Thursday, November 26, 2009

பாசிஸ்ட் அரவிந்த் - நானும் புது பட்டம் வாங்கிட்டேன்

கே.எஸ் ரவிகுமார்,விஜய் இவங்க எல்லாம் கூட டாக்டர் பட்டம் வாங்கிட்டாங்க.எட்டு மாசமா நானும் பதிவு எழுதி உயிரை வாங்குறேன்.எனக்கு ஒரு பட்டமும் கிடைக்கவில்லையே என்று சோகத்தில் சுருண்டு கிடந்தேன்.அதனால் தான் எங்க போட்டி நடத்தினாலும் அதுல கலந்து சக போட்டியாளர்களையும்,போட்டி அமைப்பாளர்களையும் ஒரு வழி செய்கிறேன்.எதுக்கு எல்லாம் ஒரு பட்டத்துக்கு தான்.கதாசிரியர் இப்படி பெயர் வாங்கலாம் என்று நினைத்து சர்வேஷன் நச் கதைக்கு ஒரு கதை எழுதினால் - கதையில் நச்சே இல்லன்னு ஒரு வரியில் முடித்து விட்டார்.கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் ரவிசங்கரின் விமர்சனத்தில் ஆறுதல் அடைந்து கொண்டேன்.(அவரும் அதை தான் சொல்லியிருந்தார்.ஆவ்வ்வ்வ்வ்வ்).இந்த பட்டமும் போச்சே என்று வருத்தப்பட்டு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது.(அதுக்காடா உடம்பு சரியில்லாமல் போச்சு என்று "மனசு" அலைஸ் மனசாட்சி சிரிக்கிறது)

ஆபிஸில் சோகமாக இருக்கும் போது(வேலை இருக்கும் போது நான் அப்படி இருப்பது வழக்கம்.இல்லன்னா வேலை அதிகமாகும்.) குறும்பு(குறும்பாடு அல்ல) பதிவர் போன் செய்து அலைபேசியில் அழைத்து உங்களுக்கு ஒரு பட்டம் குடுத்து இருக்காங்க என்று சொன்னார்.அந்த பட்டம் தான் பாசிஸ்ட். இந்த வார்த்தையை கூகுளில் தேடினால் முதலில் வருவது கோவி.கண்ணன் பதிவில் இருந்து "ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட்.." சொன்னவர் கோலங்கள் தொடரில் நாயகனாக நடிக்க வேண்டிய வைகோ இப்படி வருகிறது.

முன்னால் முதல்வர் வாங்கிய பட்டம் எனக்கும் கிடைத்து இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே.பாசிஸ்ட் என்ற பட்டம் வாங்கும் அளவிற்கு நான் செய்த சாதனை என்ன என்று பார்த்தால் பின்னூட்டம் போடவில்லையாம்.(.ப்ளாக்ஸ்பாட்.காம் என்று வந்தாலே அது தடை செய்யப்பட்டுள்ளது.அதையே நான் கேச்சி என்ற ஆப்சனை க்ளிக் செய்து தான் படிக்கிறேன்.அல்லது கூகுள் ரீடரில் படிக்கிறேன்.பின்னூட்டத்தோடு சேர்த்து படிக்க யு.ஆர்.எல் லிங்க் எடுத்து பிடிஎப் கோப்பாக மாற்றி படிக்கிறேன்.அதனால் தயவு செய்து மன்னித்து விடவும்.)

கூடிய விரைவில் கணினி வாங்கி "மீ த பர்ஸ்டு..","கலக்கல்","கலங்கல்","ஸ்மைலி" அப்படி போடுகிறேன். அது கடைசியாக இருந்தாலும் சரி அல்லது முதலில் இருந்தாலும் சரி அல்லது நடுவில் வந்தாலும் சரி போட்டுத் தாக்கி விடுகிறேன்.நான் பின்னூட்டம் போடவில்லை என்று வருத்தப்படும் அளவிற்கு உங்களில் ஒருவனாக என்னை நினைத்தற்கு நன்றி.

நையாண்டி நைனாவிடம் கேட்டேன்."பாசிஸ்ட் பற்றி.." அவர் சொன்னார் - "அரவிந்த் நீ ஒரு பாஸ் டூ டு மோர் ப்ளாக்ஸ்.(இதில் டோகோமோ நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பு அல்ல)

பதிவுலக வழக்கப்படி ஏதாவது பட்டம் வாங்கினால் யாருக்காவது பகிர்ந்து கொடுக்க வேண்டும்.தனி ஒருவனாக என்னால் அதை சுமக்க முடியவில்லை.அதனால் இந்த பட்டத்தை நான் மூவருக்கு தருகிறேன்.

1. அண்ணன் தண்டோரா.

2. நையாண்டி நைனா.

3.ராஜூ.

(இதில் யாருடைய பேராவது விடுப்பட்டு இருந்தால் சொல்லலாம்.சேர்த்து விடுகிறேன்.அதற்கும் எனக்கு தனியாக ஒரு பட்டம் வேண்டாம்.நேற்று தான் கே டி.வியில் பட்டம் பறக்கட்டும் என்ற மொக்கை படம் பார்த்தேன்.நடிகர்கள் ராமராஜன்,சந்திரசேகர்,எஸ்,வி.சேகர்,விஜயசாந்தி,உஷா, கல்லாப்பெட்டி சிங்காரம் நடித்தது.வாங்கிய பட்டத்தை முடிவில் நாயகன் பட்டம் செய்து பறக்க விடுகிறான்.(அசுர மொக்கை.இராம நாராயணன் என்ன பாவம் செய்தோம் நாங்கள்.)

அது மாதிரி இவர்களும் இதை அடுத்த மூன்று பேர்களுக்கு கொடுக்கலாம்.

டிஸ்கி :

சமீபத்தில் எழுதிய பதிவிற்கு கடும் கண்டனப் பதிவுகள் தயாராகி வருவதாக உளவுத்துறை செய்தி சொன்னார்கள்.அதுவும் வடமேற்கு, தென் கிழக்கு,வடகிழக்கு,தென்மேற்கு இந்த திசையில் இருந்தும் வரும் என பஜ்ஜி சாப்பிட்டு விட்டு ஒருவர் சொன்னார்.

இப்படிக்கு

பாசிஸ்ட் அரவிந்த் (நன்றி இணைய நண்பரே..)

13 comments:

அகல்விளக்கு said...

அப்பாடா நம்ம பேரு உள்ளாற வரல...

வாழ்த்துக்கள் பாசிஸ்ட் தலைவரே...

:-)

நையாண்டி நைனா said...

பட்டத்திற்கு மிக நன்றி...

இப்படிக்கு
பாசிஸ்ட்டு.டொக்டர்.நையாண்டி நைனா.

Raju said...

அப்பறம், திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி சட்டமன்ற இடைத்தேர்தல்ல ஒரே நேரத்தில்,வேட்பாளராக நிற்கப் போகும் மூத்த பாசிஸ்ட் அண்ண்ன் அரவிந்த் வாழ்க...!
இப்படிக்கு,
இளைய பாசிஸ்ட் ராஜூ.

Raju said...

அண்ணே, அந்த "பட்டம்" பறந்ததால, சொல்றேன். சத்ரியனுக்கு சாவே இல்ல பாஸு..!அப்பறம் யாருண்ணே அந்த கு.பதிவர்..?

shortfilmindia.com said...

பாசிஸ்ட் ராஜு,
பாசிஸ்ட் நையாண்டி நைனா
பாசிஸ்ட் தண்டோரா,
ஆகியோருக்கு பாசிஸ்ட் அரவிந்த் சார்பாக வாழ்த்துகிறேன்

கேபிள் சங்கர்

மணிஜி said...

காத்தாடிக்கு டேங்க்ஸ்.. நான் அந்த பட்டத்தை நல்லா மாஞ்சா போட்டு எவன் கழுத்துலயாவது தொங்க விடறேன்

Beski said...

வாழ்த்துக்கள் அரவிந்த்.
-பாசிஸ்ட் அரவிந்த் ரசிகர் மன்றம், சைதை.

---

அட, நீங்க கூட அந்த படத்தப் பாத்தீங்களா? அது ராமராஜந்தானான்னு எனக்கு ஒரு டவுட்டு. இப்போ கன்பார்ம்.

கடைசி வரை பார்த்த உங்களுக்கு இன்னொரு பட்டம் குடுக்கலாம்.

ஜெட்லி... said...

பாசிஸ்ட் அரவிந்த்....


:))

Unknown said...

ஆமா, பாசிஸ்ட்னா என்னாங்க..??!!

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
காத்தாடிக்கு டேங்க்ஸ்.. நான் அந்த பட்டத்தை நல்லா மாஞ்சா போட்டு எவன் கழுத்துலயாவது தொங்க விடறேன்*/

க்கும்... இப்படிதான் சொல்வீங்க.... ஆனா அப்புறம் பார்த்தா... அதுக்கு "மஞ்சளை" தடவி "தலைவர்" கழுத்துலே போட்டுருவீங்க... உங்க குசும்பு எங்களுக்கு தெரியாதா என்ன?

Unknown said...

வாழ்க பாசிஸ்ட் ... அரவிந்த்...

pudugaithendral said...

:))

குறை ஒன்றும் இல்லை !!! said...

I don't understand one thing that, if u can write a blog then def u can put comments in others blogs...

Since ur expecting Comments from others hope others too expect the same !!!!!