Wednesday, November 18, 2009

தொலையாத நினைவுகள்

சின்ன வயதில் இருந்து தள்ளி நின்றே என் பெரியப்பாவை பார்த்திருக்கிறேன்.கம்பீரமான குரல் அவருக்கு.இப்படி தான் வசீகரிக்கும் குரல்கள் என்ற பதிவிலும் எழுதி இருக்கிறேன்.அந்த பதிவில் முதல் பத்தியின் துவக்கமே அவர் தான்.அது போல அவர் தான் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி.அவரை உதாரணமாக கொண்டே நானும் என் தம்பியும் வளர்ந்தோம்.காரணம் தினம் பத்து மைல்கல் காலையிலும் மாலையிலும் நடந்தே சென்று படித்தார் என்று எல்லோரும் சொல்வார்கள்.அப்படி கஷ்டப்படாமல் படிக்க எனக்கு எல்லாம் வாய்ப்பு கிடைத்ததே அவரை பார்த்து தான்.

போன வெள்ளிக்கிழமை காலையில் ஏதோ கெட்ட கனவு.நான் வேலை அதிகமாக இருக்கும் என்று நினைத்து கொண்டேன்.ஆனால் அவருக்கு உடம்பு சரியில்லை என்று தெரிய வந்தது.இன்று எந்த கனவும் இல்லாத உறக்கம்.போர்வையை கூட கலைக்காமல் உறங்கி இருக்கிறேன்.அப்பா காலையில் அழைத்து பெரியப்பா தவறி விட்டார் என்று சொன்னார்.

நேற்று நான் சுஜாதா பதிவில் இப்படி எழுதி இருந்தேன்.

"Death is nothing to us since so long as we exist death is not all with us but when death comes.we do not exist."

இந்த வார்த்தைகள் அப்படியே அட்சரம் பிசகாமல் பலித்து விட்டதே.இதை எழுதாமல் இருந்திருக்கலாம் என்று காலையில் மிகவும் வருந்தினேன்.

என் பெரியப்பா பாளையங்கோட்டையில் ஒரு பெரிய வழக்கறிஞர். அவருடைய பெயர் ஆ.கருப்பையா.

இனி என் குடும்பத்தில் எத்தனை தலைமுறை வந்தாலும் அவர் பெயரை உச்சரிக்காமல் உதிக்காது.

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்யுங்கள்.

5 comments:

அகல்விளக்கு said...

ஆழ்ந்த அனுதாபங்கள் தல.
சாரி

நிச்சயம் அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறேன்

தினேஷ் said...

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறேன்

velji said...

பிரார்த்தனைகள் நண்பா.

குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Raju said...

ஆழ்ந்த அணுதாபங்கள்...!

Unknown said...

வருத்தங்கள் நண்பா..

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..