Monday, November 30, 2009

துவையல் - கிசுகிசு ஸ்பெஷல்

முன் டிஸ்கி : கிசுகிசு கூட எழுத தெரியாம இருக்க நான் என்ன குஜராத் பூகம்பம்மா இல்ல மதுரை பாசக்காரங்களா.இது இன்று வந்த எந்த பதிவுக்கும் எதிர்பதிவு அல்ல..அப்படி சொன்னாலும் நம்பவா போறீங்க..

எந்த கிசுகிசு எழுதினாலும் ஒரு க்ளுவாவது கொடுக்கணும் - இது எங்க குரு சொல்லி குடுத்த விதி.இந்த கிசுகிசுவின் நாயகன் பருத்திவீரன் படத்தில் வரும் காமெடி கேரக்டரின் பெயரில் முதலில் எழுத தொடங்கியவர்.அதுக்காக இப்பவும் அதே பெயர் வேறு எங்காவது இருக்கும் என்று கற்பனை செய்தால் நான் பொறுப்பு அல்ல..

அந்த எழுத்தாளர் இப்ப கதைசொல்லி இருக்கிற ஊர்ல இருந்து கூப்பிடு தூரத்தில் தான் இருக்கிறார்(200 கிலோ மீட்டர் தூரம் தான்).காலையிலே வெளியே போது கதை கேக்க வந்துருவாரு.கதை சொல்றவரு உஷாரா எல்லாத்தையும் முடிச்சிட்டு கழுவிட்டு வந்து உக்காருவாரு.ஆனா இவருக்கு இது தெரியாம அவங்க ஊர்காரங்களைப் பத்தி கதை சொல்றவரு ஏதாவது நொள்ளை சொல்றாரா..ஏதாவது நொட்டை சொல்றாரான்னு பாக்க வேண்டியது."தம்பி நான் எதுவும் சொல்லவில்ல..பாரு காயுது பாரு கழுவிட்டு வா.." அப்படி சொன்னாலும் கேக்க மாட்டாரு."நான் கழுவிட்டு வரும் முன்னாடி நீங்க ஏதாவது சொல்லிடீங்கன்னா..நான் போக மாட்டேன் மறுத்து விடுவாரு.அவர் சொம்பு தண்ணி வெயில் பட்டு வத்துற வரை கழுவ மாட்டாரு.சின்ன வயசுல படிச்ச கதை எல்லாம் இங்க தான் பாக்கலாம்.மிச்சம் இருக்கிற தண்ணியில காக்கா கல்லப் போட்டு குடிக்கும்.தண்ணி அவ்வளவு தாந்து கிடக்கு. பின்ன எங்கேயிருந்து கழுவ..

சுரண்டி தான் எடுப்பாரு போல.அடுத்த நாள் கதை கேக்க வந்தவரு விந்தி விந்தி நடந்து இருக்காரு.வந்து கதை சொல்வரைப் பாத்து "இதுக்கு காரணம் நீங்க தான் உங்களை சும்மா விட மாட்டேன்.." என்று சொல்லி விட்டு போனவரு தான்.இன்னைக்கு அவர் கதை சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டாரு.அதை கேக்க ஒரு கூட்டம்.மக்களே கழுவிட்டு உக்காருங்க..நல்லா பாருங்க மக்கா..கதை சொல்றவரு ஒரு சைடா தான் உக்காந்து இருப்பாரு..

சாயங்காலம் ஆறு மணிக்கு டான்னு வந்து நிப்பாரு.எதுக்கு தம்பி அப்படி கேட்டா போதும்."அண்ணே நீங்க எடுக்கிற கதையில் நான் தான் காமெடியனா நடிக்கணும் சொன்னாரு.தம்பி நம்ம எல்லோரும் காமெடி பீஸூதானே.அப்புறம் என்ன தனியா வேற..இவ்வளவு தான் கதை சொல்லி சொன்னாரு.அவர் லட்சியம் என்ன அப்படி அவர் கிட்ட கேளுங்க..முதல்ல காமெடி..அப்புறம் சோலோ காமெடி..அப்புறம் அஞ்சானெஞ்சன் மாதிரி வரணும் அப்படி சொல்றாரு.

அவரு அஞ்சு பர்சன்ட் அறிவுஜீவி பட்டம் வாங்க கதை சொல்லி கூட சேர்ந்து சுத்துறதா அவரே வாக்கு"மூலம்" கொடுத்து இருக்காரு.இந்த சதவீதம் கத்துக்கவே கழுவாம கதை கேக்குறாரு.முழுசா கத்துக்க என்ன பண்ணுவாரு.யோசிச்சி பாத்தா சிரிப்பாணி பொத்துகிட்டு வருது.(எங்கே இருந்து அப்படி எல்லாம் கேக்க கூடாது.தம்பி பாவம்..)

கதைசொல்லிய வண்டி ஏத்தி விட வந்தவரு "காமெடியன் ரோல் மறந்துராதீங்க.." அப்படி சொல்லி வண்டி ஏற விடாம ஒரு அழுவாச்சி.என்ன பண்ரது.தம்பி நான் சினிமா எடுக்க போகலை வேற வேலையா போறேன்னு சொல்லிட்டு வந்தேன்.அதை நேக்கா மறந்து தொலைச்சிட்டு இன்னமும் அவர் சினிவாவுல தான் இருக்காரு..நாமளும் காமெடியனா "ஆயி"ரலாம்னு ஒரே கற்பனை.

அப்படி போன இடத்துல அவங்க ஊர்காரர் செய்த திருட்டைப் பத்தி இவர் சொல்லி விட..அதுல இருந்து இவருக்கு கோபம்."எனக்கு புண்ணானது கூட வருத்தம் இல்ல..எங்க ஊர்காரர் மேல கை வைச்சா என்ன ஆகும் பாருங்கன்னு சொல்லிட்டு போனாரு.என்ன ஆகும் தம்பி ஆளுக்கொரு பதிவு ஆகும் அப்படி கதைசொல்லி நினைத்து சிரிச்சாரு.

இந்த தடவை ஊருக்கு வந்தவரு "என்ன செஞ்சா சீக்கிரம் பேமஸ் ஆகலாம்னு கேட்டாரு..".கதைசொல்லியும் கிசுகிசு எழுதினா பேமஸ் ஆகலாம்னு சொல்ல அதையும் கால் கழுவாம ஆறு மணி நேரம் கேட்டாரு.என் தம்பி கழுவலையா அப்படி கேட்டா.."பழகிப் போச்சு அண்ணே..சொற்பொழிவுக்குப் போனா நான் என்னையே மறந்து விடுறேன்.

கீழ் கழுவாத டிஸ்கி :

தம்பிக்கு இன்னும் கிசுகிசு எழுத வரலை.கதைசொல்லி இசையைப் பத்தியோ பாடலைப் பத்தியோ எங்கேயும் எப்போதும் பேசியதில்லை.அட பதிவு கூட எழுதியதில்லை.அப்புறம் தம்பி அவரை பாடலாசிரியர் என்று சொல்கிறார்.இது எந்த சொற்பொழிவுல கால் கழுவாம கேட்டதோ தெரியல..

இதனால அண்ணன் கதைசொல்லிக்கும்,தம்பி கிசுகிசுவிக்கும் சண்டை என்று நினைத்து ஏமாந்து விட வேண்டாம்.ரெண்டு பேரு சேர்ந்து நாளைக்கு வேற ஏதாவது ஊர்காரங்களைத் தாக்குவாங்க..

இருங்க கதைசொல்லியோட சாயந்திர சொற்பொழிவு கேக்க தம்பி கழுவாம வர்றாரு..இன்னைக்கு க்ளாஸ் கிசுகிசு ஸ்பெஷல்..அப்பதானே தம்பியும் புத்தகம் வெளியிடும் அளவுக்கு வருவாரு.

சாரு,கமல்,அமீர்

சாரு ஒரு கோமாளி என்று குமுதம் விமர்சனம் செய்து இருக்கிறது.நான் எப்பொழுதாவது ஓசியில் குமுதம் படித்தாலும் முதலில் படிப்பது அரசு பதில்கள் தான்.இந்த விமர்சனத்திற்கு காரணம் இளையராஜா.இந்த மூன்று பேருமே எனக்கு பிடிப்பதால் அதில் எல்லாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை மேலும் அந்த பதிலுக்கு சாருவே வெளுத்து வாங்கி இருப்பதால் ஓவர் டூ அமீர்.

என்னை பொறுத்த வரை சாரு ஒரு தீர்க்கதரிசி தான்.காரணம் இதோ..

பருத்தி வீரன் தொடங்கியதில் இருந்து படம் முடியும் வரை ஒரு எதிர்பார்ப்பும் இல்லை - யோகி அளவிற்கு.படம் வெளி வந்தப் பிறகு தமிழ் நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது.கமலில் ஆரம்பித்து சாதாரண கடைநிலை ரசிகன் வரை அமீருக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார்கள்.அதில் கமல் கொடுத்த அங்கீகாரம் தமிழ் சினிவாவில் வந்த பதினேழு சிறந்த திரைக்கதையில் பருத்தி வீரனும் ஒன்று. (கொடுமையிலும் பெரிய கொடுமை அந்த வரிசையில் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் இருந்தது.)

கமல் அங்கீகாரம் கொடுத்ததோடு நிறுத்தி இருக்கலாம்.அவர் கொடுத்த யோசனை தான் இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு எமனாக வந்து நிற்கிறது யோகியின் வடிவில்.கமல் சொன்னது இது தான் அமீர் உலக சினிமா பாருங்கள் என்று சொன்னது தான்.அப்போது வேண்டாம் அந்த தவறை செய்து விடாதீர்கள் என்று அலறிய ஒரே ஒரு நபர் சாரு மட்டும் தான்.

கமல் நிகழ மறுத்த அற்புதம் என்று இந்தியா டூடேயில் வெளியான கட்டுரையில் கமலின் அவ்வை சண்முகி படம் ஒரு அப்பட்டமான தழுவல் என்று சொன்னார்.அதே மாதிரி தான் யோகி அது ஆப்பிரிக்க படத்தின் அப்பட்டமான தழுவல் என்று கூட சொல்ல மனம் வரவில்லை.அப்பட்டமான உருவல்.

சாரு அதே கட்டுரையில் அமீருக்கு உலக சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னார்.இப்போது அமீருக்கு உலக சினிமா தெரியும் - அதனால் தான் ஆப்பிரிக்கப் படத்தைத் திருடி அப்பிரிக்கப் படங்கள் கலந்து கொள்ளும் பிரிவில் துபாய் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்கிறார்.(இப்படி செய்ய கமல் சொல்லி தந்து இருக்க மாட்டார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.அனுப்ப சொன்னவர் சுகாசினி மணிரத்னம்.ஆப்பு எங்கே தயார் ஆகுதுன்னே கண்டுப்பிடிக்க முடியவில்லை.)

அடுத்த வரியில் சாரு அமீருக்கு இலக்கியம் தெரியாது என்று ஆச்சர்யப்படுகிறார்.நல்லவேளை அமீருக்கு இலக்கியம் படியுங்கள் என்று யோசனை சொல்லவில்லை.நல்ல விதமாக இலக்கியம் தப்பி விட்டது.(இதில் சாரு மேல் எனக்கு வருத்தம் உண்டு.இலக்கியம் தெரியாதவரை வைத்து புத்தகம் வெளியிடுவதை விட இலக்கியத்தில் ஆர்வம் உள்ள வாசகர்களை வைத்து புத்தகம் அறிமுகம் செய்து இருக்கலாம்.இது சாரு அமீரின் பருத்திவீரனுக்கு கொடுத்த அங்கீகாரமா..)

கமலும்,மணிரத்னமும் தான் காப்பி அடிக்க சொல்லி தந்தார்கள் என்று வெண்ணிற இரவுகள் கார்த்தி என்னுடைய பதிவில் பின்னூட்டமாக எழுதி இருந்தான்.கமல் (காட் பாதர் - தேவர்மகன்) அதில் ஒரு நேர்த்தி இருந்தது.நேடிவிட்டி இருந்தது.தி ராக் என்ற படத்தை தான் உருவி தசாவதாரமாக எடுத்து இருந்தார் என்று நான் கத்தியது என் காதிலே விழவில்லை.காரணம் கமல் என்ற மந்திரம்.அவர் படத்தில் தெரியும் இசம்,ரசம் எல்லாம் தான் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.கமல் ஒரு பார்பினீயவாதி.இந்துத்துவா தீவிரவாதி என்று தான் அடிப்பார்களே தவிர அவர் எந்த படத்தில் இருந்து தழுவினார் என்று யாரும் கண்டுக் கொள்ளவதில்லை.

மணிரத்னம் காட்பாதர் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் படத்தை எடுத்து(தழுவி) டைம்ஸ் பத்திரிக்கையின் முதல் நூறு படங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த இடத்தில் தான் வசந்தபாலனை உதாரணம் காட்ட வேண்டும்.சினிமா பேரடைஸோ தான் வெயில்.அந்த கதைக்குள் அழகாக பசுபதியைக் கொண்டு நிரப்பினார்.உடனே பசுபதிக்கு நான் தானே நடிக்க சொல்லி குடுத்தேன் என்று அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்யவில்லை.

ட்ரைலர் பார்த்து அனுமானத்தில் அமீரின் நடிப்பை விமர்சனம் செய்தேன் என்று கடும் கண்டனம் வந்தது.இதற்கும் சாரு பாணியில் தான் பதில் சொல்வேன்.இருபது வருடம் சினிமா பார்த்தே வளரும் ஒருவனால் ட்ரைலர் பார்த்து மிக சரியாக முடிவு செய்ய முடியும் அதற்கு உதாரணம் தான் அமீரின் நடிப்பு.

இந்த பதிவை அரைவேக்காடு என்றோ அறிவுஜீவி என்றோ இல்லை கோமாளி என்றோ சொல்லலாம்.

டிஸ்கி :

தொடரும் - விமர்சங்கள் மட்டும் அல்ல இந்த பதிவும் தான்.இரண்டாவது பாகம் விரைவில்..

சாரு பேச்சைக் கேட்காமல் கமல் பேச்சைக் கேட்டு எங்க உயிரை வாங்கிடீங்களே அமீர்.இது நியாயமா..கண்ணபிரான் எந்த படத்தின் காப்பி - இது நான் கேட்கவில்லை குசும்பன் கேட்டார் ஆதியின் பதிவில்.எனக்கும் அதே சந்தேகம் தான்.

Sunday, November 29, 2009

பேருந்தின் ஜன்னல் ஒரத்தில்

சேகருக்கு பெரும்பாலும் கல்லூரி பேருந்தில் ஏறிய உடன் தூங்கி விடுவது தான் வழக்கம்.அன்று அரசியல் விவாதம் அனல் பறந்த காரணத்தால் தூக்கம் கலைந்து விட்டது.ராமும் சேகரும் அனல் பறக்க விவாதம் செய்ததில் தலைவர்களின் சரித்திரம் எல்லாம் வெளியே வரத் துவங்கியது.சேகரும் ராமும் அரசியல் செய்யும்,செய்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.எதிரெதிர் கட்சியில் இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள்.

"மச்சான் உங்க தலைவர் ரொம்ப யோக்கியமா.." என்று கொஞ்சம் சத்தமாகவே கத்தி விட்டான் சேகர்.

ஏற்கனவே அவன் குரல் "கொஞ்சம்" இனிமையாகவே இருக்கும்.போட்ட சத்ததில் முன்வரிசையில் இருந்து சிலர் அந்த பெண்னை பார்த்தார்கள்.

முதல் முறையாக ராம் பதில் சொல்வதை கூட கவனிக்காமல் திரும்பி பார்த்தவர்களில் ஒருத்தியை வைத்த கண் வாங்காமல் பார்த்தடியே இருந்தான்.

"மச்சி..இதெல்லாம் வேண்டாம்..அவ என் ஸ்டாப்பில் தான் ஏறுகிறாள்..ஏதாவது ஆச்சுன்னா என் கதை கந்தலாகி விடும்.." என்று கெஞ்ச தொடங்கி இருந்தான் ராம்.

"இருடா..மச்சி எனக்கு அறிமுகப்படுத்தி விடுடா அவள.."

"யார.."

"தெரியாத மாதிரி நடிக்காத..உன் ஸ்டாப் பிரியா தான்.."

"டேய்..நீ தான் வேற ஏதோ பெண்ணை காதலிக்கிறதா சொன்ன.."

"ஆமாண்டா..அவ நம்ம பக்கத்து க்ளாஸ்..அவளை பாக்க போகும் வந்த சண்டையிலே அவ முன்னாடியே அந்த க்ளாஸ் பையனை அடித்து விட்டேன்..இனி அவள் கண்டுப்பாளா என்று எனக்கு சந்தேகம் அதான் பிரியாவை வைச்சி பானுவ சமாதானப்படுத்த ஒரு முயற்சி பண்ணலாம்னு பாக்குறேன்.."

"இவளும் நம்ம க்ளாஸ்..அப்புறம் எப்படி.."

"டேய் ராம்..பசங்க போனா தான் அவங்க சண்டை போடுவாங்க..பொண்ணு போனா கூட ஒரு பொண்ணு தான் நினைத்து சும்மா இருப்பாங்க..எப்படி நம்ம ஐடியா.."

"தெரியல..ஆக மொத்த எனக்கு சங்கு ஊதாம விட மாட்ட.."

ராம் அறிமுகப்படுத்தாமல் எப்படியோ தப்பிக்க சேகரே கடைசியில் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியோ பிரியாவிடம் பேசி விட்டான்.

பிரியாவும்,சேகரும் நெருங்கிய நண்பர்களாக மாறியிருந்தார்கள்.

"கதை போகிறப் போக்கே சரியில்லையே..சீக்கிரம் மடக்கி விடுவ போல..நல்லாயிருந்தா சரி தான்.." ராம் கிண்டம் செய்து கொண்டு வந்தான்.

பல நாட்கள் கழித்து..

"மச்சான் சக்சஸ்டா..அவ ஒத்துகிட்டா.." என்று சேகர் சொல்ல கட்டிப்பிடித்து வாழ்த்தினான் ராம்.

"எப்படிடா.."

"நான் ஒண்ணுமே பண்ணல..அவளே தான் சொன்னா.."

"அதானே பாத்தேன்..நீயாவது ஆணியப் புடுங்கிறதாவது..சேகர்..டிரீட் எப்போ..

"இந்த வாரம் சண்டே.."

"அவளும் வருவாளா.."

"ம்..ம்..பின்ன அவ இல்லாமலா.."

"அவ பிரண்ட்ஸ் யாராவது வருவாங்களா.."

"டேய் ராம்..ஒவரா பேசாதே.."

"வயிறு எரியுமே.." என்று ராம் தனக்குள் முணங்கி கொண்டான்.

வடபழனியில் ராமும் சேகரும் காத்திருந்தார்கள்.

"சேகர்..என்னடா இவ வர்றா.."

"எவடா.."

"பிரியாடா..பானு எங்க.."

"பானுவா சரியா போச்சு..அது வெறும் ஈர்ப்புடா..பிரியா தான் காதலிப்பதா சொன்னா..நானும் சரின்னு சொல்லிட்டேன்.." என்று சொன்ன சேகரைப் பார்த்து தலையில் அடித்து கொண்டான் ராம்.

"ஏன் என்ன ஆச்சு ராம்.."

"இது தெரியாம நீ பானுவ காதலிக்கிற விஷயத்தை அவ கிட்ட சொல்லிட்டேன்.."

"யார் கிட்ட் பானுகிட்டயா..ஏண்டா இப்படி எல்லாம் பண்றே..இரண்டு பொண்ணும் ஒரே நேரத்துல லவ் டார்ச்சர் பண்ணினா நான் என்ன பண்ணுவேன்.."

"இல்லடா பிரியா கிட்ட..இப்படி வேற நினைப்பு ஓடுதா" என்று சொன்ன ராமை பார்த்து சிரித்தான் சேகர்.

"அதானால தான் பிரியா எங்கிட்ட காதலிக்கிறதா சொன்னாளா..தாங்க்ஸ்டா ராம்.." என்று சொன்னவனை பார்த்து அதிர்ச்சியோடு நின்றான் ராம்.

டிஸ்கி :

இது செம்மொழி பைந்தமிழ் மன்றம் நடத்தும் பரிசு போட்டிக்காக எழுதியது.

Saturday, November 28, 2009

யோகி - தரை விமர்சனம்

யோகி ஒரு அப்பாவியாக வளர்கிறான்.அதான் வளர்ந்து கேட்டவன்.அப்பா நோய்வாய் பட்டு இறந்து விட அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற நண்பனை காண செல்கிறான்.நண்பனோ ஒரு பிக் பாக்கெட்.கேப்மாறி.மொள்ளமாரி.முடிச்சவிக்கி.அவனை சந்திக்க முடியாமல் அலைந்து திரிகிறான். நண்பனை கண்டுப்பிடிக்க முடியாத சோகத்தில் டீக்கடையில் க்ளாஸ் கழுவும் பையனாக சேர்கிறார்.நகரத்தை கைக்குள் வைத்திருப்பது இரண்டு கோஷ்டிகள்.அதில் ஒரு கோஷ்டியின் வேட்டியைக் கிழிக்க முற்படும் போது முதல் கோஷ்டியின் தலிவனை யோகி காப்பாற்றி விடுகிறார்.போலீஸ் வந்து கேட்டப் பிறகும் வேட்டியைக் கிழித்த ஆளைக் காட்டி கொடுக்க மறுக்கிறார்.

அப்பாலிக்கா என்ன நடந்துன்னா இவர் நடந்து போய் இரண்டாவது கோஷ்டிகளுக்கு டீ சப்ளை செய்கிறார்.அங்கு வரும் வாய் தகராறு பின் கைக்கலப்பாக மாறி ஆயுதம் ஏந்துவதில் முடிகிறது.இரண்டாவது கோஷ்டியின் ஜட்டி கிழிந்து விடுகிறது.போலீஸ் கைது செய்ய வரும் கடையின் முதலாளி யோகியின் உண்மை பெயரை மறைத்து பொய் சொல்கிறார்.

யோகி காப்பாற்றிய முதல் கோஷ்டியின் கிழிந்த வேட்டி அவனை பாதுகாப்பாக வைக்க அவர் கூட்டத்தில் சேர்த்து கொள்கிறார்.பெரிய ரவுடியாக நல்ல ரவுடியாக மாறி ஏழை மக்களுக்கு சேவை செய்கிறார்.வழக்கம் போல ஒரு லூசு தான் நாயகி.அவள் படிக்கும் படிப்பிற்காக யோகி பின்னால் சுற்றி திரிகிறாள்.அதுவே காதலாக மாறுகிறது.(மாறாமல் இருந்தால் தானே அதிசயம்).யோகி அங்கிருந்து போக விரும்பினாலும் அவள் போக விடாமல் தடுக்கிறாள்.இது பிடிக்காமல் கிழிந்த வேட்டியும்,அதை கிழித்த குட்டி ஜட்டியும் ஒன்று சேர்கிறார்கள்.அந்த மோதலில் இரண்டாவது ஜட்டியும் கிழிந்து விடிகிறது.

அதே சமயத்தில் யோகியைத் தேடி அவன் அம்மா வருகிறார்.கண்டுப்பிடிக்க முடியவில்லை.வழக்கம் போல லூசு அடைக்கலம் தருகிறது.இருவரும் சேர்ந்து தேடுகிறார்கள்.தேடலின் முடிவில் யோகி கிடைக்காமல் பிக் பாக்கெட் நண்பன் கிடைக்கிறான்.யோகி திங்கள் கிழமை தோறும் தவறாமல் கோவிலுக்கு வருவதாக அவன் சொல்ல,அம்மா கொட்டும் மழை என்று பார்க்காமல் காத்து கிடந்து கண்கள் பூத்துப் போய் இறந்தே விடுகிறார்.யோகி வராமல் இருந்தற்கு காரணம் அவர் கிழித்த ஜட்டிகளின் நூல்கள் எல்லாம் சேர்ந்து அவரை கொலை செய்ய முயல்கிறார்கள்.

பிக்பாக்கெட் நண்பன் தகனத்திற்கு ஏற்பாடு செய்ய,அங்கு வரும் போலீஸ் அவனை பழைய வழக்கிற்குப் பிடித்து விடுகிறார்கள்.அனாதை பிணமாக கிடக்கும் அம்மாவே யோகியே தகனம் செய்ய முற்படுகிறான்.பூத்தூவி நடனம் ஆடுகிறான்.மின் தகனம் செய்ய உடலை அனுப்பிய பிறகு தான் உண்மை தெரிய வருகிறது பிக்பாக்கெட் நண்பன் வாயிலாக.அந்த லூசும் வந்து இவனுடைய அம்மாவின் உடமைகளைக் காட்ட அதை பார்த்து "லூசு பெண்ணின்" மடியில் படுத்துக் கொண்டே அழுகிறான். தாயை பார்க்காமலே அவன் இருந்து விடுகிறான்.

டிஸ்கி :

இந்த யோகி படத்தை தரையில் படுத்துக் கொண்டே பார்த்து விட்டு விமர்சனம் எழுதினேன்.

இது தெலுங்கு படம்.இதன் தமிழ் பதிப்பு என்ன என்று கண்டுப்பிடித்து சொல்பவர்களுக்கு அந்த படம் சன் டிவிக்கு போட்டி டிவியில் ஒளிப்பரப்பும் போது சொல்லப்படும்.

உண்மையான யோகி விமர்சனத்திற்கு அன்பு நண்பர் ஜெட்லி அல்லது அண்ணன் உண்மைத்தமிழன் பதிவிற்கு போகலாம்.இல்லை என்றால் நாளை வரை காத்திருந்து கேபிள் சங்கர் பதிவில் படிக்கலாம்.அதுவும் வேண்டாம் என்றால் நீங்கள் நேராக படத்திற்கு போய் விட்டு கொட்டாவி விடலாம்.

படத்தின் நீதி : இந்த படத்தின் தமிழ் பதிப்பு சொன்னது - ஒவர் பில்டப் உடம்புக்கு ஆகாது.அடுத்தவங்களைப் பார்த்து சூடுப் போட கூடாது.

Friday, November 27, 2009

நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய்

நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய் இந்த காமெடி பாக்கும் போதெல்லாம் என்னை மறந்து சிரித்து இருக்கிறேன்.ஆனா இப்போ இந்த காமெடி வந்தாலே உடனே சேனல் மாற்றி விடுவேன்.அப்படி என் வாழ்க்கையிலே வேட்டையாடாமல் விளையாடிய வில்லியின் கதை

ஜூலை 2, 2008

அப்போ எல்லாம் ரொம்ப வெட்டி தான்.பதிவு கூட எழுதுறது இல்லனா பாத்துக்கோங்க.யார்கிட்டயாவது வம்பு இழுக்கணும் போல ஒரு நினைப்பு ஓடிக்கிட்டே இருந்தது.அப்படி இருக்கும் போது அந்த போன் கால் வழியா ஒரு சோதனை வந்தது.உங்களுக்கு பிஎல்/எஸ்க்யூஎல் எக்ஸ்பிரியன்ஸ் எத்தனை வருஷம் இருக்கு அப்படி அந்த முனை கேட்டு வைக்க நானும் நாலு வருஷம் இருக்குதுன்னு சொல்லி வைச்சேன் என் வாழ்க்கையிலே விதி விளையாடப் போவது தெரியாம.

உடனே அந்த பெண்ணும்(ஆன்ட்டியும்) துபாய்ல ஒரு வேலை இருக்கு.உங்களுக்கு விருப்பமா.இல்லை எனக்கு துபாய் எல்லாம் வேண்டாம்.(எங்கிட்ட பிளாஸ்டிக் பாய் இருக்கு.அது போதும்) என்று சொன்னேன்.அவள் காரணம் கேட்டதற்கு எனக்கு சென்னையில் வேலை செய்ய தான் விருப்பம்.(இங்க தான் நான் சிக்கி விட்டேன்.நானா உளறிட்டேன்).அவளும் என்னை விடாமல் சென்னையில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம்.அதற்கு முன் ஒரு வருடம் துபாயில் வேலை செய்ய வேண்டும்.சம்பளம் மாதம் 75000.அந்த சம்பளம் கூட என்னை ஈர்க்கவில்லை.ஒரு வருடம் கழித்து சென்னை - அந்த உத்திரவாதம் தான் என்னை அறியாமல் சம்மதம் சொல்ல வைத்தது.

ஜூலை 3,2008

நான் பொதுவா ஆபிஸ்ல லீவ் போட மாட்டேன்.அங்க தான் நல்லா பொழுது போகும்.இப்போ எடுத்தா நிச்சயம் சந்தேகம் வரும் என்று நினைத்து காலையில் ஆபிஸ் வந்து மதியம் தம்பி வருகிறான் என்று பொய் சொல்லி அவள் அலுவலகத்தை அடைய வழி தேடி அலைந்து திரிந்து ஒரு வழியாக கண்டுப் பிடித்து அங்கே போனால் கொஞ்சம் அழகாக தான் இருந்தாள்.சென்னை போகும் ஆர்வத்தில் அவள் சொல்வதற்கு அதிகமாகவே தலையாட்டி தொலைத்தேன்.என்னுடைய பத்தாவது மதிப்பெண் சான்றிதழ் வாங்கி பார்த்து அவளே வைத்து கொள்வதாய் சொன்னாள்.தலையை ஆட்டி வைத்தேன்.சென்னை மோகம் அந்த அளவிற்கு என்னை ஆட்டிப் படைத்தது.பாஸ்போர்ட் உடனே வாங்க சொன்னாள்.நான் வேலை செய்யாத துறையை கூட தெரிந்து இருக்க வேண்டும் என்று சொன்னாள்.என்னை இந்த அளவிற்கு சரி என்று சொல்ல வைத்த பெண் இவள் ஒருத்தி தான்.

ஜூலை 4 - 15,2008

பாஸ்போர்ட் வாங்க நாயாக அலைய ஆரம்பித்தேன்.காலையில் ஆறு மணிக்கு எழுந்து பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு போவேன்.நான் பிளஸ் டூ படிக்கும் போது கூட ஆறு மணிக்கு எழுந்தது கிடையாது.தமிழ்,அம்மா,அப்பா,தம்பி,சினிமா,புதுசாகவே பழைய நண்பர்கள்,பழைய தோழி இதெல்லாம் கூட காரணம்.ஒவ்வொரு நாள் ஒவ்வொரு காரணம் சொல்லி எனக்கு பாஸ்போர்ட் தராமல் இழுத்து அடித்தார்கள்.புரியாத மொழி.முதல் முறையாக இரயில் மறியல் செய்த முதல்வர் மீது கோபம்.(தீவிரவாதியின் பின்பக்கத்தைக் கூட தங்கத்தட்டில் வாங்கி கழுவி விடும் அவர்கள் எனக்கு மட்டும் ஏதாவது காரணம் கண்டுப்பிடித்தது மாதிரி இருந்தது.அதை தனிப் பதிவாகவே எழுதுகிறேன்.)

ஜூலை 16 - 22,2008

அவள் எந்த நேரமும் அந்த பாழாய் போன க்ளையன்ட் கால் செய்யான் என்று பயமுறுத்தி வைத்து இருந்தாள் அந்த பாதகத்தி.எந்த நேரமும் செல்போனுடன் சகவாசம்.குளிக்கும் இடத்தில் ஆரம்பித்து கழுவும் இடம் வரை.ஒரு நாள் கைத்தவறி அது தண்ணீரில் விழுந்து விட்டது.தக்கல் முறையில் எடுக்க முயன்ற பாஸ்போர்ட் ஒரு பக்கம் என்றால் ரிப்பேர் செய்ய குடுத்த போன் ஒரு பக்கம்.கடைசியில் இரண்டு நாட்கள் கழித்து இரண்டாயிரம் கொடுத்து ஒரு போன் வாங்கினேன்.என்ன கொடுமை ஒரு தடவை கூட யாரும் அழைக்கவில்லை.பாதி நாட்கள் தான் அலுவலகம் செல்வேன்.அதற்குள் உங்க முகவரி சொல்லுங்க என்று நக்கல் நண்பர்களிடம் இருந்து.நான் சொன்ன முகவரி தலைப்பில் இருக்கிறது.

ஜூலை 23,2008

எனக்கு வந்து கோபத்தில் அவளுக்கு போன் செய்து எனக்கு இந்த வேலையே வேண்டாம் என்று சொன்னேன்.அந்த க்ளையன்ட் வேறு ஒருவனை தேர்வு செய்து விட்டதாக சொன்னாள்.அவள் இப்படி சொல்வதற்கு அரை மணி நேரம் முன்பு தான் பாஸ்போர்ட் அலுவகத்தில் சண்டைப் போட்டு என் விண்ணப்பத்தை ஏற்று கொள்ள செய்தேன்.அவள் அப்படி சொன்னதும் நான் கத்தியே விட்டேன்."அப்புறம் என்ன ம...".அவளுக்கு புரியவில்லை.எனக்கு அப்போது தான் உரைத்தது என் பத்தாவது மதிப்பெண் சான்றிதழ் அவளிடம் இருப்பது."எனக்கு உடம்பு சரியில்லை..அதான் யாரோ நடுவில் இப்படி செய்து விட்டார்கள்.." என்று சொன்னாள்.பெண்களிடம் ஏமாறுவது வழக்கம் என்றாலும் இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.என் மதிப்பெண் சான்றிதழ் தான் எனக்கு பெரிதாக தெரிந்தது.சண்டை போடாமல் வாங்கி விட்டேன்.

டிஸ்கி :

இருங்க ஒரு கால் வருது.என்ன துபாய்ல ஆபரா.அப்புறம் சென்னையா..மதிப்பெண் சான்றிதழ் வேண்டுமா..எங்கே வரட்டும்..போனை வைத்து விட்டேன்.யாராவது சொல்லுங்க கலர் ஜெராக்ஸ் குடுத்து ஏமாத்த முடியுமா..

இன்னும் பாஸ்போர்ட் வாங்கவில்லை.தீவிரவாதிகளுக்கு தான் முன்னுரிமையாம்.

Thursday, November 26, 2009

பாசிஸ்ட் அரவிந்த் - நானும் புது பட்டம் வாங்கிட்டேன்

கே.எஸ் ரவிகுமார்,விஜய் இவங்க எல்லாம் கூட டாக்டர் பட்டம் வாங்கிட்டாங்க.எட்டு மாசமா நானும் பதிவு எழுதி உயிரை வாங்குறேன்.எனக்கு ஒரு பட்டமும் கிடைக்கவில்லையே என்று சோகத்தில் சுருண்டு கிடந்தேன்.அதனால் தான் எங்க போட்டி நடத்தினாலும் அதுல கலந்து சக போட்டியாளர்களையும்,போட்டி அமைப்பாளர்களையும் ஒரு வழி செய்கிறேன்.எதுக்கு எல்லாம் ஒரு பட்டத்துக்கு தான்.கதாசிரியர் இப்படி பெயர் வாங்கலாம் என்று நினைத்து சர்வேஷன் நச் கதைக்கு ஒரு கதை எழுதினால் - கதையில் நச்சே இல்லன்னு ஒரு வரியில் முடித்து விட்டார்.கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் ரவிசங்கரின் விமர்சனத்தில் ஆறுதல் அடைந்து கொண்டேன்.(அவரும் அதை தான் சொல்லியிருந்தார்.ஆவ்வ்வ்வ்வ்வ்).இந்த பட்டமும் போச்சே என்று வருத்தப்பட்டு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது.(அதுக்காடா உடம்பு சரியில்லாமல் போச்சு என்று "மனசு" அலைஸ் மனசாட்சி சிரிக்கிறது)

ஆபிஸில் சோகமாக இருக்கும் போது(வேலை இருக்கும் போது நான் அப்படி இருப்பது வழக்கம்.இல்லன்னா வேலை அதிகமாகும்.) குறும்பு(குறும்பாடு அல்ல) பதிவர் போன் செய்து அலைபேசியில் அழைத்து உங்களுக்கு ஒரு பட்டம் குடுத்து இருக்காங்க என்று சொன்னார்.அந்த பட்டம் தான் பாசிஸ்ட். இந்த வார்த்தையை கூகுளில் தேடினால் முதலில் வருவது கோவி.கண்ணன் பதிவில் இருந்து "ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட்.." சொன்னவர் கோலங்கள் தொடரில் நாயகனாக நடிக்க வேண்டிய வைகோ இப்படி வருகிறது.

முன்னால் முதல்வர் வாங்கிய பட்டம் எனக்கும் கிடைத்து இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே.பாசிஸ்ட் என்ற பட்டம் வாங்கும் அளவிற்கு நான் செய்த சாதனை என்ன என்று பார்த்தால் பின்னூட்டம் போடவில்லையாம்.(.ப்ளாக்ஸ்பாட்.காம் என்று வந்தாலே அது தடை செய்யப்பட்டுள்ளது.அதையே நான் கேச்சி என்ற ஆப்சனை க்ளிக் செய்து தான் படிக்கிறேன்.அல்லது கூகுள் ரீடரில் படிக்கிறேன்.பின்னூட்டத்தோடு சேர்த்து படிக்க யு.ஆர்.எல் லிங்க் எடுத்து பிடிஎப் கோப்பாக மாற்றி படிக்கிறேன்.அதனால் தயவு செய்து மன்னித்து விடவும்.)

கூடிய விரைவில் கணினி வாங்கி "மீ த பர்ஸ்டு..","கலக்கல்","கலங்கல்","ஸ்மைலி" அப்படி போடுகிறேன். அது கடைசியாக இருந்தாலும் சரி அல்லது முதலில் இருந்தாலும் சரி அல்லது நடுவில் வந்தாலும் சரி போட்டுத் தாக்கி விடுகிறேன்.நான் பின்னூட்டம் போடவில்லை என்று வருத்தப்படும் அளவிற்கு உங்களில் ஒருவனாக என்னை நினைத்தற்கு நன்றி.

நையாண்டி நைனாவிடம் கேட்டேன்."பாசிஸ்ட் பற்றி.." அவர் சொன்னார் - "அரவிந்த் நீ ஒரு பாஸ் டூ டு மோர் ப்ளாக்ஸ்.(இதில் டோகோமோ நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பு அல்ல)

பதிவுலக வழக்கப்படி ஏதாவது பட்டம் வாங்கினால் யாருக்காவது பகிர்ந்து கொடுக்க வேண்டும்.தனி ஒருவனாக என்னால் அதை சுமக்க முடியவில்லை.அதனால் இந்த பட்டத்தை நான் மூவருக்கு தருகிறேன்.

1. அண்ணன் தண்டோரா.

2. நையாண்டி நைனா.

3.ராஜூ.

(இதில் யாருடைய பேராவது விடுப்பட்டு இருந்தால் சொல்லலாம்.சேர்த்து விடுகிறேன்.அதற்கும் எனக்கு தனியாக ஒரு பட்டம் வேண்டாம்.நேற்று தான் கே டி.வியில் பட்டம் பறக்கட்டும் என்ற மொக்கை படம் பார்த்தேன்.நடிகர்கள் ராமராஜன்,சந்திரசேகர்,எஸ்,வி.சேகர்,விஜயசாந்தி,உஷா, கல்லாப்பெட்டி சிங்காரம் நடித்தது.வாங்கிய பட்டத்தை முடிவில் நாயகன் பட்டம் செய்து பறக்க விடுகிறான்.(அசுர மொக்கை.இராம நாராயணன் என்ன பாவம் செய்தோம் நாங்கள்.)

அது மாதிரி இவர்களும் இதை அடுத்த மூன்று பேர்களுக்கு கொடுக்கலாம்.

டிஸ்கி :

சமீபத்தில் எழுதிய பதிவிற்கு கடும் கண்டனப் பதிவுகள் தயாராகி வருவதாக உளவுத்துறை செய்தி சொன்னார்கள்.அதுவும் வடமேற்கு, தென் கிழக்கு,வடகிழக்கு,தென்மேற்கு இந்த திசையில் இருந்தும் வரும் என பஜ்ஜி சாப்பிட்டு விட்டு ஒருவர் சொன்னார்.

இப்படிக்கு

பாசிஸ்ட் அரவிந்த் (நன்றி இணைய நண்பரே..)

Wednesday, November 25, 2009

விஜய் முதல்வராகாமல் தடுக்க இன்னும் சில வழிகள்

விஜய் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைக்க காரணம்..இது எல்லாம் ஏற்கனவே நடந்தது..

1.காங்கிரஸில் சேர்ந்தால் வேட்டைகாரன் படத்தை ஈழத் தமிழர்கள் அயல் நாடுகளில் புறக்கணித்து விடுவார்கள் என்ற பயம்.

2.வேட்டைகாரன் படத்தில் இருந்த பன்ச் வசனங்களை எல்லாம் பன்ச் பஞ்சு பஞ்சாக பறந்து போகட்டும் என்று வெட்டி எறிந்து விட்டார்கள்.

3.பெரிய ஹீரோக்களின் படங்கள் எல்லாம் பண்டிகை தினத்தில் தான் வெளி வர வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் முடிவு.எந்த பண்டிகையும் இல்லாமல் டிசம்பர் 18 அன்று வெளி வருகிறது.அப்ப விஜய் பெரிய ஹீரோ இல்லையா என்று கேள்விக்கு இடம் கொடுத்தது.

4.கல்யாண மண்டபத்துக்கு நோட்டீஸ்.

5.அடுத்த ஆயுதமாக நில மோசடி வழக்கு.(விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டது)

இன்னும் சில வழிகளை நான் சிபாரிசு செய்கிறேன்.

1.வேட்டைகாரன் படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக என்று வரும் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று நேரடியாக சன்னில் ஒளிப்பரப்பலாம்.இப்படி செய்தால் விஜய் சின்னத்திரைக்கு வந்து விடுவார்.

2.கோலங்கள் வரும் டிசம்பர் நாலாம் தேதி முடிவதால்,ஏழாம் தேதியில் இருந்து ஒன்பது மணி ஸ்லாட்டில் வேட்டைகாரனை ஒளிப்பரப்பலாம்.

மேலே கூறிய வழிகளுக்கு ஒரே ஒரு நிபந்தனை தான்.

சன் டி.டி.ஹெச் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் குடுக்கலாம்.ஒரே கல்லில் இரண்டு மாங்கா.டி.டி.ஹெச்சும் விற்பனை ஆகும்.டி.ஆர்.பி யும் எகிறும்.

3.டீலா நோ டீலா நிகழ்ச்சியில் விஜய்யை பங்கேற்க சொல்லலாம்.அல்லது ரிஷிக்கு பதில் நிகழ்ச்சியை நடத்த சொல்லலாம்.

4.சுறாவுக்கு போட்டியாக இறா,புறா என்று படம் எடுத்து வெளியிடலாம்.படம் வரும் முன்னே லொள்ளு சபாவில் போட்டு கந்தல் செய்யலாம்.

5.தெலுங்கு படத்தின் ரைட்ஸ் விஜய் வாங்குவதற்கு முன் அந்த படத்தை டப் செய்து வெளியிடலாம்.மகேஷ் பாபு எந்த படமும் நடிக்காமல் அவரை கேட்டுக் கொள்ளலாம்.

டிஸ்கி :

இதையும் மீறி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் உடனே வரவும் - விஜய்காந்துக்கு நடிக்க தெரியாது என்று இப்போது தான் அவருக்கு தெரிந்து அரசியலுக்கு வந்து விட்டார்.உங்களுக்கு தான் நடிப்பு வராது என்று தெரியுமே.அதனால் உடனே வரவும்.

இன்னும் பத்து வருடம் கழித்து வரலாம்.விஜய் மகனுக்கு பதினெட்டு வயது ஆகி விடும்.அவர் மகன் நடிகராகி விட்டால் விஜய் அரசியலில் இறங்கி விடலாம்.காரைக்குடி,திரு நெல்வேலி பக்கம் ஆச்சிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகி விடும்.அவர்களைப் பிடித்து விடலாம்.

இன்று உடம்பு சரியில்லாத காரணத்தினால் இந்த பதிவு இத்துடன் முடிகிறது.வேறு எதுவும் வழி இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

Tuesday, November 24, 2009

சேகர் கம்மூலா - தெலுங்கு சினிமாவை மாற்றியமைத்த முகம்

சேகர் - முதல் படத்திலே அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது.தெலுங்கு சினிமாவின் பாலா(போராடி வெற்றி பெற்றதில்,நடிகர்களை அறிமுகப்படுத்தியதில்) என்று சொல்லலாம்.சசிகுமாருக்கு முன்னோடி என்றும் சொல்லலாம்.படிச்சது மெக்கானிக்கல்.வேலை பார்த்தது போலாரிஸ். சாதித்தது சினிமாவில்.நான் தெலுங்கு சினிமாவில் பிரமித்து பார்த்த படங்கள் - பிரபுதேவா இயக்கிய முதல் தெலுங்கு படம் (உனக்கும் எனக்கும் என்று வைத்து கொள்வோம்..நாக்கு பெயர் தெளிது),செல்வராகவன் இயக்கிய முதல் தெலுங்கு படம் (யாரடி நீ மோகினி..நாக்கு தள்ளுது), பொம்மரில்லு,கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், இது போன்ற படங்கள் வர காரணமானவர்.

அமெரிக்காவில் மேல்படிப்பு(கணிபொறியியல்) படிக்க சென்றாலும் கூடவே மாஸ்டர் இன் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டமும் பெற்றார்.நம்மூரில் இந்த படிப்பிற்கு என்ன சொல்லி தருகிறார்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம்.இது தெலுங்கு கார பசங்களுக்கே உள்ள துணிச்சல்.ஒரே நேரத்தில் இரண்டு பட்டம்,வேலையே பார்க்காமல் துணிந்து அனுபவம் இருப்பதாக சொல்வது - அந்த துணிச்சல் நமக்கு எல்லாம் வரவே வராது.அது மாதிரி ஒரே நேரத்தில் இரட்டை பட்டம் பெற்ற ஒரு நடிகர் கம் அரசியவாதி - சிரஞ்சீவி.சேகரும் சின்ன வயதில் இருந்து சிரஞ்சீவிக்கு பரம ரசிகராம்.

இவர் படத்தில் பார்க்க முடியாத அம்சங்கள் - வாங்க காசுக்கு மேல நடிக்கிறது,வன்முறை,ஆபாசம்.(அப்ப ஜென்மத்துக்கும் இவர் படத்தை விஜய் ரீமேக் பண்ண மாட்டார்)

முதல் படம் டாலர் ட்ரீம்ஸ் - 16 லட்சம் செலவளித்து பர்ஸ்ட் காப்பி முறையில் அவரே தயாரித்து முடித்தார்.வெளியிடுவதில் தான் சிக்கல். வினியோகஸ்தர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவரே படத்தை ரீலிஸ் செய்கிறார்.(இந்த இடத்தில் நினைவு படுத்தி கொள்ளவும் சேது மற்றும் கிருஷ்ணவேணி திரையரங்கை) அது போல ஒரு திரையரங்கை(ஒரு காட்சிக்கு மட்டும்) வாடகைக்கு எடுத்து ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி டிக்கெட் விற்று படம் 28 நாட்கள் ஓடுகிறது. 20த் சென்சுரி பாக்ஸ் இந்த படத்தை பார்த்து படத்தை நாடு முழுவதும் திரும்ப ரீலிஸ் செய்கிறார்கள்.(இப்படி தமிழில் தப்பிய இரண்டு படங்கள் சேது மற்றும் சித்திரம் பேசுதடி).ஐந்து லட்சம் வரை நஷ்டம்.ஒரே ஒரு ஆறுதல் தேசிய விருது மட்டும் தான்.

பிறகு வழக்கம் போல தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கி முட்டி மோதி பார்த்தும் பலன் இல்லை.(பசங்க - ஆனந்த விகடன் - மிஸ்ஸான வாழை பழம்).அது மாதிரி எல்லா இடத்திலும் உதடுப் பிதுக்கல் தான்.அடுத்த முயற்சி தான் என்.ஃப்.டி.சி(நேஷனல் ப்லிம் டெவலப்மென்ட் கவுன்சில்).அவர்கள் பாதி பணம் போட,இவர் பாதி போட உருவான படம் தான் ஆனந்த்(இந்த படத்தை தமிழில் விஸ்வாஸ் சுந்தர் இயக்கி ஒரு வலி ஆக்கினார்.)

நடிகர்கள் - ராஜா (முறையான நடிப்பு பயின்றவர் - அதனால் தான் ஜெகன் மோகினி படத்தில் நடித்தார்),கமலினி முகர்ஜி.மூன்றாவது படம் கோதாவரி - இதிலும் கமலினி முகர்ஜி.மூன்றாவது படம் சில இயக்குனர்களுக்கு காலை வாரும் அதில் இவரும் ஒருவர் - தமிழில் லிங்குசாமி,ஜன நாதன் இதில் ஒப்பிடலாம்.

அடுத்து எடுத்த படம் தான் ஹேப்பி டேஸ்.இந்த படத்தை தமிழில் எடுக்கிறார்கள்.இனிது இனிது என்று.கண்டிப்பாக கொலை செய்வார்கள்.ஒண்ணும் சொல்வதற்கு இல்லை படம் பாருங்கள்.இதில் நடித்தவர்கள் தான் தமன்னா,வருண் சந்தேஷ்.

அடுத்து தயாரித்த படம் - ஆவக்கா பிரியாணி.அவருடைய உதவியாளர் இயக்கியது.காரணமாக அவர் சொல்வது - நான் ஒரு வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து படம் இயக்க மாட்டேன்.பதிலாக என் உதவியாளர்களை ஊக்கப்படுத்தி படம் எடுப்பேன்.அதையும் நானே தயாரிப்பேன்.(கே.எஸ்.ரவிகுமார் உங்களுக்கு காதில் விழுந்ததா - ஆதவன் முடியலைடா சாமி..)

அடுத்து இயக்கும் படம் லீடர்.ராம நாயுடுவின் பேரனும்,வெங்கடேஷின் அண்ணன் பையனான ராணா நடிக்கிறார்.ஏ.வி.எம் தயாரிக்கிறது.டிசம்பரில் வருகிறது.பார்ப்போம்..இது இவருக்கு ஐந்தாவது படம் - இதில் லிங்குசாமியுடன் ஒப்பிட வேண்டாம்.காரணம் அவருக்கு ஐந்தாவது படம் பீமா.

டிஸ்கி :

இனிது இனிது பார்த்தாலும் தயவு செய்து ஹேப்பி டேஸ் பார்க்கவும்.

லீடர் மொக்கையாக இருந்தால் ஜன நாதனை வெளுத்ததைப் போல இவரையும் வெளுக்கலாம்.ஆந்திராவில் ஆட்டோ பஞ்சமாம்.(சுமோ வருமா..)

Monday, November 23, 2009

துவையல் - சினிமா ட்ரைலர் ஸ்பெஷல்

எது எடுத்தாலும் விஜய் பற்றி தொடங்காமல் இருந்தால் அன்னிக்கு எனக்கு துக்கம்(தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்ததால் கக்கத்தில் கால் மாட்டி விட்டது) தான்.ட்ரைலர் பார்த்தே கதை சொல்லும் திறமை இருந்தாலும் இந்த படத்தில் அது வேலை செய்யாமல் போய் விட்டது.படம் பகவதியில் ஆரம்பித்து மதுர வழியாக திருப்பாச்சி வந்து ஆதி,அழகிய தமில்(ழ்) மகன் படத்தை எல்லாம் நினைவுபடுத்தி படுத்தி எடுக்கிறது. ட்ரைலரில் பகவதி போல விஜய் பின்னால் ஒரு கூட்டம்,மதுர படத்தில் வருவது போல செல்போன் வித்தை,திருப்பாச்சியை நினைவுபடுத்தும் முக்கா பேன்ட் நடனம்,சண்டை காட்சிகள்,ஆதி படத்தில் வில்லனாக வரும் சாய்குமாரின் தம்பி இதில் வில்லன்.(ஆர்.டி.எக்ஸ் தம்பி தானே ஒவர் சவுண்ட்).அழகிய தமில்(ழ்) மகன் மாதிரி ஓட்டம்..இது விஜய்க்கு 49வது படமாம்.என்ன செய்ய கதை பஞ்சம்.100வது படத்தில் நடிக்கும் போது நிறைய கதை கிடைக்கும்.இதுவே முடியல..படம் வந்தா தமிழ் நாட்டை ஆண்டவன் தான் காப்பாத்த வேண்டும்.மீண்டும்..

*****************

ட்ரைலர் பாத்து படம் பாக்க போய் ஏமாந்த படம் இரண்டே இரண்டு தான்.படத்தின் பேரை வெளியே சொல்லவே வெட்கமாக இருக்கிறது.அது சின்னா. ட்ரைலர் எனக்கு பிடித்து இருந்தது.படம் பார்த்த பிறகு நான் சின்னா பின்னா.ஜூராஸிக் பார்க் படத்தில் வரும் காட்சி எல்லாம் இதில் வருகிறது.நான் படம் பார்க்க போன சமயம் பெட்டி வரவில்லை.தப்பிக்க முயன்று கடைசி கட்டத்தில் இருக்கும் போது பெட்டி வர என்னை உள்ளே தள்ளி படம் பார்க்க வைத்து ஒரு வழி ஆக்கி விட்டார்கள்.

அடுத்த படம் சேவல்.ஹரி இயக்கி,வடிவேலு நடித்து இருக்கிறார் என்று தெரிந்தும் ரிஸ்க் எடுத்த படம்.காரணம் ஏகன்.படம் எப்படி இருந்தது என்று தெரிய வேண்டுமா.படம் பார்த்த பிறகு நான் சொன்னது - "நூறு ரூபாய்க்கு விஷம் வாங்கி குடித்து இருக்கலாம்..".என் மாமா பையன் சொன்னது - "அந்த காசை கிழித்து போட்டு இருக்கலாம்..".அவனுக்கு சாக விருப்பம் இல்லை.எத்தனை தெலுங்கு படம் பார்த்து இருப்பான்.

*****************

பருத்தி வீரன் வந்தாலும் வந்தது - யதார்த்த சினிமா எடுக்கிறேன்,வட்டார மொழி பேசுகிறேன் என்று உயிரை வாங்குகிறார்கள்.ரேணிகுண்டா படத்தில் கொலை செய்வது எப்படி என்று பாடம் எடுக்கிறார்கள்.அப்படியே புதைப்பது எப்படி,தடயங்களை அழிப்பது எப்படி எல்லாம் சொல்லி குடுத்தால் பணத்துக்காக நண்பனையே கொல்லும் சிறுவர்களுக்கு வசதியாக இருக்கும்.அதுல ஒரு கேரக்டர் வட்டார மொழி பேசுகிறது.இன்னோரு சிட்டி ஆப் காட் படமா..முடியலைடா சாமி..

*****************

யோகி ட்ரைலர் - நான் சொல்லியே ஆகணும் ரியாக்சன் தராமல் நடிப்பதில் சேரனை மிஞ்சும் அளவு நடிப்பு அமீருக்கும் வருகிறது.கூப்பிட்ட வந்தேன் அடிக்கிற உன் வீடுங்கிறதுனாலையா ? இந்த காட்சியில் நியாயமா பாத்தா எவ்வளவு கோவம் வரணும்.வரலையே..அய்யா சாமிகளா நடிப்பதை விட்டு விட்டு நடிப்பு சொல்லி குடுக்க வாங்க.சென்னையை காட்டி விட்டு சென்னை பாஷை யாரும் பேசவில்லையே..(ராஜேஷ் நாவல் மாதிரி இருக்கிறது..கதை கோவையை சார்ந்து இருந்தாலும் யாரும் கோவை மொழி பேச மாட்டார்கள்)

*****************

பேராண்மை படம் ட்ரைலர் பார்க்கவில்லை.போஸ்டர் தான் பார்த்தேன்.வடிவேலு இருப்பதைப் பார்த்து விட்டு ஓட தயார் ஆனாலும் இயக்குனரின் பழைய படங்கள் ஞாபகம் வந்த காரணத்தால் போய் பார்த்து விட்டு வாங்கி கட்டினேன்.அதுவும் பத்தாமல் நாலு பதிவு வேறு எழுதினேன்.பலத்த அடி.இனியும் வாங்க தயாராக இல்லாததால் பேராண்மை உரையை இதோடு அடித்து முடிக்கிறேன்.

*****************

ஆதவன் - வடிவேலு இருந்ததால் போகவில்லை.ட்ரைலர் பார்க்கும் போது வடிவேலு கையை சூர்யா கடித்து வைத்ததால் எனக்குள் பல்ப் எரிந்து காசு மிச்சம் ஆகி விட்டது.கடைசியில் பார்த்தால் படம் என் பதிவை விட மொக்கை என்று தெரிந்து கொண்டேன்.நான் இப்போதும் மொக்கை என்று நினைக்கும் வடிவேலு தான் படத்தை காப்பாற்றினார் என்று பேச்சு அடிபட படம் எப்படி இருக்கும் என்று தெளியாக தெரிந்து விட்டது.

*****************

அடுத்த கிறிஸ்மஸ் வரை சன் டிவி பார்க்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்.பின்ன என்ன வேட்டைகாரன் ட்ரைலர் வருவதை நினைத்தாலே கசக்குது இந்த படித்தவனுக்கு.கண்டேன் ரிமோட்டை.என்னது வேட்டைகாரன் படம் பாக்கலைன்னா ஒரு வட(பதிவு) போயிருமா..

கண்ணா நல்லா தெரிஞ்சுக்கோ படம் பாத்தா ஒரே ஒரு விமர்சனம்.பாக்காம இருந்தா பத்து விமர்சனம்.(அவங்க பத்து படத்தில் இருந்து சூடும் போது நான் பத்து பதிவு போட கூடாதா..)

*****************

டிஸ்கி :

முதல் பத்திக்கு செல்லவும்....குறிப்பாக முதல் பத்திக்கு மட்டும்....

*****************

Sunday, November 22, 2009

என்னது ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி ஆயிட்டாரா?

"என்னது ஒபாமாவுக்கு நோபல் பரிசு குடுத்தாங்களா.." அதிர்ச்சியில் வாய் விட்டே கேட்டு விட்டான் வசந்த்.

"எதுக்கு இப்போ இவ்வளவு ஷாக்..அது நடந்து பல மாசம் ஆகுது.." என்று அவனுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தான் ரமேஷ்.

"எனக்கு தெரியாமா எப்படி நடந்தது..எதுக்குடா கொடுத்தாங்க.."

"அவர் அமெரிக்க ஜனாதிபதி..அமைதிக்காக குடுத்தாங்க.."

"என்னது ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி ஆயிட்டாரா.." என்று வசந்த் கேட்டதும் தான் தாமதம்.ஒரே கல்ப்பில் அடித்து விட்டு வசந்தை முறைத்து கொண்டு இருந்தான் ரமேஷ்.

"ஜார்ஜ் புஷ் பதவி விலகிட்டாரு..அதுக்கப்புறம் நடந்த தேர்தலில் இவர் ஜெயித்து விட்டார்.."

"ஜார்ஜ் புஷ் பதவி விலகிட்டாரா.."

"ஆமா இராக் கூட சண்டை போட்டு,சதாம் உசேனை கொன்று விட்டு தான் அடங்குனாரு.."

"சதாம் உசேன் செத்துட்டாரா.."

"இராக் கூட சண்டை போட்டதை விட்டுட்ட.."

"வேற என்ன நடந்தது அவர் ஆட்சியில.."

"டிவின் டவரை இடித்து விட்டார்கள்.."

"என்ன டிவின் டவரை இடித்து விட்டார்களா.."

"ஆமாண்டா அந்த வருசத்துல கலைஞரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.."

"என்ன அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா.."

"ஆமாண்டா பன்னி..இன்னும் தெரியனுமா..ராஜிவ் காந்தியைக் கொன்னுட்டாங்க..எம்.ஜி.ஆர் உடம்பு சரியில்லாம இறந்துட்டார்.அதுக்கு முன்னாடி காமராஜர்,அண்ணா எல்லோரும் இறந்துட்டாங்க.." ரமேஷ் கோபத்தில் பொறிந்தான்.எண்ணெய் சட்டி மட்டும் இருந்தால் வசந்தைப் பொறித்து இருப்பான்.

முடிவு ஒண்ணு :

"ரமேஷ் இப்போ ஏன் கோவப்படுற.."

"பின்ன என்னடா..நீ ஷாக்காகி ஷாக்காகி தண்ணி அடிக்க நான் உலக வரலாறு எல்லாம் சொல்லனுமா.."

முடிவு ரெண்டு :

"ரமேஷ் இப்போ ஏன் கோவப்படுற.."

"புரமோஷன் கிடச்சதுக்கு டிரீட் கேட்டா..சரின்னு அங்க வைச்சு சொல்லிட்டு இங்க வந்து எல்லாம் மறந்த மாதிரி பில்டப் கொடுக்கிற..உன் சரக்கும் வேண்டாம்..உன் சங்காத்தமும் வேண்டாம்..நானே பில் பே பண்றேன்.."

டிஸ்கி :

இப்படி எல்லாம் முயற்சி செய்தால் நான் பொறுப்பு கிடையாது.

Saturday, November 21, 2009

யோகி,கோவா,நந்தலாலா,ஆயிரத்தில் ஒருவன்,வேட்டைகாரன்

தலைப்பில் உள்ள படங்களின் இயக்குனர்களுடன் ஒரு பேட்டி..

முதலில் அமீர்..

அ : யோகி படத்தின் கதை என்ன ?

அமீர் : நாயகனின் அப்பா ஒரு தொழு நோய் வந்த பிச்சைகாரன்..மகன் ஒரு ரவுடியாக மாறுகிறான்..

அ : லாஜிக் இடிக்குதே..பிச்சைகாரன் பையன் பிச்சை தானே எடுப்பான்..(அமீர் முறைக்கிறார்..) இல்ல.. இல்ல.. நடிகர் பையன் நடிகனா, அரசியல்வாதி பையன் அரசியவாதியா மாறும் போது இதுவும் இப்படி தானே இருக்கனும்..

அமீர் : அங்கன தான் கதையோட திருப்பமே இருக்கு..

அ : உங்களை விட சினேகன் அழகா இருக்காரு..

அமீர் : ஏதோ பேட்டி எடுக்கணும்னு சொன்ன..சரின்னு வர சொன்னா..இப்படி எல்லாம் எழுதுற..உன் ப்ளாக்குன்னா இப்படி தான் எழுதுவியா..என்ன பாத்தா ரவுடி மாதிரி தெரியலையா..

அ : (மனதுக்குள்) என்னடா இது பெரிய ராவடியா போச்சு..(சத்தமாக) எதுக்கு சுப்பிரமணிய சிவா..நீங்களே இயக்கி இருக்கலாமே..

அமீர் : (மனதுக்குள்) படம் பப்படம் ஆச்சுன்னா பழி போட ஒரு ஆள் வேண்டாம்..

அ : (மனதுக்குள்) பழியா இல்ல பலியா.. (சத்தமாக) படம் பாத்தா ஒரு சென்னையில் இருந்த ரவுடி கதை மாதிரி இருக்கு..இல்ல ஈரான் பட காப்பியா?

அமீர் : தம்பி எல்லாமே காப்பி தான்..எல்லா படத்திலையும் காதல் இருக்கு..அதுக்காக காதல் வந்தாலே காப்பியா..

அ : அடுத்த முதல்வர் நீங்க தானா ?

அமீர் : கதவு அந்த பக்கம் இருக்கு..ஓடிப் போயிரு..

நேராக கோவா சூட்டிங்..

அ : டிரைலர் பாத்தேன்..படத்தை தில் சாத்தா ஹை அதுல இருந்து உருவி இருக்கிங்க போல..

வெங்கட் பிரபு : இப்போ தான் அமீர் பேசுனார்..அது நீங்க தானா..

அ : ஜெய் சொன்ன மாதிரி ரெண்டு படம் அவுட்..இந்த படமும் அது மாதிரி ஆகுமா..

வெங்கட் பிரபு : என்ன கொடும பிரேம்ஜி இது..

அ : அங்க அங்க சீனை சுடுறீங்க..தமிழ் படத்தில் இது மாதிரி வந்ததே இல்லை பில்டப் வேற..

வெங்கட் பிரபு : என்ன சொல்றீங்க..

அ : சரோஜா படத்துல ஒரு பாட்டுல சின்னத்திரை நடிகர்கள் எல்லாம் வர்றாங்க..இது ஷாரூக் கான் படத்தில் இருந்து அடிச்சது தானே..

வெங்கட் பிரபு : (சத்தமாக) பிரொடுஸர் வர்றாங்க..நீங்க போயிட்டு அப்புறம் வாங்க..மிஸ்கின் சும்மா தான் இருக்காரு..அங்க போங்க..

மிஷ்கின் அலுவலகத்தில் அவர் எதையோ தேடி கொண்டு இருக்கிறார்..

அ : உங்களுக்கு தேடுறதே வேலையா போச்சு..அஞ்சாதே படத்தில் நரேன் பிரசன்னாவை தேடினார்..நந்தலாலா படத்தில் அம்மா தேடுறதா சொன்னீங்க.. இப்போ புத்தர் பல்லை தேடுறீங்களா ?

மிஷ்கின் : பவர் கிளாஸ் கீழே விழுந்த மாதிரி ஒரு பீலிங்..அதான் தேடுறேன்..

அ : ஏன் நந்தலாலா படத்தில் நீங்க நடிச்சீங்க..

மிஷ்கின் : எழுத்து வந்து ஒரு படைப்பாளியோட குருதி மாதிரி..அது வீணாக விடக் கூடாது..அதான் நானே..

அ : என்னது குருவி மாதிரியா ?

மிஷ்கின் : ரத்தம் மாதிரி..ஒவ்வொரு எழுத்தும் என் ரத்ததில் உருவானது..

அ : இது ஜப்பான் இயக்குனர் ரத்ததில் உருவானதா எல்லோரும் சொன்னாங்க..

மிஷ்கின் : (மனதுக்குள்) எந்த நாட்டு டிவிடில இருந்து சுட்டாலும் கண்டுப் பிடிக்காம விட மாட்டாங்க போல..அவர் என்னுடைய போட்டியாளர்..அவருடன் நான் சேர்ந்து நந்தலாலா படத்தை பாக்க வேண்டும்..

அ : வேண்டாம் ஏன் இந்த கொலைவெறி..அவர் உயிரோடு இருந்தா ரத்தம் சுரக்கும்..

மிஷ்கின் : கமல் சார் வர்ற நேரம் ஆச்சு..நீங்க இருந்தா அவ்வளவு தான்..

செல்வராகவனை பிடிக்க லடாக் பயணம்..

அ : ஆயிரத்தில் ஒருவன் என்ன கதை..

செல்வராகவன் : இந்த காலத்தில் இருந்து பனிரெண்டாம் நூற்றாண்டை நோக்கி கதை பயணிக்கிறது..

அ : படம் இண்டியானா ஜோன்ஸ் மாதிரி இருக்கு..

செல்வராகவன் : அப்படி யார் சொன்னா..

அ : கார்த்தி தான் ஒரு பேட்டியில சொன்னாரு..

செல்வராகவன் : (கத்துகிறார்) நான் சொன்னேனா..மம்மி ரிடன்ஸ் படத்தில் இருந்து சுட்டது..நானே உளறிட்டேனே..

அ : அதானே பாத்தேன்..நான் கூட ஏதோ பிரன்ச் படம் காப்பின்னு நினைச்சேன்..

செல்வராகவன் : அதை விடுங்க..விக்ரம் படத்தை பத்தி கேளுங்க..

அ : இரண்டு பேரும் சேர்ந்தாச்சு இல்ல..ஆறு வருசம் கழிச்சி வந்து கேக்குறேன்.

சுமோவில் வந்த ஆட்கள் "அ"வை கடத்துகிறார்கள்.கண் கட்டை அவிழ்த்து பார்த்தால்..

விஜய் : மத்தவங்க கிட்ட கேட்டீங்க..எங்கிட்ட கேக்கவே இல்லையே..

அ : எதை பத்தி கேக்கணும்..

விஜய் : வேட்டைகாரன் கதை சொல்லவா..

அ : வேண்டாம் நானே சொல்றேன்..

விஜய் : உங்களுக்கு தெரியுமா..எங்க சொல்லுங்க பாப்போம்..

அ : நீங்க கிராமத்தில் இருந்து வர்றீங்க..சரியா..

விஜய் : சரி மேல சொல்லுங்க..

அ : சென்னையில் ஒரே ரவுடி கூட்டம்..காவல்துறை கூட வேடிக்கை தான் பாக்குது..

விஜய் : அட ஆமா..

அ : நீங்க வேட்டைகாரன் அவதாரம் எடுத்து வேட்டையாடி ரவுடிகளை அழிக்கிறீங்க..

விஜய் : எப்படி உங்களுக்கு தெரியும்..நெட்ல ரீலிஸ் பண்ணிட்டாங்களா..

அ : இது அஞ்சு வருசத்துக்கு முன்னாடி திருப்பாச்சி படம்..

விஜய் : சரி விடுங்க..வேற ஏதாவது கேளுங்க..

அ : இல்ல வேண்டாம்..

விஜய் : கேக்க மாட்டீங்களா..சுறா படம் எடுத்த வரக்கும் இருக்கு பாக்குறீங்களா..

அ : வேண்டாம் நான் கேள்வியே கேக்குறேன்..வேட்டைகாரன் படத்தில் இருந்த பஞ் டயலாக்கை எல்லாம் வெட்டி பஞ்சர் பண்ணிட்டாங்களாமே..

விஜய் : அவனை பிடிங்கடா..

டிஸ்கி :

ஆறு வருடம் கழித்து

அ : ஆயிரத்தில் ஒருவன் எப்போ ரீலிஸ்

செல்வராகவன் : அதுதான் 1968லில் ரீலிஸ் ஆகி விட்டதே..

அ : ரவீந்திரன் கேட்டிங்களா..

செல்வராகவன் : இன்னும் கொஞ்சம் பேட்ச் ஓர்க் பாக்கி இருக்கு..இன்னும் ஒரு அஞ்சு கோடி இருந்தா எடுத்து விடலாம்.

Friday, November 20, 2009

டெலிபதி

வார்த்தைகளற்ற சம்பாஷனைகள் நிகழ்த்தலாம்,
வர்ணங்கள் இல்லாத ஒவியங்கள் வரையலாம்,
சந்தம் தொலைத்த கவிதைகள் எழுதலாம்,
சத்தமிடாமல் பாட்டு பாடலாம்,
இன்னும் பல காலம் பல லாம் செய்யலாம்,
ஒத்த அலைவரிசையுடைய ஆட்களை
டெலிபதியில் தேடியே உதாரணமாய் இருக்கிறேன்
ஊரை கெடுக்கும் ஊமை என்று!

Thursday, November 19, 2009

தீராத சோகம்,அணையாத விளக்கு

படித்த சரித்திரங்களில் உலாவிய மரணங்கள்
பழகிய நட்புகள் சொன்ன மரணங்கள்
கேட்ட கதைகளில் வந்த மரணங்கள்
பார்த்த சம்பவங்கள் உணர்த்திய மரணங்கள்
எல்லாம் கைக்கொட்டி சிரிப்பதுக் கண்டு
இன்னும் அதிகமாக அழுகிறேன்
அரூபமாக பெரியப்பா என்னுள் வாழ்வதால்!

Wednesday, November 18, 2009

தொலையாத நினைவுகள்

சின்ன வயதில் இருந்து தள்ளி நின்றே என் பெரியப்பாவை பார்த்திருக்கிறேன்.கம்பீரமான குரல் அவருக்கு.இப்படி தான் வசீகரிக்கும் குரல்கள் என்ற பதிவிலும் எழுதி இருக்கிறேன்.அந்த பதிவில் முதல் பத்தியின் துவக்கமே அவர் தான்.அது போல அவர் தான் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி.அவரை உதாரணமாக கொண்டே நானும் என் தம்பியும் வளர்ந்தோம்.காரணம் தினம் பத்து மைல்கல் காலையிலும் மாலையிலும் நடந்தே சென்று படித்தார் என்று எல்லோரும் சொல்வார்கள்.அப்படி கஷ்டப்படாமல் படிக்க எனக்கு எல்லாம் வாய்ப்பு கிடைத்ததே அவரை பார்த்து தான்.

போன வெள்ளிக்கிழமை காலையில் ஏதோ கெட்ட கனவு.நான் வேலை அதிகமாக இருக்கும் என்று நினைத்து கொண்டேன்.ஆனால் அவருக்கு உடம்பு சரியில்லை என்று தெரிய வந்தது.இன்று எந்த கனவும் இல்லாத உறக்கம்.போர்வையை கூட கலைக்காமல் உறங்கி இருக்கிறேன்.அப்பா காலையில் அழைத்து பெரியப்பா தவறி விட்டார் என்று சொன்னார்.

நேற்று நான் சுஜாதா பதிவில் இப்படி எழுதி இருந்தேன்.

"Death is nothing to us since so long as we exist death is not all with us but when death comes.we do not exist."

இந்த வார்த்தைகள் அப்படியே அட்சரம் பிசகாமல் பலித்து விட்டதே.இதை எழுதாமல் இருந்திருக்கலாம் என்று காலையில் மிகவும் வருந்தினேன்.

என் பெரியப்பா பாளையங்கோட்டையில் ஒரு பெரிய வழக்கறிஞர். அவருடைய பெயர் ஆ.கருப்பையா.

இனி என் குடும்பத்தில் எத்தனை தலைமுறை வந்தாலும் அவர் பெயரை உச்சரிக்காமல் உதிக்காது.

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்யுங்கள்.

Tuesday, November 17, 2009

சுஜாதா,பிரிவோம் சந்திப்போம்,ஆனந்த தாண்டவம்

சுஜாதாவின் எழுத்துகளைப் பற்றி பேசியது ஞாபகம் வந்தது.என்னை அறியாமலே நான் சொன்னேன்."சுஜாதா இல்லாமல் போனதால் நிறைய கத்துக்குட்டிகள் எழுதுகிறேன் என்று ஒரு வழி செய்கிறார்கள்.அதில் நானும் ஒன்று.."

அவர் மட்டும் இருந்திருந்தால் நட்சத்திர கதைகளில் முதல் கதையாக அவர் கதை வந்து இருக்கும்.கற்றதும் பெற்றதும் பகுதியில் நிறைய பதிவர்களை அறிமுகம் செய்து இருப்பார்.நானும் எழுதாமல் ஆனந்த விகடன் வாங்கி படித்து கொண்டு எதையும் விமர்சனம் செய்யாமல் அதன் போக்கில் போய் இருப்பேன்.

சும்மா பொழுது போகாமல் அவருடைய சிறுகதை புத்தகத்தை திறந்து பார்த்தேன்.முதல் கதையே அப்பா அன்புள்ள அப்பா.அவருடைய அப்பா உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த நாட்கள்.அவருடைய ஆப்போலோ தினங்களை ஒப்பிட்டு பார்த்தேன்.கிட்டதட்ட ஒரே மாதிரி இருந்தது.அவரும்,அவருடைய அப்பாவும் ஒரே வயதில் இறந்தார்களா என்று அபத்தமாக யோசித்து பார்த்தேன்.

அந்த கதையில் ஒரு வரி இப்படி வருகிறது.நர்ஸ் வந்து சுஜாதாவின் அப்பாவிடம் சொல்கிறார்."உங்க பையன் ரொம்ப புத்திசாலி..".அவருடைய அப்பாவின் பதில் - "நான் அவனை விட புத்திசாலி.." இந்த அப்பாகள் எல்லோரும் இப்படிதான் இருப்பார்களா?.சொந்த பையனிடம் கூட தோல்வியை ஒப்புக் கொள்ளாத குணம்.

மதன் வந்தார்கள்,வென்றார்கள் புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார் ஹிமாயூனைப் பற்றி.அவர் பாபருக்கும்,அக்பருக்கும் இடையில் வந்த கமா தான் ஹிமாயூன்.

சுஜாதாவையும் இது மாதிரி சொல்லலாம்.அவர் இரண்டு தலைமுறைகளுக்கும் இடையில் வந்த சரித்திரம்.

எழுத்தின் சூட்சுமம் என்றால் என்ன என்று என்னை கேட்டால் நான் சொல்வது - படித்தவுடன் அது மறந்து விட வேண்டும்.மீண்டும் படித்தால் புதிதாக தெரியும்.அல்லது ஒரு வரி விடாமல் ஞாபகம் இருக்க வேண்டும்.கண்டுப் பிடித்தாலும் அசைப் போடுவது போல மேளும் ஒரு முறை படிக்கலாம்.இப்படி இரண்டு வகையிலும் வாசகர்களைக் கட்டிப் போடும் திறமை சுஜாதாவிற்கு மட்டுமே சொந்தமானது.(வாரமலர் அந்துமணியில் பார்த்தது கேட்டது படித்தது - இதில் வருவது நிறைய மீள்பதிப்பு தான் - முதல் வரியை படித்தவுடம் நான் கண்டுப் பிடித்து விடுவேன்.அப்படி சில சமயம் முதல் வரியிலே வெளியே வந்து விடுவேன்.) எனக்கு அந்த சூட்சுமம் வராமலே போய் விடும்.

நான் செய்ததிலே பெரிய பாவம் - ஆனந்த தாண்டவம் படத்தைப் பார்த்த பிறகு பிரிவோம் சந்திப்போம் கதையைப் படித்தது தான்.முதல் நாள் பார்த்தேன்.முதல் நாள் பார்க்கும் படமெல்லாம் எனக்கு பிடிக்காமலே போய் விடும்.அப்படி ஒரு ராசி இருந்தாலும் பார்த்தேன்.காரணம் சுஜாதா.எனக்கு பின் இருக்கையில் நடுத்தர வயது தம்பதிகள்.பிரிவோம் சந்திப்போம் தொடராக வந்த காலத்தில் இளம் ஜோடிகளாக இருந்திருப்பார்கள்.அவர்கள் முகத்தில் நிறையவே ஏமாற்றம்.அவர்கள் படத்தை கதையோடு ஒப்பிட்டு பார்த்தார்கள்.

நான் சமீபத்தில் பிரிவோம் சந்திப்போம் இரண்டாம் பாகம் படித்து விட்டு சில காட்சிகளை ஆனந்த தாண்டவம் படத்தோடு ஒப்பிட்டு பார்த்தேன். இதற்கே சுஜாதா என்னை மன்னிக்க வேண்டும்.படம் முடிந்து வரும் போது யாரோ சொல்வது எனக்கு கேட்டது - நல்ல வேளை சுஜாதா இந்த படம் பார்க்கவில்லை.

அதில் வரும் மேரி எமர்ஸன்,கல்யாணத்துக்கு முன்பே ரகுவிடம் செக்ஸ் வைத்து கொள்ள முடிவு செய்யும் ரத்னா,கால் நன்றாக இருக்கும் மோகன் ராம்,ஜெயந்தியை திருமணம் செய்த ரகுவின் அப்பா(இங்கே சார்லிக்கு திருமணம் செய்து வைப்பார்.அப்பப்பா முடியல..) அப்படியே உள்ளது உள்ளபடியே வைத்து இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்..)

டைரக்டர் சார்,உங்களுக்கு சிவாஜி படத்தில் அஸோசியேட் டைரக்டராக வேலை பார்த்தற்கு ஷங்கர் 40 லட்சம் கொடுத்தார் என்று கேள்விப்பட்டேன். பேசாமல் இனிமேல் இது மாதிரி விஷப்பரிட்சை எதுவும் செய்யாமல் எந்திரன் படத்தில் வேலை பாருங்கள்.

டிஸ்கி :

எபிக்யுரஸ் சொன்னது,அவர் அப்பா படிக்க சொன்ன வாக்கியம்

"Death is nothing to us since so long as we exist death is not all with us but when death comes.we do not exist."

அந்த கதையில் வந்த மேற்கோள் - இது எல்லோருக்கும் பொருந்தும் என்று அவர் சொல்லியிருந்தார்.அவருக்கு பொருந்தாது.இன்னும் இணையம் மூலம் அவர் நம்மிடையே உலவுவார்,உரையாடுவார்.

துவையல் - விளம்பரம் ஸ்பெஷல்

நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது கலக்கிய விளம்பரங்கள் நரசுஸ் காபி(காபின்னா அது நரசுஸ் தான் உசிலை மணி வந்து குலுங்கி விட்டு போவார்),பூஸ்ட் (சச்சின் - கபில்தேவ்),காம்பிளான்(ஐம் எ காம்பிளான் பாய்),ரஸ்னா(ஐ லவ் யூ ரஸ்னா),உட்வோட்ஸ் கிரேப் வாட்டர்(நீ குழந்தையா இருக்கும் போது அதுதான் கொடுத்தேன்),க்ளோஸ் அப்,லைப் பாய். இதெல்லாம் தான் எனக்கு,எங்களுக்கு தாரக மந்திரம்.பின்னர் எல்லாம் தெரிந்த வயதில் டாக் ஆப் தி டவுன் - புள்ளி ராஜாவுக்கு வருமா.இதை எடுத்தவர் கூட இன்று பதிவுலகை கலக்கி வரும் என் அருமை அண்ணன் களில் ஒருவர் என்று கேள்விப்பட்டு சந்தோஷம் (அளவில்லா) அடைந்தேன்.

***************

இந்த தடவை வம்பு முதலில் வருகிறது

அவங்க விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை மட்டும் தான் காப்பி அடிப்பார்கள் என்று நினைத்தேன்.விளம்பரங்களையும் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.பைக் விளம்பரத்தில் வந்த இருவரை அப்படியே கொண்டு வந்து கான்சப்டில் கொஞ்சம் மாற்றம் - பைக் விளம்பரத்தில் ஏமாந்தவர் - இதில் ஏமாற மாட்டார்.இப்போது அதிலும் கொஞ்சம் மாற்றி இருவரும் சன் டி.டி.ஹெச் வைத்துள்ளார்கள்.முடியலடா சாமி.

***************

வோடாஃபோன் - இது ஹட்ச் நிறுவனமாக இருந்த சமயம் அந்த நாய் விளம்பரம் ஒரு கலக்கு கலக்கியது.நாயின் விலை எகிறி விட்டது.இப்படி ஏதாவது நடந்தால் யாருக்காவது பொறுக்காதே.இங்கே பொறுக்காமல் பொனது பெட்டா அமைப்புக்கு.நாயை கொடுமை படுத்துகிறார்கள் என்று கிளம்பி வந்து விட்டார்கள்.இவர்களுக்கு மாடலாக நிற்கும் பெண்கள் அரைகுறையாக நிற்பார்கள்.அது பிரச்சனையில்லை.நாய் துண்டு மற்றும் டை எடுத்து கொண்டு ஓடுவது தான் பிரச்சனை.

இவர்கள் தொல்லை பொறுக்க முடியாமல் அந்த பொம்மை விளம்பரம் எடுத்தார்கள்.அசுர ஹிட்.ஜூஜூ விளம்பரம் அதில் வந்த எல்லா விளம்பரங்களையும் பார்த்தேன் ஒன்றை தவிர.ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பூமரில் வந்த எல்லா ப்ளேவர்களையும் சாப்பிட்டு இருந்தேன் வெண்ணிலாவை ஒன்றை தவிர.அது போல ஒரு ஏமாற்றம் நிலவியது.கடை கடையாக ஏறியும் அது கிடைக்கவில்லை.சேனல் சேனலாக மாற்றியும் இது கிடைக்கவில்லை.

***************

மிகவும் எரிச்சல் அடைந்த விளம்பரமும் உண்டு.பெண்ணை படத்துக்கு அழைத்து செல்ல அவள் வீட்டுக்கு செல்லும் காதலனை அந்த பெண்ணின் அம்மா அவளுக்கு தேர்வு இருப்பதாக சொல்லி தடுத்து விடுகிறார்.அப்ப நீங்க வாங்க என்று மொபைலில் பாட்டு போட்டு அம்மாவை அழைக்கிறான். அந்த பெண்ணின் அம்மா திரும்பும் போது வெகு அருகில் நிற்கிறான்.அதற்குள் பெண் வந்து விட அம்மா அனுமதி கொடுத்து விடுகிறாள்.வராமல் இருந்திருந்தால்........ மொபைல் பெயரே வித்தியாசம் தான் விர்ஜின்.(என்ன கொடுமைடா இது..).இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

இதே விர்ஜின் மொபைலின் அடுத்த விளம்பரம்.பெண்ணிடம் கடலை வறுக்க அம்மாவிடம் தன் போனைக் குடுத்து எஸ்.டி.டி பேச சொல்லும் பையன்.
நல்ல வேளை பெண்ணிடம் போனை கொடுத்து விட்டு பெண்ணின் அம்மாவிடம் வறுக்கவில்லை.

***************

எது செய்வதாக இருந்தாலும் குறுக்கீடு இல்லாமல் இருந்தால் அந்த செயல் எப்படி வெற்றி பெறும் என்பதற்கு உதாரணம் தான் மெண்டாஸ் விளம்பரம். அதை சென்னையில் தான் செய்தார்கள்.என்ன செய்ய போகிறோம் என்றே சொல்லவில்லை.ஒரு மாதம் கழித்து வாருங்கள் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள்.விளம்பரத்தில் உள்ள கதை இதுதான் - முதல் கழுதையிடம் அடிமையாக வேலை பார்க்கும் குரங்கு கீழே கிடக்கும் மெண்டாஸை எடுத்து தன் எஜமான கழுதையிடம் கொடுக்கிறது.அது சாப்பிடாத காரணத்தால் குரங்கு சாப்பிட்டு பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறி நெருப்பு,சக்கரம் கண்டுப்பிடித்ததோடு இல்லாமல் வேட்டையாடவும் கற்றுக் கொள்கிறது.ஓடி வரும் போது கழுதையைப் பார்த்து தன் அடிமையாக மாற்றி கொள்கிறான்.வந்து பார்த்து விட்டு மாற்றமே செய்ய சொல்லவில்லையாம்.

***************

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.சன் டிவி வாங்கி வெளியிடும் டப்பா படங்களை நொடிக்கு ஒரு முறை விளம்பரம் செய்தாலும் கூடிய விரைவில் தெரியும் உருளும் போது ஒட்டிய மண்ணின் அளவு எவ்வளவு என்று தெரியும்.அதுக்கு ஒரு உதாரணம் சிவாஜிக்கு இருந்த எதிர்பார்ப்பு எந்திரன் படத்துக்கு இல்லை.

***************

டிஸ்கி :

இது கூட ஒரு விளம்பரம் தான்..எனக்கு 101 பாலோயர்ஸ் சியர்ஸ்..அவர்களுக்கு நன்றி(தம்பி இதுக்கு பேரு சுயபுராணம்,சுயதம்பட்டம் என்று யாராவது சொன்னால் ஒத்துக் கொள்ள முடியாது.காரணம் எப்போ லஞ்சம் - அன்பளிப்பு,நன்கொடையாக மாறியதோ கூடவே இதுவும் விளம்பரமாக மாறி விட்டது)

***************

Monday, November 16, 2009

என்ன கொடுமை நையாண்டி நைனா இது

மகாஜனங்களே நல்லா பாத்துக்கோங்க..இதுக்கெல்லாம் நான் காரணம் கிடையாது.முன்னெல்லாம் யாராவது தொடர்பதிவு எழுத என்னை கூப்பிடுவாங்களா அப்படினு கண்ணு முழிச்சி இருக்கிற ஒரு பதிவு விடாம படிச்சாலும் நம்ம பெயர் வராது.இப்ப அந்த பிரச்சனை இல்ல தான்.ஆனா அதை விட பெரிய சோகம் இரண்டு இருக்கு.நாம போய் தொடர்பதிவு எழுதிட்டு அதுக்கு ஆள் பிடிக்கிறது பெரிய வேலையா இருக்கு.எழுதாத ஆளா பாத்து தொடர்பதிவு எழுத கூப்பிடணும்.இல்ல அதுக்குள்ள யாராவது அவங்கள எழுத சொல்லி நம்ம பேச்சை கேக்குற(நாந்தான் நினைக்கிறேன்..) ஒரு ஆளையும் ஆட்டையப் போட்டுட்டு சேவனேனு போயிடுறாங்க..இல்லன்னா தம்பி நான் எழுதுறேன் தம்பி அப்படி சொல்றது ஆனா உடனே மறந்து போயிடுறாங்க..

நம்ம கதிர் அண்ணனை கூப்பிட்டால் தம்பி உன் அளவுக்கு எழுத முடியாது(இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி எனக்கு தெரியிது) அப்படி சொல்லி ஜெகா வாங்கிட்டார்.அட ஜெகான்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது.அதே பதிவுல காலடி ஜெகா அண்ணனையும் எழுத சொல்லிருந்தேன்.ஆனா எனக்கு கவித எழுத வராத காரணத்துனால அதை எழுதாம - கவிதை எழுதுவது எப்படி - இப்படி ஒரு பட்டறையை நடத்தி கவித இப்படி தான் எழுதனும் சொல்லி போட்டுக்கிட்டு இருந்த ஒண்ணு ரெண்டு எதிர்கவுஜயையும் எழுத விடாம பண்ணிட்டாரு.இப்படி சிஷ்யன் சொல்லி எழுதாத அவர் அவங்க குருநாதர் எழுத சொன்ன உடனே எழுதிட்டாரு.அதுல இருந்து எழுத நினைச்சி வச்சிருந்த கவித எல்லாம் உள்ளே போயிருச்சி.அட கதிர் அண்ணனும் கவித எழுதுவாரு.

சரி கவித எழுதுறவங்க தான் எழுதல இனிமே நம்மள மாதிரி நையாண்டு எழுதுற ஆளை தான் கூப்பிடனும் இப்படி உறுதிமொழி எடுத்துக்கிட்டு தண்டோரா அண்ணனை எழுத சொன்னால் எல்லாம் என் நேரம் அவரும் கவித எழுத ஆரம்பிச்சிட்டாரு.தம்பி நான் பிராபல பதிவர் இப்படி சொன்ன அண்ணன் எழுதுவாரு அப்படி விழி மேல் வழி வைச்சு (வழி மேல் விழி வைச்சு) காத்திருந்தா அவரும் தொடர்ந்து கவிதையா எழுதி குவிச்சாரு.அப்பவே எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்து வந்து போச்சு.அதே மாதிரி அவங்க க்ளாஸ் மேட் ஆதி பிரதாபன் வந்து எழுத சொன்னாரு அண்ணனும் எழுதிட்டாரு.

இனிமே கவித எழுதுறவங்களோட சகவாசமே இருக்க கூடாதுன்னு கொஞ்ச நாளாவே காணாம போயிருந்த டக்ளஸ் என்ற ராஜூவை கூப்பிட்டால் அதுவும் தீபாவளி அதுவும் காணாம போனவரை தீபாவளி பதிவு எழுத சொன்னால் அவர் போட்டு இருக்காரு எங்க ஸ்ரீ அண்ணன் கூப்பிட்டார். எழுதாட்டி மதுரைக்கு போக முடியாது அப்படி ஒரு காரணம் சொல்றார்.(யோவ் முதல் மதுரைக்கு போக மும்பையை தாண்டனும்)

மிச்ச இருந்த இன்னோரு பார்ட்டி சூரியனை கூப்பிட்டால் அதுல இருந்து அவர் ப்ளாக் சாத்தியே கிடக்குது.

கடைசியாய் காணாமல் போயிருந்த நையாண்டி நைனாவை கூப்பிட்டால் அதுக்கு நேர்ந்த கதியை இன்னைக்கு அவரோட பதிவுல பாக்கலாம்.எனக்கு இருக்கிற பயம் இதுதான் நான் இன்னொரு தொடர் பதிவு எழுத சொல்லியிருந்தேன்.அது என்ன கதியாக போகுதோ..அத நினைச்சா தான் கொஞ்சம் பீதியா இருக்கு.இவரை கூப்பிட்டதுக்கு பதிலா எமதர்மனுக்கு துணையா சித்திரகுப்தனைக் கூப்பிட்டு இருக்கிலாம்.பதிவு எழுதி படிக்க சொல்லி துன்புறுத்தும் பாவம் எல்லாம் கொஞ்சமாவது பாவம் குறைஞ்சு இருக்கும்.இப்போ இவரை கூப்பிட்ட பாவமும் என் கணக்குல சேர்ந்து போச்சு.

இது எல்லாம் கூட எனக்கு வருத்தம் இல்ல..பரிசல் பதிவுல போய் பின்னூட்ட புயல் நோவை வம்பு இழுத்து என் ப்ளாக்கை சொஞ்சம் விமர்சிக்க சொல்லியிருந்தேன்.படிச்சி அவருக்கு தலை சுத்துச்சோ இல்ல வேற எதுவும் நடந்ததா எனக்கு ஒண்ணும் புரியல..எனக்கு பின்னாடி வந்த வெண்பூவை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

டிஸ்கி : காலையில் இருந்து பதிவு போட முடியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன்..இப்படி ஒரு மேட்டர் சிக்கி ஒரு பதிவு கிடைச்சாச்சு..

அமெரிக்காவின் கைப்பாவைகளா நாம்????

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹெட்லி இந்திய நகரங்களைத் தாக்க திட்டம் போட்டுள்ளார் என்று அமெரிக்காவில் சொன்னாலும் சொன்னார்கள்,இந்திய உளவுத்துறை அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லாமால் போய் விட்டது.

காணாமல் போன சந்திராயனைத் தேடுவதில் இருந்து விபத்தில் சிக்கிய ஆந்திர முதல்வரைத் தேடுவது வரை எதற்கு எடுத்தாலும் அமெரிக்க உதவியை நாடினால் இப்படி தான் இருக்கும் அவர்கள் என்ன சொன்னாலும் நம்ப வேண்டியது தான்.

டேவிட் ஹெட்லி அனுப்பிய தகவல்களில் ராகுல் என்ற பெயர் அடிக்கடி அடிபட உடனே விழித்துக் கொண்ட உளவுத்துறை அவர் ராகுல் காந்தியைத் தான் குறிப்பிடுகிறார் என்று சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது.இந்தி சினிமாவில் அடிக்கடி ராகுல் என்ற பெயரில் நடிக்கும் நடிகர் ஷாரூக் கானையும் குறிப்பிடுகிறார் என்று அதிபுத்திசாலித்தனத்தைக் காட்டினால் என்ன செய்வது.

அவர் குறிப்பிடும் அந்த ராகுல் யார் என்று பார்த்தால் அவர் மகேஷ் பட்டின் மகன்.மகேஷ் பட் பிரபல இயக்குனர்.ராகுல் டேவிட் ஹெட்லிக்கு வீடு பிடித்து கொடுத்தார் என்று தெரிய வந்துள்ளது.அவர் பிரபலத்தின் பையனாக இருப்பதால் அவர் டேவிட் ஹெட்லி யார் என்று தெரியாமல் செய்து விட்டார் என்று செய்தி வாசிக்கிறார்கள்.இதுவே ஒரு சாதாரண வீட்டு பையன் சிக்கி இருந்தால் படித்துறையில் பாவாடை திருடிய வழக்கு எல்லாம் அவன் மேல் பாய்ந்து இருக்கும்.

விசாரணை முடிந்த பிறகும் கூட அந்த நபர் உள்ளே தான் இருப்பார்.இதுதான் உண்மையான சிங்கத்தை விட்டு விட்டு கரடியைப் பிடித்து அடித்து உண்மையை ஒத்துக் கொள்ள வைப்பது - இதுதான் கை வந்த கலையாச்சே நமக்கு.

மும்பையில் தாக்குதல் நடந்தப் பிறகு அமெரிக்கா ஆற அமர ஒரு செய்தி வெளியிடுகிறது.நாங்கள் முன்னரே சொன்னோம் யாரும் கேட்கவில்லை என்று. இது எல்லாம் நாடகம்.இப்படி அடிக்கடி நடித்தால் தான் ஆயுதம் விற்க முடியும் இரண்டு பக்கமும்.பணம் கிடைக்கும்.

இரண்டாவது லாபம் - அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பார்கள்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை பயிரிட முடியும்.அதை சாப்பிட்டால் என்ன மாற்றம் வரும் என்று தெரிந்து கொள்ளலாம்.

சாமுராய் படத்தில் வருவது போல - வயித்துல குண்டு வைச்சிட்டு வந்து வெடிச்சான்.அதுல இருந்து வயித்த மட்டும் செக் பண்றது.அடுத்த தடவை காலில் கட்டிக் கொண்டு வருவான் விட்டு விடுங்கள்.அது மாதிரி அவன் சொல்வதை எல்லாம் கேட்டால் இப்படி தான் நடக்கும்.

நடிகனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மக்களுக்கு இல்லை. அமெரிக்கா சொல்வதை கேட்டாலும் அதை நன்கு விசாரிக்க வேண்டும்.இல்லை ராகுல் என்ற பெயருக்கு அர்த்தம் கண்டுப் பிடிப்பதிலே பாதி நாட்கள் முடிந்து விடும்.

டிஸ்கி :

ஆர்குட்டில் சிவாஜியைப் பற்றி தவறாக எழுதி விட்டதாக ஒரு தமிழனைப் பிடித்து விசாரித்து கொடுமை செய்தார்கள்.கல்லீரல் முதல் கணையம் வரை பாதிப்பு.உண்மையில் செய்தது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளின் வாரிசுகள்.அதற்கு மேல் அந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

Saturday, November 14, 2009

நீ சாரு அதிகம் படிப்பியா..

கௌதம் மெல்லியதாக தனக்குள் சிரித்து கொண்டான்.அவன் அடுத்து என்ன சொல்வான் என்று வாயையே பார்த்துக் கொண்டு ஒரு கூட்டம் இருந்தது.அதை நினைத்ததும் இன்னும் சிரிப்பாக இருந்தது."ஹவ் கிரேசி தீஸ் பீபிள் ஆர்.." என்று நினைத்து கொண்டான்.பள்ளித் தோழன் விக்ரம் சொன்னது ஞாபகம் வந்தது.

"மச்சான்..ஸ்கூல்,காலேஜ் இங்க எல்லாம் நீ வெயிட் காட்ட உதவுறதே பொண்ணுங்க தான்..இப்போ வாசல்ல வைச்சி ஒரு பொண்ண கிஸ்ஸடி..அது கொஞ்சம் சுமாரா இருந்தாலும் நீ தான் ஹீரோ.."

அனுபவஸ்தன் சொன்னா சரியாக தான் இருக்கும்.அன்னிக்கு கௌதமுக்கு புரியல.இன்னைக்கு காலேஜ்ல இருக்கிறதுல ஒரு நல்ல பிகர தட்டுன உடனே தான் தெரியுது விக்ரம் சொன்ன ஹீரோவோட மதிப்பு.

சீனியரை ஜூனியர் பசங்க அடிச்சிட்டாங்க.உதவுங்க பக்கத்து டிபார்ட்மென்ட் பசங்க வந்து கேட்டதுக்கும் முதல்ல கௌதமிடம் கேட்டதில் அவனுக்கு சொல்ல முடியாத சந்தோஷம்.

அசைன்மெண்ட் எழுதுறது,சும்மா கிளாஸ் நடக்குற வைத்து பரிட்சையில் வைத்து பேப்பர் கொடுக்கிறது எல்லாம் அவன் கண்ணசைவில் நடக்கும் போது ஏதோ சாதித்தாகவே நினைத்தான்.

"ம்..ம்..சொல்லு உனக்கு பிராஜக்ட் மார்க் இந்த தடவை குறையும் தெரியுமா..பசங்க உன் பின்னாடி தான் நிக்கிறாங்க..நாங்க ஸ்மெல் பண்ணிட்டோம். இந்த ஸ்ரைக் நடக்க கூடாது..நடந்தா நீ தான் பொறுப்பு.." என்று ஒரு லெக்சரர் விட்ட மிரட்டலுக்கும் அடி பணியவில்லை.

ஸ்ரைக்கும் நடந்தது.மார்க்கும் குறைந்தது.

ஆளுக்கொரு வேலை.திசைக்கொருவராக எல்லோரும் போய் விட்டார்கள்.

நண்பனின் கல்யாணம்.எல்லோரும் வரவில்லை என்றாலும் கல்லூரியில் மோசமானவர்கள் என்று முத்திரை குத்தப் பட்டதில் முக்கியமானவர்கள் வந்திருந்தார்கள்.

கௌதம் மனதுக்குள் சாமியை வேண்டி விழுந்து கும்பிட்டான்."அவளைப் பத்தி பேச்சு வரக் கூடாது.."

அவன் வாழ்வில் கிழிக்கப் பட்ட அத்தியாயத்திற்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது.அவளின் அவருக்கு எல்லாமே அதிகம்.

சாமி தான் முக்கியமான கட்டத்தில் தானே கை விடுவார்.வேண்டாதது எல்லாம் நடந்தது.தண்ணி அடிக்கும் போது மெதுவாக ஆரம்பித்தார்கள்.கூடப் படித்த பெண்கள் பற்றி எல்லாம் பேச்சு தொடங்கி சரியாக அவளிடன் வந்து நின்றது.

"அவள நீ அன்னைக்கே முடிச்சு இருக்கணும்..விட்டுட்ட அதான் பீல் பண்றே.." - இப்படி முத்து உதிர்த்தவன் காதலிக்கும் போது அண்ணியோ, தங்கச்சி என்று உறவு கொண்டாடியவன்.

"அவளை சும்மா விடாதே..ஏதாவது பண்ணு.."

"இனிமே என்ன பண்ண முடியும்..அதான் அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறதே.." சொன்ன கௌதமுக்கு நேரம் சரியில்லை.

"அப்படியா..போய் குழந்தைக்கு ஆய் கழுவி விடு.." என்று அவன் சொல்லவும் கூட்டமே சிரித்தது.அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை.

"அந்த பெண்ணை இழந்துட்டா நான் ஹீரோ இல்லையா.." நினைக்க நினைக்க கௌதமுக்கு அழுகையோடு கோபம் வந்தது.

விக்ரம் நினைவுக்கு வந்தான்.எப்படியோ முயற்சி செய்து கடைசியாக ஆர்குட்டில் அவனை பிடித்து விட்டான்.

விக்ரம் தொடர்பு கொண்டு பேசியவுடன்.."மச்சான்..அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் அதுல ஒரே ஒரு மாற்றம் தான்.."

"விக்ரம்..நீ சாரு அதிகம் படிப்பியா..திரும்ப ஸ்கூல் பொண்ணு கூட எல்லாம் என்னால சுத்த முடியாது.."

"மச்சி..உன் குசும்பு உன்ன விட்டு போகல..படிக்கும் போது தான் ஹீரோயிசத்தை காட்ட பொண்ணு..இப்ப எல்லோரும் ஐ.டில வேலை பாக்குறீங்க பொண்ணு எல்லாம் சாதாரணம்.."

"அப்ப அந்த அட்வைஸ் உள்ள மாற்றம்.."

"பணம் அவன விட நீ அதிகமா சம்பாதி..நீ தாண்டா ஹீரோ..சின்ன வயசுல நீ பணத்தை பத்தி கவலை பட்டு இருக்கியா..இல்ல தானே..இப்ப பொண்ணுங்களப் பத்தி கவலை படாதே.."

கௌதமுக்கு மனம் தெளிவாக இருந்தது.

"எப்படி மச்சான் என்னால முடியுமா.." குரல் கம்மி இருந்தது

"அந்த பொண்ண மடக்க எப்படி எல்லாம் குட்டிக் கரணம் அடிச்ச..இப்போ பணத்துக்காக கொஞ்சம் அடி.." விக்ரம் சொல்லி முடிக்கவும்

"நிச்சயமாடா.." சொல்லும் போதே கௌதமின் குரலில் உற்சாகம் வழிந்தது.

டிஸ்கி :

"போய் ஆய் கழுவி விடு.." என்ற ஒரேயொரு சம்பவத்தின் கருவில் இருந்து தான் இந்த கதை தொடங்கியது.இந்த கதைக்கு புள்ளி வைத்தவர் சிவா.அவருக்கு என் நன்றிகள்.

Friday, November 13, 2009

பிரபலங்கள் சொன்னதும்,சொல்லப்படாததும்

எஸ்.பி.பி.சரண் - நாணயம் படம் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக எடுத்த படம்.டிரெயிலர் பாத்தா உங்களுக்கே கதை தெரியும்.

(டிரெயிலர் பாத்தா எனக்கு இந்த படம் ஒசியன்ஸ் லெவன் மாதிரி இருக்கு.சக்தி மிஷ்கினோட சிஷ்யனாமே.)

வெற்றிமாறன் - ஆடுகளம் ஒரு வித்தியாசமான படம்.சேவல் சண்டையின் உக்கிரம் இதில் தெரியும்.மதுரை பத்தி எனக்கு இதுக்கு முன்னாடி ஒண்ணும் தெரியாது.

(ஆமா இது கற்றது தமிழ் ராமின் உதவியாளர் எழுதின சேவல் காடு கதையாமே.எப்படி தெரியும் மதுரையைப் பத்தி..)

ஆனந்த விகடன் - கமல்,மிஷ்கினின் கூட்டணியின் தேடல் அனேகமாக புத்தரைப் பற்றியதாக இருக்கும்.

(சூடா ஒரு சீனப் படம் பார்சல்..)

பாபு சிவன் - இந்த படத்தில் கிராமத்தில் இருந்து விஜய் வருகிறார்.காவல் துறை அதிகாரிகளால் பிடிக்க முடியாத சமூக விரோதிகளை விஜய் வேட்டையாடுகிறார்.

(திருப்பாச்சி டி.வி.டி பார்சல் உங்களுக்கும் கிடச்சுதா..)

கண்ணன் - கண்டேன் காதலை மும்பையில் ரசிகர்களோடு ஜப் வி மெட் இயக்குனர் இமிதாஸ் அலி பார்த்து ரசித்தார்.

(ஆமா இனிமே லவ் கா ஆஜல் படத்தை யாருக்கும் ரீமேக் செய்ய விட மாட்டார்.)

எஸ்.ஏ.சந்திரசேகரன் - விஜய்யை எந்த கட்சியில் கூப்பிட்டார்கள்,இந்த கட்சியில் கூப்பிட்டார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.உண்மையில் யாரும் கூப்பிடவில்லை.

(வேட்டைகாரன் ரீலிஸ் ஆகனும்மா வேண்டாம்மா..ஏற்கனவே வைச்சிருந்த பஞ்ச்சை எல்லாம் வெட்டி விட்டு ரீஷூட் பண்ணி வெறும் காத்தை அடைத்து இருக்கிறார்கள்.காத்தையும் பிடுங்கணுமா..)

மிஷ்கின் - நந்தலாலா ஜப்பான் படத்தின் காப்பி அடித்ததாக எல்லோரும் எழுதுகிறார்கள்.அவர்களுக்கு தெரியாத உண்மை அது என் வாழ்வோடு சம்பந்தப்பட்டது.

(அந்த ஜப்பான் படத்தில் பாட்டு கிடையாதாமே..)

யுவராஜ் - ஸ்ரீதேவி இந்த வயசுலேயும் இவ்ளோ சிக்குன்னு இருப்பாங்களா..நான் எதிர்பாக்கவேயில்ல..

(இப்படி எதையாவது நினைச்சி கிட்டு இருந்தா எப்படி விளையாட முடியும்..)

லிங்குசாமி - பையாவுக்கும் நீங்க சொல்ற ஹாலிவுட் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..

(அப்படியா கௌதம் மேனன்..நீங்க சரியா சொல்வீங்க..ஏற்கனவே பீமா படத்தை சுட்ட விஷயத்தை நீங்க தான் சொன்னீங்க..)

நையாண்டி நைனா - தம்பி இரும்புத்திரை..நீ தினமும் எழுதுற.. பத்து பின்னூட்டம் தாண்டல..நான் ஒரு மாசம் கழிச்சி பதிவு போட்டேன்..எனக்கு முப்பது பின்னூட்டம்..

(கிழிஞ்சது கிழியாதது..பட்டன் வைச்சது வைக்காதது..மண்ணு ஒட்டுனது ஒட்டாதது..)

டிஸ்கி :

நேத்து எழுதிய
பைத்தியமான கடவுள்
கதையால் எனக்கு கிடைத்த பரிசு ஒரு பாலோயர் காலி.

இப்போ இருக்கிறது தொண்ணுத்தி எழு,சேர்ந்து அப்புறம் விலகியது மூணு அக மொத்தம் நூறு..சியர்ஸ்..

பாலோயர்களுக்கு நன்றி..

Thursday, November 12, 2009

பைத்தியமான கடவுள்

ரொம்ப பசி.கல்லைத் தின்னாலும் கரையிர வயசு தான்.அதுக்காக கல்லை முழுங்க முடியுமா.எனக்கும் ரத்தம் எல்லார் மாதிரியும் அதே அளவு தான் இருக்குமா.இரத்தம் ஏற்கனவே ரெண்டு தடவை குடுத்தாச்சு.குடுத்த ரத்தமே ஊர மூணு மாசம் ஆகும் சொல்ராங்க.அடுத்த மாசம் விக்க முடியாதா.பசியை அடக்க வழி கேட்டால் ஒரு பைத்தியக்காரன் பீடியை காட்டுறான்.பீடி பொறுக்க போன எல்லாம் என் நேரம்.ஒண்ணும் சரியில்ல.எவனோ ஒட்ட ஒட்ட வலிச்சியிருக்கான்.

இருக்கிற காசுக்கு ஏதாவது படம் பாக்கலாம்னு பாத்தா "இன்னும் மீசயே முளைக்கல அதுகுள்ள என்ன.." இப்படி கேட்டே என் வாய அடைக்கிறாங்க.வேலை கேட்டு போனா ஜாதியை கேக்குறான்.ஏதாவது சுணங்குனா ஜாதியைச் சொல்லி திட்டுவான்.திட்டு வாங்கிட்டு நிக்க நான் சொரணை இல்லாத ஜென்மமா.உடனே கை நீளும்.வீட்ட விட்டு ஓடி வரும் போது வாகனத்தை தான் எடுக்கல எம் பெய்ரையாவது ஞாபகமா கேட்டு இருக்கலாம்.

இப்போ எங்க அப்பாவும்,அம்மாவும் எங்கே தேடி அலையிராங்க தெரியலையே.பதினாறு வயசாக இன்னும் நாலு மாசம் தான் இருக்கு.இத மறக்காம இருக்க காரணம் பதின்னறு வயசுல கல்யாணம் நடக்கும்னு ஒருத்தன் சொன்னான்.அதுகுள்ள வீட்ல சண்டை போட்டுட்டேன்.வீட்டுல பாத்த பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு ஓடியாந்திருந்தா அவளை பாக்காத சோகத்தில் தாடியாவது வளர்ந்து இருக்கும்.வந்து நாலு மாசம் ஆகப் போகுது.மண்ணை சாப்பிடதுக்கு அடிச்சாங்க.இங்க என்னாடான்னா மண்ணுல கூட கலப்படம்.வாயிலே வைக்க முடியல..

இனிமே பொறுக்க முடியாது.வேலைய காட்ட வேண்டியது தான்.வாசம் மூக்கை துளைக்குது.திருட வேண்டியது தான் பாக்கி.ஐயோ அதுக்குள்ள இந்த பையன் வந்துட்டானே.சரி அதுக்கு பின்னாடி ஒளிய வேண்டியது தான்.ஏதோ படம் மாதிரி இருக்குதே.அதுல முன்னாடி இருந்து எதையோ எடுத்து வாயில் போடுறான்.அவங்க அம்மா வந்துட்டாங்க.

"ஏண்டா சாமி கும்பிடாம தின்ன.." என்ன பதிலே சொல்ல முடியாம ஒரு படத்த காட்டுறான்.

"என்ன கிருஷ்ணரா..அவரா சாப்பிட்டார்.." அந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு சந்தோஷம் தாங்கல.என் பேரு கிருஷ்ணன்.

"இல்ல முருகர் சாப்பிட்டாரா.." அம்மா காட்டிய அடுத்த படத்தைப் பார்த்தவுடன் வயித்துல புளி.அதுவும் என்னை மாதிரியே இருக்குது.

"இல்ல ராமரா.." இனி குழப்பம் தாங்க முடியாம அவங்க முன்னால போய் குதிச்சேன்.அவங்க பயந்துட்டாங்க.ராமர் படத்தை ஊத்துப் பாத்தேன்.பக்கத்தில் ஒரே ஒரு மனைவி தான்.சோசியக்காரன் சொன்னது ஞாபகம் வந்தது."எனக்கு ரெண்டு பொண்டாட்டி..".அதுவரைக்கும் அதிர்ச்சியில கத்தாம இருந்தாங்க.

"நான் முருகனா இல்ல கிருஷ்ணனா.." இப்படி கேட்டது தான் தாமதம்.

அம்மாவும் பிள்ளையும் கத்த ஆரம்பிச்சாங்க.."பைத்தியம்..பைத்தியம்.."

கால் போன போக்குல ஓடினேன்.முதல்ல வரப் போறது பழனியா இல்ல துவாரகையா ?

Wednesday, November 11, 2009

சினிமா படம் எடுப்பது எப்படி..

முன் டிஸ்கி : நான் ஒரு பொட்டி தட்டுற ஆளு..நான் என் பாணியில் தான் சொல்லி தருவேன்..அப்புறம் அத விட்டுட்டேன்,இத விட்டுட்டேன் யாரும் போய் எங்க அண்ணன் கேபிள் கிட்டயோ இல்ல அண்ணன் தண்டோரா கிட்டயோ அடம் பிடித்தால் நான் பொறுப்பு கிடையாது..வேணா உண்மை தமிழன் அண்ணன் கிட்ட சொல்லலாம்..அப்புறம் அவர் விரிவா கிளாஸ் எடுப்பார்..அதுக்கும் நான் பொறுப்பு கிடையாது..

நான் எல்லாம் வேலைக்கு சேரும் போது எனக்கு கோடிங்கே தெரியாது..கூகிள் பாத்து தான் கத்துகிட்டேன்..முதல்ல படம் பாக்கும் போது ஒரு சாதாரண சி செண்டர் ரசிகனா இருந்த நான் இப்போ ஏ செண்டர் ரசிகனாக மாறி தொலைத்த கா"ரணத்தால்" வந்த வினை இது..

படம் எடுப்பதை நாலு விதமா சொல்லி தர்றேன்..

முதல்ல - பழைய கதை ----------------------என்ன புரியலையா புதுசா அதோட நீட்சி

உதாரணத்துக்கு இப்போ ஒரு காதலர்களை எடுத்து கொள்வோம்.முதல்ல அவங்க போராடுவாங்க..இறுதி காட்சியில் சேர்ந்து விடுவாங்க இல்ல பிரிஞ்சு விடுவாங்க..

சேர்ந்தால் - அலைகள் ஒய்வதில்லை படம் அதோட நீட்சி போய் கஷ்டப்படுவது மாதிரி இருந்தால் சித்ரம் (படிக்கும் போதே திருமணம் குழந்தை)

காதலர்களை சேர்த்து வைத்தால் கிழக்கே போகும் ரயில்,ஷாஜகான் ------> அவர்கள் பிரிந்து விட்டால்,சேர்த்து வைத்தவன் தட்டிக் கேட்டால் அது நாடோடிகள்.

மன நலம் பாதிக்கப்பட்டு மறந்து போய் இருப்பவளைப் பாதுகாத்தால் மூன்றாம் பிறை - நீட்சியாக தீபாவளி.

இரண்டாவது பழைய பேண்டை கொஞ்சம் ஆல்டர் செய்து போடுவது..

அதாவது ஒரு படத்தில் இருந்த காட்சியை எடுத்து கொஞ்சம் மாத்தி படத்தில் சேர்த்து கொள்வது..

மன்மத லீலை படத்தில் மனைவிக்கும்,ஒரு பைத்தியம் பிடித்த பெண்ணிடமும் மாட்டி கொண்டு அல்லல் படுவார் கமல்.இரண்டு பேரும் கை தட்டுவார்கள்.மனைவி மாடியில் இருப்பார்.அந்த பெண் கீழே..மேலேயும் கீழேயும் ஓடி ஓடி சுருண்டு விடுவார்.

இதை எப்படி மாற்றுவது இரண்டு பெண்களுக்கு பதில் இரண்டு கிழவிகளை வைத்து கொள்வோம்.இரண்டு பேரும் சமதரையில் நிற்கிறார்கள்.கை தட்டுகிறார்கள்.நாயகன் இரண்டு பக்கமும் ஓடுகிறார். படம் பூவே உனக்காக.

இன்னோரு உதாரணம்..

சாமி படத்தில் இரவு படம் பார்த்து விட்டு வரும் பெண்களுக்கு டார்ச் கொடுப்பார் விக்ரம்.அடுத்த நாள் அந்த பெண்ணின் கணவரிடம் கொடுத்து விட சொல்வார்.காலையில் கணவருக்கு ரெண்டு மொத்து கொடுப்பார்.இந்த காட்சியின் மூலம்..

ராம்கி நடித்த மருதுபாண்டி..டார்ச்சுக்கு பதில் அரிக்கேன் விளக்கு..பெண்களுக்கு பதில் ஒரே ஒரு பெண்.கணவரும் வருவார் அடி கிடையாது அட்வைஸ் மட்டும் உண்டு..

மூன்றாவது மொத்த படத்தில் கருவையும் உருவுவது..

துள்ளாத மனமும் துள்ளும் - இந்த படத்தில் விஜய் அழுவதை தான் இன்று வரை விஜய்க்கு நடிக்க வரும் என்பதற்கு ஒரே ஒரு சாட்சி.கக்கூஸ் நாத்தம் அழுது இருப்பார் என்று நினைக்கிறேன்.கதை - தன்னால் கண்ணைப் பறி கொடுத்த பெண்ணுக்காக சேவை செய்வது.

இந்த படத்தின் மூலம் - புதையல் - சிவாஜி கணேஷன்,வாணிஸ்ரீ நடித்தது.நாயகி பார்வை கண் ஒரு விபத்தில் போய் விடும்.அதற்கு காரணம் சிவாஜி..பிறகு வாணிஸ்ரீயை அவருக்கு தெரியாமல் கல்யாணம் செய்து அவர் சிகிச்சைகாக பாடுபடுவார்.என்ன ஒரு வித்தியாசம் - சிவாஜி இந்த ப்டத்தில் டாக்டர்.

மன்மதன் படத்தை சிகப்பு ரோஜாக்கள் படத்துடன் ஒப்பிடலாம்.

இன்னும் ஒரு உதாரணம் வேண்டுமா - போக்கிரி விஜய் ஒரு போலிஸ் அதிகாரி.ஆனால் பொறுக்கி மாதிரி நடந்து கொண்டு டிரிபிள் கேம் ஆடுவார்..அந்த படத்தை கமல் நடித்த காக்கிசட்டை படத்துடன் ஒப்பிடலாம்.என்ன ஒண்ணு அவர் அம்பிகாவிடம் உளறி விடுவார்.இதில் அசினிடம் உளற மாட்டார்.காக்கிசட்டையில் மாதவி உண்டு.போக்கிரியில் பிருந்தா.

அதில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை கொல்ல மாட்டார்கள்.இதில் நாஸரை கொன்று விடுவார்கள்.அதில் இறுதியில் சண்டை தீவில் நடக்கும்.இதில் ஒரு மில்லில் நடக்கும்.அதில் வரும் செந்தாமரை கெட்டவராக நடிக்கும் நல்லவர்.இதில் கெட்டவர்.

காக்கிசட்டையில் செந்தாமரையையும்,மாதவியையும் சத்யராஜ் கொல்வார்.இதில் அந்த போலிஸ் அதிகாரியையும்,பிருந்தாவையும் விஜய் கொல்வார்.

நாலாவது நோகாமல் நோன்பு கும்பிடுற வேலை..

எடுத்த படத்தை பெயர் முதல் கொண்டு அப்படியே எடுப்பது...

நான் அவன் இல்லை (1974) ஜெமினி கணேஷன் - நான் அவன் இல்லை (2007) - ஜீவன்.

பில்லா (1980) ரஜினி - பில்லா (2007) - அஜித்

முரட்டுகாளை (1982) ரஜினி - முரட்டுகாளை (2010) சுந்தர்.சி

மாப்பிள்ளை (1987) ரஜினி - மாப்பிள்ளை (2010) தனுஷ்

பாலைவனச்சோலை (1981) சந்திரசேகர் - பாலைவனச்சோலை (2009) நிதின் சத்யா

நூற்றுக்கு நூறு (ஏதோ ஒரு வருஷம் ரொம்ப முக்கியம்..தெரியல அதுக்கு என்னா சேட்டை) ஜெய்சங்கர் - நூற்றுக்கு நூறு வினய்

இது ரொம்ப சுலபம்..இப்படி கட் காப்பி பேஸ்ட் பண்ணி ஜாலியா இருக்கணும்..

இப்ப எனக்கே ஒரு சந்தேகம் வந்துரிச்சே..இதை தீர்த்து வைக்க முன் டிஸ்கியில் வரும் மூவர்களுக்கும் உரிமை உண்டு.

சந்தேகம் என்னவென்றால் - அது ஏன் ஐட்டம் சாங்கில் மட்டும் பச்சை அல்லது சிகப்பு கலர் உடை பக்காவாக செட் ஆகுது..உதாரணம் நிகிதா - சரோஜா,சிம்ரன் - தமிழ் வேண்டாம் போதும்டா சாமி..

இது சந்தேகத்தோட நீட்சி - வெள்ளை சேலை கட்டி ஆடும் போது மட்டும் மழை வருது..ஏனி ரீசன் பிஹைன்ட் திஸ்..ரீசனா இல்ல ரீசஸ்சனா.. டெல் மீ..

டிஸ்கி :

தலைப்பு படம் உருவது எப்படி - இப்படி வைச்சிருந்தா பொருத்தமா இருக்குமா..இன்னும் நிறைய உருவல் இருக்குது..அப்புறமா சொல்லி தாரேன்..நான் தமிழ் பட உருவலை மட்டும் தான் இதில் சொல்லி தருவேன்..ரஷ்யப் படம் உருவல் வேணுமா..

கிராமத்து காமன் மேன் கதைகள்

சில மாதங்களுக்கு முன் குங்குமத்தில் ஒரு கதை படித்ததாக ஞாபகம்.பிழைக்க வந்தந்தவர்களுக்கு எடுபிடி வேலை செய்த ஒருவருக்கும்,வெள்ளைகார அதிகாரியின் மனைவிக்கும் உள்ள தொடர்பை விவரித்த விதம் அந்த கதையை கண் முன்னால் நிறுத்தியது.இறுதியில் அந்த மாளிகையின் புகை வெளியேறும் குழாயில் அவன் உயிரோடு புதைக்கப் படுகிறான்.பல ஆண்டுகள் கழித்து அந்த மாளிகைக்கு செல்லும் ஒரு விளம்பரப் படம் எடுக்கும் கதயின் நாயகனுக்கு "துரை என்னை கொல்லாதீங்க.." என்று அலறும் குரல் மற்றும் காதல் செய்த நேரங்களில் மெல்லிய முனங்கல் சத்தமும் கேட்கிறது..அது மாதிரி ஒரு கதை கைவசம் இருந்தாலும் மொக்கையாக(தற்சமயம் அடிவாங்கும் அளவிற்கு தெம்பு இல்லாத காரணத்தால்) எழுதி அதை சிதைத்து விட கூடாது என்பதால் வேறு கதைகள்(அது மாதிரி ஆனா இல்ல)..

கதை 1 : சின்ன வயதில் எனக்கு சொன்ன கதைகள்..

பக்கத்து ஊரில் ஒரு பெரிய குளம் உண்டு.நியாயமாக அதை ஏரி என்று தான் சொல்ல வேண்டும்.இருபது கிலோ எடையுள்ள மீன் எல்லாம் கிடைக்கும்.கரையில் ஒரு பெருமாள் கோயில்.எந்த மன்னன் கட்டியதோ தெரியவில்லை.

பல வருடங்களுக்கு முன்..ஒரு மழை நாளில் குளம் நிரம்பி வழிந்தது.இது மாதிரி பெரிய குளங்களின் கரைகள் எல்லாம் பெரிதாக இருக்கும்.மாட்டு வண்டிகள் கூட கரை மேல் போகலாம்.உடைப்பெடுத்தால் சில ஊர்கள் இருக்காது.மடை உடைந்து தண்ணீர் வழியும் நிலையில் இருந்து இருக்கிறது.காலை ஆறு மணிக்கு நடமாட்டம் இல்லாத காரணத்தால் யாருக்கும் தெரியவில்லை.

எண்ணெய் விற்கும் செட்டியார் அந்த வழியாக எண்ணெய் விற்க போயிருக்கிறார்.உடைப்பை அவர் பார்த்தாலும் எண்ணெய் விற்று விட்டு வரும் போது சொல்லி விட வேண்டும் என நினைத்து அவர் வேலையை முடிக்க போய் விட்டார்.

பகல் ஒரு மணி அளவில் குளம் உடைந்து விட்டது.மாடு மேய்க்கும் சிறுவர்கள் அதை பார்த்து விட்டு ஊரில் சொல்ல,மடையை அடைக்க பெரும் பாடுப் படுகிறார்கள்.மாலை ஆறு மணியளவில் செட்டியார் எண்ணெய் விற்ற காலியான பாத்திரங்களுடன் வருகிறார்.மடையை அடைக்க படும் பாட்டைக் கண்டு பரிதாபத்துடன் "ஐயோ மடை உடைந்து விட்டதா..நான் உடையாது என்றல்லவா நினைத்தேன்..காலையில் பார்க்கும் கசிந்து கொண்டு தான் இருந்தது..அதனால் சொல்லாமல் போய் விட்டேன்.." எண்டு சொல்லி முடிக்கவும்

அடைத்து கொண்டிருந்த கூட்டமே கொதித்து விட்டது.பார்த்து விட்டு சொல்லாமல் போனவனை விடுவதா என்ற கோபம்,மடையை அடைக்க முடியாத இயலாமை எல்லாம் சேர செட்டியாரை பிடித்து மடையில் இறக்கி உயிரோடு புதைத்து விட்டார்கள்.அவர் மேல் மண்ணைத் தள்ளும் போது கத்தியிருக்கிறார்."கண்ணு எரியுதே..கண்ணு எரியுதே.."

அந்த குரல் இன்றும் கேட்கிறதாம்.அதை கேட்க எனக்கு ஆசை.ஒரு நாள் கோயிலில் மாவிளக்கு போட்டு விட்டு குளத்தில் கைகால் அலம்ப போனோம்.கரையின் உச்சியை அடையவே இருபது படி ஏற வேண்டியிருந்தது.மடைக்கு போக ஆசை இருந்தாலும் சொல்ல பயம்.காரணம் - எங்கள் ஊரில் இருக்கும் சின்ன குளத்தில் மூழ்கி உயிர் பிழைத்ததால் வந்தது.ஆசையைக் குழி தோண்டி மனதில் புதைத்து விட்டேன்.இன்னும் என் மனதில் அந்த கதை விடாமல் கேட்கிறது.அந்த குரலை கேட்க வேண்டும்.

கதை 2: எனக்கு ஓட்டு விழவில்லையே..பின்னூட்டம் கிடைக்கவில்லையே..யாரும் படிக்கவில்லையே.. என்று மனதுக்குள் குரல் கேட்கும் போதெல்லாம் ஆச்சி சொன்ன இந்த கதையை நினைத்து கொள்வேன்..

செட்டியார் தான் இதிலும் கதை நாயகன் ப்ளஸ் காமெடியன்.வில்லன் கடைசியில் வருவான்.

செட்டியார் எண்ணெய் விற்று விட்டு வரும் போது மரத்தடியில் தங்கம் கொட்டிக் கிடப்பதை பார்க்கிறார்,உடனே எடுக்க ஓடுகிறார்.

ஒரு அசரீரி கேட்கிறது.. "தொடாதே..அது மூளிக் காதனுக்கு சொந்தம்.."

தங்கத்தின் மேல் உள்ள ஆசையால் காதை அறுத்து கொள்கிறார்."இப்போ நானும் மூளிக்காதன் தான்.." என்று சொல்லி பானை முழுவதும் நிரப்பி கொள்கிறார்.

இருள் சூழவே பயணம் மேற்கொள்ள முடியாமல் ஒரு வீட்டில் தங்க இடம் கேட்கிறார்.முன்யோசனை முனுசாமியாக பானையில் எண்ணெய் இருப்பதாக சொல்கிறார்.

அந்த வீட்டில் மருமகளுக்கு தலை பிரசவம்.வைத்தியர் எண்ணெய் கேட்க மாமியார் செட்டியார் பானையில் கை விடுகிறாள்.தங்கம் இருப்பதைப் பார்த்து விட்டு ஊர் முழுக்க ஒரு கிண்ணம் எண்ணெய் வாங்கி பானையை நிரப்பி விடுகிறாள்.குழந்தையும் பிறக்கிறது

காலையில் செட்டியார் பானையை எடுத்து பார்க்க அவருக்கு அதிர்ச்சி...குழந்தையைப் பார்க்க வந்த கூட்டத்தில் ஒருத்தி கத்துவது இவருக்கு கேட்கிறது.."பையனுக்கு மூளிக்காது..அதிர்ஷ்டகாரனா இருப்பான்.."

அவன் தான் இவருக்கு வில்லன்.அவனுக்கு சுமைக்கூலி மிச்சம்.இவருக்கு மிச்சம் - அறுந்த காது தான்.

டிஸ்கி :

உண்மையாக எழுத நினைத்த கதை விரைவில்...படிங்க,பின்னூட்டம் போடுங்க,ஓட்டு போடுங்க..இல்ல உங்க கனவுல இரண்டாவது கதையின் வில்லன் வந்து வில்லங்கம் செய்வான்..

மராத்திய மண்ணில் முதல் முறையாக தேர்வாகி இருக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சொத்து - 1536 ரூபாய், பதினைந்து கிராம் தங்கம்.அடுத்த ஐந்து வருடத்தில் அவர் மூளிக்காதன் ஆவாரா இல்லை நம்மை ஆக்குவாரா..பொறுத்திருந்து பார்ப்போம்..

Tuesday, November 10, 2009

மது கோடா(லிக் காம்பு)

மது கோடா - நிறைய பெருமைகளுக்கு சொந்தகாரர்..அதில் சில..

1. தன்னுடைய 35ம் வயதிலேயே(அதாவது சின்ன வயதில்) ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டவர்.இப்படி சொல்வதை விட ஏற்பாடு செய்து கொண்டவர்.

2. இந்திய வரலாற்றில் மூன்றாவது முறையாக ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனவர்.அதற்கு முன் இப்படி ஆட்சி பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள் ஒரிசாவில் - பிஸ்வ நாத் தாஸ்(1971),மேகலாயாவில் - எஸ்.எஃப்.கொங்கலாம் (2002).

இப்படி இந்த வெற்றியை பெற அவர் வந்த வழியை பார்ப்போம்..

மது கோடா அரசியல் பாடம் கற்றுக் கொண்டு தீவிரமான களப்பணி ஆற்றியது - ஜார்கண்ட் மா நில மாணவர்கள் சங்கத்தில்.பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2000ம் ஆண்டில் ஜகனாத்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.அப்போதைய முதல்வர் - பாபுலால் முராண்டி.மது கோடா பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

2005ம் ஆண்டு அவருக்கு கட்சி தொகுதி ஒதுக்கவில்லை.திரும்ப அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.அர்ஜூன் முண்டாவின் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க இவருக்கு கிடைத்தது - சுரங்கம் மற்றும் மண்ணியல் துறை அமைச்சர்.

2006ம் ஆண்டு அர்ஜூன் முண்டாவிடம் வேலையை காட்ட,பல கட்சி ஆதரவுடன் அண்ணாத்தே காலியாக இருந்த முதல்வர் நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டார்.

ஆட்சியில் இருந்தது இரண்டு வருடம்,திரும்பவும் இவர் பாணியிலே இவரை கவிழ்த்து சிபு சோரன்(இந்த அண்ணன் கதை தனி) ஆட்சியில் அமர்ந்தார்.

இருந்த இரண்டு வருடத்தில் மது சுருட்டியது - 4000 கோடி.(ஜார்கண்டின் பட்ஜெட் பணத்தில் இது ஐந்தில் ஒரு பங்கு).

சேர்த்த சொத்து விபரங்கள் :

மும்பையில் - விடுதிகள் மற்றும் மூன்று நிறுவனங்கள்.

கொல்கத்தாவில் - சொத்து (அசையுமா அசையாதா)

தாய்லாந்தில் - விடுதி (சாண்ட்விச் விடுதியா..)

லிபெரியாவில் - நிலக்கரி சுரங்கம்.

இதெல்லாம் தெரிந்தது,தெரியாதது மது கோடாவுக்கு தான் வெளிச்சம்.

உகாண்டா மற்றும் இன்னும் சில ஆப்பிரிக்காவின் இருண்ட தேசங்களில் சர்வாதிகாரியாக இருப்பவர்கள் - சுருட்ட பத்து வருடங்கள் எடுத்து கொள்வார்களாம் - 600 கோடி சேர்ந்த உடன் வேறு நாடுகளுக்கு ஓடி விடுவார்களாம்.வருடத்திற்கு ஆறுபது கோடி.

ஆனால் இந்தியாவில் மது கோடா சுருட்டியது வருடத்திற்கு - ரெண்டாயிரம் கோடி.

சுவிஸ் வங்கியில் இருந்து கறுப்பு பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கத்தும் கூட்டத்தில் கூட அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இருப்பார்கள்.

மது கோடாவின் துதி பாடிய பத்திரிகைகள் இன்று எப்படி எழுதுகிறது தெரியுமா..

மது கோடாவுக்கு பாலிவுட் நடிகைகளுடன் தொடர்பு.அவர் சின்ன வயதிலே பெண் மோகம் பிடித்தவர்.இப்படி எழுத வெட்கமாக இல்லை.அந்த ஆள் திரும்ப ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் துதி பாடுவார்கள்.ஊழல் வழக்கு எல்லாம் பெட்டி செய்தியில் உறங்கும்.பேனா முனையை வைத்து உங்கள் முதுகில் எப்போதாவது சொறிந்து கொள்ளுங்கள்.பேனா கூர்மையாக இருக்கும்.

அவர் திரும்ப முதல்வர் பதவிக்கு போட்டி போட்டால் எழுதுங்கள் - அவர் பெண் மோகம் பிடித்தவர்(சின்ன வயதை விட்டு விட்டேனே..)

நான் முதலில் படித்த கல்லூரியில் ஆண்டுதோறும் தேர்தல் நடக்கும்.தேர்தலில் போட்டி போடுபவர்களுக்கு ஸ்பான்சர் தருவார்கள்.அப்படி கிடைத்த பணத்தில் ஒருவன் கார் வாங்கி விட்டான்.(விலை ஏழு லட்சம்..).அடுத்த தேர்தலில் இருந்து கண்ணில் எண்ணெய் விட்டு பார்க்க ஆரம்பித்தார்கள். சாதாரண கல்லூரி தேர்தலில் இவ்வளவு பணம் கிடைத்தால் மற்ற இடங்களில் எப்படி இருக்கும்.

மது கோடாவை விட மோசமானவர்கள் "நான் வந்தால் குடிசையே இருக்காது.." என்று குடிசை வசிக்கும் குழந்தைகளைக் கட்டிப் பிடித்து பாட்டு பாடுபவர்கள். இந்த வரிசையில் கல்யாண மண்டபத்துக்கு பிரச்சனை வந்தால் மட்டும் போராடுபவர்களும் உண்டு.

டிஸ்கி :

மது கோடாவுக்கு நெஞ்சு வலியாம்..அய்யோ பாவம்..இன்னும் படித்துறையில் பாவாடை திருடிய வழக்கை எல்லாம் போடுங்கள்.எண்ணிக்கை தானே..இருந்து விட்டு போகட்டும்..

என்ன ஜார்கண்டில் இருந்து லாரி வருகிறதா ?

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மது கோடா வாழ்க..

Monday, November 9, 2009

சிரிக்கும் புத்தர்,பச்சை ரத்தம் - ஒரு விளக்கம்

முதலில் நான் எழுதும் கோபம் மட்டும் தான் இருந்தது.ஈரோடு கதிர் அண்ணாவிடம் காண்பித்த உடன் அவர் மாற்றி கொடுத்தார்.பிறகு தான் அதில் உணர்ச்சியும்,கோபமும் சரிவிகிதத்தில் தெரிந்தது.இப்படி இருந்த கவிதை மாதிரி

வாயில் பச்சை ரத்தம் வழிந்ததாக
அடிக்கும் கோழையைப் பார்த்து
சத்தமாக சிரிக்கிறேன்
அதிகம் வழிவதாக வாயில் துணி
அதுவும் நான் அணிந்ததையே கிழித்து
கண்களால் பேசினேன்
அதையும் கட்டி விட்டாய்
அதிலும் ரத்தம் வழிந்திருக்கும் என
ஊகித்து கொண்டேன்
நவ துவாரங்களிலும் வழிவதை பார்க்க
ஆடைகள் களைந்தாயோ
பெட்டை மாதிரி பின்னால் இருந்து
சுடும் முன்னாவது கேட்டிருக்கலாம்
ரத்தம் வழிந்த காரணம் சொல்லியிருப்பேனே.
அது உன் அப்பன்
ஊற்றிய புத்தரின் அபிஷேக ரத்தம்
இப்பொழுது தெரிந்திருக்குமே
காரணம் தமிழகத்தில் இருந்து
வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கண்ணிலும்,வாயிலும் வழிந்து இருக்குமே.

அவர் மாற்றிய பிறகு ஒரு முன் மாதிரி கவிதையாக மாறியது..

அடிக்கும் கோழையைப் பார்த்து
சத்தமாக சிரிக்கிறேன்

அதிகம் வழிவதாக வாயில் துணி
அதுவும் நான் அணிந்ததையே கிழித்து

பேசிய கண்களையும் கட்டினான்
அதில் ரத்தம் வழியாமலா இருந்திருக்கும்

ஆடைகள் களைந்தானே
நவ துவாரங்களிலும் வழிவதை பார்க்கவா

கோழையாய்...
பின்னால் சுடும் முன்னே கேட்டிருக்கலாமே
வழிந்த ரத்தம் உன் அப்பன் ஊற்றிய
புத்தரின் அபிஷேக ரத்தமென சொல்லியிருப்பேனே.

தமிழகத்தில் இருந்து வந்த பத்துப்பேரின்
கண்ணிலும், வாயிலும் வழிந்து இருக்குமே எச்சிலாக!.

இப்படியே மாற்றாமல் இருந்திருக்கலாம்..அதான் உடனே என் மேதாவித்தனம் முன்னால் குதிக்குமே..

அவர் தந்த தலைப்பையே முதல் வரியாக வைத்து இறுதியில் பச்சை ரத்தம் எண்டு சேர்த்து கொண்டேன்.

கடைசியாக வந்த கவிதை வடிவத்தை இங்கு பார்க்கலாம்..நான் வழ்க்கமா போடும் மொக்கையில் கதிர் அண்ணாவின் உழைப்பும் காணாமல் போனது தான் வருத்தம்.

துவையல் - சினிமா ஸ்பெஷல்

நான் சும்மா இருந்தாலும் இந்த பேராண்மை படம் என்னை விடாமல் துரத்துகிறது.ஒரே ஒரு விமர்சனம் எழுதியதற்கே இரும்புத்திரையைக் கீறி ஈயம், பித்தளைக்குப் போட்டு பேரீச்சம்பழம் வாங்க பார்த்தார்கள்.நல்ல வேளை போன வருடம் வலைப்பூ ஆரம்பிக்கவில்லை(இருப்பதே தெரியாது அது வேறு விஷயம்..சுப்ரமணியபுரம் படத்தையும் நான் அப்படிதான் ஏதாவது எழுதியிருப்பேன்..).நேற்று ஜெயாவில் ஜன நாதன் பேட்டி..மக்களின் வாழ்வியலோடு படம் எடுப்பது தான் என்று சொன்னார்.பேராண்மையில் எங்கே இருந்தது மலைவாழ் மக்களின் வாழ்வியல்..ஜெயம் ரவி அந்த மக்களோடு ஒட்டவேயில்லை.அணியும் ஆடை முதல் ஆங்கிலம் வரை அவர்களுக்கு ஆச்சரியம்.(அந்த பெண்களுக்கு ஆச்சர்யம் தான்..).எல்லாம் தெரிந்த மேதாவியாக தெரிந்தாலும் காட்டில் தனியாக அகப்படும் பொன்வண்ணனை கொல்ல தெரியவில்லையே.(இப்படி ஜாதியை வைத்து கீழ்தரமாக பேசும் ஒருவன் விருது வாங்கினால் அது முதலாளித்துவம்..அதுவே இப்படி கமல் படத்தில் காட்டி இருந்தால் இசம் ரசமாக மாறியிருக்கும்..)

*******************

கண்டேன் காதலை - தமன்னா தேனி பெண்ணாமே அடக்கடவுளே கடவுளே..சென்னையில் வசிக்கும் சேட்டு குடும்பம் என்று காட்டியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.சன் தயவு செய்து இது மாதிரி படங்களை விளம்பரம் செய்து கொடுமை படுத்தாதீர்கள்.இந்தியில் படத்தில் காதலனை பிரிந்து ஷாகித் கபூரை திருமணம் செய்வார்.அந்த சமயத்தில் நிஜத்தில் ஷாகித்தைப் பிரிந்து சயீப் அலி கானுடன் சேர்ந்து இருந்தார்.இது தான் படம் வெற்றிக்கு ஒரு பெரிய காரணம்.தமிழில் படம் முன்னா மற்றும் சந்தானத்தின் ஒட்டுமீசை போல் உள்ளது.தேனியில் படம் எடுத்தால் மட்டும் போதாது மீசையும் வளர்க்க வேண்டும்.

சந்தானம் என்னதான் சவுண்ட் விட்டாலும் கவுண்டமணியின் இடத்தை நெருங்க கூட முடியாது."டா" போட்டு பார்ப்பவர்களை எல்லாம் அழைத்து விட்டால் அது நகைச்சுவை ஆகி விடுமா.கவுண்டமணி ஆரம்பத்தில் யாரையும் மரியாதை குறைவாக பேச மாட்டார்.(செந்திலை தவிர..).போக போக தோணி மாறும்.லொள்ளு சபாவில் தான் சந்தானம் கலக்கினார்..சினிமாவில் இன்னும் இல்லை..

இறுதியில் காதலிப்பவனை விட்டு விட்டு ஹீரோ பரத்துடன் சேர்ந்து இருந்ததை மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.பரத் முன்னா கேரக்டரில் நாயகனாக இருந்தால் படம் பப்படமாக இருந்திருக்கும்.உதாரணம் - இயற்கை,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது,அதே நேரம் அதே இடம், ஷாஜகான் எப்படி ஆனது என்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசிக்கட்டும்.ஆக மொத்தம் எனக்கு தெரிந்த ஒரே ஒரு உள்குத்து பெண்கள் எல்லாம் புத்திசாலிகள்(அவர்கள் மொழியில் ஆண்கள் மொழியில் அது வேறு..).

இது கனடாவில் உள்ள நண்பன் சொன்னது - அவளுக்கு காதலிக்கும் போது தெரியாத அப்பா,அம்மா,ஆட்டுக்குட்டி கல்யாணத்துக்கு அமெரிக்காவில்(இப்ப எல்லாம் தொழிலதிபராம் - குண்டூசி விக்கிறவன்,புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபரா ?) இருந்து ஒரு இளிச்சவாயன் வந்த பிறகு தான் தெரியுமாம்.இவன் வாழ்க்கையில் விளையாடியது அமெரிக்காவா இல்ல உள்ளூர் தொழிலதிபரா தெரியலையே - நானும் ஒரு தொழிலதிபர் ஆக முடிவு செய்துட்டேன்.

*******************

டான்ஸ் ஆட தெரியாமல் ஆடும் நபர்களைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பிடிக்கிறது.ரெயின்போ காலனியில் ரவிகிருஷ்ணா,அழகனில் மம்மூட்டி,சென்னை - 600028 இந்த படத்தில் சிவா.அது தான் இயல்பாக இருக்கிறது.ஐ லைக் யூ..லைக் யூ..யூ..

நடனம் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் இன்னொரு காட்சி - ரெயின்போ காலனி படத்தில் முதல் பாட்டு "நாம் வயதுக்கு வந்தோம்..".பாரில் நண்பர்கள் மட்டும் இடுப்பை ஆட்டுவார்கள்,அடுத்த ஷாட்டில் எல்லோரும் அது மாதிரி செய்வார்கள்.புதுப்பேட்டை படத்திலும் அது மாதிரி வரும் பார்த்து விட்டு கடுப்பாகி விட்டது.(முதல் முத்தம் தேதியோடு நினைவு இருக்கும்..அதே நபரின் அடுத்த முத்தம்..)

இன்னொரு ஷாட்..சிந்தனை செய் படத்தில் விபச்சார விடுதிக்கு செல்வார்கள்."நான் காக்கி நாடா கட்ட.." என்று ஒரு பாட்டு.பெண்கள் வட்டமாக நின்று ஆடிக் கொண்டிருப்பார்கள்..நாயகனின் நண்பன் அந்த வளையத்திற்குள் நுழைந்தவுடன் அந்த பெண்கள் நிறுத்தி விடுவார்கள்.அவன் மட்டும் ஆடுவான்..அவனை வெளியே துரத்தியவுடன்..மீண்டும் அந்த பெண்கள்..யாருப்பா அந்த நடன இயக்குனர்.

*******************

இந்த வார வம்பு..

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் போட்ட விதிமுறைக்கு வேட்டைகாரன் சங்கு ஊதி விட்டான் போல..பண்டிகை நாளில் தான் பெரிய நடிகர்களின் படம் வெளி வர வேண்டும் என்று ஒரு சட்டம்.டிசம்பர் 18 - எந்த பண்டிகையும் இல்லையா அல்லது விஜய் பெரிய நடிகர் இல்லையா..

உங்க கட்டுப்பாட்டில் இருந்து சினிமா உலகம் ரொம்ப நாள் முன்னாடியே இல்லாமல் போய் விட்டது.போய் டிக்கெட் விலையை குறைக்க ஏதாவது செய்தால் புண்ணியமா இருக்கும்.

*******************

இந்த வார சந்தேகம்

சாட்டில் வந்த நண்பர் கேட்டார்..இப்போ ஏன் விஜயை நக்கல் பண்ண மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க..என்ன காரணம்..

வேட்டைகாரன் வந்து வெற்றி அடைந்தால் தான் மறுபடியும் நக்கல்..அப்போ தான் எதிர்ப்பு நிறைய இருக்கும்..என்ன அப்படி ஒரு நிலைமை வராதா..

விஜய் வருங்காலத்தில் முதல்வர் ஆனால் (என்ன சிரிப்பு சின்னப் புள்ளத் தனமா..) நாம் முதல்வரையோ,முன்னாள் முதல்வரையோ கேலி செய்ய முடியுமா என்பது சந்தேகம் தான்..காரணம் லொள்ளு சபா திடீரென நிறுத்தப்பட்டது.முதல் வாரம் ஒளிப்பரப்பானது என்ன என்று பார்த்தால் அது பேக்கரி - போக்கரி படத்தை நக்கல் அடித்து இருந்தார்கள்.அது மாதிரி நான் இதுவரைக்கும் பார்த்தது கூட கிடையாது.என்னால் அது கிண்டல் செய்ய முடியாத சோகத்தில் நான் கிண்டல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி விட்டேன்.ராம் பாலாவுக்கு பலத்த அர்ச்சனை நடந்ததாம் - செய்தது உண்ணாவிரதத்தில் பிரியாணி கொடுத்தவர் தான்.அப்பவே இப்படி - அப்ப எதிர்காலத்தில் ஏதாவது அதிசயம் நடந்து விட்டால் - என்ன கொடுமை சரவணன் இது..

மிச்ச கச்சேரியை டிசம்பர் மாதத்தில் கேட்கலாம்..அதுல ஒரு மினி கொடுமை வேறு இருக்காம்..

*******************

Friday, November 6, 2009

சிரிக்கும் புத்தர்,பச்சை ரத்தம்

பச்சை ரத்தம் வழிந்ததாக

அடிக்கும் கோழையைப் பார்த்து
சத்தமாக சிரிக்கிறேன்

அதிகம் வழிவதாக வாயில் துணி
அதுவும் நான் அணிந்ததையே கிழித்து
பேசிய கண்களையும் கட்டினான்
அதில் ரத்தம் வழியாமலா இருந்திருக்கும்

ஆடைகள் களைந்தானே
நவ துவாரங்களிலும் வழிவதை பார்க்கவா
கோழையாய்...
பின்னால் சுடும் முன்னே கேட்டிருக்கலாமே
வழிந்த ரத்தம் உன் அப்பன் ஊற்றிய
புத்தரின் அபிஷேக ரத்தமென சொல்லியிருப்பேனே.

தமிழகத்தில் இருந்து வந்த பத்துப்பேரின்
கண்ணிலும், வாயிலும் வழிந்து இருக்குமே எச்சிலாக
பச்சை ரத்தம்

கனவு தொழிற்சாலை

"ஆனந்தா..இந்த உதவிகள் போதுமா..தேவை எதுவும் இருந்தால் கேள்..செய்ய காத்திருக்கிறேன்.."

"வேண்டாம் இளவரசே..தற்போது எதுவும் தேவையில்லை.."

"இளவரசர் என்பதேல்லாம் அரண்மனையில்..இங்கு அதுவும் உன் வீட்டில் நான் உன் நண்பன்.."

"சரி இளவரசே.."

"மறுபடியும் இளவரசா.."

இளவரசர் கையோடு கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரிக்க முயல..

"என்ன ஓலை..நல்ல செய்தி எதுவும் உண்டா இளவரசே.."

"நான் திருமணம் செய்ய போகும் பெண்ணின் படம் இருக்கிறது..அவள் அங்கத நாட்டின் இளவரசி குந்தவை.."

"பயிற்சி செய்து கை அழுக்காக இருக்கிறது..அங்கே வையுங்கள் பார்க்கிறேன்.."

"ஆனந்தா மறக்காமல் பார்..அவளை பற்றி உன் வாயால் கேட்க வேண்டும் போல உள்ளது.."

நான் இளவரசரை துரத்துவதிலே குறியாக இருந்தேன்.என் காதலி சேடிப்பெண் வரும் நேரம்.இளவரசரை அனுப்பி விட்டு அவளுக்காக காத்திருந்தேன்.அரை நாள் ஊடலையும் அரை நிமிடத்தில் கரைத்து விடுவதில் நிபுணி.வரும் போதே கொஞ்சம் பதற்றமாக இருந்தாள்.

"என்ன இவ்வளவு நேரம்.." ஆரம்பமே கோபம் தான்.

"நாம் இந்த ஊரை விட்டே சென்று விடலாம்..எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.."

"பிச்சி மாதிரி பேசாதே..நாம் எதுக்கு ஓட வேண்டும்..அதுவும் ஊரை விட்டு.."

"எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.."

"அதனால் என்ன நான் உன் வீட்டில் பேசுகிறேன் நாச்சியார்.."

"நான் யார் என்று தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள்.."

நான் அவளுடைய பதற்றதை ரசித்து கொண்டிருந்தேன்.மேல் மூச்சு வாங்கும் போது அவள் அழகாக தெரிந்தாள் அல்லது தெரிந்தது.

"நீங்கள் யார் இளவரசி..சொல்லுங்கள்.."

"நேரம் காலம் தெரியாமல் விளையாடாதீர்கள்..கந்தர்வ மணமாவது புரிந்து கொள்வோம்..புரிந்து கொள்ளுங்கள்.."

"மனங்கள் கலந்த பின் என்ன கந்தர்வ மணம் வேண்டி கிடக்கிறது..இனி ஏகாந்த வாழ்வு தான்.." என் கை அவள் மார்புக் கச்சையின் மூடிச்சில் இருந்தது.

"தற்போது இது வேண்டாம்.." அவள் குரல் எனக்கு தூரத்தில் ஒலிப்பது போல் இருந்தது.அவள் மூச்சின் வெப்பத்தால் எனக்கு வேர்வை வழிந்தது.

மார்புக்கச்சை முழுதாக என் கையில் வரவும் குடிலின் முன் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.வந்தது இளவரசர்.நாங்கள் இருந்த கோலமோ அலங்கோலம்.

"குந்தவை..என்ன செய்கிறாய் இங்கு..துரோகி ஓலையைப் பார்க்க கொடுத்தால் அவளையே முழுதாக ரசிக்கிறாயா.."

"இளவரசே இது நாச்சியார்.."

"ஆம் குந்தவை நாச்சியார்..அங்கத நாட்டின் இளவரசி.." என்று இளவரசர் பேசுவது எனக்கு உறுமுவது போல் இருந்தது.

"இளவரசே..நான் சொல்வதை தயவு செய்து.."

"நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் தொரோகி..என் முகத்தில் இனி இருவரும் விழிக்க வேண்டாம்.." என்று தெற்கு நோக்கி ஓட ஆரம்பித்தார் இளவரசர்.

"இளவரசே..அங்கு போகாதீர்கள்..அங்கு பள்ளம் இருக்கிறது.." என்று சொல்லிக் கொண்டே அவரை நோக்கி ஓடவும்..அவர் பள்ளத்தில் விழவும் சரியாக இருந்தது.

பின்னால் வந்த காவலாளிகள் நிலைமையை ஒருவாராக ஊகித்து மன்னரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் சாராம்சம் இதுதான் - "நான் இளவரசி குந்தவை நாச்சியாரை கெடுக்க முயன்றதாகவும்..தடுக்க வந்த இளவரசரை பள்ளத்தில் தள்ளி கொலை செய்த்தாகவும்..அதனால் எனக்கு தண்டனை சிரச்சேதம்.."

சாட்சி - குந்தவை நாச்சியார்.

எனக்கு தண்டனை தர கத்தியோடு கொலையாளிகள் வர..அலறி கொண்டே விழித்து விட்டேன்.தலையைத் தொட்டு பார்த்து கொண்டேன்.பயங்கர காய்ச்சல்.வாந்தி வருவது போல் உணர்வு.ஆனால் வரவில்லை.இதுவரை எடுத்த மாதிரி நினைவும் இல்லை.

ஆபிஸ் மீட்டிங்க்.போய் தான் தீர வேண்டும்.அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி மனமும்,உடலும் சோர்ந்து கிடந்தது.

பக்கத்தில் இருந்த அந்த பெண் பேசுவது எங்கோ தூரத்தில் கேட்பது மாதிரி இருந்தது.

அவளை பார்க்க முயற்சி செய்தேன்.முடியவில்லை.கிளிவேஜ் வழியாக வெள்ளையாக ஏதோ தெரிந்தது.

"குந்தவை..ஆடையை சரியாக அணிந்து கொள்.." என்று உளரத் தொடங்கினேன்.

"ஐம் வீணா..ஹூ இஸ் குந்தவை..அரவிந்த் ஆர் யூ ஒ.கே.." என்னை தொட்டு பார்த்து விட்டு அதிர்ந்து போனாள்.

ஆபிஸ் காரில் ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு போனார்கள்.

அங்கு இருந்து நடக்க முயற்சித்தேன்.

"அரவிந்த்..எப்படிடா இருக்க.." என்று ஒரு குரல் கேட்டது.

"நீங்க..யாலு.." குரல் கம்ம தொடங்கியது.

"நான் வினோத்..பத்து வருசம் முன்னாடி ரெண்டு பேரும் ஒண்ணா பத்தாவது படிச்சோமே..நீ கூட பிட் கொடுத்தியே.."

"வினோத்..வீடு தெரியும் இல்ல வா பேசலாம்..உடம்புக்கு முடியவில்லை.." சொல்லி விட்டு அவனை விட்டு விலகி நடந்தேன்.

அவன் ஏமாற்றமாக எதையும் கவனிக்காமல் நடப்பது தெரிந்தது.அவனை நோக்கி ஒரு லாரி..

"இளவரசே..போக வேண்டாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.." மயங்கி விழுந்து விட்டேன்.

பின் குறிப்பு :

வினோத் தான் என்னை வீட்டில் சேர்த்தது.நல்ல வேளை அவன் சாகவில்லை.குந்தவையும் இல்லை,காய்ச்சலும் இல்லை.அந்த சம்பவத்தால் அடுமை நண்பன் வினோத்தும் இல்லை.யோசித்து பார்த்தால் அவன் எனக்கு ஏதோ ஒரு கட்டத்தில் பண உதவி செய்து இருக்கிறான்.

டிஸ்கி :

கனவில் கூட இந்த பொண்ணுங்க இப்படி தானா..குத்துங்க எசமான் குத்துங்க..நான் சொன்னது தமிலிஷ் தமிழ்மணம் ஓட்டு குத்த சொன்னேன்..

Thursday, November 5, 2009

ஜாதி கேடயம் - சர்வேஷன் 500 நச்னு ஒரு கதை 2009

"அந்த பட்டியலில் எம் பேரு இருக்கா..கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்.." இப்படி பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடன் இருந்து வந்த தொலைபேசி தான் காவல்துறையை கவலை கொள்ள செய்தது.

"இவங்க பயப்படுவதைப் பாத்தா இவங்களும் இருக்குமோ.." என்று காவல் துறையின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை ஒரே பேச்சாக இருந்தது.

விஷயம் ஒன்றும் இல்லை.போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான பெண் ஒரு பிரபல விளையாட்டு வீராங்கனை.ஏற்கனவே இதே வழக்கிற்காக சில ஆண்டுகள் முன் கைது செய்யப் பட்டவர் தான்.இந்த முறை பரபர என்று விஷயம் தீயாய் பரவியதற்கு ஒரு காரணம் வாக்குமூலத்தில் இன்னும் சில வீராங்கனைகளின் பேரை சொன்னதாகவும்,முடிந்தால் அவர்களையும் பிடியுங்கள் என்று சவால் விட்டதாகவும் ஒரு புலனாய்வு பத்திரிகை செய்தி வெளியிட்டதே காரணம்.

வழக்கம் போல கிசுகிசு பாணியில் இல்லாமல் இந்த முறை பெயர் மற்றும் படத்தோடு செய்தி வந்தது எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சி தான்.படித்த பொதுமக்களுக்கும் அதிர்ச்சி இவர்களும் உண்டா என்று.

உடனே தடகள சங்கம் கூட்டப்பட்டது ஆள் ஆளுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.சிலர் பல படிகள் முன்னேறி ஆபாஷமாக அர்ச்சனை செய்தார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு ராசிபலன் உச்சம் தான். சூரியன் மாதிரி தகித்தது.தொட்டதெல்லாம் பொன்.பழைய பகைய சரியா தீர்த்துகிட்டாரு.."குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி தந்தா என்ன வேணாலும் எழுதுவீங்களா..".இதுதான் இவர் கேட்ட கேள்வியிலே உச்சம்.

இவருக்கு அடுத்து பேச வந்தவர் விவேகமா ஓடுவார்.அவர் சில சமயம் பொறிவாரு..இல்ல சில சமயம் அவரை பொறிப்பாங்க.இந்த தடவை அவர் முறை.பொறிந்து தள்ளிட்டாரு.அவர் பேசின சாராம்சம் இதுதான்.

"ஓடுற நாங்க எல்லாம் போதைப் பொருள் எடுத்தோமோ..நீ உன்னோட அக்கா தங்கச்சி படத்த கொடு..நான் மார்பிங்கு செஞ்சு அவங்க போதையிலே தள்ளாடுற மாதிரி நான் மாத்துறேன்.."

அப்புறம் புலனாய்வு பத்திரிக்கை ஆசிரியர் கைது.பத்திரிகையாளர்கள் போராட்டம்.பிறகு அவர் விடுதலை எல்லாம் நடந்தது.

சூரியன் மாதிரி ஓடுனவரு மன்னிப்பு கடிதம் குடுத்தாரு.விவேகமா ஓடுனவரு வைரமா ஊக்கம் தர்றவர் மூலமா சமரசம் செய்ய பார்த்தாரு.

அப்புறம் இவங்க ரெண்டு பேரும் ஒரு ஓட்ட பந்தய விழாவுல பார்த்து பேசிகிட்டாங்க..

"என்ன தம்பி..நீ பேசுன தைரியத்துல தான் நானும் அப்படி பேசினேன்..நீ இப்படி மன்னிப்பு கடிதம் குடுப்பேன்னு தெரிஞ்சு இருந்தா நான் பொங்கி இருக்கவே மாட்டேன்.."

"அட சும்மா இருண்ணா..பண்டிகை சமயத்துல எனக்கு மராத்தான்..என் ஸ்பான்ஷர் வெயிட் தான்..இருந்தாலும் ஒண்ணு கிடக ஒண்ணு எழுதிட்டா அப்புறம் என் ஸ்பான்ஷர்ல குறைவாங்க.."

"என்ன இருந்தாலும் நீ இப்படி பண்ணியிருக்க கூடாது.."

"அட போண்ணா..நம்ம சூப்பர் நட்சத்திரமா ஓடுவாரே அவரே சிக்கல் வந்தா கடிதம் குடுத்தார்.நானெல்லாம் தம்மாத்துண்டு பையன் நான் குடுத்தா என்ன..நீ மட்டும் ஒழுங்கா ஜாதி இல்ல ஜாதி இல்லனு சொல்வ..உனக்கு சிக்கல் வந்தவுடனே ஜாதி மீட்டிங்கு போய் புலம்பல.." இந்த ரீதியில சூரியன் சுட

"தம்பி..ஜாதிங்கறது தீப்பந்தம் மாதிரி..யாராவது தேனீ மாதிரி நம்மள கொட்ட வந்தா உடனே அத எடுத்து அவங்க மேல எறிஞ்சிடனும்..அவங்க பயப்படுவாங்க..நாம தப்பிர் விடலாம்.." விவேகம் விவரமா பேச..

"இப்போ எதுக்கு இந்த போர்வை,தீப்பந்தம் எல்லாம் எதுக்கு..நீ தான் அவங்க தயவு தேவை இல்லனு மேடையில சவுண்ட் விட்டியே.."

"ஜாதி தீப்பந்தம் மட்டும் நான் பிடிக்காம இருந்திருந்தா இந்த நேரம் நான் காசு குடுத்து சேர்த்து கிட்ட பத்மா ஸ்ரீய என்ன விட்டு பிரிச்சி இருப்பாங்க.."

10 பிடித்த,பிடிக்காத பதிவர்கள்

அகல்விளக்கு - இவருக்கு என் மேல என்ன கோபமோ தெரியல..அவருக்கு கிடைத்ததை விட எனக்கு அதிகமாக கிடைக்கட்டும் அப்படி இதுல என்னை கோர்த்து விட்டு இருக்கார்.ஏன்யா பேராண்மை கோபம் இன்னுமா தீரல..வேணாம் வலிக்குது..நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே இருக்குறது..இருந்தாலும் இந்த தொடர்பதிவு மோகம் என்னை விட்டு இன்னும் போகவில்லை..அதனால என்ன நடந்தாலும் சிங்கிளாக களத்தில் இறங்க முடிவு செய்து விட்டேன்..(ஒரு தடவை நான் முடிவெடுத்துட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்..அட ச்சீ பயத்துல இந்த வசனத்தைப் பேசிட்டேனே..நல்ல வேளை யாரும் கவனிக்கலை..)

முன் டிஸ்கி : எனக்கு பிடிக்காதங்க இந்த உலகத்திலே இல்ல..அட ஒரு சேப்டிக்கு தான்..(என்ன சேப்டி பின்னால் பின்னால குத்துவாங்களா) அதனால கொஞ்சம் பிடித்தவர்.

இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து நபர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் - முதல்வர் தான்..(அது பாரம்பரியமா வருவது..இவர் சாகுற வரைக்கும் இவருக்கு தான் ஓட்டு இப்படி எந்த நேரத்தில் சொன்னேனோ தெரியல..எங்க குடும்பத்துக்கே ஓட்டு இல்லாம செஞ்சுட்டாங்க..)

கொஞ்சம் பிடித்தவர் - ஜெயலலிதா..(கொஞ்சமா இவரோட ஆளுமை பிடிக்கும்..கிடா வெட்ட கூடாது இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்துட்டு தேர்தல் சமயத்துல அடிச்ச பல்டியில நான் அமுங்கி போயிட்டேன்)

நடிகர்

பிடித்தவர் - விக்ரம் (அவரோட உழைப்பு,கடின முயற்சி,கால் உடைந்த நிலையிலும் ஐந்து வருட போராட்டம்)

கொஞ்சம் பிடித்தவர் - வி..(இவரோட டான்ஸ்,பைட் எல்லாம் எனக்கு பிடிக்கும்..ஆனா ஒரே மாதிரி நடிச்சி எதுக்கு இப்படி பாடு படுத்தனும்..இப்படி நான் நடிகர் விஜய் பத்தி சொன்னேன்னு யாரும் நினைத்தால் நான் காரணம் அல்ல அது விவேக் அப்ப டான்ஸ் - 12 பி பைட் - ஆதி)

இயக்குனர்

பிடித்தவர் - பாலு மகேந்திரா(பாலா மாதிரி தரமான இயக்குனர்களை உருவாக்கி தந்ததால்..)

கொஞ்சம் பிடித்தவர் - விஜய டி.ராஜேந்தர்(இன்னும் நான் யூத்து..டெலிபோன் பூத்து அப்படி சொல்லிகிட்டு..நான் ரஜினி,கமலை விட சின்னப் பையன்,சினைப் ப.. அப்படி உளறிகிட்டு..நாலு வருஷம் கஷ்டப்பட்டு வீராசாமி என்ற காவியம் உருவாக்கி..அவ்வ்வ்வ்வ்வ்வ்..முடியல..லிஸ்ட் இன்னும் இருக்கு...)

கவிஞர்

பிடித்தவர் - வாலி (எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இளமையாகவே சிந்திப்பதால்..)

கொஞ்சம் பிடித்தவர் - பேரரசு(அரைச்ச மாவ அரைப்போமா..இப்படி பாட்டு எழுதி அவரை பத்தின உண்மையை அவரே உளறியதால்..)

தொழிலதிபர்

பிடித்தவர் - இயக்குனர் ஷங்கர்(150 கோடியில் அடுத்தவங்க காசில் படம் எடுத்தாலும்..அவர் தயாரிக்கும் போது நாலு கோடியை தாண்டினாலே பெருசு..)

கொஞ்சம் பிடித்தவர் - விகடன் டாக்கீஸ்(நூறு தடவை கதை கேட்டு வால்மீகி போன்ற மொக்கை படம் தயாரிப்பதால்..பசங்க படத்தின் கதை இவர்களுக்கு பிடிக்கவில்லையாம்..)

நடிகை

பிடித்தவர் - நதியா(கவர்ச்சி என்ற அஸ்திரத்திற்கு அடிபணியாத காரணம் ஒன்றே போதுமே..)

கொஞ்சம் பிடித்தவர் - சுகாஷினி(அவருக்கு தெரிந்தவர் என்பதால் விமர்சனம் செய்யும் போது கந்தசாமி படத்தை தடவி கொடுத்து விமர்சித்தது.. இராவண் படத்தை இவர் எப்படி விமர்சனம் செய்வார் என்று பார்க்க ஆசை..)

இசையமைப்பாளர்

பிடித்தவர் - இளையராஜா..(நான் அவருக்கு பெரிய விசிறியாக்கும்..)

கொஞ்சம் பிடித்தவர் - பேரரசு(திருத்தணி படத்துக்கு இவர் தான் இசை..பூமாதேவி வாயை திறக்க போறா..எல்லோரும் உள்ளே போக வேண்டியது தான்..காசு குடுத்து டியூன் வாங்கி நம்ம பெயர்ல போடக் கூடாது..)

எழுத்தாளர்

பிடித்தவர் - சாரு நிவேதிதா(காலத்திற்கு ஏற்ப மாறுவது..இது இல்லாமல் போனதால் தான் இந்த இடத்தில் பாலகுமாரன் பெயர் வரவில்லை..)

கொஞ்சம் பிடித்தவர் - பட்டு கோட்டை பிரபாகர்(காலத்திற்கு ஏற்ப எழுதுகிறேன் என்று சொல்லி படிக்கும் என் உயிரை வாங்குவது)

விளையாட்டு

பிடித்தவர் - கிரிக்கெட்(சச்சின் விமர்சனம் செய்பவர்கள் வாயை விளையாடி அடைக்கும் போது எனக்கும் அது வெறி வரும் மேட்ச் முடிந்தவுடன் மறந்து விடும்,ஆண்டி கேடிக் பந்தை உலக கோப்பை 2003ல் சிக்ஸ் அடித்தது, போட்டிக்கு முன் அவர் சச்சினை விமர்சனம் செய்தவர்..அடிக்கடி விமர்சனம் செய்ங்க..)

கொஞ்சம் பிடித்தவர் - பீச் வாலிபால்(அந்த நேரத்தில் சேனல் மாத்த முடிவதில்லை,இந்த விளையாட்டு தமிழ் நாட்டில் விளையாடினார்கள்)

பதிவர்

பிடித்தவர் - அவர் எழுதிய பதிவு பிடித்து இருந்தால் அவரையும் பிடிக்கும்..(அதுக்காக பிடிக்காத பதிவு என்றால் அவரை பிடிக்காது என்று அர்த்தம் அல்ல..)

கொஞ்சம் பிடித்தவர் - இரும்புத்திரை அரவிந்த்..(அடப்பாவி இப்படி கூசாமல் பொய் சொல்வதால்..தப்பிக்க வேற வழி தெரியல..விதிமுறையில் பிரபலம் என்று இருந்ததால்..நான் பிராபளம் என்பதால்..)

நான் அழைப்பு விடுத்தவர்கள் :-

1. நையாண்டி நைனா

2. வெண்ணிற இரவுகள் கார்த்திக்

3. ஜார்ஜ் புஷ் (யோவ் சும்மா தானே இருக்கீங்க..எழுதுங்க..)

4. ஜாக்கிஜான் (அழைப்பவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று விதிமுறையில் இல்லை..)

5. எமதர்மன்(நேர்மையாக நீதி வழங்குகிறாரா..இல்லை பிடித்தவர்கள்,பிடிக்காதவர்கள் என்று பாரபட்சம் காட்டுகிறாரா என்று பார்க்க வேண்டும்..)

டிஸ்கி :

யாரும் அடிக்க சட்டையை பிடிக்க வேண்டாம்..அது ஏற்கனவே தேவையான அளவு கசங்கி தான் இருக்கிறது. வாங்க நண்பர்களே!!!!!

Wednesday, November 4, 2009

மேலாண்மை கும்மாங்குத்து பாடங்கள்

பாடம் 1 :

ஒரு காக்காவுக்கு வேலையே இல்லையாம்.நாள் முழுக்க மரத்து மேல சும்மாவே இருக்குமாம்.அது மாதிரி சும்மா இருக்க ஆசை பட்ட முயலும் "நானும் சும்மா இருக்கலாமா.." இப்படி காக்காவ பாத்து கேட்டு இருக்கு.காக்காவும் சரி உன் இஷ்டம் அந்த அர்த்தம் வருமாறு தலைய ஆட்ட முயலும் மரத்துக்கு கீழ சும்மா இருக்க ஆரம்பிக்கவும்,ஒரு நரி வந்து அது மேல பாயவும் சரியா இருந்து இருக்கு.

அப்புறம் என்ன முயல் சுவாகா..நரி ஏப்பம் விட்டுட்டு இடத்தைக் காலி பண்ணிருச்சி..

நீதி - சும்மா சுகமா உக்கார ஆசை இருந்தா நாம உச்சியில இருக்கனும்..அப்ப தான் முடியும்..

உள்குத்து - அப்ப நம்ம பாஸ் எல்லாம் சாதா காக்காவா இல்ல அண்டங்காக்காவா..தண்ணியக் குடி..தண்ணியக் குடி..

பாடம் 2 :

ஒரு வான் கோழியும் காளை மாடுகிட்ட பேசும் போது..அது ஆசைய சொல்லி இருக்கு.அதோட ஆசை பெருசா ஒண்ணும் இல்ல..அதால பறக்க முடியல.எல்லா பறவை மாதிரி அதுவும் பறந்து மரத்து உச்சியில அதுக்கும் உக்கார ஆசை.ஆனா அதுக்கு உடம்புல சக்தி இல்ல.

உடனே அந்த மாடு சொல்லியிருக்கு.."நான் சாணத்தை சாப்பிடு..நீ மேல பறக்கலாம்..காரணம் அதுல சத்து இருக்கு.."

உடனே அத நம்பி வான் கோழியும்(பேர பாரு..) சாணத்தைச் சாப்பிட்டு விட்டு முயற்சி பண்ண,முதல் கிளை வரை பறக்க முடிஞ்சது.அடுத்த நாள் இன்னும் கொஞ்சம் அதிகமா சாப்பிட..இரண்டாவது கிளை.

அடுத்த நாள் முழுசா சாப்பிட உச்சி கிளைக்கு போக முடிஞ்சது..உருவம் கொஞ்சம் பெருசு..அங்க வந்த விவசாயி கண்ல இது பட..இதோட கொழுத்த கறி அவன் கண்ணை உறுத்த..உடனே தூப்பாக்கி எடுத்து சுட்டு கொஞ்சம் கூட பாக்கி வைக்காம சுக்கா பண்ணி ரொட்டிக்கு தொட்டு சாப்பிட்டு விட்டான்.

நீதி - மாட்டு சாணம் வேணா மேல போக உதவும்..ஆனா உயரத்துல வைச்சி இருக்காது..

உள்குத்து - சாணம் மட்டும் சாப்பிடாம கொஞ்சம் புண்ணாக்கையும் சேத்து அடிக்கணும்..

பாடம் 3 :

கடவுள் மனித உடலை படைத்த உடன் எல்லா உறுப்புகளுக்கும் அந்த உடம்புக்கு தலைவனாக இருக்க ஆசை.ஒண்ணு ஒண்ணும் ஆளுக்கொரு காரணம் சொல்ல உடனே வேற என்ன சண்டை தான்.

மூளை - "நான் தான் எல்லாருக்கும் கட்டளை இடுறேன்..அதனால நான் தான் தல.."

கால் - "அந்த மூளைய எல்லா இடத்துக்கும் தூக்கிட்டு போற நாந்தான் இனிமே தல,,"

கை - "வேல செஞ்சு சம்பாதிக்கிற நாந்தான் தல.."

இப்படி இதயம்,வாய்,நுரையிரல்,கண்,பல்,நாக்கு எல்லாம் ஒரு காரணம் சொல்லியிருக்கு..

கடைசியா ஆசனவாய் வந்து நாந்தான் தல..நீங்க எல்லாம் தறுதல..இப்படி சொல்லவும் எல்லா உறுப்புகளும் வேற வழியா சிரிச்சியிருக்கு..

ஆசனவாய்க்கு கோபம் காலுக்கு கீழ(தலைக்கு மேலவுக்கு எதிர்பதம்) வந்து வேலை செய்யாம போராட்டம் பண்ண..கண் சொருக,கை,கால் நடுங்க..இதயம் உதற..மூளைக்கு ஜன்னி வந்திரிச்சி..

உடனே எல்லா உறுப்புகளும் சமாதானத்துக்கு வர,அது போராட்டத்தை வாபஸ் வாங்க..அப்புறம் என்ன பேஸ் பிரஸ்யாயிருச்சி..

மத்த உறுப்பு எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்ய..தல மட்டும் சுகமா உக்காந்து கழிவ வெளியேத்தி விடுது.

நீதி - தலைவனாக இருக்க மூளை வேண்டாம்..போராடும் ஆசனவாயாக இருந்தால் போதும்.

உள்குத்து - அதனால தான் உக்காரும் இடமா பாத்து ஆப்பு வைக்கிறாங்க..

பாடம் - 4 :

பற்வை குளிர்காலத்தில் இருந்து தப்பிக்க சூடாக இருக்கும் இடமாக தேடி பறக்க தொடங்கியிருக்கு.ஆனா குளிரை தாங்க முடியாமல் உறைந்து போய் பறக்க முடியாமல் அப்படியே மயங்கி ஒரு பெரிய வயல்வெளியில் விழுந்து இருக்கு.

அந்த வழியா போன பசு ஒண்ணு இது மேல சுட சுட சூடா சாணம் போட..அந்த சூடு இதமா பதமா இருந்து இருக்கு..மயக்கமும் தெளிய..உடனே குஷி மூட்ல வேறன்ன பாட்டு தான்.

"நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்..".அப்போ இருட்டு வேற..அதனால இந்த பறவை பாடுற சத்தம் துல்லியமா கேட்டு இருக்கு.அந்த வழியா வந்த பூனை இதோட சத்தத்தை வைத்தே கண்டுப்பிடித்து சாணிய தோண்டி பாக்க..அந்த பறவைக்கு ஒரு சோக பாட்ட டெடிகேட் பண்ணிட்டு..அத குளிப்பாட்டி காலையிலே சரியான சாப்பாடு தான்.

நீதி - நம்ம மேல சாணிய எறியும் எல்லோரும் நம் எதிரியும் இல்ல..நம்மை அந்த சாணியில இருந்து வெளியே எடுக்கும் எல்லோரும் நம் நண்பரும் அல்ல..

உள்குத்து - சாணத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது வாயை மூடிக் கொண்டிருப்பது சாலச் சிறந்தது..திறந்தா சாணி உள்ள போயிரும்..