"அந்த பட்டியலில் எம் பேரு இருக்கா..கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்.." இப்படி பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடன் இருந்து வந்த தொலைபேசி தான் காவல்துறையை கவலை கொள்ள செய்தது.
"இவங்க பயப்படுவதைப் பாத்தா இவங்களும் இருக்குமோ.." என்று காவல் துறையின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை ஒரே பேச்சாக இருந்தது.
விஷயம் ஒன்றும் இல்லை.போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான பெண் ஒரு பிரபல விளையாட்டு வீராங்கனை.ஏற்கனவே இதே வழக்கிற்காக சில ஆண்டுகள் முன் கைது செய்யப் பட்டவர் தான்.இந்த முறை பரபர என்று விஷயம் தீயாய் பரவியதற்கு ஒரு காரணம் வாக்குமூலத்தில் இன்னும் சில வீராங்கனைகளின் பேரை சொன்னதாகவும்,முடிந்தால் அவர்களையும் பிடியுங்கள் என்று சவால் விட்டதாகவும் ஒரு புலனாய்வு பத்திரிகை செய்தி வெளியிட்டதே காரணம்.
வழக்கம் போல கிசுகிசு பாணியில் இல்லாமல் இந்த முறை பெயர் மற்றும் படத்தோடு செய்தி வந்தது எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சி தான்.படித்த பொதுமக்களுக்கும் அதிர்ச்சி இவர்களும் உண்டா என்று.
உடனே தடகள சங்கம் கூட்டப்பட்டது ஆள் ஆளுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.சிலர் பல படிகள் முன்னேறி ஆபாஷமாக அர்ச்சனை செய்தார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு ராசிபலன் உச்சம் தான். சூரியன் மாதிரி தகித்தது.தொட்டதெல்லாம் பொன்.பழைய பகைய சரியா தீர்த்துகிட்டாரு.."குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி தந்தா என்ன வேணாலும் எழுதுவீங்களா..".இதுதான் இவர் கேட்ட கேள்வியிலே உச்சம்.
இவருக்கு அடுத்து பேச வந்தவர் விவேகமா ஓடுவார்.அவர் சில சமயம் பொறிவாரு..இல்ல சில சமயம் அவரை பொறிப்பாங்க.இந்த தடவை அவர் முறை.பொறிந்து தள்ளிட்டாரு.அவர் பேசின சாராம்சம் இதுதான்.
"ஓடுற நாங்க எல்லாம் போதைப் பொருள் எடுத்தோமோ..நீ உன்னோட அக்கா தங்கச்சி படத்த கொடு..நான் மார்பிங்கு செஞ்சு அவங்க போதையிலே தள்ளாடுற மாதிரி நான் மாத்துறேன்.."
அப்புறம் புலனாய்வு பத்திரிக்கை ஆசிரியர் கைது.பத்திரிகையாளர்கள் போராட்டம்.பிறகு அவர் விடுதலை எல்லாம் நடந்தது.
சூரியன் மாதிரி ஓடுனவரு மன்னிப்பு கடிதம் குடுத்தாரு.விவேகமா ஓடுனவரு வைரமா ஊக்கம் தர்றவர் மூலமா சமரசம் செய்ய பார்த்தாரு.
அப்புறம் இவங்க ரெண்டு பேரும் ஒரு ஓட்ட பந்தய விழாவுல பார்த்து பேசிகிட்டாங்க..
"என்ன தம்பி..நீ பேசுன தைரியத்துல தான் நானும் அப்படி பேசினேன்..நீ இப்படி மன்னிப்பு கடிதம் குடுப்பேன்னு தெரிஞ்சு இருந்தா நான் பொங்கி இருக்கவே மாட்டேன்.."
"அட சும்மா இருண்ணா..பண்டிகை சமயத்துல எனக்கு மராத்தான்..என் ஸ்பான்ஷர் வெயிட் தான்..இருந்தாலும் ஒண்ணு கிடக ஒண்ணு எழுதிட்டா அப்புறம் என் ஸ்பான்ஷர்ல குறைவாங்க.."
"என்ன இருந்தாலும் நீ இப்படி பண்ணியிருக்க கூடாது.."
"அட போண்ணா..நம்ம சூப்பர் நட்சத்திரமா ஓடுவாரே அவரே சிக்கல் வந்தா கடிதம் குடுத்தார்.நானெல்லாம் தம்மாத்துண்டு பையன் நான் குடுத்தா என்ன..நீ மட்டும் ஒழுங்கா ஜாதி இல்ல ஜாதி இல்லனு சொல்வ..உனக்கு சிக்கல் வந்தவுடனே ஜாதி மீட்டிங்கு போய் புலம்பல.." இந்த ரீதியில சூரியன் சுட
"தம்பி..ஜாதிங்கறது தீப்பந்தம் மாதிரி..யாராவது தேனீ மாதிரி நம்மள கொட்ட வந்தா உடனே அத எடுத்து அவங்க மேல எறிஞ்சிடனும்..அவங்க பயப்படுவாங்க..நாம தப்பிர் விடலாம்.." விவேகம் விவரமா பேச..
"இப்போ எதுக்கு இந்த போர்வை,தீப்பந்தம் எல்லாம் எதுக்கு..நீ தான் அவங்க தயவு தேவை இல்லனு மேடையில சவுண்ட் விட்டியே.."
"ஜாதி தீப்பந்தம் மட்டும் நான் பிடிக்காம இருந்திருந்தா இந்த நேரம் நான் காசு குடுத்து சேர்த்து கிட்ட பத்மா ஸ்ரீய என்ன விட்டு பிரிச்சி இருப்பாங்க.."
Thursday, November 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
புரியற மாதிரி எழுதுன கிசு கிசு மாதிரி இருக்கு இன்னும் நல்லதா
நீங்க முயற்சி பண்ணலாமே
நல்லாருக்கு தல......
அப்புறம்
//
"ஜாதி தீப்பந்தம் மட்டும் நான் பிடிக்காம இருந்திருந்தா இந்த நேரம் நான் காசு குடுத்து சேர்த்து கிட்ட பத்மா ஸ்ரீய என்ன விட்டு பிரிச்சி இருப்பாங்க.."//
உண்மையச் சொன்னீங்க...
பாதி புரியல(அந்த விஷயம் முழுசா தெரியாததால..)
ம்ம்ம்ம்... அப்படியா
சூர்யா பற்றியும் விவேக் பற்றியும் நன்றாக எழுதி உள்ளீர்கள் ...........அவர்கள் பச்சோந்திகள்
நல்லாத்தான் இருக்கு. ஆனா போட்டிக்கு இது வேணாம்.
நன்றி பிரகாஷ்
நன்றி அகல் விளக்கு
நன்றி பட்டிக்காட்டான்
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி வெண்ணிற இரவுகள்....!
நன்றி எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் அப்ப கனவு தொழிற்சாலை அனுப்பட்டுமா
அந்த பத்மாஸ்ரீ விஷயம் தவிர மத்ததெல்லாம் நல்லாவே புரியுது.
உண்மைக் கதை, உண்மைக் கதைம்பாங்களே, அது இது தானா நண்பரே?
வித்யாசமா இருக்கு. நீங்க இன்னும் நல்லா எழுதலாம். Re write பண்ணி பார்த்தா இன்னும் நல்லா வந்திருக்குமோ?
கதை போட்டியில் "அடுத்த வீட்டு பெண்" என்ற எனது கதை படிக்க blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/.
மோகன் குமார்
Post a Comment