அவர் மாதிரி நான் இந்த உலகத்தை பார்க்கிறேனா என்னமோ தெரியல..முதல் தடவை சாட் பண்ணும் போது என்னை அறியாமல் ஒருமையில் தான் பேசினேன்.அவரோட எழுத்தின் தாக்கமா இருக்கலாம்.அவர் தான் வெண்ணிற இரவுகள் கார்த்திக்.அவர் அளவுக்கு எழுத முடியாது என்றாலும் அவரின் அன்பிற்காக இந்த பதிவு.
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு?
பேரு பெத்தப் பேரு அரவிந்த்.பிழைப்பிற்காக மும்பை வாசம்.சாப்ட்வேர் வேலை பார்த்து சம்பாதித்து நல்லா சாப்பிட்டு வாழுற அல்லது வாருற ஒருத்தன்.அடுத்த வேளை சோறு சாப்பிட வேலையை விட முடியாமல் கனவுகளை ஒரு பெரிய குழியில் போட்டு புதைத்த ஒரு சராசரி.
2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்?
இரண்டாவது மாடியில் சரிந்து விழுந்த விசில் ராக்கெட்டை நிமிர்த்த முயன்று முடியாமல்,அங்கிருந்து ஓடவும் முடியாமல் வலது கை ஆட்காட்டி விரல் முழுவதும் காயம்,அடுத்த தீபாவளிக்கு ஆயிரம் வாலா சரவெடியை விரித்து வைத்து விட்டு தீப்பெட்டி எடுக்க போன நேரத்தில்,அதை பீடியால் பற்ற வைத்த ஒரு குடிகாரன்.ரொம்பவும் ஏமாற்றமான தீபாவளி.
3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
சென்னை தான்.அப்பா,அம்மா,தம்பியுடன் தான்.
4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள்?
தற்போது மும்பையில் இருக்கிறேன்.இதுவரை பார்த்தது இல்லை.காரணம் அந்த சமயம் இங்கு இருந்தது இல்லை.இருந்தாலும் பார்த்திருக்க முடியாது.தூங்கி இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருந்திருப்பேன்.
5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா ?
வாங்குவது தான் கடந்த சில வருடங்களாக உள்ள பழக்கம்.அதுவும் கடைசி நேரத்தில் இந்த முறை தீபாவளிக்கு நாலு மணி நேரம் முன்பாக.
6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?
அதிரசம்,முறுக்கு,வடை இப்படி செய்திருந்தாலும் சென்னையில குடிச்ச உப்புத் தண்ணி கூட பலகாரம் மாதிரி தான் இருந்தது.அம்மா கையால குடுக்கும் போது அப்படி தான் தெரிஞ்சது.
7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
வாழ்த்துகள் மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டம் மூலமாக நண்பர்களிடம் இருந்து, தொலைபேசி உறவினர்களிடம் இருந்து,வாழ்த்து அட்டை எல்லாம் வழக்கொழிந்து பல காலம் ஆகி விட்டது.தபால தலை ஒட்டாமல் அனுப்பிய நண்பர்கள் உண்டு.
8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா?
பத்து மணிக்கு மேல் தான் தூக்கம் கலைகிறது.அது எல்லா நாளையும் அதுவும் ஒரு நாளாக மாறி விட்டது.இந்த முறை சனிக்கிழமை வந்தது தான் வருத்தம்.வெளியே எல்லாம் சுத்துவதில்லை.அது வெளிவரும் படத்தைப் பொறுத்து.
9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள்? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
உதவி செய்கிறேன்.சென்னை மாநகரயாட்சிக்கு மற்றும் பக்கத்தில் இருப்பவர்களுக்கு எல்லாவற்றையும் விட சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேளை செய்யும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு.சில ஆண்டுகளாக வெடி வெடிப்பதில்லை.ஒன்பது வருடங்களாக வெடிப்பதில்லை.இப்படி காசை கரி ஆக்காமல் இருந்தால் விற்பனை குறையும்.அந்த பிள்ளைகளும் படிப்பார்கள்.
10) நீங்கள் அழைக்கவிருக்கும் இருவர், அவர்களின் வலைத்தளங்கள்?
கடந்த சில வாரங்களாக காணாமல் இருந்த ராஜூ மற்றும் அன்புத் தோழர் அகல்விளக்கு.
Tuesday, November 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேளை செய்யும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு.சில ஆண்டுகளாக வெடி வெடிப்பதில்லை.ஒன்பது வருடங்களாக வெடிப்பதில்லை.இப்படி காசை கரி ஆக்காமல் இருந்தால் விற்பனை குறையும்.அந்த பிள்ளைகளும் படிப்பார்கள்.
//
நல்ல குறிக்கோள் சிவகாசி குழந்தைகளும் குழந்தைகள் தானே .....இந்த சட்டம் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறது
//சாப்ட்வேர் வேலை பார்த்து சம்பாதித்து நல்லா சாப்பிட்டு வாழுற அல்லது வாருற ஒருத்தன்//
உங்க அறிமுகம் நல்லா இருக்கு...
மேலும் உங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி
நல்ல அறிமுகம் வாழ்த்துக்கள்
//சில ஆண்டுகளாக வெடி வெடிப்பதில்லை//
நானும் தான்...
அழைப்பிற்கு நன்றி தல ...
எழுதிவிடுகிறேன்! எனது அனுபவத்தையும்.
நல்ல குறிக்கோள் நல்லஎண்ணங்கள்
வாழ்த்துக்கள்...
Post a Comment