Sunday, November 22, 2009

என்னது ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி ஆயிட்டாரா?

"என்னது ஒபாமாவுக்கு நோபல் பரிசு குடுத்தாங்களா.." அதிர்ச்சியில் வாய் விட்டே கேட்டு விட்டான் வசந்த்.

"எதுக்கு இப்போ இவ்வளவு ஷாக்..அது நடந்து பல மாசம் ஆகுது.." என்று அவனுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தான் ரமேஷ்.

"எனக்கு தெரியாமா எப்படி நடந்தது..எதுக்குடா கொடுத்தாங்க.."

"அவர் அமெரிக்க ஜனாதிபதி..அமைதிக்காக குடுத்தாங்க.."

"என்னது ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி ஆயிட்டாரா.." என்று வசந்த் கேட்டதும் தான் தாமதம்.ஒரே கல்ப்பில் அடித்து விட்டு வசந்தை முறைத்து கொண்டு இருந்தான் ரமேஷ்.

"ஜார்ஜ் புஷ் பதவி விலகிட்டாரு..அதுக்கப்புறம் நடந்த தேர்தலில் இவர் ஜெயித்து விட்டார்.."

"ஜார்ஜ் புஷ் பதவி விலகிட்டாரா.."

"ஆமா இராக் கூட சண்டை போட்டு,சதாம் உசேனை கொன்று விட்டு தான் அடங்குனாரு.."

"சதாம் உசேன் செத்துட்டாரா.."

"இராக் கூட சண்டை போட்டதை விட்டுட்ட.."

"வேற என்ன நடந்தது அவர் ஆட்சியில.."

"டிவின் டவரை இடித்து விட்டார்கள்.."

"என்ன டிவின் டவரை இடித்து விட்டார்களா.."

"ஆமாண்டா அந்த வருசத்துல கலைஞரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.."

"என்ன அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா.."

"ஆமாண்டா பன்னி..இன்னும் தெரியனுமா..ராஜிவ் காந்தியைக் கொன்னுட்டாங்க..எம்.ஜி.ஆர் உடம்பு சரியில்லாம இறந்துட்டார்.அதுக்கு முன்னாடி காமராஜர்,அண்ணா எல்லோரும் இறந்துட்டாங்க.." ரமேஷ் கோபத்தில் பொறிந்தான்.எண்ணெய் சட்டி மட்டும் இருந்தால் வசந்தைப் பொறித்து இருப்பான்.

முடிவு ஒண்ணு :

"ரமேஷ் இப்போ ஏன் கோவப்படுற.."

"பின்ன என்னடா..நீ ஷாக்காகி ஷாக்காகி தண்ணி அடிக்க நான் உலக வரலாறு எல்லாம் சொல்லனுமா.."

முடிவு ரெண்டு :

"ரமேஷ் இப்போ ஏன் கோவப்படுற.."

"புரமோஷன் கிடச்சதுக்கு டிரீட் கேட்டா..சரின்னு அங்க வைச்சு சொல்லிட்டு இங்க வந்து எல்லாம் மறந்த மாதிரி பில்டப் கொடுக்கிற..உன் சரக்கும் வேண்டாம்..உன் சங்காத்தமும் வேண்டாம்..நானே பில் பே பண்றேன்.."

டிஸ்கி :

இப்படி எல்லாம் முயற்சி செய்தால் நான் பொறுப்பு கிடையாது.

7 comments:

இராகவன் நைஜிரியா said...

என்னது புது இடுகைப் போட்டு இருக்கீங்களா?

ஓபாமாவைப் பத்தி போட்டு இருக்கீங்களா?

நான் படிச்சுட்டேங்க... இதை கேட்டு ஷாக் ஆயிடாதீங்க..

அது மட்டுமல்ல.. ஓட்டும் போட்டுட்டேன்..

ஆ.ஞானசேகரன் said...

//இப்படி எல்லாம் முயற்சி செய்தால் நான் பொறுப்பு கிடையாது. //

அதுசரி

அகல்விளக்கு said...

//
இப்படி எல்லாம் முயற்சி செய்தால் நான் பொறுப்பு கிடையாது. //

ஓ.கே.. தல.

Unknown said...

ஹா ஹா....
நன்றாக இருந்தது....

தினேஷ் said...

மாப்பூ சூப்பர் ஐடியா..

பெங்களூர் வந்தா கண்டிப்பா உனக்கு ட்ரீட் உண்டு....

பெசொவி said...

நல்ல நகைச்சுவை........வாழ்த்துகள்!

ஊர்சுற்றி said...

ஹிஹிஹி... நன்று.