Monday, November 16, 2009

அமெரிக்காவின் கைப்பாவைகளா நாம்????

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹெட்லி இந்திய நகரங்களைத் தாக்க திட்டம் போட்டுள்ளார் என்று அமெரிக்காவில் சொன்னாலும் சொன்னார்கள்,இந்திய உளவுத்துறை அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லாமால் போய் விட்டது.

காணாமல் போன சந்திராயனைத் தேடுவதில் இருந்து விபத்தில் சிக்கிய ஆந்திர முதல்வரைத் தேடுவது வரை எதற்கு எடுத்தாலும் அமெரிக்க உதவியை நாடினால் இப்படி தான் இருக்கும் அவர்கள் என்ன சொன்னாலும் நம்ப வேண்டியது தான்.

டேவிட் ஹெட்லி அனுப்பிய தகவல்களில் ராகுல் என்ற பெயர் அடிக்கடி அடிபட உடனே விழித்துக் கொண்ட உளவுத்துறை அவர் ராகுல் காந்தியைத் தான் குறிப்பிடுகிறார் என்று சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது.இந்தி சினிமாவில் அடிக்கடி ராகுல் என்ற பெயரில் நடிக்கும் நடிகர் ஷாரூக் கானையும் குறிப்பிடுகிறார் என்று அதிபுத்திசாலித்தனத்தைக் காட்டினால் என்ன செய்வது.

அவர் குறிப்பிடும் அந்த ராகுல் யார் என்று பார்த்தால் அவர் மகேஷ் பட்டின் மகன்.மகேஷ் பட் பிரபல இயக்குனர்.ராகுல் டேவிட் ஹெட்லிக்கு வீடு பிடித்து கொடுத்தார் என்று தெரிய வந்துள்ளது.அவர் பிரபலத்தின் பையனாக இருப்பதால் அவர் டேவிட் ஹெட்லி யார் என்று தெரியாமல் செய்து விட்டார் என்று செய்தி வாசிக்கிறார்கள்.இதுவே ஒரு சாதாரண வீட்டு பையன் சிக்கி இருந்தால் படித்துறையில் பாவாடை திருடிய வழக்கு எல்லாம் அவன் மேல் பாய்ந்து இருக்கும்.

விசாரணை முடிந்த பிறகும் கூட அந்த நபர் உள்ளே தான் இருப்பார்.இதுதான் உண்மையான சிங்கத்தை விட்டு விட்டு கரடியைப் பிடித்து அடித்து உண்மையை ஒத்துக் கொள்ள வைப்பது - இதுதான் கை வந்த கலையாச்சே நமக்கு.

மும்பையில் தாக்குதல் நடந்தப் பிறகு அமெரிக்கா ஆற அமர ஒரு செய்தி வெளியிடுகிறது.நாங்கள் முன்னரே சொன்னோம் யாரும் கேட்கவில்லை என்று. இது எல்லாம் நாடகம்.இப்படி அடிக்கடி நடித்தால் தான் ஆயுதம் விற்க முடியும் இரண்டு பக்கமும்.பணம் கிடைக்கும்.

இரண்டாவது லாபம் - அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பார்கள்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை பயிரிட முடியும்.அதை சாப்பிட்டால் என்ன மாற்றம் வரும் என்று தெரிந்து கொள்ளலாம்.

சாமுராய் படத்தில் வருவது போல - வயித்துல குண்டு வைச்சிட்டு வந்து வெடிச்சான்.அதுல இருந்து வயித்த மட்டும் செக் பண்றது.அடுத்த தடவை காலில் கட்டிக் கொண்டு வருவான் விட்டு விடுங்கள்.அது மாதிரி அவன் சொல்வதை எல்லாம் கேட்டால் இப்படி தான் நடக்கும்.

நடிகனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மக்களுக்கு இல்லை. அமெரிக்கா சொல்வதை கேட்டாலும் அதை நன்கு விசாரிக்க வேண்டும்.இல்லை ராகுல் என்ற பெயருக்கு அர்த்தம் கண்டுப் பிடிப்பதிலே பாதி நாட்கள் முடிந்து விடும்.

டிஸ்கி :

ஆர்குட்டில் சிவாஜியைப் பற்றி தவறாக எழுதி விட்டதாக ஒரு தமிழனைப் பிடித்து விசாரித்து கொடுமை செய்தார்கள்.கல்லீரல் முதல் கணையம் வரை பாதிப்பு.உண்மையில் செய்தது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளின் வாரிசுகள்.அதற்கு மேல் அந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

7 comments:

அகல்விளக்கு said...

சரியாச் சொன்னீங்க தல...

Suresh Kumar said...

நல்ல கருத்துக்கள் நண்பா

லோகு said...

நல்ல பதிவு அண்ணா..

Raju said...

நம்மாளுகள பத்தி சொல்லித்தான் தெரியணுமா...?
வீரப்பன் கேஸில் "விசாரணைக் கைதி"யாக கைது செய்யப் பட்ட, அவரது அண்ணன்
மாதையன் கூட இன்னும் உள்ளேதான் இருக்கிறாறாராம்.. ஒருவேளை இன்னும் வீரப்பன் விசாரணை மேட்டர் முடியலை போலும்.. என்னே கடமை உணர்ச்சியா சாமீ...!
:-(

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா அரசியல நல்ல ஆராய்ச்சி பண்ணற .......ஆம் உனக்குள் ஒரு சமத்துவ வாதி இருக்கான்.....பெரிய வீட்ல தப்பு செஞ்சா ஒரு மாதிரி நாம தப்பு செஞ்ச ஒரு மாதிரி

புலவன் புலிகேசி said...

சரியாக சொன்னாய் நண்பா..

velji said...

நல்ல கருத்து.

அரசாங்கத்தின் பட்டியலில் மேலும் ஒன்று!