எஸ்.பி.பி.சரண் - நாணயம் படம் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக எடுத்த படம்.டிரெயிலர் பாத்தா உங்களுக்கே கதை தெரியும்.
(டிரெயிலர் பாத்தா எனக்கு இந்த படம் ஒசியன்ஸ் லெவன் மாதிரி இருக்கு.சக்தி மிஷ்கினோட சிஷ்யனாமே.)
வெற்றிமாறன் - ஆடுகளம் ஒரு வித்தியாசமான படம்.சேவல் சண்டையின் உக்கிரம் இதில் தெரியும்.மதுரை பத்தி எனக்கு இதுக்கு முன்னாடி ஒண்ணும் தெரியாது.
(ஆமா இது கற்றது தமிழ் ராமின் உதவியாளர் எழுதின சேவல் காடு கதையாமே.எப்படி தெரியும் மதுரையைப் பத்தி..)
ஆனந்த விகடன் - கமல்,மிஷ்கினின் கூட்டணியின் தேடல் அனேகமாக புத்தரைப் பற்றியதாக இருக்கும்.
(சூடா ஒரு சீனப் படம் பார்சல்..)
பாபு சிவன் - இந்த படத்தில் கிராமத்தில் இருந்து விஜய் வருகிறார்.காவல் துறை அதிகாரிகளால் பிடிக்க முடியாத சமூக விரோதிகளை விஜய் வேட்டையாடுகிறார்.
(திருப்பாச்சி டி.வி.டி பார்சல் உங்களுக்கும் கிடச்சுதா..)
கண்ணன் - கண்டேன் காதலை மும்பையில் ரசிகர்களோடு ஜப் வி மெட் இயக்குனர் இமிதாஸ் அலி பார்த்து ரசித்தார்.
(ஆமா இனிமே லவ் கா ஆஜல் படத்தை யாருக்கும் ரீமேக் செய்ய விட மாட்டார்.)
எஸ்.ஏ.சந்திரசேகரன் - விஜய்யை எந்த கட்சியில் கூப்பிட்டார்கள்,இந்த கட்சியில் கூப்பிட்டார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.உண்மையில் யாரும் கூப்பிடவில்லை.
(வேட்டைகாரன் ரீலிஸ் ஆகனும்மா வேண்டாம்மா..ஏற்கனவே வைச்சிருந்த பஞ்ச்சை எல்லாம் வெட்டி விட்டு ரீஷூட் பண்ணி வெறும் காத்தை அடைத்து இருக்கிறார்கள்.காத்தையும் பிடுங்கணுமா..)
மிஷ்கின் - நந்தலாலா ஜப்பான் படத்தின் காப்பி அடித்ததாக எல்லோரும் எழுதுகிறார்கள்.அவர்களுக்கு தெரியாத உண்மை அது என் வாழ்வோடு சம்பந்தப்பட்டது.
(அந்த ஜப்பான் படத்தில் பாட்டு கிடையாதாமே..)
யுவராஜ் - ஸ்ரீதேவி இந்த வயசுலேயும் இவ்ளோ சிக்குன்னு இருப்பாங்களா..நான் எதிர்பாக்கவேயில்ல..
(இப்படி எதையாவது நினைச்சி கிட்டு இருந்தா எப்படி விளையாட முடியும்..)
லிங்குசாமி - பையாவுக்கும் நீங்க சொல்ற ஹாலிவுட் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..
(அப்படியா கௌதம் மேனன்..நீங்க சரியா சொல்வீங்க..ஏற்கனவே பீமா படத்தை சுட்ட விஷயத்தை நீங்க தான் சொன்னீங்க..)
நையாண்டி நைனா - தம்பி இரும்புத்திரை..நீ தினமும் எழுதுற.. பத்து பின்னூட்டம் தாண்டல..நான் ஒரு மாசம் கழிச்சி பதிவு போட்டேன்..எனக்கு முப்பது பின்னூட்டம்..
(கிழிஞ்சது கிழியாதது..பட்டன் வைச்சது வைக்காதது..மண்ணு ஒட்டுனது ஒட்டாதது..)
டிஸ்கி :
நேத்து எழுதிய
பைத்தியமான கடவுள் கதையால் எனக்கு கிடைத்த பரிசு ஒரு பாலோயர் காலி.
இப்போ இருக்கிறது தொண்ணுத்தி எழு,சேர்ந்து அப்புறம் விலகியது மூணு அக மொத்தம் நூறு..சியர்ஸ்..
பாலோயர்களுக்கு நன்றி..
Friday, November 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
நல்லாத் தான் சொல்லியிருக்காங்க
நீங்களும் நல்லாதான் சொல்லியிருக்கீங்க
தலைப்புக்கும் கடைசி மேட்டர்ல சொன்னவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா பாஸ்..?
அவங்கள விடுங்க தல...
நீங்க சொன்னதெல்லாம் ரைட்டு.
வணக்கம் அரவிந்த்
ஆமா சினிமாக்கள் பார்ப்பதுதான் முழு நேர வேலையோ.......
நல்லாத் தான் சொல்லியிருக்காங்க
இராஜராஜன்
நடத்து
கமல்-புத்தர் கமெண்ட், ஜப் வீ மெட் கமெண்ட் எல்லாம் கலக்கல்
நன்றி சுப.தமிழினியன்
நன்றி ♠ ராஜு ♠ அதை சொல்லியவர் பிரபலம் கேட்டவர் பிராபலம்
நன்றி அகல் விளக்கு
நன்றி வனம்
நன்றி தண்டோரா அண்ணே நீங்க சொல்லி கொடுத்தது வீண் போகல
நன்றி முரளிகண்ணன்
//இப்போ இருக்கிறது தொண்ணுத்தி எழு,சேர்ந்து அப்புறம் விலகியது மூணு அக மொத்தம் நூறு..சியர்ஸ்..//
கொலவெறி தாங்காம ஓடிட்டாங்களோ?
//திருப்பாச்சி டி.வி.டி பார்சல் உங்களுக்கும் கிடச்சுதா..)//
அடுத்தா அவ்வ்வ்வ்.. ஏற்கனவே கொண்டாய்ங்க மறுபடியுமா?
//யுவராஜ் - ஸ்ரீதேவி இந்த வயசுலேயும் இவ்ளோ சிக்குன்னு இருப்பாங்களா..நான் எதிர்பாக்கவேயில்ல..//
பயபுள்ள இப்படி இது சிக்குனு இருக்கு அது சிக்குனு இருக்குனு சொல்லிட்டு சிக்கு(கன்னடத்துல சின்னது) ரன்ன அடிக்கிறான?
நன்றாய் இருந்தது kikujiro என்ற படத்தின் தழுவலே நந்தலாலா .........ம்ம்ம் அது அவர் வாழ்கையிலும் நடந்து irukkalaam
தம்பி போற வேகத்தைப் பார்த்து
தப்பி போக நினைக்கும்
ஃபாலோயர்கள்... :))
//ஆமா இனிமே லவ் கா ஆஜல் படத்தை யாருக்கும் ரீமேக் செய்ய விட மாட்டார்//
செம காமெடி அரவிந்த்
நூறு பாலோயர்கள் ..சியர்ஸ்
//கதையால் எனக்கு கிடைத்த பரிசு ஒரு பாலோயர் காலி.// கதை நல்லாத்தான் இருக்கதுங்க...
Post a Comment