Monday, October 5, 2009

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

சின்ன வயசுல ஊர்ல இருக்கிற அத்தனை பயப்புள்ளையும் கெட்ட வார்த்தைகள் பேசும் போது நான் மட்டும் விலகியே நிப்பேன்.ஆனா சென்னை வந்தப் பிறகு ஒரே மாசத்துல என்னை நானே மாத்திக்க வேண்டியதா போச்சு.சென்னை வந்தப் புதுசுல என்னைத் திட்டுன ஒருத்தன ஞாபகம் வரும் போதெல்லாம் போய் அடிச்சுட்டு வந்து இருக்கேன்.(கரகாட்டகாரன் கவுண்டமணி மாதிரி).இப்போ எந்த இடத்துக்குப் போனாலும் முதல்ல கெட்ட வார்த்தைகளைக் கேட்டு வைச்சுக்குறேன். (எம்.ஆர்.ராதா இப்படித்தான் பிரென்ச் கத்துக் கொண்டாராம்.)

பத்தாவது படிக்கும் போது பஸ்ல தொங்கிட்டு வரும் போது புதுசா வாங்கியிருக்கிற ஷூ ,செருப்பு எது போட்டு இருந்தாலும் அதுமேல நாலு பேர் மிதிச்சுட்டு போனாலும் வராத கோவம் இன்னைக்கு அழுக்கு ஷூவ ஒருத்தன் தெரியாம மிதிச்சாலும் வருது.

எதிர்பாராத விதமா ஏதாவது பிரச்சனை வரும் போது கீழே விழுந்து மிதிப்பட்டு உயிரை விடுறவங்க தான் அதிகம்.நானும் அந்த மாதிரி மாறிக்கிட்டு வர்ற மாதிரி எனக்கே தோணும் போதெல்லாம் அந்த கும்பகோணம் தீ விபத்தை நினைச்சி பார்க்குறேன்.(அண்ணன் தப்பி ஓடும் போதும் தங்கை ஞாபகம் வந்து திரும்ப போய் அவனும் இறந்து போய் விட்டான்).டிரெயின் ஏறும் போது யார் விழுந்தாலும் கவலைப் பட மாட்டாங்க.ரெண்டு மாசத்துக்கு முன்னால கீழே விழுந்த ஒரு பெரியவரைக் காப்பாத்தப் போய் நானும் ரெண்டு மிதி வாங்கினேன்.இன்னும் நாலு மிதி வாங்கி இருந்தா இனிமே உதவிக்கு போக மனசு வராதோ என்னமோ.

சும்மா வெட்டியா இருக்கும் போது தீபாவளிக்கு மூணு வாரத்துக்கு முன்னாடி தினி எடுக்கும் நான் இப்போ கொஞ்சமா சுமாரா சம்பாதிக்கும் போது தீபாவளி முடிஞ்சு மூணு நாள் ஆனப்பிறகு துணி எடுக்கிறேன்.யாராவது கேட்டா அப்போதான் கூட்டம் இருக்காதுன்னு ஒரு விளக்கம் வேற.

அம்மா துணி துவைச்சுக் குடுக்கும் போது ஒரு சட்டை போடப் பத்து சட்டைய கலைச்சு போடும் போது தெரியாத வலி, நல்லா இஸ்திரி போட்டு கிளம்பும் போது மேஸ்திரி மாதிரி கிளம்பினாலும் ஆபிஸ் வர்றதுக்குள்ள கிழிஞ்ச பிளாஸ்திரி மாதிரி ஆகும் போது தெரியுது.அன்னைக்கு தான் டிரெயின்ல கூட்டம் அதிகமா இருக்கும்.

நான் நல்லா தூங்கும் போது மட்டும் ஜெயிக்கிற இந்தியா,முழிச்சு இருந்து ஆர்வமா பார்க்கும் போது தோத்து போறாங்க. அது மாதிரி நான் நல்லா எழுதி இருக்கிறதா நினைக்கிறப் பதிவு எல்லாம் பல்ப் வாங்குது.மொக்கை பதிவு பிரகாசமா எரியுது.

யாருக்காவது டிப்ஸ் குடுத்து அந்த ஷேர் நஷ்டத்துல போனா இதெல்லாம் சகஜம்னு சொன்னாலும் நமக்கு யாராவது குடுத்த டிப்ஸ் இப்படி ஆனா அத மனசு ஏத்துக்க மாட்டேங்குது.

பதிவு எழுத எதுவும் கிடைக்காம மீள் பாத்து போடலாம்னு ரொம்ப நேரம் யோசிச்சு என்ன பண்ணலாம் தெரியாம யார் பதிவிலையாவது இருந்து உருவி பதிவா போடலாமான்னு யோசிக்கிற லெவலுக்கு வந்துட்டேன். (இப்பத்தான் என் பதிவ ஒரு இடத்துல பார்த்தேன்.என் பதிவுக்கு கூட இப்படி ஒரு மரியாதையா இல்லை வேற ஏதாவது இருக்கா தெரியலையே)

எக்ஸாம்ல கூட பத்து பாயின்ட் எழுதாத நான் பதிவு எழுத ஆரம்பிச்சப் பிறகு பத்து பாயிண்ட் எழுத பெரும் முயற்சி எடுத்து பெருமூச்சி விடுறேன்.

டிஸ்கி :

எந்த பெண்ணையாவது சைட் அடிச்சாலும் உடனே அதுக்கு கல்யாணம் நடக்குதுன்னு கண்டுப்பிடிச்சி சைட் அடிக்காம இருந்தாலும் கல்யாணம் நடக்குது.

என்ன பண்ணலாம்..

15 comments:

Subankan said...

//எந்த பெண்ணையாவது சைட் அடிச்சாலும் உடனே அதுக்கு கல்யாணம் நடக்குதுன்னு கண்டுப்பிடிச்சி சைட் அடிக்காம இருந்தாலும் கல்யாணம் நடக்குது.
//

வந்து நான் காட்டுற பெண்ணைக் கொஞ்சம் சைட் அடிங்களேன். அப்படியாவது..

நையாண்டி நைனா said...

good improvement.

மணிஜி said...

சங்கவியை சைட் அடிடா ராசா...

துபாய் ராஜா said...

இதிலிருந்து தாங்கள் கூற விரும்பும் கருத்து என்ன அரவிந்த்.... ??!! :))

லோகு said...

ஒண்ணுமில்லை.. இது எல்லாம் மனப்பிராந்தி தான்.. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க எல்லாம் சரி ஆயிடும்..

பிரபாகர் said...

//இன்னும் நாலு மிதி வாங்கி இருந்தா இனிமே உதவிக்கு போக மனசு வராதோ என்னமோ.//

அப்படில்லாம் பின் வாங்ககே கூடாது. இன்னும் பத்து மிதி வாங்கினாலும் செய்யணும்... சும்மா சொல்றேன், மிதிவாங்காமல் உதவுவது எப்படின்னு நைனா, ராஜுகிட்ட கேளு, சொல்லி தருவாங்க.

//யாராவது கேட்டா அப்போதான் கூட்டம் இருக்காதுன்னு ஒரு விளக்கம் வேற.//

சின்ன பையன் அர்விந்த்... இப்பவேவா? இதெல்லாம் நாங்க பண்றது...

//நான் நல்லா தூங்கும் போது மட்டும் ஜெயிக்கிற இந்தியா,முழிச்சு இருந்து ஆர்வமா பார்க்கும் போது தோத்து போறாங்க//

எல்லா மேட்சையும் முழிச்சு பாப்பா போலிருக்கு...

பிரபாகர்.

பிரபாகர் said...

//இன்னும் நாலு மிதி வாங்கி இருந்தா இனிமே உதவிக்கு போக மனசு வராதோ என்னமோ.//

அப்படில்லாம் பின் வாங்ககே கூடாது. இன்னும் பத்து மிதி வாங்கினாலும் செய்யணும்... சும்மா சொல்றேன், மிதிவாங்காமல் உதவுவது எப்படின்னு நைனா, ராஜுகிட்ட கேளு, சொல்லி தருவாங்க.

//யாராவது கேட்டா அப்போதான் கூட்டம் இருக்காதுன்னு ஒரு விளக்கம் வேற.//

சின்ன பையன் அர்விந்த்... இப்பவேவா? இதெல்லாம் நாங்க பண்றது...

//நான் நல்லா தூங்கும் போது மட்டும் ஜெயிக்கிற இந்தியா,முழிச்சு இருந்து ஆர்வமா பார்க்கும் போது தோத்து போறாங்க//

எல்லா மேட்சையும் முழிச்சு பாப்பா போலிருக்கு...

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

ஏன் அப்படி?

தினேஷ் said...

//என்ன பண்ணலாம்..//

இருக்குற போதை தெளிய ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடியப்பா நீ..

தினேஷ் said...

//அம்மா துணி துவைச்சுக் குடுக்கும் போது ஒரு சட்டை போடப் பத்து சட்டைய கலைச்சு போடும் போது தெரியாத வலி, நல்லா இஸ்திரி போட்டு கிளம்பும் போது மேஸ்திரி மாதிரி கிளம்பினாலும் ஆபிஸ் வர்றதுக்குள்ள கிழிஞ்ச பிளாஸ்திரி மாதிரி ஆகும் போது தெரியுது.அன்னைக்கு தான் டிரெயின்ல கூட்டம் அதிகமா இருக்கும்.//

அந்த சட்டைய துவைக்காமல் எத்தனை நாள் போடுவீர்கள் என்பதை ஏனய்யா மறைத்துவிட்டீர்கள்...

ஆரூரன் விசுவநாதன் said...

இரும்புத்திரையே இப்படிச் சொன்னா.....மத்தவங்க என்ன சொல்லறது....


//நான் நல்லா தூங்கும் போது மட்டும் ஜெயிக்கிற இந்தியா,முழிச்சு இருந்து ஆர்வமா பார்க்கும் போது தோத்து போறாங்க. அது மாதிரி நான் நல்லா எழுதி இருக்கிறதா நினைக்கிறப் பதிவு எல்லாம் பல்ப் வாங்குது.மொக்கை பதிவு பிரகாசமா எரியு//

சரி....சரி..... விடு நைனா.....

Raju said...

எப்பா கணேஷ் & சிபி கொஞ்சம் கவனிங்கப்பா அண்ணனை, என்னனமோ யோசிக்கிறாப்ல‌....
:-)

ஈரோடு கதிர் said...

//ஞாபகம் வரும் போதெல்லாம் போய் அடிச்சுட்டு வந்து இருக்கேன்//

திரும்ப திரும்ப அடிச்சு... மப்பு ஜாஸ்தி ஆகி பிளாட் ஆனதேயில்லையா

Unknown said...

//.. கதிர் - ஈரோடு said...

//ஞாபகம் வரும் போதெல்லாம் போய் அடிச்சுட்டு வந்து இருக்கேன்//

திரும்ப திரும்ப அடிச்சு... மப்பு ஜாஸ்தி ஆகி பிளாட் ஆனதேயில்லையா ..//

நல்லா கேக்கிராய்ங்கையா டீடைலு...!

Nathanjagk said...

... எ... ஏ.... ​ஹேய்... இந்தா... அட... ஏய்.......! இன்னாது இது தம்பி இப்படி பின்னிப் பினாயிலெடுத்து தத்துவமா பிழியறாரு!!! எல்லாமே நல்லா இருக்குதுங்கோ!
//யார் பதிவிலையாவது இருந்து உருவி பதிவா போடலாமான்னு //
இதுதாம்பா ஒரிசினெல் கொலவெறி - மத்ததெல்லாம் டுபாக்கூர்!
இதுக்காகவே அரவிந்துக்கு பதிவுலகம் சிலை வக்கலாம்!