Saturday, November 14, 2009

நீ சாரு அதிகம் படிப்பியா..

கௌதம் மெல்லியதாக தனக்குள் சிரித்து கொண்டான்.அவன் அடுத்து என்ன சொல்வான் என்று வாயையே பார்த்துக் கொண்டு ஒரு கூட்டம் இருந்தது.அதை நினைத்ததும் இன்னும் சிரிப்பாக இருந்தது."ஹவ் கிரேசி தீஸ் பீபிள் ஆர்.." என்று நினைத்து கொண்டான்.பள்ளித் தோழன் விக்ரம் சொன்னது ஞாபகம் வந்தது.

"மச்சான்..ஸ்கூல்,காலேஜ் இங்க எல்லாம் நீ வெயிட் காட்ட உதவுறதே பொண்ணுங்க தான்..இப்போ வாசல்ல வைச்சி ஒரு பொண்ண கிஸ்ஸடி..அது கொஞ்சம் சுமாரா இருந்தாலும் நீ தான் ஹீரோ.."

அனுபவஸ்தன் சொன்னா சரியாக தான் இருக்கும்.அன்னிக்கு கௌதமுக்கு புரியல.இன்னைக்கு காலேஜ்ல இருக்கிறதுல ஒரு நல்ல பிகர தட்டுன உடனே தான் தெரியுது விக்ரம் சொன்ன ஹீரோவோட மதிப்பு.

சீனியரை ஜூனியர் பசங்க அடிச்சிட்டாங்க.உதவுங்க பக்கத்து டிபார்ட்மென்ட் பசங்க வந்து கேட்டதுக்கும் முதல்ல கௌதமிடம் கேட்டதில் அவனுக்கு சொல்ல முடியாத சந்தோஷம்.

அசைன்மெண்ட் எழுதுறது,சும்மா கிளாஸ் நடக்குற வைத்து பரிட்சையில் வைத்து பேப்பர் கொடுக்கிறது எல்லாம் அவன் கண்ணசைவில் நடக்கும் போது ஏதோ சாதித்தாகவே நினைத்தான்.

"ம்..ம்..சொல்லு உனக்கு பிராஜக்ட் மார்க் இந்த தடவை குறையும் தெரியுமா..பசங்க உன் பின்னாடி தான் நிக்கிறாங்க..நாங்க ஸ்மெல் பண்ணிட்டோம். இந்த ஸ்ரைக் நடக்க கூடாது..நடந்தா நீ தான் பொறுப்பு.." என்று ஒரு லெக்சரர் விட்ட மிரட்டலுக்கும் அடி பணியவில்லை.

ஸ்ரைக்கும் நடந்தது.மார்க்கும் குறைந்தது.

ஆளுக்கொரு வேலை.திசைக்கொருவராக எல்லோரும் போய் விட்டார்கள்.

நண்பனின் கல்யாணம்.எல்லோரும் வரவில்லை என்றாலும் கல்லூரியில் மோசமானவர்கள் என்று முத்திரை குத்தப் பட்டதில் முக்கியமானவர்கள் வந்திருந்தார்கள்.

கௌதம் மனதுக்குள் சாமியை வேண்டி விழுந்து கும்பிட்டான்."அவளைப் பத்தி பேச்சு வரக் கூடாது.."

அவன் வாழ்வில் கிழிக்கப் பட்ட அத்தியாயத்திற்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது.அவளின் அவருக்கு எல்லாமே அதிகம்.

சாமி தான் முக்கியமான கட்டத்தில் தானே கை விடுவார்.வேண்டாதது எல்லாம் நடந்தது.தண்ணி அடிக்கும் போது மெதுவாக ஆரம்பித்தார்கள்.கூடப் படித்த பெண்கள் பற்றி எல்லாம் பேச்சு தொடங்கி சரியாக அவளிடன் வந்து நின்றது.

"அவள நீ அன்னைக்கே முடிச்சு இருக்கணும்..விட்டுட்ட அதான் பீல் பண்றே.." - இப்படி முத்து உதிர்த்தவன் காதலிக்கும் போது அண்ணியோ, தங்கச்சி என்று உறவு கொண்டாடியவன்.

"அவளை சும்மா விடாதே..ஏதாவது பண்ணு.."

"இனிமே என்ன பண்ண முடியும்..அதான் அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறதே.." சொன்ன கௌதமுக்கு நேரம் சரியில்லை.

"அப்படியா..போய் குழந்தைக்கு ஆய் கழுவி விடு.." என்று அவன் சொல்லவும் கூட்டமே சிரித்தது.அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை.

"அந்த பெண்ணை இழந்துட்டா நான் ஹீரோ இல்லையா.." நினைக்க நினைக்க கௌதமுக்கு அழுகையோடு கோபம் வந்தது.

விக்ரம் நினைவுக்கு வந்தான்.எப்படியோ முயற்சி செய்து கடைசியாக ஆர்குட்டில் அவனை பிடித்து விட்டான்.

விக்ரம் தொடர்பு கொண்டு பேசியவுடன்.."மச்சான்..அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் அதுல ஒரே ஒரு மாற்றம் தான்.."

"விக்ரம்..நீ சாரு அதிகம் படிப்பியா..திரும்ப ஸ்கூல் பொண்ணு கூட எல்லாம் என்னால சுத்த முடியாது.."

"மச்சி..உன் குசும்பு உன்ன விட்டு போகல..படிக்கும் போது தான் ஹீரோயிசத்தை காட்ட பொண்ணு..இப்ப எல்லோரும் ஐ.டில வேலை பாக்குறீங்க பொண்ணு எல்லாம் சாதாரணம்.."

"அப்ப அந்த அட்வைஸ் உள்ள மாற்றம்.."

"பணம் அவன விட நீ அதிகமா சம்பாதி..நீ தாண்டா ஹீரோ..சின்ன வயசுல நீ பணத்தை பத்தி கவலை பட்டு இருக்கியா..இல்ல தானே..இப்ப பொண்ணுங்களப் பத்தி கவலை படாதே.."

கௌதமுக்கு மனம் தெளிவாக இருந்தது.

"எப்படி மச்சான் என்னால முடியுமா.." குரல் கம்மி இருந்தது

"அந்த பொண்ண மடக்க எப்படி எல்லாம் குட்டிக் கரணம் அடிச்ச..இப்போ பணத்துக்காக கொஞ்சம் அடி.." விக்ரம் சொல்லி முடிக்கவும்

"நிச்சயமாடா.." சொல்லும் போதே கௌதமின் குரலில் உற்சாகம் வழிந்தது.

டிஸ்கி :

"போய் ஆய் கழுவி விடு.." என்ற ஒரேயொரு சம்பவத்தின் கருவில் இருந்து தான் இந்த கதை தொடங்கியது.இந்த கதைக்கு புள்ளி வைத்தவர் சிவா.அவருக்கு என் நன்றிகள்.

8 comments:

பீர் | Peer said...

நீ சாரு அதிகம் படிப்பியா..

நல்லாயிருக்கு அரவிந்த்.

அகல்விளக்கு said...

நல்லா இருக்கு

தொடர்ந்து எழுதுங்க தல

Raju said...

பதிவுலகின் சூட்சுமங்கள் புரிய ஆரம்பிச்சுருச்சு போலயே அரவிந்த அண்ணே..!

துபாய் ராஜா said...

வித்தியாசமான களம்.
விறுவிறுப்பான கதை.
எப்படியெல்லாம் யோசிச்சு தலைப்பு வைக்கறாய்ங்க.... :))

Unknown said...

இன்றைய தலைமுறையினர் மிகத் தெளிவானவர்கள் என்பதை மிகத் தெளிவாக காட்டியுள்ளிர்கள்:) மகிழ்ச்சி:)

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பனே கௌதம் நீ தானே ..........
ஒவ்வொரு வசனமும் நச்சுனு இருந்துச்சு ...................................
கதைய சுவரசியமா சொல்றது முக்கியம் ..........
அது உனக்கு நன்றாய் வருகிறது ........

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாயிருக்கு

velji said...

சொன்ன விதம் நல்லாயிருக்கு.