Thursday, November 12, 2009

பைத்தியமான கடவுள்

ரொம்ப பசி.கல்லைத் தின்னாலும் கரையிர வயசு தான்.அதுக்காக கல்லை முழுங்க முடியுமா.எனக்கும் ரத்தம் எல்லார் மாதிரியும் அதே அளவு தான் இருக்குமா.இரத்தம் ஏற்கனவே ரெண்டு தடவை குடுத்தாச்சு.குடுத்த ரத்தமே ஊர மூணு மாசம் ஆகும் சொல்ராங்க.அடுத்த மாசம் விக்க முடியாதா.பசியை அடக்க வழி கேட்டால் ஒரு பைத்தியக்காரன் பீடியை காட்டுறான்.பீடி பொறுக்க போன எல்லாம் என் நேரம்.ஒண்ணும் சரியில்ல.எவனோ ஒட்ட ஒட்ட வலிச்சியிருக்கான்.

இருக்கிற காசுக்கு ஏதாவது படம் பாக்கலாம்னு பாத்தா "இன்னும் மீசயே முளைக்கல அதுகுள்ள என்ன.." இப்படி கேட்டே என் வாய அடைக்கிறாங்க.வேலை கேட்டு போனா ஜாதியை கேக்குறான்.ஏதாவது சுணங்குனா ஜாதியைச் சொல்லி திட்டுவான்.திட்டு வாங்கிட்டு நிக்க நான் சொரணை இல்லாத ஜென்மமா.உடனே கை நீளும்.வீட்ட விட்டு ஓடி வரும் போது வாகனத்தை தான் எடுக்கல எம் பெய்ரையாவது ஞாபகமா கேட்டு இருக்கலாம்.

இப்போ எங்க அப்பாவும்,அம்மாவும் எங்கே தேடி அலையிராங்க தெரியலையே.பதினாறு வயசாக இன்னும் நாலு மாசம் தான் இருக்கு.இத மறக்காம இருக்க காரணம் பதின்னறு வயசுல கல்யாணம் நடக்கும்னு ஒருத்தன் சொன்னான்.அதுகுள்ள வீட்ல சண்டை போட்டுட்டேன்.வீட்டுல பாத்த பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு ஓடியாந்திருந்தா அவளை பாக்காத சோகத்தில் தாடியாவது வளர்ந்து இருக்கும்.வந்து நாலு மாசம் ஆகப் போகுது.மண்ணை சாப்பிடதுக்கு அடிச்சாங்க.இங்க என்னாடான்னா மண்ணுல கூட கலப்படம்.வாயிலே வைக்க முடியல..

இனிமே பொறுக்க முடியாது.வேலைய காட்ட வேண்டியது தான்.வாசம் மூக்கை துளைக்குது.திருட வேண்டியது தான் பாக்கி.ஐயோ அதுக்குள்ள இந்த பையன் வந்துட்டானே.சரி அதுக்கு பின்னாடி ஒளிய வேண்டியது தான்.ஏதோ படம் மாதிரி இருக்குதே.அதுல முன்னாடி இருந்து எதையோ எடுத்து வாயில் போடுறான்.அவங்க அம்மா வந்துட்டாங்க.

"ஏண்டா சாமி கும்பிடாம தின்ன.." என்ன பதிலே சொல்ல முடியாம ஒரு படத்த காட்டுறான்.

"என்ன கிருஷ்ணரா..அவரா சாப்பிட்டார்.." அந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு சந்தோஷம் தாங்கல.என் பேரு கிருஷ்ணன்.

"இல்ல முருகர் சாப்பிட்டாரா.." அம்மா காட்டிய அடுத்த படத்தைப் பார்த்தவுடன் வயித்துல புளி.அதுவும் என்னை மாதிரியே இருக்குது.

"இல்ல ராமரா.." இனி குழப்பம் தாங்க முடியாம அவங்க முன்னால போய் குதிச்சேன்.அவங்க பயந்துட்டாங்க.ராமர் படத்தை ஊத்துப் பாத்தேன்.பக்கத்தில் ஒரே ஒரு மனைவி தான்.சோசியக்காரன் சொன்னது ஞாபகம் வந்தது."எனக்கு ரெண்டு பொண்டாட்டி..".அதுவரைக்கும் அதிர்ச்சியில கத்தாம இருந்தாங்க.

"நான் முருகனா இல்ல கிருஷ்ணனா.." இப்படி கேட்டது தான் தாமதம்.

அம்மாவும் பிள்ளையும் கத்த ஆரம்பிச்சாங்க.."பைத்தியம்..பைத்தியம்.."

கால் போன போக்குல ஓடினேன்.முதல்ல வரப் போறது பழனியா இல்ல துவாரகையா ?

8 comments:

அகல்விளக்கு said...

நல்ல சிறுகதை தல...

குறிப்பா ராமர். முருகர். கிருஷ்ணர் பற்றிய கருத்து.

இன்னும் நிறைய எழுத முயற்சி பண்ணுங்க.

க.பாலாசி said...

//அம்மாவும் பிள்ளையும் கத்த ஆரம்பிச்சாங்க.."பைத்தியம்..பைத்தியம்.."//

அய்யோ....தெரிஞ்சிடுச்சா....

நல்ல சிந்தனை முயற்சி....

Nathanjagk said...

ராமராக விரும்பாத ஒரு புதுக் கடவுள்! ஓட்டம் கூட துவார​​கை பக்கம்தான் - அ​யோத்தி இல்​லை!
சின்ன மர்ம முடிச்சுள்ள சிறுக​தை - அபாரம்!

velji said...

சிந்திக்க வைக்கும் சிறுகதை.அருமை.

வனம் said...

வணக்கம் அரவிந்த்

ம்ம்ம் கலக்கீட்டீங்க, நல்லா இருக்கு.

இராஜராஜன்

இரும்புத்திரை said...

நன்றி அகல் விளக்கு

நன்றி க.பாலாசி

நன்றி ஜெகநாதன்

நன்றி velji

நன்றி வனம்

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா அற்புதமான நடை ......
நல்ல கதை நண்பா

Unknown said...

//முதல்ல வரப் போறது பழனியா இல்ல துவாரகையா ? //

final டச் நல்ல இருக்கு தல.....