Monday, November 16, 2009

என்ன கொடுமை நையாண்டி நைனா இது

மகாஜனங்களே நல்லா பாத்துக்கோங்க..இதுக்கெல்லாம் நான் காரணம் கிடையாது.முன்னெல்லாம் யாராவது தொடர்பதிவு எழுத என்னை கூப்பிடுவாங்களா அப்படினு கண்ணு முழிச்சி இருக்கிற ஒரு பதிவு விடாம படிச்சாலும் நம்ம பெயர் வராது.இப்ப அந்த பிரச்சனை இல்ல தான்.ஆனா அதை விட பெரிய சோகம் இரண்டு இருக்கு.நாம போய் தொடர்பதிவு எழுதிட்டு அதுக்கு ஆள் பிடிக்கிறது பெரிய வேலையா இருக்கு.எழுதாத ஆளா பாத்து தொடர்பதிவு எழுத கூப்பிடணும்.இல்ல அதுக்குள்ள யாராவது அவங்கள எழுத சொல்லி நம்ம பேச்சை கேக்குற(நாந்தான் நினைக்கிறேன்..) ஒரு ஆளையும் ஆட்டையப் போட்டுட்டு சேவனேனு போயிடுறாங்க..இல்லன்னா தம்பி நான் எழுதுறேன் தம்பி அப்படி சொல்றது ஆனா உடனே மறந்து போயிடுறாங்க..

நம்ம கதிர் அண்ணனை கூப்பிட்டால் தம்பி உன் அளவுக்கு எழுத முடியாது(இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி எனக்கு தெரியிது) அப்படி சொல்லி ஜெகா வாங்கிட்டார்.அட ஜெகான்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது.அதே பதிவுல காலடி ஜெகா அண்ணனையும் எழுத சொல்லிருந்தேன்.ஆனா எனக்கு கவித எழுத வராத காரணத்துனால அதை எழுதாம - கவிதை எழுதுவது எப்படி - இப்படி ஒரு பட்டறையை நடத்தி கவித இப்படி தான் எழுதனும் சொல்லி போட்டுக்கிட்டு இருந்த ஒண்ணு ரெண்டு எதிர்கவுஜயையும் எழுத விடாம பண்ணிட்டாரு.இப்படி சிஷ்யன் சொல்லி எழுதாத அவர் அவங்க குருநாதர் எழுத சொன்ன உடனே எழுதிட்டாரு.அதுல இருந்து எழுத நினைச்சி வச்சிருந்த கவித எல்லாம் உள்ளே போயிருச்சி.அட கதிர் அண்ணனும் கவித எழுதுவாரு.

சரி கவித எழுதுறவங்க தான் எழுதல இனிமே நம்மள மாதிரி நையாண்டு எழுதுற ஆளை தான் கூப்பிடனும் இப்படி உறுதிமொழி எடுத்துக்கிட்டு தண்டோரா அண்ணனை எழுத சொன்னால் எல்லாம் என் நேரம் அவரும் கவித எழுத ஆரம்பிச்சிட்டாரு.தம்பி நான் பிராபல பதிவர் இப்படி சொன்ன அண்ணன் எழுதுவாரு அப்படி விழி மேல் வழி வைச்சு (வழி மேல் விழி வைச்சு) காத்திருந்தா அவரும் தொடர்ந்து கவிதையா எழுதி குவிச்சாரு.அப்பவே எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்து வந்து போச்சு.அதே மாதிரி அவங்க க்ளாஸ் மேட் ஆதி பிரதாபன் வந்து எழுத சொன்னாரு அண்ணனும் எழுதிட்டாரு.

இனிமே கவித எழுதுறவங்களோட சகவாசமே இருக்க கூடாதுன்னு கொஞ்ச நாளாவே காணாம போயிருந்த டக்ளஸ் என்ற ராஜூவை கூப்பிட்டால் அதுவும் தீபாவளி அதுவும் காணாம போனவரை தீபாவளி பதிவு எழுத சொன்னால் அவர் போட்டு இருக்காரு எங்க ஸ்ரீ அண்ணன் கூப்பிட்டார். எழுதாட்டி மதுரைக்கு போக முடியாது அப்படி ஒரு காரணம் சொல்றார்.(யோவ் முதல் மதுரைக்கு போக மும்பையை தாண்டனும்)

மிச்ச இருந்த இன்னோரு பார்ட்டி சூரியனை கூப்பிட்டால் அதுல இருந்து அவர் ப்ளாக் சாத்தியே கிடக்குது.

கடைசியாய் காணாமல் போயிருந்த நையாண்டி நைனாவை கூப்பிட்டால் அதுக்கு நேர்ந்த கதியை இன்னைக்கு அவரோட பதிவுல பாக்கலாம்.எனக்கு இருக்கிற பயம் இதுதான் நான் இன்னொரு தொடர் பதிவு எழுத சொல்லியிருந்தேன்.அது என்ன கதியாக போகுதோ..அத நினைச்சா தான் கொஞ்சம் பீதியா இருக்கு.இவரை கூப்பிட்டதுக்கு பதிலா எமதர்மனுக்கு துணையா சித்திரகுப்தனைக் கூப்பிட்டு இருக்கிலாம்.பதிவு எழுதி படிக்க சொல்லி துன்புறுத்தும் பாவம் எல்லாம் கொஞ்சமாவது பாவம் குறைஞ்சு இருக்கும்.இப்போ இவரை கூப்பிட்ட பாவமும் என் கணக்குல சேர்ந்து போச்சு.

இது எல்லாம் கூட எனக்கு வருத்தம் இல்ல..பரிசல் பதிவுல போய் பின்னூட்ட புயல் நோவை வம்பு இழுத்து என் ப்ளாக்கை சொஞ்சம் விமர்சிக்க சொல்லியிருந்தேன்.படிச்சி அவருக்கு தலை சுத்துச்சோ இல்ல வேற எதுவும் நடந்ததா எனக்கு ஒண்ணும் புரியல..எனக்கு பின்னாடி வந்த வெண்பூவை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

டிஸ்கி : காலையில் இருந்து பதிவு போட முடியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன்..இப்படி ஒரு மேட்டர் சிக்கி ஒரு பதிவு கிடைச்சாச்சு..

11 comments:

ஈரோடு கதிர் said...

சரி... சரி.... கண்ணத் தொடச்சிங்க அரவிந்த்....

அடுத்த வருசம் நீங்க தொடர் இடுகைக்கு கூப்பிடுங்க... நான் எழுதறேன்....

சரியா.... சமத்தா இருக்கோனும் இனிமே

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா இது தொடர் நோயாக இருக்கிறது ....நண்பர் என்று நம்மால் தட்டவும் முடியாது ........
தீபாவளி தொடர் பதிவு ஒரு மாதம் மேல் சென்றது என்று நினைக்கிறன் ஹ ஹ

புலவன் புலிகேசி said...

எத்தன தொடர்பதிவுதான் எழுதுறது.......ஆனாலும் அழப்படாது..எல்லாரும் எழுதுவாங்க...

தினேஷ் said...

:)

தேவன் மாயம் said...

Ha! Ha!!Ha!!

தேவன் மாயம் said...

voted 4/4 Tamilmanam!!

மணிஜி said...

எலேய் .. உனக்கு 101 பாலோயர்யா?

Raju said...

பனங்காட்டு நரிகள் என்றுமே சலசலப்புக்கு அஞ்சுவதே இல்லை.

அகல்விளக்கு said...

ரைட்டு தல

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

Ha Ha Ha :)

Nathanjagk said...

இப்படியெல்லாம் மனசொடிஞ்சி போனாமாதிரி பேசப்படாது அரவிந்து!
நாங்கெல்லாம் எங்க போயிட்டோம்?
இனி அடுத்த பட்டாசு அதுதான்!
ஒருத்தர் மாற்றி ஒருத்தர் என்று இழுக்கும் ஒரே சிகரெட் போல... எனக்கும் ஒரு பப் கொடுத்த தம்பிக்கு நன்றி!