Saturday, November 28, 2009

யோகி - தரை விமர்சனம்

யோகி ஒரு அப்பாவியாக வளர்கிறான்.அதான் வளர்ந்து கேட்டவன்.அப்பா நோய்வாய் பட்டு இறந்து விட அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற நண்பனை காண செல்கிறான்.நண்பனோ ஒரு பிக் பாக்கெட்.கேப்மாறி.மொள்ளமாரி.முடிச்சவிக்கி.அவனை சந்திக்க முடியாமல் அலைந்து திரிகிறான். நண்பனை கண்டுப்பிடிக்க முடியாத சோகத்தில் டீக்கடையில் க்ளாஸ் கழுவும் பையனாக சேர்கிறார்.நகரத்தை கைக்குள் வைத்திருப்பது இரண்டு கோஷ்டிகள்.அதில் ஒரு கோஷ்டியின் வேட்டியைக் கிழிக்க முற்படும் போது முதல் கோஷ்டியின் தலிவனை யோகி காப்பாற்றி விடுகிறார்.போலீஸ் வந்து கேட்டப் பிறகும் வேட்டியைக் கிழித்த ஆளைக் காட்டி கொடுக்க மறுக்கிறார்.

அப்பாலிக்கா என்ன நடந்துன்னா இவர் நடந்து போய் இரண்டாவது கோஷ்டிகளுக்கு டீ சப்ளை செய்கிறார்.அங்கு வரும் வாய் தகராறு பின் கைக்கலப்பாக மாறி ஆயுதம் ஏந்துவதில் முடிகிறது.இரண்டாவது கோஷ்டியின் ஜட்டி கிழிந்து விடுகிறது.போலீஸ் கைது செய்ய வரும் கடையின் முதலாளி யோகியின் உண்மை பெயரை மறைத்து பொய் சொல்கிறார்.

யோகி காப்பாற்றிய முதல் கோஷ்டியின் கிழிந்த வேட்டி அவனை பாதுகாப்பாக வைக்க அவர் கூட்டத்தில் சேர்த்து கொள்கிறார்.பெரிய ரவுடியாக நல்ல ரவுடியாக மாறி ஏழை மக்களுக்கு சேவை செய்கிறார்.வழக்கம் போல ஒரு லூசு தான் நாயகி.அவள் படிக்கும் படிப்பிற்காக யோகி பின்னால் சுற்றி திரிகிறாள்.அதுவே காதலாக மாறுகிறது.(மாறாமல் இருந்தால் தானே அதிசயம்).யோகி அங்கிருந்து போக விரும்பினாலும் அவள் போக விடாமல் தடுக்கிறாள்.இது பிடிக்காமல் கிழிந்த வேட்டியும்,அதை கிழித்த குட்டி ஜட்டியும் ஒன்று சேர்கிறார்கள்.அந்த மோதலில் இரண்டாவது ஜட்டியும் கிழிந்து விடிகிறது.

அதே சமயத்தில் யோகியைத் தேடி அவன் அம்மா வருகிறார்.கண்டுப்பிடிக்க முடியவில்லை.வழக்கம் போல லூசு அடைக்கலம் தருகிறது.இருவரும் சேர்ந்து தேடுகிறார்கள்.தேடலின் முடிவில் யோகி கிடைக்காமல் பிக் பாக்கெட் நண்பன் கிடைக்கிறான்.யோகி திங்கள் கிழமை தோறும் தவறாமல் கோவிலுக்கு வருவதாக அவன் சொல்ல,அம்மா கொட்டும் மழை என்று பார்க்காமல் காத்து கிடந்து கண்கள் பூத்துப் போய் இறந்தே விடுகிறார்.யோகி வராமல் இருந்தற்கு காரணம் அவர் கிழித்த ஜட்டிகளின் நூல்கள் எல்லாம் சேர்ந்து அவரை கொலை செய்ய முயல்கிறார்கள்.

பிக்பாக்கெட் நண்பன் தகனத்திற்கு ஏற்பாடு செய்ய,அங்கு வரும் போலீஸ் அவனை பழைய வழக்கிற்குப் பிடித்து விடுகிறார்கள்.அனாதை பிணமாக கிடக்கும் அம்மாவே யோகியே தகனம் செய்ய முற்படுகிறான்.பூத்தூவி நடனம் ஆடுகிறான்.மின் தகனம் செய்ய உடலை அனுப்பிய பிறகு தான் உண்மை தெரிய வருகிறது பிக்பாக்கெட் நண்பன் வாயிலாக.அந்த லூசும் வந்து இவனுடைய அம்மாவின் உடமைகளைக் காட்ட அதை பார்த்து "லூசு பெண்ணின்" மடியில் படுத்துக் கொண்டே அழுகிறான். தாயை பார்க்காமலே அவன் இருந்து விடுகிறான்.

டிஸ்கி :

இந்த யோகி படத்தை தரையில் படுத்துக் கொண்டே பார்த்து விட்டு விமர்சனம் எழுதினேன்.

இது தெலுங்கு படம்.இதன் தமிழ் பதிப்பு என்ன என்று கண்டுப்பிடித்து சொல்பவர்களுக்கு அந்த படம் சன் டிவிக்கு போட்டி டிவியில் ஒளிப்பரப்பும் போது சொல்லப்படும்.

உண்மையான யோகி விமர்சனத்திற்கு அன்பு நண்பர் ஜெட்லி அல்லது அண்ணன் உண்மைத்தமிழன் பதிவிற்கு போகலாம்.இல்லை என்றால் நாளை வரை காத்திருந்து கேபிள் சங்கர் பதிவில் படிக்கலாம்.அதுவும் வேண்டாம் என்றால் நீங்கள் நேராக படத்திற்கு போய் விட்டு கொட்டாவி விடலாம்.

படத்தின் நீதி : இந்த படத்தின் தமிழ் பதிப்பு சொன்னது - ஒவர் பில்டப் உடம்புக்கு ஆகாது.அடுத்தவங்களைப் பார்த்து சூடுப் போட கூடாது.

16 comments:

மேவி... said...

ada pavame.... nambi vantha chinna paiyanai (youth) ippadi yematri vittutingale

மேவி... said...

காலையில எழுத நல்ல நாளாய் இருக்கனும்ன்னு நினைச்சிட்டு வந்தா ...... இப்படி எழுதிருக்கிங்க .....

மேவி... said...

இது தனுஷுடைய "பரட்டை என்கிற அழகு சுந்தரம்" பட கதை மாதிரி இருக்கே .....

அந்த படத்தை ராஜ் டிவி ல கூட போட மாட்டங்களே????? நீங்க எப்புடி

மேவி... said...
This comment has been removed by the author.
Raju said...

ங்கொய்யால..

Cable சங்கர் said...

aanaalum rompaththaan kusumbu.. unakkku

அகல்விளக்கு said...

கிழிஞ்சது ஜட்டி

Ganesan said...

படித்ததில் பிடித்தது--இப்படியும் ஒரு கலெக்டர்.

பதிவை பார்க்கவும்.

http://kaveriganesh.blogspot.com/

ரெண்டு said...

கிழிஞ்சது லம்பாடி லுங்கி என்பது இரும்புதிரையார் புண்ணியத்தால் கிழிஞ்சது கோஷ்டி ஜட்டி என்று இன்றுமுதல் அழைக்கப்படுகிறது. - என்ன கொடும சார் இது.- Ramanathan

Nathanjagk said...

//இரண்டாவது ஜட்டியும் கிழிந்து விடிகிறது//
முடியல அப்பூ! தம்மடிச்சுக்கிட்​டே படிச்​சேன்... பு​கை​யெல்லாம் புன்னகையாகப் ​போகுது!!

Nathanjagk said...

//ஒவர் பில்டப் உடம்புக்கு ஆகாது //
இந்த தத்தூவம் நம்பர் 234-ல் நிக்கிறார்.. நம்ம அரவிந்து!!
அம்மாகிட்ட ​சொல்லி சுத்திப் ​போடச் ​சொல்லு கண்ணூ!!!

Nathanjagk said...

அட சீரியஸாத்தாம்பா ​சொல்றேன்....!

Nathanjagk said...

............... இதுக்கும் சிரிப்பா!??? என்ன புள்​ளையிது!????

ஊர்சுற்றி said...

'தரை' விமர்சனத்தைச் சரியாகக் கவனிக்காமல் உள்ளேவந்துவிட்டேன்!

Marimuthu Murugan said...

'ஜோகி' ங்கிற கன்னடப் படத்தை எப்போ தெலுங்கு படமா மாத்தினாங்க...

Dinesh said...

yaeh... johi kanada film... karanataka la super dupper hit ana film... enna language nae theyamae eppadi neenga antha padathum pathu vimarsam eluthinga...