Saturday, October 3, 2009

திருவிளையாடல் ரீமேக் - கும்மி போட்டி

தண்டோரா அண்ணன் தான் இதில் பாண்டிய மன்னர் இல்ல இல்ல சோழ மன்னர்.கவிதை கலந்துரையாடல் நடத்தும் போது அவருக்கு ஒரு சந்தேகம் வருகிறது.தமிழர்கள் இயற்கையாகவே கும்மி அடிப்பார்களா இல்லை யாரையாவது பார்த்து மானிட்டர் (காப்பி அவர் உடம்புக்கு ஒத்துக்காதாம்) அடிப்பார்களா என்ற மாபெரும் சந்தேகம் வருகிறது.சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பரிசு.முடியாமல் போனால் நாடு கடத்தல் என்று அறிவிக்க சொல்கிறார்.

உடனே ஊர் முழுக்க தண்டோரா (அண்ணன் இல்ல..சரி உங்களுக்கும் வேணாம்..எனக்கும் வேணாம்..முரசு - அட இப்படி சொன்னா என்னை விஜயகாந்த் கட்சி என்று சொல்லி விடுவார்கள்..கொட்டு - இப்படி சொன்னா கொட்டுவார்கள்..சரி கொட்டிட்டுப் போகட்டும்..) போடுகிறார்கள்.இல்ல கொட்டு அடிக்கிறார்கள்.

விஷயத்தை முழுதாக கேட்க விரும்பாத ஒரு முந்தரிக்கொட்டை "பரிசு பணம் எவ்வளவு.."

அறிவிப்பு செய்பவன் .. "பத்து ரூபாய் கட்டு.."

"பத்து ரூபாய் கட்டா..நான் பார்த்தேயில்லையே.."

"முழுசா சொல்ல விடு..பத்து ரூபாய் கட்டு பத்து.."

"ஐயோ எனக்கு கிடைக்காது..எனக்கு இல்ல..இல்ல..கிடைக்காது..போச்சே.." என்று புலம்பியபடியே பாருக்குள் திரிந்து கொண்டிருக்கிறார் அரவிந்த்.கையில் கவிதை புத்தகம்,வெற்றுத்தாள்.அந்த காகிதத்தில் புத்தகத்தில் இருக்கும் கவிதைக்கு எதிர்கவிதை எழுதி பழகுகிறார். போனில் "அந்த எட்டுப் பத்து ஸ்பேனர எடுத்து அந்த நட்டக் கழற்று.." என்று சொல்லியபடியே வரும் நையாண்டி நைனாவின் காதில் விழுகிறது.

"தம்பி..நான் வேணா உனக்கு உதவி செய்யவா.."

"உபத்திரத்திலே முடியாதே.." என்று அரவிந்த் சந்தேகத்துடன் கேட்கிறார்.

"நீ வேணா சோதித்துப் பார்..சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்.."

"எப்படி..எப்படி.." என்ற அரவிந்தைப் பார்த்து

"ஏன் இப்படி..அப்படி திரும்பு..கேள்வி கேள்..அல்லது நான் கேட்கட்டுமா.."

"இல்ல எனக்கு கேட்கத்தான் தெரியும்.."

"பார்த்தாலே தெரியுது.." என்று விக்கல் எடுத்த்க் கொண்டே நக்கல் செய்கிறார் நைனா.

"கமலே சொல்லியிருக்கிறார்..கேள்வி கேட்குறது ரொம்ப ஈஸி..பதில் சொல்றது தான் கஷ்டம்னு.."

"டேய் கமல விடுங்கடா..அந்தப் படம் ரீலிஸாகி ரெண்டு வாரம் ஆச்சு..வேட்டைகாரன வம்புக்கு இழுங்க.."

"சரி கேள்வியை ஆரம்பிக்கிறேன்..பிரிக்க முடியாதது.." என்று அரவிந்த் தொடங்குகிறார்.

"குவாட்டரும் ஊறுகாயும்..வைகோவும் வெளி நாட்டு வரலாறும்..நைனாவும் நையாண்டியும்..எப்பூடி.."

"ஆண்டியும் கோமணமும்..ஒரு கேள்விக்கு ஒரு பதில் தான்.."

"பிரிக்க வேண்டியது.."

"பாட்டிலும் மூடியும்.." என்று நைனா சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்க்கிறார்.

"சங்கீதம் பற்றி ஏதாவது.."

"பாட்டில அடியில ரெண்டு தட்டி மூடியத் திருகும் போதும் கேட்குமே..அதுவா சங்கீதம்.."

"நல்ல காம்பினேஷன்.."

"சரக்கும் பிரியாணியும்.."

"சுமார் காம்பினேஷன்.."

"குவாட்டரும் வாட்டரும்.."

"சப்பக் காம்பினேஷன்.."

"சரக்கும் தயிர்சாதமும்.."

"அழிக்க முடியாதது.."

"பதிவும் மொக்கையும்.."

"குசும்புக்கு.."

"நைனாவாகிய நான்.."

"ஊமை குசும்புக்கு.."

"இரும்புத்திரையும் அதன் மறைவில் அரவிந்தும்.."

"கோர்த்து விடுவது.."

"டக்ளசும் ராஜூவும்"

"கும்மிக்கு.."

"நாம்.."

"போதும் தெய்வமே.." என்று கீழே குனியும் அரவிந்தைப் பார்த்து நைனா "நீ தண்டோரா அண்ணன் கால உடச்சவன்..இப்போ என் காலா.." கத்துகிறார்.

"ரெக்கார்ட் பண்ணும் போது பேட்டரி விழுந்த மாதிரி இருந்தது..அதான் செக் பண்றேன்.."

"திரு நெல்வேலிக்கே அல்வாவா.."

"ஒரே ஊர்காரன் குடுத்தா அது அல்வா இல்ல பண்டம்..சும்மா சொன்னேன்..பாட்ட சொல்லுங்க.."

"சொல்றேன் குறிச்சுகோ.." என்று சொல்லி விட்டு கள்ளிக்காட்டில் சுள்ளிப் பொறுக்கும் சிறுவன் போல நடந்து கொண்டே பாடுகிறார்.

அதை திரைமறைவில் இருந்து ஒரு உருவம் ஒட்டுக் கேட்கிறது..

அரவிந்த் சொல்லும் முன் அந்தப் பாட்டைச் சொல்லி "பத்து ரூபாய் கட்டு பத்தையும்" அமுக்கி விட ஓடுகிறது.

தண்டோரா அண்ணன் பாடச் சொல்கிறார்..

"அ முதல் அக்கு தானடா..
அக்கா பொண்ணு கிக்குத் தானடா..
மாமன் பொண்ணு மக்குத் தானடா..
அத்தை பொண்ணு .."

சொல்வதற்குள் தடுத்து நிறுத்துகிறார் மன்னர் தண்டோரா.அதற்குள் குறிக்கிட்டு அமைச்சர் டக்ளஸ் எழுந்து அந்த பாட்டில் குறை இருக்கிறது என்று சொல்கிறார்.(கால்ஷீட் தரலைன்னா இப்படித்தான் நடக்கும்..)

அந்த உருவம் யார் என்று பார்த்தால் சூரியன்.

அவர் மீது இருந்த கோபம் டக்ளஸ் மீது திரும்புகிறது.

"நான் எழுதுன பாட்ட எவனோ ரீ-மிக்ஸ் பண்ணியிருக்கான்..அவன பிடிக்காம பாட்டில் குறைக் கண்டுப்பிடித்ததால் உன்னை குஜராத்துக்கு நாடு கடத்துகிறேன்.." என்று தண்டோரா டக்ளஸை நாடு கடத்துகிறார்.

"இது நான் எழுதின பாட்டு அதனால அந்த பத்து ரூபாய் கட்டு எல்லாம் எனக்குதான் சொந்தம்.." என்று பரிசை அவருக்கே அறிவித்து கொள்கிறார்.

"நல்லவேளை இந்தப் பதிவ நான் எழுதினேன்..டக்ளஸ் எழுதியிருந்தா என்னை ஆப்கானிஸ்தான் அனுப்பி இருப்பாரு.." என்று நினைத்துக் கொண்டே நைனாவுடன் மும்பை திரும்புகிறார் அரவிந்த்.

10 comments:

ஈரோடு கதிர் said...

சூப்பர் அரவிந்த்

//போதும் தெய்வமே.." என்று கீழே குனியும் அரவிந்தைப் பார்த்து நைனா "நீ தண்டோரா அண்ணன் கால உடச்சவன்..இப்போ என் காலா.." கத்துகிறார்.//

இது எப்போ
கால ஒடைச்சது

சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது

ஆச்சரியம் ஆனால் உண்மை, அரவிந்த் இடுகையில் "டிஸ்கி" இல்லை

மணிஜி said...

/பிரிக்க முடியாதது//

நைனாவும்..நக்கலும்..(இப்ப உன்னையும் அந்த லிஸ்டுல சேர்த்துட்டேன்)போதீஸ்ல சொல்லி உனக்கு டிஸ்கவுண்ட் தர சொல்றேன்

பிரபாகர் said...

//"கோர்த்து விடுவது.."

"டக்ளசும் ராஜூவும்"

"கும்மிக்கு.."

"நாம்.."//

தம்பிங்க டார்ச்சர் தாங்க முடியலப்பா....

கடவுளே எங்கள இந்த மும்மூர்த்திங்ககிட்ட இருந்து காப்பாத்துப்பா....

பிரபாகர்.

டிஸ்கி

ரொம்ப நல்லா இருக்கு தம்பி கற்பனையும் புனைவும்....

லோகு said...

அட்டகாசம் அண்ணா.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. சூப்பர்..

Raju said...

ஃப்ரீய வுடு ஃப்ரீய வுடு மாமேய்ய்ய்...!

துபாய் ராஜா said...

அருமை அரவிந்த்.

அடைப்புக்குறிக்குள் இருப்பது எல்லாம் அட்டகாசம்.

காமெடி கூட்டணி கலக்கலோ கலக்கல்.

தினேஷ் said...

திருவிளையாடல் .. பிராமதம்..

பாட்டில அடியில ரெண்டு தட்டி மூடியத் திருகும் போதும் கேட்குமே..அதுவா சங்கீதம்---வாசமான சங்கீதம்

அவ்வ்வ்வ்வ்

ஆ.ஞானசேகரன் said...

//"நல்லவேளை இந்தப் பதிவ நான் எழுதினேன்..டக்ளஸ் எழுதியிருந்தா என்னை ஆப்கானிஸ்தான் அனுப்பி இருப்பாரு.." என்று நினைத்துக் கொண்டே நைனாவுடன் மும்பை திரும்புகிறார் அரவிந்த். //

கலக்கல்

Subankan said...

ஆகா, கலக்கல்

Cable சங்கர் said...

மன்னர் தண்டோரா வாழ்க,வாழ்க..