால் அது மன்னிக்க முடியாத குற்றம்.ஏன் வெயில்,ஈரம் படங்கள் கூட வெளி நாட்டு படங்களில் இருந்து எடுத்தார்கள்.நான் ஏதாவது சொன்னேனா.

//ஒரு திரைப்படத்தை உருவாக்க அவர்களிடம் உள்ள துறைகள், ஆட்கள் எவ்வளவு என்று தெரியுமா? எல்லாவற்றிற்கும் மேல் அவர்களின் வணிக பலம் மற்றும் மார்க்கெட் என்ன என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்? இதே பட்ஜெட்டை கொண்டு இதே போல் திரைப்படத்தை ஹாலிவுட்டில் தயாரிக்க சொல்லுங்கள் பார்க்கலாம்?//

ஹாலிவுட்டில் ஒருமுறை பட்ஜெட் போட்டால் அப்படியே தான் இருக்கும்.வேண்டும் என்றால் அதுவும் தவிர்க்க முடியாத காரணத்தால் சிறிது ஏறும்.இப்படி ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஆறு கோடியில் இருந்து ஆறு மடங்கு உயர்ந்து 32-36 கோடியில் நிற்காது.

//இந்த படத்துக்கும் உண்மையான வரலாற்றிற்கும் உண்மையான தொடர்பு இல்லை என்று டைட்டில் கார்டு போடும்முன்பு போட்டதை நீங்கள் கவனிக்க வில்லை என்று நினைக்கிறேன் :(//

அப்படி என்றால் பாண்டிய நாடு சோழ நாடு என்று சொன்னல் இரண்டு அரசு என்று சொல்லி இருக்க வேண்டும்.பாண்டிய அரசு,சோழப் பரம்பரை என்று இருந்தால் வரலாறு ஒழுங்காக இருக்க வேண்டும்.

//நீங்கள் இன்றைய மக்களின் மனநிலை மட்டும் வாழ்க்கை முறையை மனதில் கொண்டு பார்த்திபனின் காட்சிகளை கிண்டல் அடித்துள்ளீர்கள்...... உண்மையோ பொய்யோ ஆனால் இப்போதைய முக/மன பாவங்களை விட்டு வித்தியாசமாகதான் இருந்திருக்கும் என்பதை மனதில் கொண்டே அவ்வாறு காட்டப்பட்டுள்ளது..... இது பாராட்டுக்குரியதே அன்றி இகழக்கூடியது அல்ல.......//

பார்த்திபனின் நடிப்பு அப்படி தான் இருந்தது.அதுவும் சில காட்சிகள் என்று தான் சொல்லி இருக்கிறேன்.அதில் ஒன்று ராணுவம் சூழ்ந்த உடன் தற்கொலை செய்ய நினைக்கும் பார்த்திபன் மக்களை விட்டு விட்டு.போர்க்களத்தில் தனியாக நிற்கும் போது சிரிக்கிறார்.

//இதே வகைதான் ரீமா சென்னின் மோகன நர்த்தனமும்........ அவனோடு ஊடல் கொண்டால் தன்மேல் அவனுக்கு ஈர்ப்பு அதிகமாகும் அதன் பொருட்டு அவன் தான் சொல்வதை எல்லாம் செய்வான் என்று நினைக்கும் விதமாகத்தான் அதை காட்டியுள்ளனர்......... இது ஒன்றும் சிலந்தி போலவோ ஜகன் மோகினி போலவோ தொலை காட்டி சம்பாதிக்க எடுக்கப்பட்ட படம் இல்லை........//

சில நடன அசைவுகள் நிகழ்காலத்தில் ஆடும் குத்து போல இருந்தது.அது நடன இயக்குனரின் பிரச்சனை.செல்வராகவனுக்கே என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத போது அவர் என்ன செய்வார்.பார்த்திபன் ஆடுவதை சொன்னேன்.இன்றைய மக்களின் மனநிலை மட்டும் வாழ்க்கை முறையை மனதில் கொண்டு பார்த்திபனின் நடனக் காட்சிகள் இருக்கிறது.

//திரைப்படத்தை நீங்கள் விமர்சனம் செய்து விட்டீர்கள்........ அதே போல் நானும் உங்களது விமர்சனத்தை விமர்சனம் செய்கிறேன்...... உங்களால் பொறுமையாக இருக்க முடிகிறதா என்று பாருங்கள்........//

நான் கோபத்தில் எழுதி இருந்தால் எப்படி எழுதி இருப்பேன் என்பதற்கு தண்டோரா அண்ணன் பதிவில் வந்த கும்க்கி பின்னூட்டம் தான் சாட்சி.

//கும்க்கி said...

தலைவரே.,
கொஞ்சமாச்சும் மனசாட்சியோட விமர்சனம் போடனும்..

பைத்தியக்காரப்பயலுவ....

மூன்று ஆண்டுகள் மயிரை பிடுங்கியது இதற்காகத்தானா...?

நல்லபடி வளர்ந்திருக்கவேண்டிய கார்த்தி என்கிற நடிகனின் கேரியரை நாசம் பன்னியது எதற்காக..?

சரித்திரத்தின் உண்மைகள் எங்கே..?
இவர்கள் பூ சுற்றுவது எங்கே...?

எந்தக்காலத்தில் சோழ மன்னர்கள் வியட்நாமுக்கு போனார்கள்..?
கிடக்கட்டும்.....

எங்கேயாவது ஒரு மயிரளவிற்காவது லாஜிக் உண்டா...?

செல்வராகவன் உடனடியாக ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்க்க வேண்டியது இந்த நாட்டிற்க்கு நல்லது....

அது போலவே கண்மூடித்தனமாக விமர்சனம் எழுதும் ப்ளாகர் புன்னியவான்களும்....

இதை விட வன்முறையாக நிச்சயம் யாராலும் படம் எடுத்து கிழிக்க முடியாது என்பது மட்டுமே அந்த பைத்தியத்தின் சாதனை....

கொடுமை....

ரீமாசென்னின் உடல் மொழி மட்டுமே படத்தை தூக்கி நிறுத்திவிடாது என்பது எல்லோருக்குமே தெரியும் படம் பார்த்த பின்பு...

சென்சார் பொர்டுனுடைய சாவை பாராட்டியே ஆக வேண்டும்....

கடுமையான பின்னூட்டத்திற்க்கு மன்னிக்க....

எவ்வளவு முட்டாள்கள் மீதான நம்பிக்கையில் இவன் 7ழிலிருந்து35கோ வரை மூட்டை ஏற்றியிருப்பான் என நினைக்கையில்.....

மைனர் குஞ்சைசுட்டிருக்க வேண்டும்.//

இப்படி இருந்திருக்கும்.நன்றி கும்க்கி அண்ணா என் மனதின் ஓட்டம் மாதிரி இருந்த பின்னூட்டத்திற்கு.

Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன் - காமசூத்ரா பார்ட் டூ விமர்சனம்

உலக சினிமாக்களின் தொகுப்பு,நாட்டு நடப்பு,இந்திய சரித்திரம்,சுயநலம்,வெற்றி படத்தின் தலைப்பு மற்றும் ஒரு பாடல் எல்லாம் கலந்து அடித்த உப்பு சப்பு இல்லாத கலவை தான் ஆயிரத்தில் ஒருவன்.

முதலில் இதில் நடித்த துணை நடிகர்களுக்கு நிறைய பாராட்டுக்கள்.முதலில் அவர்களுக்கு குடுக்க வேண்டிய பணத்தை குடுங்கள்.குடுக்காத உங்களுக்கு எல்லாம் ஏண்டா நாட்டு நடப்பு.

கிங் சாலமன்ஸ் மைன்ஸ்,மம்மி,மம்மி ரிடர்ன்ஸ்,300,கிளாடியேட்டர்,அபோகல்பிட்டா, ஹிட்டன் டிராகன் க்ரவுச்சிங டைகர் இந்த படத்தில் இருந்து கற்பனை எல்லாம் சொந்த சரக்காக மாற்றி எடுத்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

இலங்கை போர் - சிங்கள வீரர்கள் அல்லது இந்திய அமைதி படையினர் செய்த்தது போல கொலை,குண்டுவீச்சு,ஆடை அவிழ்ப்பு,கற்பழிப்பு என்று இறுதி கட்டத்தில் நான் அந்த அக்கிரமத்தில் நெளிந்தேனோ இல்லையோ வீட்டில் இருந்து கொண்டு அயல் நாட்டு படங்களில் வரும் காட்சிகளை சூட்டு படம் எடுப்பவர்கள் எல்லாம் காட்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்ட ஏன் இந்த நாட்டு நடப்பு.இன ஒழிப்பு நடக்கும் போது நீங்கள் எல்லாம் என்ன புடுங்க போனீர்கள்.இதில் ஏதாவது லாபம் வந்தால் இந்தியாவில் இருக்கும் அகதி முகாம்களுக்கு ஏதாவது செய்யுங்கள்.அப்படி செய்ய மனது வரவில்லை என்றால் அந்த மாதிரி காட்சிகள் இல்லாமல் படம் எடுத்து தொலையுங்கள்.பெயரும் புகழும் வாங்க இப்படி செய்வது தான் உச்சக்கட்ட அவமானம்.

இதில் வரலாறு பாடங்களை எல்லாம் திரித்து பாண்டிய மணிமகுடம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் சொல்படி பாண்டிய மன்னர்கள் நடப்பார்கள்.சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டை ஜெயித்து மணிமகுடத்தை இலங்கையில் கொண்டு பதுக்கி வைத்தார்களாம்.அதை திருட தொடர்ந்து பாண்டிய நாட்டு இளவரசர்கள் முயர்சித்து வந்தார்கள்.அது போல இலங்கைக்கு பதில் வியட் நாம் பக்கத்தில் ஒரு தீவு.மணிமுகுடத்திற்கு பதில் சிலை.வரலாறு முக்கியம்.

உலகத்தின் தீராத கட்டடக் கலையின் புதிர்களான மச்சு பிச்சு போல சில செட் இதில் என்ன இருக்கிறது என்று மூன்று வருடம் என்று தெரியவில்லை.கிராபிக்ஸ் வேலைகள் முற்று பெறாமல் அங்கங்கே பிய்ந்து கிடக்கிறது.

முதல் பாகத்திற்கும் இரண்டாவது பாகத்திற்கும் அவ்வள்வு வித்தியாசம் - கற்பனை தொய்வு தெரிகிறது.இரண்டு பாகத்திற்கும் உள்ள வித்தியாசம் ரீமா சென்னிற்கும் ஆன்டிரியா இருவரும் இருக்கும் முக்கியத்துவம் போல தனியாக தெரிகிறது.

கார்த்தி,அழகம் பெருமாள் எல்லாம் சொன்னதை செய்து இருக்கிறார்கள்.பார்த்திபனின் பல காட்சிகளில் காட்டிய ஓவர் அக்டிங்கும்,நெல்யாடிய நிலமெங்கே பாடலுக்கு அமைக்கப்பட்ட நடனமும் மிக மிக எரிச்சலை தந்தது.விளைவு இனி நெல்லாடிய நிலமெங்கே பாடல்களைக் கேட்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்.

இரண்டாம் பாதியில் வந்த பிண்ணனி இசை எனக்கு பிடித்து இருந்தது.பாடல்கள் என்னை கவரவில்லை ஆனால் பிண்ணனி இசை எனக்கு பிடித்தது.

ரீமா சென் பார்த்திபனிடம் நான் தான் சோழ நாட்டின் தூதுவன் என்று சொல்லிக் கொண்டு அடிக்கும் கூத்து எல்லாம் காமசூத்ரா பாகம் இரண்டு மாதிரி இருந்தது.

32 கோடி வசூல் கிடைப்பது சந்தேகம் தான்.காணாமல் போனவர்கள் பட்டியலில் இது சேரும் நாள் தூரத்தில் இல்லை.

ஆக மொத்தம் ஆயிரத்தில் ஒருவன் - அவசரத்தில் தயாரிக்கப் பட்ட மூக்குப்பொடி.கிச்சுகிச்சு எல்லாம் மூட்ட முயன்று நெடி தான் மிஞ்சி இருக்கிறது.

Thursday, January 14, 2010

துவையல் - சர்ச்சை ஸ்பெஷல்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது,கிராமி நாமினேஷன் என்று கிடைத்தப் பிறகு அவருக்கு திருஷ்டி கழிய வில்லையோ என்று நினைத்திருந்தேன்.அப்படி திருஷ்டி கழிக்க வந்தது தான் விண்ணைத் தாண்டி வருவாயோ.கேட்டு விட்டு இன்னும் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறேன்.போக போக அல்லது கேட்க கேட்க ஈர்க்கும் என்று அவரின் ரசிகர்கள் சொல்லலாம்.அது அவர்கள் செய்து கொள்ளும் சமரசம்.கௌதம் மேனன் கண்ணில் தூசியோடு அடுத்தவர் கண்ணைப் பார்த்தால் இப்படித்தான் இருக்கும்.போங்க பாஸ் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை கெடுக்காதீங்க.என் உடம்புக்கு ஒண்ணும் ஆகவில்லை.அதுதான் என்னுடைய இப்போதைய சந்தோஷம்.வாரணம் ஆயிரம் படத்தில் வருவது போலவே இருக்கிறது ஹோசான்னா பாடல்.அது சரி அமெரிக்காவுல எடுத்தா அப்படி இல்லாமல் எப்படி இருக்கும்.ஆக மொத்தம் எல்லா மொக்கைகளும் சேர்ந்து ஆஸ்கர் நாயகனை காலி செய்ய பார்க்கிறது.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் ஒரு பாட்டு எனக்கு பிடித்திருக்கிறது.எதுக்கு மூணு ஹீரோயின்.ஒ சரி ரன்பீர் கபூர் நடித்த ஹிந்தி படம் என்று சொன்னார்கள்.தனுஸ்ரீ தத்தாவை வீணடித்து இருப்பார்கள் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.தனுஸ்ரீ தத்தாவின் பாடல் ஒன்று யூ டூயுப்பில் பார்த்து அந்த கல்வெட்டில் எழுதியதை எழுத்து கூட்டிப் படித்து தெரிந்து கொள்ளவும்.த்னுஸ்ரீ தத்தா - இம்ரான் ஹாஸ்மி என்று அடித்து பார்க்கவும்.நான் மும்பை முதல் தடவை சென்ற சமயம் தெரிந்து கொண்ட முதல் பெயர் இம்ரான் ஹாஸ்மி தான்.படத்தில் ஒரு வசனம் வருகிறது "எதுவுமே இல்லாவிட்டாலும் நான் ஆம்பளை.எதுமே இல்லாவிட்டாலும் நீ பொம்பள." முடியலடா சாமி.சன் பிக்சர்ஸ் வாங்கி இருக்கிறார்களாம்.இது மாதிரி யாராவது இணையத்தில் எழுதி இருந்தால் போர்க்கொடி தூக்கும் நபர்கள் இந்த படத்தை என்ன செய்ய போகிறார்கள்.பட் எனக்கு விஷால் பிடிக்கும்.பின்ன சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டால் யாருக்கு தான் பிடிக்காது.

கோவா - இந்த வருடத்தின் மிக பெரிய ஏமாற்றம்.வெங்கட் பிரபுவின் மீது கொண்ட ஈர்ப்பு குறைவது போல் தெரிகிறது.அவர் பாணியை கொஞ்சம் மாற்றி கொண்டால் பரவாயில்லை.இல்லை கரகாட்டக்காரன்,தெம்மாங்கு பாட்டுக்காரன்,வில்லு பாட்டுக்காரன் என்று இயக்கி அவர் அப்பாவை போல் காணாமல் போய் விடக் கூடாது.கங்கை அமரன் காணாமல் போன போது கூடவே ராமராஜனும் போனார்.இவர் கூட செல்லப் போவது யார் ஜெய் இல்லை வைபவ் இல்லை என்ன கொடுமை சாரா.

ஹிட்ஸ் சர்ச்சை எழும் போதெல்லாம் வால் பையன் யாருடைய பின்னூட்டத்தில் சொன்னது தான் ஞாபகம் வருகிறது."ஹிட்ஸை வைத்து ஒண்ணும் பண்ண முடியாது.. அதுவே பட்ஸாக இருந்தால் காது குடையலாம்.".என்னுடைய கருத்தும் அதேதான்.

விராத் கோலி நன்றாக ஆடுவதால் சச்சின் திரும்பியதும் கத்தி யார் மேல் விழப் போவது என்று பார்ப்போம்.பலியாடு ரைய்னாவா இல்லை ஜடேஜாவா என்று தெரியும். யாராவது கீழே விழுந்தாலும் அல்லது அவருடைய பேண்ட் அவிழ்ந்து விட்டால் விழுந்து விழுந்து சிரிக்கும் குழந்தைத்தனம் என்றுமே போகாது என்பதற்கு யுவராஜ் சாட்சி. விராத் கோலி தான் இந்த கேலிக்கு ஆளானார்.பைனல்ஸ் பார்க்கவில்லை எப்படியும் தோற்று விடுவார்கள் என்று தோன்றியது.அதுதான் நடந்தது.கடைசி இருபது பைனல்களில் நாம் ஜெயித்தது நாலே நாலு தான்.போங்கடா நீங்களும் கிரிக்கெட்டும்.கொஞ்சம் ஹாக்கி பக்கம் திரும்புங்கள்.

புத்தகக் கண்காட்சி முடிந்தது - யாருடைய புத்தகம் அதிகம் விற்றது என்று தெரிந்தால் அடுத்த சண்டைக்கு வடை தந்து உதவியது போல் இருக்கும்.நானும் ஏதாவது கட்சியில் நின்றுக் கொள்வேன்.எதுக்கு வேடிக்கை பார்க்கத்தான்.இந்த முறை புத்தகம் கிழிக்கப்படுமா,உயிர்மையில் ஜெயமோகன் திரும்புவாரா என்பதைப் பார்க்க டிசம்பர் வரைக்கும் காத்திருக்க வேண்டும் என நினைக்கும் போது கொஞ்சம் ஆயாசமாக இருக்கிறது.அது சரி கச்"சேரி" எல்லாம் டிசம்பரில் தான் நடக்குமாம்.

இரும்புத்திரையில் இந்த பொங்கலில் இருந்து ஒரு நட்டு கூடி இருக்கிறது என்பதும் வராத ஆயிரத்தில் ஒருவன் படமும் அன்றே வருவதால் எனக்கு கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியே.(அப்பத்தானே ஒரு பதிவு தேறும்)

பிறந்த நாள் வாழ்த்துகள் இரும்புத்திரை என்று சொல்லி பொங்கல் அன்று யாரும் ஆட்டோவில் வர வேண்டாம்.மீட்டருக்கு குடுக்க கூட காசு லேது.அதனால் முன்னிட்டு அனைவரும் தலா ஆயிரம் ரூபாய் எடுத்து அவரவர் அக்கவுண்ட்டில் போட்டுக் கொள்ளவும்.

Wednesday, January 13, 2010

பதிவுலக சர்ச்சைகள் - பொருத்துக

1.வினவு --------------------------அ.போர்க்கோடி

2.புத்தக கண்காட்சி -----------------ஆ.மைனஸ் ஓட்டு

3.நற்குடி --------------------------இ.கணக்கெடுப்பாளரின் ஹிட்ஸ்

4.தமிழ்மணம் ----------------------ஈ.மொக்கைப் பதிவர்கள்

5.தமிலிஷ் -------------------------உ.மீ த பர்ஸ்டு

6.சாரு ----------------------------ஊ.காசு குடுத்து சேக்கணுமா இல்லை தானா சேருமா

7.ஜெயமோகன் --------------------எ.கள்ள ஓட்டு

8.நாய்சண்டை --------------------ஏ. பின் "குறி"ப்புகள்

9.பாலோயர்ஸ் --------------------ஐ.மனுஷ்யப்புத்திரன்

10.பின்னூட்டம் -------------------ஒ.நட்சத்திர வாரம்

இலக்கியவியாதி இல்ல இல்ல வாதி ஆக இது உதவுமா.

Tuesday, January 12, 2010

சரக்கு வித் கவுண்டமணி

சமீப காலமாக சிறப்பாக பதிவு எழுதும்(என்ன கொடுமை!) அளவிற்கு யோசிக்க அல்லது யாசிக்க முடியாத காரணத்தால் சரக்கடிக்க கவுண்டமணி செந்திலைத் துணைக்கு அழைக்கிறேன்.சில் கோபங்கள்,அதை சரக்கு விட்டு அணைக்க இதோ கவுண்டமணியுடன் ஒரு கலாட்டா.இது ஏற்கனவே யோசித்து வைத்திருந்த பதிவு.நான் எழுத முடியாத தொடர்பதிவு.(அதான் இந்த வெறியா).

ஆல் இன் ஆல் கடை ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிசோடிக் கிடக்கிறது.கவுண்டமனி பழைய சரக்கு பாட்டிலில் ஏதாவது மிச்சம் இருக்கிறதா என்று துழாவி பார்த்து கொண்டு இருக்கிறார்.பதிவுலகத்தில் இருந்து இரும்புத்திரை சரக்கோடு கவுண்டமணியிடம் பேட்டி வாங்க செல்கிறார்.போகும் வழியில் ஸ்பானர் தட்டி பக்கத்தில் இருக்கும் ஓடாத மோட்டாரில் கொண்டு வந்த பை இடித்து விட..இனி பேட்டி..

கவுண்டமணி - "சரக்கு வாசனை வருது..இருக்குதா கொஞ்சம் குடு டேஸ்ட் பண்ணிட்டு தர்றேன்.."

இரும்புத்திரை - "முதல்ல பேட்டி..அப்புறம் சரக்கு.."

கவுண்டமணி - "கண்ணிலையாவது காட்டு.."

பாட்டிலை காட்டியப் பிறகு பேட்டிக்கு சம்மதம் சொல்கிறார்.

இரும்புத்திரை - "உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு இந்த பெயர் பிடிக்குமா.."

கவுண்டமணி (மனசுக்குள்) - "என்னடா கேள்வி இது.." பிறகு சரக்கை நினைத்துக் கொண்டு (சத்தமாக) என் பெயர் மணியக் கவுண்டன்.ஜாதி நீங்க படிச்சு வாங்குன பட்டமா அப்படின்னு ஒரு தேங்காய் தலையன் கேட்டுப்புட்டான்.பாரதிராஜா அதை சீனா மாத்திக்கிட்டாரு.எனக்கு ராயல்டி தரவில்லை.உடனே கவுண்டன் அதை தூக்கி முன்னாலப் போட்டு கவுண்டன் மணி என்று வைச்சுக்கிட்டேன்.ஷார்ட்டா கூப்பிடுறேன்னு சில டாக்ஸ் மரியாதையே தராம கூப்பிட அதான் ஒரு எழுத்தை தூக்கிட்டேன்.சரி நெக்ஸ்ட்"

இரும்புத்திரை - "அதுல ஒரு துணைக்கேள்வி பாக்கி இருக்கு.."

கவுண்டமணி - "அது வேற இருக்காடா பக்கி..லென் த்தா சொல்ல முடியாது..பிடிக்கும்..இனி ஒரே ஒரு கேள்வி தான் கேட்கணும்..இல்ல படுவா பிச்சிப்புடுவேன்.."

இரும்புத்திரை - "இப்படி எல்லாம் பேச்சு வாங்க நான் செந்தில் இல்ல.."

கவுண்டமணி - "அடுத்த கேள்வியக் கேளு..நச்சுப் பண்ணாத.."

இரும்புத்திரை - "கடைசியாக அழுதது எப்போ.."

கவுண்டமணி - "ஜக்குபாய் நெட்ல ரீலிஸாச்சு இல்ல..அதுக்காக எல்லாம் அழலை.." சொல்லி விட்டு கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்.."

இரும்புத்திரை - "உங்களுடைய கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா.."

கவுண்டமணி - "உனக்கு என்னடா இப்ப வேணும்..இப்ப சரியா சொல்லு..இப்படி சொன்னா கேட்க மாட்ட சொல்லித் தொலை..எனக்கு கை நாட்டு வைக்கிறது தான் பிடிக்கும்..அதை ஞாபகப்படுத்துறதுல அப்படி ஒரு இன்பம்.."

இரும்புத்திரை - "பிடித்த மதிய உணவு.."

கவுண்டமணி - "சொன்னா வங்கி தருவியா..உல்லான் தான் பிடிக்கும்..நடிகன் சூட்டிங்கில் வாங்கி தர்றேன்னு அந்த சத்யராஜ் சொன்னாரு..அதோட ஆளை காணோம்."

இரும்புத்திரை - "வேறு யாருடனாவது நட்பை உடனே வைச்சுபீங்களா.."

கவுண்டமணி - "உடனே வைச்சுக்குவேன்..காசா பண்மா..ஆனா ஒண்ணு..பழகிட்டப் பிறகு தான் மிதிப்பேன்.." கேட்டவுடன் அவர் கால் நீளாத தூரத்தில் தள்ளி அமர்கிறார் இரும்புத்திரை.

இரும்புத்திரை - "கடலில் குளிக்க பிடிக்குமா..இல்லை அருவியில் குளிக்க பிடிக்குமா.."

கவுண்டமணி - "கேள்வியே தப்பு..முதல்ல அது குளிக்க பிடிக்குமா அப்படி இருக்கணும்.."

இரும்புத்திரை - "முதலில் ஒருவரைப் பார்த்ததும் எதை கவனிப்பீர்கள்.."

கவுண்டமணி - "அவங்களோட கு.. குட்டி பர்ஸ் வைக்கிற இடத்தை..ஹேஹ்ஹே..ஏதாவது புரியுதா.."

இரும்புத்திரை - "உங்களிடம் பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன.."

கவுண்டமணி - "கால்கள் - குறி தவறாமல் விழும் உதைகள் நான் குடுத்தால்..அதே கால்கள் மற்றவர்கள் துரத்தும் போது வேகமாக ஓடாமல் இருந்தால்.."

இரும்புத்திரை - "உங்க சரி பாதி கிட்ட பிடித்த விஷயம்..பிடிக்காத விஷயம்.."

கவுண்டமணி - "இடது கைகள்..பந்தியில் யாராவது பார்க்கும் முன்னாடி பக்கத்து இலையில் கை போடுவதால்..அதே தான் இப்போ எல்லாம் லெஃப்ட் அடி சரியா விழ மாட்டேங்குது.."

இரும்புத்திரை - "யார் பக்கத்தில் இல்லாமல் போனதற்கு வருத்தப்படுவீர்கள்.."

கவுண்டமணி - "செந்தில்..இவ்வளவு நேரமா நீ இருக்க..உன்னை உதைக்க முடியல..இதுவே அவனாயிருந்தா.."

இரும்புத்திரை - "இதை எழுதும் போது என்ன ஆடை அணிந்து உள்ளீர்கள்.."

கவுண்டமணி - "டேய் திருடு தப்பில்ல..கொஞ்சமாவது மாத்து..இது பேட்டி.. நான் என்ன ஆடை அணிந்து இருக்கேன்..உனக்கு தெரிய்து தானே விளக்கெண்ண.."

இரும்புத்திரை - "என்ன பாட்டு கேட்பீங்க.."

கவுண்டமணி - "சொர்க்கம் மதுவிலே..சீக்கிரம் முடிச்சு தொலையேன்.."

இரும்புத்திரை - "வர்ண பேனாக்களாக மாறினால் என்ன வண்ணமாக மாற விரு....."

கவுண்டமணி - "டேய் நிறுத்து எத்தனை தடவை சொல்ல..எனக்கு எழுத வராதுன்னு..திரும்ப திரும்ப.."

இரும்புத்திரை - "பிடித்த மணம்.."

கவுண்டமணி - "கோமணம்.."

இரும்புத்திரை - "நீங்க இந்த பேட்டிக்கு கோர்த்து விட போகும் நபர் யார்.."

கவுண்டமணி - "செந்தில் தான்..அவன் அறிவாளியா என்று பார்க்க வேண்டும்.."

இரும்புத்திரை - "உங்களைப் பேட்டி எடுக்கும் என்னிடம் பிடித்த விஷயங்கள்.."

கவுண்டமணி - "ஆமா இவரு பெரிய..பேக்குல வைச்சிருக்கும் சரக்கு தான்.."

பையைப் பிடிங்கி சரக்கை எடுக்கிறார்.பாதி தான் இருக்கிறது.

கவுண்டமணி - "என்ன ஆச்சு..பாதி தான் இருக்கு.."

இரும்புத்திரை - "மோட்டார்லப் பட்டு உடைஞ்சுப் போச்சுன்னு நினைக்கிறேன்.."

தொடரும்..

Monday, January 11, 2010

சுஜாதாஆஆஆஆஆவும்,சென்னை கொலையும்

பத்து வருடங்களுக்கு முன் சுஜாதா நாவல்களை எல்லாம் சட்டை செய்த்தேயில்லை.பாலகுமாரன்,பாலகுமாரன் என்று புலம்பி திரிந்த காலம்.அவர் ஒரு செக்ஸ் எழுத்தாளர் என்று அப்பா சொன்னாலும் இந்த காதில் வாங்கி எந்த காதில் விட்டு விட்டு காயலான் கடைகளில் பாலகுமாரனைத் தேடி அலைந்தேன்.ஆனால் டீன் ஏஜ் முடிந்த சமயம் பாலகுமாரனை ஒட்டு மொத்தமாக நிராகரித்தேன்.கடந்த ஏழு ஆண்டுகளில் பாலகுமாரனை மனம் தேடவில்லை.காரணம் அவர் எழுத்தில் இருந்த வசீகரத்தை இருவருமே(நானும் அவரும்) தொலைத்தது தான்.நிச்சயம் அவர் எழுத்தில் ஏதோ ஒரு தொய்வு தெரிகிறது.

இந்த பாணியிலான விமர்சனத்தை சுஜாதா மீது வைக்க முடியவில்லை.காலம் கடந்து அவர் எழுத்தின் வீச்சு வெவ்வேறு பரிமாணத்தில் மிளிர்கிறது.அதற்கு ஒரு உதாரணம் தான் ஆ என்ற நாவல்.ஆனந்த விகடனில் தொடராக வந்து எல்லா அத்தியாயத்திலும் முடியும் போது ஆ என்று முடிந்த்து.கணேஷ்,வசந்த் இருவரும் இடைவெளிக்கு பிறகு வரும் நாவல்.

மண்டையில் ஏதோ குரல் கேட்கிறது என்று சென்னையில் ஆரம்பித்து டெல்லி வழியாக திருச்சியைத் தொட்டு சென்னைக்கு திரும்பும் கதை.கூடவே டெல்லிக்கும், திருச்சிக்கும் லொங்கு லொங்கு என்று நானும் ஓடினேன்.

1990களில் கணினியைப் பற்றி எதுவும் தெரியாத காலத்தில் கணினித் துறையில் வேலை பார்க்கும் நாயகன் உள்ளுக்குள் கேட்கும் குரலால் த்ற்கொலைக்கு முயன்று பிறகு கொலை செய்யும் கதை.மருந்துகள்,நோயின் பெயர்கள் என்று துல்லியமான ஆராய்ச்சி.

சமீபத்தில் படித்த ஒரு ஆராய்ச்சி - உயிர் பிரியும் போது உடம்பில் இருந்து 21 கிராம் எடை குறைகிறதாம்.உயிரின் எடை 21 கிராம் என்று சொல்கிறார்கள்.

கனவு,ஆழ்மனக்குரல் என்று சகாப்தம் இந்த நாவலில் தெரிந்தது.கண்வன் மனைவி நெருக்கத்தைக் காட்ட வீட்டிற்கு வந்த உடன் டையை கழற்றாமல் கட்டிலில் சரித்தான் என்று வரும்.நானும் சரிந்தேன்.

அது மாதிரி ஒரு குரல் கேட்டு த்ன்னுடைய அம்மாவை கொலை செய்துள்ளான் ஒரு இருபது வயது வாலிபன்.அது சிவபெருமானின் குரல் என்று சொல்கிறான்.

அந்த கதையில் மனைவி தேவகியைக் கொன்று விட்டு விடுதலை ஆகும் சமயத்தில் இன்னொரு நபரால் கொலை செய்யப்படுகிறான்.அவளுக்கும் குரல் கேட்டு இருக்குமோ என்று கேள்வியுடன் அந்த நாவல் முடிந்தது.

இன்னும் பத்து வருடம் கழித்து படித்தாலும் அந்த வீச்சு மாறாது என்பது மட்டும் நிதர்சனம்.

எல்லோருக்கும் உச்சம் உண்டு.அவர்களின் உச்சத்தில் இருக்கும் அடைந்த வெற்றியை நாம் எளிதாக சொல்லி விடலாம்.ஆனால் சுஜாதாவின் உச்சம் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.மேலே பறந்தாலும் தெரியவில்லை.தாழ்ம்பூ கொண்டு சாட்சி சொல்லலாம் என்று பார்த்தால் தாழம்பூவும் உச்சத்தைத் தொடவில்லை போலும்.

Sunday, January 10, 2010

புத்தகக் கண்காட்சி - எனக்கு மட்டும் ஏன் இப்படி?

நான்கு வருட மும்பை வாசம்
இழந்தது எத்தனை எத்தனை
சாருவைப் பார்த்து இரண்டாயிரம் கொடுக்காமல்
இளையராஜா கேள்விகள் சாத்தியப்பட்டிருக்குமா
பக்கத்தில் நின்று பார்த்தால்
பிரபலங்களின் பிம்பங்கள் உடைந்திருக்குமா
இன்னும் பலமாக சர்ச்சைகள் வருமா
இன்னும் பல மாசுப்படாத மாக்கள்
கேள்விக் கணைகளுடன் தொடுக்க தயாராக
கடைசி முற்றுப்புள்ளியும் கேள்வியாக
அடுத்த கண்காட்சியிலாவது நடக்குமா
கா விட்டாலும் வரவாயில்லை
பழமாகும் மீள் பதிவு

Saturday, January 9, 2010

பார்த்திபன் கனவு படத்தின் தாக்கம்

பார்த்திபன் கனவு படம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கும் படம்.குரோம்பேட்டை ராகேஷ் தியேட்டரில் நண்பர்களோடு பார்த்த படம்.அந்த படத்திற்கு போட்டி வெற்றி திரையரங்கில் ஓடிய ஓடியே போன புதிய கீதை(இன்னும் விஜய் நடித்த எனக்கு பிடித்த படங்களில் இதற்கு தான் முதல் இடம்.).பார்த்திபன் கனவு படத்தில் ஆலங்குயில் கூவும் இரயில் பாட்டுக்கு நடுவே ஸ்ரீகாந்த் சில வார்த்தைகளை சொல்வார்.அதற்கு அவர் பாடுவார். படத்தில் வந்த வார்த்தை விளையாட்டுகளில் சிலவும்,அந்த பாதிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் நான் முயற்சி செய்த கவிதை மாதிரிகளும். (படிச்சிட்டு சொல்லுங்க..வேற வழி..இன்னைக்கு பாத்தா அந்த பழைய பேப்பர் என் கையில் சிக்கணும்.எல்லாம் விதி.)

கண்ணாடி

நான் என்னை பார்க்கிறேன்
அது உன்னை காட்டுதே.

சமையல்

உன்னை மையல் கொள்ள வைக்கும்
என் காதல் ஆயுதம்

கனவு

நான் உன்னை நினைக்கிறேன்
அது என்னுள் ஓடுதே

காதல்

நம் இருவர் நட்புக்கு
காலம் காட்டும்(சூட்டும்) பெயர் அல்லவா

குழந்தை

இந்த கவிதை மட்டும்
இரட்டை அர்த்தம் காட்டுதே

திருமணம்

இருமனம் இணைய சுற்ற்ம் சூழ
நடக்கும் ஒரு நாள் திருவிழா

நட்பு

இருவர் மனதில்
சேரும் போதும் பூக்கும் பூவல்லவா
பிரியும் போதும் கருகும் மொட்டல்லவா

பிரிவு

என் மரணம் வரைக்கும்
இனிக்கும் உன் நினைவு
கசக்கும் சில உண்மை

கண்ணீர்

என் கண்கள் கல்ங்கினால்
உன் கண்ணில் காதல் வழியுதே

கற்பு

உருவப் பொம்மை எரிப்பு
கழுதை ஊர்வலம் மனக்கண்ணில் தெரியுதே.

விழிகள்

கவிதை சொல்லிடும்
காதல் படித்திடும்
ஊமை மொழிகளின் ஜால்ங்களாலே

கடிதம்

பொசுங்கி போன பொக்கிஷமாக
பரணில் கிடக்கும் பழைய நினைவுகள்

முத்தம்

உதட்டில் விழாமல்
காதில் தொலைந்த ஈர சத்தம்
இச்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆலங்குயில் கூவும் இரயில்.

Friday, January 8, 2010

சேரன் ரசிகர்களே என்னை வெட்ட வராதீங்க

சேரன் உணர்ச்சிகளின் பொங்குமா சமுத்திரம் என்று சொல்ல மறந்த கதை,ஆட்டோகிராப்,தவமாய் தவமிருந்து படங்களை பார்த்தப் போதெல்லாம் தெரியாமல் போய் விட்டது.முதல் முறை மாயக்கண்ணாடி ஓடாத சமயம் குடுத்த பேட்டியில் தான் தெரிந்தது."மாயக்கண்ணாடியைப் புறக்கணித்த மக்களுக்கு இரசனை இல்லை.." என்று சொன்னார்.அந்த படத்தின் நீதி என்ன - "நீ இருந்த இடத்தில் இரு..தகுதிக்கு மீறி ஆசைப்படாதே.." ஆனால் அவர் மட்டும் சினிமாவில் ஜெயிப்பாராம்.என்ன கொடுமை சேரன் இது.அடுத்த முறை ராமன் தேடிய சீதை படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டு பிறகு மன்னிப்பு கேட்டார்.அடுத்தது ப்ளாக்கர்கள் பொக்கிஷம் கிளாஸிக் என்ற படத்தின் தழுவல் என்று சொன்ன போது நம் பதிவர்களுக்கும் அர்ச்சனை. நடிகைகளைப் பற்றி தவறாக செய்தி வெளியிட்டப் பிறகு நடந்த கண்டன கூட்டத்தில் சமுத்திரம் பொங்கி வழிந்து விட்டது.மீண்டும் இப்போது தான் பொங்கி இருக்கிறார்.(நடுவில் தங்கர் பச்சானும் இவரும் ஆனந்த விகடனில் பொங்கி எழுந்து சண்டைப் போட்டது ஒரு இடைச்செருகல்.)

ஜக்குபாய் இணையத்தில் வெளியாகி விட்டதாம்.அதை தரவிறக்கம் செய்து விற்றவனை ரசிகர்கள் தேடிப் பிடித்து வெட்ட வேண்டுமாம்.அப்படி தேடிப் பிடித்து வெட்டினால் என்ன ஆகும் அந்த ரசிகன் உள்ளே போவான்.அவன் குடும்பம் அனாதை ஆகும்.நீங்கள் உங்க வீட்டில் அமர்ந்து கொண்டு அடுத்த படத்திற்கான கதையை டிவிடி பார்த்து உருவிக் கொண்டு இருப்பீர்கள்.ரசிகன் என்ன உங்களின் எடுபிடியா.அவன் அப்படி வெட்டிக் கொண்டு ஜெயிலுக்கு போய் விட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்."நான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு சொல்லி விட்டேன்..".இப்படித்தானே சேரன்.இனி நீங்கள் கலந்து கொள்ளும்(கொல்லும்) விழாவில் மைக்கை உங்கள் கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்கிறேன்.நீங்க ஏதாவது பேசி அப்புறம் நான் வேற ஒரு பதிவு எழுதணும்.எனக்கு நிறைய வேலை இருக்கு.

கிளாஸிக் என்ற கொரியன் படத்தை உருவிய உங்களை கொரியன் ரசிகர்கள் துப்பாக்கியால் சுட வேண்டுமா இல்ல கத்தியால் வெட்ட வேண்டுமா என்று சொன்னால் கொரியன் ரசிகர்களுக்கு வசதியாக இருக்கும்.

வாசாபி என்ற பிரென்ச் படத்தை உருவி ஜக்குபாய் என்று எடுத்தவர்களை என்ன செய்தால் தகும் அதையும் நீங்களே சொல்லுங்கள் சேரன்.

உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா.அதுவும் பிரபல நாயகர்கள் ரசிகர்களுக்கு தலா பத்தாயிரம் தந்து இந்த வேலைக்கு வைக்க வேண்டுமாம்.போய் முதல்ல டிக்கெட் விலையை குறைக்க வழி செய்யுங்கள்.எல்லா திருட்டுகளும் ஒழியும்.

கில்லி படம் வெளி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னே சென்னையில் திருட்டு விசிடி அமோக விற்பனை.படம் வெளி வந்து எப்படி ஓடியது என்று எல்லோருக்கும் தெரியும்.

அது மாதிரி தான் பருத்தி வீரன் படத்திற்கும் நேர்ந்தது.ஆனாலும் ரசிகர்கள் திரையரங்குகளில் தான் பார்த்தார்கள்.காரணம் கதை.ஜக்குபாய் படத்திலும் அது இருந்தால் படம் ஓடும்.இல்லை திரையரங்கை விட்டு ஓடும்.

போங்க போய் புதுசா நீங்களே ஏதாவது கதை இருந்தா யோசிங்க பாஸ்.அதை விட்டுட்டு அவனை வெட்டு,இவனை வெட்டு என்று சொல்லி விட்டு திரியாதீங்க.

நீங்க ரசிகர்களைத் தூண்டி விடுவதை பார்த்தால் எனக்கு கவுண்டமணி-செந்தில் காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது.கப்பலில் வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி கவுண்டனணிக்கு ஒரு ஆப்பு வைப்பாரே செந்தில்.அது மாதிரி நீங்களும் செய்யாதீங்க.

அப்புறம் சேரனுக்கு ரசிகர்கள் யாராவது இருந்தால் என்னை வெட்ட வர வேண்டாம்.நான் ஒரிஜினல் படமான கிளாஸிக் தான் தரவிறக்கம் செய்வேன் பொக்கிஷத்தை அல்ல.இதுக்கும் தான் தோன்றி என்ற பட்டத்தைப் புதுப்பிக்க வேண்டாம்.மீறி கொடுத்தாலும் சந்தோஷம் தான். எனக்காவது சொந்தமாக யோசிக்கத் தெரிகிறது.ஆனா உங்களுக்கு..

இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை.இனிமேலாவது புதுசா ஏதாவது சொல்லுங்க பாஸ்.இன்னும் உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்.

Thursday, January 7, 2010

இளையராஜா பாணியில் எனக்கு ராயல்டி

என் பதிவுகளைப் படித்து விட்டு சில பன்னாட்டு நிறுவனங்கள் எனக்கு ராயல்டி தருகிறேன் என்று ஒற்றை காலில் எல்லாம் நிற்காமல் நாற்காலியில் இருந்து கொண்டே கட் காப்பி பேஸ்ட் செய்து நன்றியோடு நிறுத்தி விட்டார்கள்.அதிலும் குஜராத்தில் இருந்து இயங்கும் மோடி மஸ்தான் குரூப் எதிர்பதிவுகள் எல்லாம் எழுதி எனக்கு கிடைக்க வேண்டிய நானூறு ஹிட்ஸை அபகரித்து விட்டார்கள்.அதனால் 2009 டிசம்பர் வரை எழுதிய பதிவுகளை ஆப்கானிஸ்தானில் இருந்து நடத்தப்படும் டெக்ரான் மெக்ரான் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளேன்.

அதனால் இனி என் 2009 வருடத்திய பதிவுகளை எல்லாம் யாராவது கணினியில் தரவிறக்கம்(படிக்கிறதே பெருசு) செய்தால் கூடவே அந்த நிறுவனத்தின் பெயர் பொறித்த வைக்கோல் போர் ஒன்று பறந்து வருமாறு செட் செய்யப்பட்டுள்ளது.

நான் பின்னூட்டம் இட்ட பதிவுகளுக்கும் ராயல்டி தந்தால் அந்த பதிவுகளுக்கும் உரிமை கொண்டாடலாம் என்று இருக்கிறேன்.அதற்கு அவர்கள் ஒத்து வந்தால் அடுத்த கட்டமாக படித்த பதிவுகளுக்கு உரிமை கோரப்படும்.

அதனால் இனி எனது 2009 பதிவுகளை ரீமிக்ஸ்,எதிர்பதிவு இப்படி படிப்பது,பின்னூட்டம் இடுவது,ஃபாலோயாராக சேருவது தவிர என்ன செய்வதாக இருந்தாலும் அந்த நிறுவனத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இல்லை என்றால் வருங்காலத்தில் வக்கீலாக போகும் இரும்புத்திரை குட்டி ரசிகர்கள் எல்லாம் இதை முதல் வழக்காக எடுப்பார்கள் என்று எச்சரிக்கை தரப்படுகிறது.

மேலே படித்தது காமெடியாக இருந்ததா இல்லை எரிச்சலை தந்ததா.

இப்படி தான் நேற்று இளையராஜா சொன்னதாக படித்த போது எனக்கு காமெடியாக இருந்தது.சில வருடங்களுக்கு முன் கே.ஜே.ஜேசுதாஸின் மகன் அப்பா பாடிய பாடல்கள் அனைத்தும் அவருக்கே சொந்தம்.ராயல்டி எங்களுக்கு தான் வர வேண்டும்,பாடல்களை எங்களை கேட்டு தான் பயன்படுத்த வேண்டும் என்று கூச்சப்படாமல் சொல்லி வாங்கி கட்டிக் கொண்டார்.

அவர் தயாரித்த படங்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தும்.அவர் இசையமைத்த படங்களுக்கு இது எப்படி பொருந்தும்.இனி அவர் உதவியாளராக வேலை செய்த கே.வி.மகாதேவனின் பாடல்களின் ராயல்டியும் என உரிமை கொண்டாமல் இருந்தால் சரி.அப்படி என்றால் தளபதி,நாயகன் பாடல்கள் அவருக்கு சொந்தமா.மனிரத்னத்திற்கு சொந்தமா.சிந்து பைரவியும்,புது புது அர்த்தங்களும் இளையராஜாவின் உரிமைகளா இல்லை கே.பாலசந்தரில் உரிமைகளா.யாராக இருந்தாலும் அந்த நிறுவனத்திடம் கேட்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.இது யுவன்சங்கர்ராஜாவிற்கும்,கார்த்திக் ராஜாவிற்கும் பொருந்துமா.

வியாபாரத்திறமை மற்றும் உத்தியை எல்லாம் அமீர் கானிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.3 இடியட்ஸ் படத்தை ஏழு வாரத்தில் யூடூயுப் இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.அதுவே தமிழ் சினிமா இணையத்தில் தரவிறக்கம் செய்பவனை கைது செய்ய வேண்டுமாம்.அடுத்த இயக்குனரின்,தயாரிப்பாளர்களின் உழைப்பை இசையமைப்பாளர் மட்டும் தான் அனுபவிக்க வேண்டுமாம்.ராயல்டி கோருவது தவறில்லை என்னிடம் தான் உரிமை பெற வேண்டும் என்று சொல்வதில் மறைந்திருக்கும் உள்குத்து என்ன.இந்த உள்குத்து மூலம் அவர் சொல்ல வருவது என்ன.காலம் பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்.

இந்த சூழ்நிலைக்கு தகுந்த பாடல் ஒன்று இளையராஜாவிற்காக.

"உலகம் இப்போ எங்கோ போகுது..
நமக்கு இந்த அன்னை பூமி போதும்.."

தெரியாமல் பாடல் வரிகளை யூஸ் பண்ணிட்டேனே.

இப்படி எல்லாம் பாட்டு பாடி அல்வா குடுக்க வேண்டியது.அப்புறம் இப்படி பாட வேண்டியது.

"மலேஷியப் பணமும் வேணும்.."

ரீமிக்ஸ் வேற பண்ணிட்டேனே.எனக்கு ஒரு ஓட்டை காலணா தந்தால் போதும்.என் பதிவு உங்களுக்கு தரப்படும்.பயமா வேற இருக்கே.பாரதியின் வரிகளை நினைத்து கொள்கிறேன்.

அச்சம் தவிர
ரௌத்திரம் பழகு

இப்படி எல்லாம் சம்பாதிக்கலாம் என்று தெரியாமல் வறுமையில் வாடி யானையால் இறந்து போன பாரதிக்காகவும்,கணவரின் பாடல்களை மதிப்பு தெரியாமல் இழந்து விட்ட செல்லம்மாவிற்காகவும் கண் சிறிது கலங்குகிறது.

Wednesday, January 6, 2010

எனக்கும் ஒரு உளுத்துப் போன வட கிடைச்சாச்சு - கௌதம் மேனன்

கௌதம் மேனனின் அறிவுஜீவித்தனத்தின் மீது எழுந்த கோபத்தில் சில மாதங்களுக்கு முன் பரிசல்காரனின் பதிவில் போட்ட பின்னூட்டம் இதோ.பரிசல் எழுதிய தற்போதைய தமிழ் சினிமாவின் டாப் டென் எதிர்பார்ப்புகள் பதிவில் ஏழாவது இடம் விண்ணைத் தாண்டி வருவாயா.அதை தொடர்ந்து நான் எழுதிய பின்னூட்டம்.

வாரணம் ஆயிரம் - கௌதம் மேனனின் அப்பாவின் கதையை சொன்ன படம் . அதில் வந்தது எல்லாம் கௌதம் மேனனின் வாழ்வில் நடந்தது தான்.

வாரணம் ஆயிரம் படத்தில் காதல் தோல்வியில் இருந்து கௌதம் (சூர்யா) மீண்டு வந்த பிறகு இராணுவத்தில் சேருவார் .

ஆனால் உண்மையில் அவர் சேர்ந்தது ராஜீவ் மேனனின் உதவியாளராக - இந்த கதை தான் விண்ணைத் தாண்டி வருவாயா .

கதையில் த்ரிஷா சிம்புவின் தங்கையின் தோழி . வாரணம் ஆயிரம் படத்தில் திவ்யா சூர்யாவின் தங்கையின் தோழி .

ஆக மொத்தம் இரண்டு கதையும் ஒன்று தான் . இரண்டையும் குப்பையில் தான் போட வேண்டும் (பாடல்களை நான் சொல்லவில்லை).

தமிழ் ரசிகர்களைப் போல முட்டாள்கள் இருக்கும் வரை இந்த முட்டாள்கள் எடுத்த கதையையே எடுப்பார்கள் .

மதுரையின் மோடி,குஜராத்தின் மஸ்தான் இதற்கு பொங்காத காரணத்தால் நான் பொங்குகிறேன்.காரணம் ஆயிரம் அதில் ஒன்று இதற்கெல்லாம் அவர் பொங்க மாட்டார் என்று நினைக்கிறேன்.(அடுத்த அஜீத் பட இயக்குனர் கௌதம் மேனன் என்று கேள்விப்பட்டேன். )

வாரணம் ஆயிரம் பாடல்கள் வெளியீடு.கௌதம் மேனன் இப்படி சொல்கிறார் - "நானும்,சூர்யாவும் அந்த படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தோம்.அறிமுக இயக்குனராக இருந்தாலும் மிரட்டி இருந்தார்.எங்களுக்கு படம் பிடித்து இருந்தது.அதனால் வாரணம் ஆயிரம் படத்தில் ஒரு பாடலை வெளியிட அவரை அழைக்கிறேன்.அந்தப் படம் சுப்ரமணியபுரம்.வாங்க சசிகுமார்.."

தற்போது அவர் அடித்த அந்தர் பல்டியைப் பார்ப்போம் - "என்னாலும் வன்முறை படங்கள் எடுக்க முடியும்.ஏன் சசிகுமாரை இப்படி தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை.நான் இயல்பான படம் எடுத்தால் அது இங்கீலிஷ் படம் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.என்னாலும் அந்த படங்கள் போல (சுப்ரமணியபுரம்,பருத்தி வீரன் போல) எடுக்க முடியும்.."

இதற்கு என் பதில் - "எடுக்க வேண்டியது தானே.காக்க காக்க,வேட்டையாடு விளையாடு,பச்சைக் கிளி முத்துச்சரம் எல்லாம் வன்முறை இல்லாத படங்களா..இல்லை கெட்ட வார்த்தைகளே அந்த படத்தில் வரவில்லையா..காக்க காக்க,வேட்டையாடு விளையாடு,பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தில் வில்லங்களுக்கு நீங்கள் குரல் கொடுத்தது இன்பத்தேனாக காதில் பாய்ந்ததே.சசிகுமாரை கொண்டாடமல் என்ன செய்வார்கள்.அவர் படம் ஏ,பி,சி என்று எல்லா செண்டர்களிலும் ஓடுகிறது.உங்கள் படம் ஏ செண்டரைத் தாண்டினால் சிங்கி தான் அடிக்கும்.வினியோகம் செய்தவர்களின் நிலைமை - சிங்கிள் டீக்கு திண்டாடுவார்கள்..சுப்ரமணியபுரம் வந்தப் பிறகு வாங்க சசிகுமார் வாங்க கேஸட் ரீலிஸ் செய்யுங்கள் என்று குரலில் தேன் தடவி அழைத்தது யார்..கிராமத்து படம் எடுப்பேன் என்று யாரும் சொல்வதில்லை.எடுத்து விட்டு சொல்லுங்கள்.ஹாலிவுட்டில் கிராமங்கள் இல்லையா.."

ஏன் இந்த மாற்றம் என்று கொஞ்சம் யோசித்து பார்த்தால் சசிகுமார் தற்போது நகரம் என்று நகரத்து கதையை இயக்குகிறார்.இதிலும் வெற்றி பெற்று விடுவாரோ என்ற பயமா கௌதம் மேனன்.மிஷ்கினை சிறந்த இயக்குனர் என்று சொல்ல மாட்டார்.காரணம் அஞ்சாதே.மிஸ்டிக் ரிவர் படத்தின் தழுவல் என்று சொன்னாலும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.அவ்வளவு நேர்த்தியான இயக்கம்,திரைக்கதை அமைப்பு.காக்க காக்க படத்தை விட நூறு மடங்கு சிறந்தது.வன்முறை காட்சிகள் எல்லாம் குறைவு.உங்கள் வேட்டையாடு விளையாடு படத்தின் வன்முறைகளை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.நாலு ஆங்கில படத்தில் இருந்து காட்சிகள் எடுத்தால் அது நேர்த்தியான படமாக இருக்கும்.அதைதான் நீங்கள் செய்து வருகிறீர்கள்.மிஷ்கின் உங்களை விட சிறப்பாக செய்கிறார்.அதனால் சிறந்த இயக்குனர் என்று ஒத்துக் கொள்ள ஈகோ தடுக்கிறது.சசிகுமாரும் உங்களை மிஞ்சி விட்டார் என்ற பயம் தான் உங்களை இப்படி எல்லாம் பிதற்ற செய்கிறது.

அடுத்து ஏற்கனவே அடித்த பல்டி - "லிங்குசாமியின் பீமா - அந்த இறுதி காட்சி இந்த படத்தில் இருந்து திருடப்பட்டது,இப்படி எல்லாம் எடுக்க வேண்டுமா என்று அப்பட்டமாக ஆனந்த விகடனில் பேட்டிக் கொடுத்து விட்டு அவர் வருத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்.அதனால் ஸாரி. காலையில் சாப்பிட்டது பூரி.மண்ணு அள்ள வந்தது லாரி என்று சில மாதங்கள் கழித்து இந்து நாளிதழில் ஒரு பேட்டி.ஏன் இந்த அந்தர் பல்டி.

இப்போது அதே ஆனந்த விகடன் - "எனக்கு "இந்த" அமீரின் மீது இருந்த மரியாதையே போய் விட்டது.டோட்ஸி படம் எடுக்க அமீர் தேவையா..".இந்த என்ற வார்த்தையில் தான் எவ்வளவு அலட்சியம்.ஹிந்து நாளிதழில் உங்கள் ஸாரி,பூரி,மண்ணு லாரி அந்தர் பல்டி பேட்டிக்காக காத்திருக்கிறேன்

கௌதம் மேனனின் புத்திசாலித்தனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.பேக்லாஸ்(BACKLASH) - 1999 படத்தை சுட்டு காக்க காக்க எடுத்து விட்டு என்ன பில்டப். பேக்லாஸ் படம் எடுக்க "இந்த" கௌதம் மேனன் தேவையா.

அந்த படத்தின் கதை - படத்தின் ஆரம்பத்தில் நாயகி தங்கியிருக்கும் ஹோட்டல் நீச்சல்குளத்தில் மயங்கி கிடப்பார்.அங்கு இருந்து அவர் கதை சொல்வார்.கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவனை கொன்று விட அவனுடைய சொந்தங்கள் அவளை மிரட்டி பழி வாங்க துடிக்கும் கதை.நாயகிக்கு பதில் சூர்யா ஒரு ஆற்றங்கரையோரமாக மயங்கி கிடப்பார்.அங்கிருந்து கதை சொல்வார்.

இதுல என்ன கொடுமைன்னா இந்த படத்தை பற்றி எங்கும் அவ்வளவாக சொல்லப்படவில்லை.தெரியாமல் திருடி பெயர் எடுத்து விட்டு சரியாக திருடாதவனைப் பார்த்து தரையில் புரண்டு புரண்டு சிரிப்பது போல் உள்ளது கௌதம் மேனன் செய்வது.

இரண்டுமே திருட்டுத்தான்.நாட்டையே சுரண்டும் பெரும் பணக்காரத் திருடன் வகையராக்களில் ஒருவர் தான் கௌதம் மேனன்.பிக்பாக்கெட் திருட்டுக்கு மிதி வாங்கும் பாவப்பட்ட கும்பல்களில் ஒருவர் தான் அமீர்.நாங்க எங்கள் காசை இழக்கிறோம்.அமீரை திட்டுகிறோம்.இன்னொரு ஹாலிவுட் திருடன் திட்டினால் அவருடைய பழைய கதைகளை நோண்டி வெளியே எடுப்போம்.(சந்தேகம் ராஜேஷ்குமாரின் 1989 நாவல்களில் உள்ள கதையும் வேட்டையாடு விளையாடு கதையும் ஒன்றா.)

விஜய் கதை கேட்டு விட்டு திருப்பாச்சி,சிவகாசி டி.வி.டி கொடுத்தார் என்று ஒரு பெட்டி கொடுத்தார்.திரும்ப விஜய் கூப்பிட்டால் கதை சொல்ல போகாமல் இருப்பாரா மானமுள்ள மகராசன்.காலம் பதில் சொல்லும்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் கதை ஆரம்பத்தில் இருக்கிறது.அமெரிக்காவுல சூட் செய்தால் தான் படம் ஓடுமாம்.எவன் வீட்டு காசு.மிச்சம் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற குப்பை வரட்டும்.அப்போ தெரியும்.

Tuesday, January 5, 2010

முத்தம்,யுத்தம்,சத்தம்,மொத்தம்

அழுத்தமான முத்தம் கிடைத்திருக்குமா
யுத்தம் நடக்கும் சமயத்திலும் சாத்தியமா
ஷாஜகான் பக்கங்கள் காற்றில் பிரியும் போது
எழும் பதிலில்லாத கேள்விகள்
தூக்கத்தில் உதடு பிரிந்து
சிரிப்பது எனக்கே தெரிகிறது
கட்டில் ஆடும் சத்தத்தில் கேட்கிறேன்
மும்தாஜின் பதினாலு பிரசவங்களின் அழுகைகளையும்
தாஜ்மஹால் செதுக்கிய உளியின் ஓசைகளையும்
காலையில் நண்பர்கள் சொன்னார்கள்
என் ரசனைகளின் அளவுகளை மொத்தமாக
மார்கெட் போன நடிகையின் பெயரை
விற்பனை செய்தேனாம் தூங்க விடாமல்
ரசனைகளைக் காப்பாற்றவும்,உளறவும்
புதுப் பெயர் கிடைக்குமா சில்லறை விலையில்??

Monday, January 4, 2010

துவையல் - நாவல் ஸ்பெஷல்

தொழில் நுட்பங்களின் முன்னேற்றமா என்று தெரியவில்லை.1990களில் இருந்த கற்பனை இப்போது இல்லை.2000களில் இருந்த கற்பனையும் இன்னும் குறைந்து உண்மையான கற்பனை வறட்சியை அசிங்கமாக போட்டு உடைக்கும் நாள் வரும்.2010களில் இது நடக்கும்.சுஜாதாவை மிஞ்சும் அளவிற்கு யாராவது வர வேண்டும் இதுதான் என் எதிர்பார்ப்பு.அது முடியாது அவர் அடுத்த இடத்தையாவது நெருங்க வேண்டும்.

அப்படி 1990 - 2003 வரை படித்த சில நாவல்களின் தொகுப்பு.

சுபாவின் முதல் நாவல் - பெரியம்மா பையனுக்கும்(கதையின் நாயகிக்கு) ,சித்திப்பெண்ணும் (கதையின் நாயகனுக்கு) இடையே இருக்கும் காதல் தான் கதை.ராதா என்று நாயகியின் பெயர் மட்டும் தான் ஞாபகத்தில் உள்ளது.காதலுக்கு எதிர்ப்பு,நாயகன் வெளியூர் பயணம்,பெரிய படிப்பு மற்றும் உத்தியோகம்,ராதாவின் விதவை கோலம் (ஆணியம்..),அவளுக்கு அவன் தரும் பாதுகாப்பு என்று முடியும் நாவல்.படிக்கும் போது வயது பத்தொன்பது என்னை விட மூன்று வயது குறைவான தம்பிக்கும் இதை சிபாரிசு செய்தேன்.கத்தி மேல் நடக்கும் கதையில் ஆபாசம் இல்லாதது பெரிய பலம். சுரேஷும்,பாலாவும் ஆளுக்கொரு அத்தியாயம் எழுதினார்களாம்.

ஈரம் படத்தின் கதையைக் கொண்டு சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வந்த கதை.அக்கா,தங்கை இருவரையும் மணக்கும் ஒருவன்.அக்கா,தங்கை இருவருக்கும் காதல்கள் உண்டு.அக்காவை கொன்றப் பிறகு சூழ்ச்சி செய்து தங்கையும் திருமணம் செய்து கொடுமை செய்யும் ஒரு சைக்கோவின் கதை.அக்காவின் கொலையைக் கண்டுப்பிடிக்க களத்தில் இறங்கும் டிடெக்டிவ் காதலன்.இறுதியில் தங்கையை கொல்லப் போகும் போது இரண்டு பெண்களின் முன்னாள் காதலர்களும் இன்னாள் கணவனிடன் இருந்து காப்பாத்தும் கதை.

இரயில் ஓட்டும் ஜேம்ஸ் தினமும் சிக்னலுக்காக ஒரு இடத்தில் அரை மணி நேரம் இருக்கும் போது பக்கத்தில் இருக்கும் ரயில்வே குடியிருப்புக்குள் சைக்கிள் கேப்பில் போய் நண்பனின் மனைவியிடம் காதல் வயப்படும் கதை.துரோகம் தெரிந்த பிறகு அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள,வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி கொண்டு குடும்பத்துடன் தப்பிக்கப் பார்க்கும் ஜேம்ஸ் மற்றும் அவன் குடும்பத்தினரை மட்டும் ஆவியாக வந்து கொல்லும் கதை.

சின்ன வயதில் எட்டாவது படிக்கும் போது ஒரு ஆசிரியை மீது மட்டும் பெரிதாக ஈர்ப்பு உண்டு.காரணம் சங்கு கழுத்து என்று ஒரு நாவலில் வந்த கற்பனை எழுத்துகள்.நாயகனுக்கு பாடம் எடுக்கும் டீச்சர் மீது இனம் புரியாத நேசம்.காரணம் சேலை உடுத்தும் பாங்கு,சங்கு கழுத்து.படித்து பெரியவனாகி ஒரு கல்லூரியில் விரியுரையாளனாக சேரும் அவனுக்கு முதல் நாளே அதிர்ச்சி காத்திருக்கிறது.அவனிடன் மாணவியாக படிக்கும் எல்லாம் இழந்து விட்டு தெருவில் நிற்கும் சங்கு கழுத்து ஆசிரியை.மனப்போராட்டங்களை சொன்ன கதை.

அனுராதா ரமணனின் இரண்டு கதைகள் - கதையின் நாயகனை காதலிக்கும் பெண் அவள் அப்பாவின் கடனால் கை நழுவி கூடப் படிக்கும் தோழிக்கே அம்மாவாக போகும் கதை.பிறகு முதல் பிரசவத்தில் இறந்து விட, தோழி தன் தங்கையை சொந்த பெண் போல அவளை கரை சேர்க்கும் கதை.நாயகனுக்கு கண் பார்வை போய் விடும்(பெண்ணியம்) பிறகு அவனை திருமணம் செய்யும் என்று நிறைவடையும்.

சின்ன வயதில் தாழ்ந்த ஜாதி பையனுடன் காதல்.ஊருக்கு ஒதுக்குப்புரமான வீட்டில் அவசரமாக கூடல்.அவளின் அப்பாவின் அச்சுறுத்தல் காரணமாக ஊரை விட்டு ஓடிப் போகும் கதையின் நாயகன்.அமெரிக்காவுக்கு இரண்டு வருடங்கள் நாடு கடத்தப்படும் நாயகி கூடவே அவள் குடும்பமும்.பத்து வருடங்கள் கழித்து பெரிய தொழிலதிபராய் திரும்பும் நாயகன் இல்லாத குடைச்ச்ல் எல்லாம் குடுத்து நாயகியின் சொத்துகளை அடைகிறான். அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது நாயகிக்கு ஒரு தங்கை புதிதாக பிறக்கிறாள்.கதையின் முடிவில் தான் தெரியும் குழந்தை யாருடையது என்று அதுவும் அந்த ஒதுக்குப்புறமான வீட்டில் இருவரும் சந்திக்கும் போது.

இப்படி எல்லாம் கதை எழுத எனக்கும் ஆசை தான்.ஆனால் என்ன செய்ய நானும் தொழில் நுட்பங்களுக்கு அடிமை ஆகி விட்டேனே.இன்னும் இருக்கிறது பதிவு எழுதும் ஞாபகத்தில் வரவில்லை.

Sunday, January 3, 2010

மரித்து போன நினைவுகள்

ரஜினி படப்பெயர்களை எழுதி விளையாட
சேகரித்த சிகரெட் அட்டைகள்
நாடுகளின் எண்ணிக்கையைக் கூட்ட
நண்பனிடம் திருடிய தபால்தலைகள்
ஒளிந்து ஒளிந்து காதலித்த
மொட்டை மாடி பெண்களின் பெயர்கள்
வேலை தராத நிறுவனங்கள்
அம்மா,அப்பா,ஆட்டுக்குட்டி காட்டிய
கையாலாகாத தருணங்கள்
எதுவுமே நினைவிலும் இல்லை
நினைப்பதுமில்லை
யாராவது,ஏதாவது நினைவு படுத்தும் வரை
நினைவிருக்கும் வரை.

Saturday, January 2, 2010

அபிராமி,அபிராமி - குணா கமல்,லட்டு

மடக்கி மடக்கி எழுத நினைக்கும் போதெல்லாம்
வார்த்தைகள் பிடிப்படுவதில்லை
எதிர்வினைக்கான காரணம் எழும் போதெல்லாம்
ஆற்ற நேரம் கிடைப்பதில்லை
கோபத்தில் முகம் சிவக்கும் போதெல்லாம்
கெட்ட வார்த்தைகள் சிக்குவதில்லை
நேரத்தை கொல்ல நினைக்கும் போதெல்லாம்
இணையத்தில் வேட்டைக்காரன் அகப்படவில்லை
அப்போதெல்லாம் வராத வருத்தம்
சற்றே கிளறி எழுந்து அடங்குகிறது
மிட்நைட் மசாலாவில் சரியாக தெரியாத
நாலாவது வரிசையில் ஆடும் துணைநடிகையின் முகம்.

Friday, January 1, 2010

வாய்ப்பு தரப்படாத இரண்டு திறமையான இசையமைப்பாளர்கள்

உல்லாசம் படத்தின் பாடல்களை முதல் முறையாக கேட்டு விட்டு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று தான் நினைத்து கொண்டோம்.பிறகு படம் பார்க்கும் போது இசை என்று கார்த்திக் ராஜாவின் பெயர் இருந்தது.அண்ணன் தம்பி இருவரும் ஒரே துறையில் இருந்தால் உடனே ஒப்பீடுகள் தொடங்கி விடும். அதில் சிக்கிக் கொண்டவர் தான் கார்த்திக் ராஜா.2000ம் ஆண்டுக்கு முன் வரை இந்த ஒப்பீடுகள் இல்லை.காரணம் இரண்டு பேரும் பெரிதாக வெற்றிப் படங்கள் தரவில்லை.தலா ஒரு ஹிட். கார்த்திக் ராஜா - உல்லாசம்.யுவன்சங்கர் ராஜா - பூவெல்லாம் கேட்டுப்பார். பிறகு யுவனுக்கு அமைந்த கூட்டணிகள் போல கார்த்திக்ராஜாவுக்கு அமையவில்லை.(செல்வராகவன் - 5,அமீர் - 4 ,சிலம்பரசன் - 3, விஷ்ணுவர்தன் - 4,வெங்கட் பிரபு - 3) இப்படி நல்ல பாடல்கள் வாங்க தெரிந்தவர்கள் யுவனோடு சேர்ந்தது தான் இந்த வெற்றிக்கு காரணம்.கே.எஸ்.ரவிக்குமார் எதிரி படத்திற்கு எப்படி பாடல்கள் என்று கேட்டாலே அதிகம்.

அது மாதிரி முழுப்பாடல்களுடன் என்னை கவர்ந்த ஒரு படம் ஆல்பம்.(வசந்தபாலின் முதல் படம் - ஆப்பம் ஆகி விட்டது.பாடல்கள் எனக்க்கு மிகவும் பிடித்து இருந்தது.)செல்லமே செல்லமே என்றாயடி என்று ஒரு பாடல் இன்று கேட்டாலும் மனதை அள்ளுகிறது.நல்ல கூட்டணி அமையாமலே திறமைகளை காட்ட வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

நாளை,டும்டும்டும்,உள்ளம் கொள்ளை போகுதே படங்களும் அவர் இசையில் வந்து குறிப்பிடத்தகுந்த படங்கள் ஆகும்.

இன்னொரு இசையமைப்பாளர் ரஞ்சித் பரோட்.மின்னல் ஒரு கோடி என்று ஹரிகரன்,சித்ராவின் குரலில் இன்றும் நான் விரும்பும் பாடல்.பத்து நாட்களுக்கு முன் ஏதாவது புதுப்பட பாடல்களை கேட்டிருப்பேன்.இதற்கு இசையமைப்பாளர் யார் என்று கேட்டு பல்ப் வாங்குவேன்.அப்படி எல்லாம் இல்லாமல் இத்தனை வருடங்கள் கழித்தும் நிறைய வரிகள் அந்த பாடலில் வரி மாறாமல் தெரிவது எனக்கே ஆச்சர்யம் தான்.

வி.ஐ.பி படத்திற்கு பின் காணாமல் போய் பின் 2007லில் தான் திரும்ப வந்தார்.மீண்டும் உற்சாகத்தோடு திரும்ப வந்து ஒரு ஹிட் ஆகாத படத்துக்கு இசையமைத்தார்.படம் உற்சாகம்.நந்தா,ஷெரின் நடித்தது.பாடல்கள் எல்லாம் அருமை.பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை.அது சரி நாம் தான் ஜெயிக்கும் குதிரை பின் போய் தானே உதை வாங்குவோம்.ஒரு முறை கேட்டு பாருங்கள்.பிரீத்திக்கு இல்ல இல்ல பிடிக்கும் என்பதற்கு நான் கேரண்டி.

சந்தர்ப்பமே குடுக்காமல் ஒப்பீடு செய்வதில் இருப்பதைப் போல முட்டாள்த்தனம் எதிலும் இல்லை - இது எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொள்வது.