Friday, October 2, 2009

கிருஷ்ணார்ஜூன உறவுகள்

எனக்கு பல நாளாகவே இந்த சந்தேகம் உண்டு.கிருஷ்ணர் ஏன் குருஷேத்திரப் போரின் போது பாண்டவர்களின் பக்கம் இருக்க வேண்டும்.சரி பாண்டவர்கள் அத்தைப் பிள்ளைகள் அந்த பாசம் என்று வைத்து கொண்டாலும் ஏன் குறிப்பாக அர்ஜூனன் மீது தனிப்பட்ட பாசம்.அவனுக்கு மட்டும் தேரோட்டியாய் வேலை செய்ய வேண்டும்..எங்கு போனாலும் ஏன் அவனுக்கு மட்டும் "வால்"(இதுல எதுவும் உள்குத்து இல்ல) பிடிக்க வேண்டும்.அவனுக்கு தங்கையைக் கட்டிக் குடுத்த காரணத்தினாலா..

கிருஷ்ணனும்,அர்ஜூனனும் மோதி இருந்தால் எப்படி இருக்கும்..ஒருமுறை சோதனை செய்ய அப்படி ஒரு சண்டை நடந்தது.ஆக்ரோஷமான சண்டை.உக்கிரமாக மோதுகிறார்கள்.சண்டையின் முடிவில் கிருஷ்ணன் சொல்கிறார்.."இது முன்னோட்டம் தான்..விரைவில் இது மாதிரி ஒரு நிலையில் நீ இருந்து உறவுகளை எதிர்ப்பாய்.." - அவன் அன்று பொடி வைத்து சொன்னது தான் பின்னாளில் நடந்த குருஷேத்திர யுத்தம்.

கிருஷ்ணன் வேடனின் அம்பு பட்டு இறந்தப் பிறகு அர்ஜூனனின் காண்டீபம் வேலை செய்யவில்லை.காரணம் அர்ஜூனன் தான் கிருஷ்ணன்.இந்த மாய கிருஷ்ணன் தான் அவனின் சக்தியே.

இதை நிஜ வாழ்விலும்,நிழல் வாழ்வான சினிமாவிலும் பொருத்திப் பார்க்க முடியும்.பழமொழியும் உண்டு.

"மச்சான் தயவு இருந்தாதான் மலை ஏற முடியும்" - இது பழமொழி.

நிஜ வாழ்வின் உதாரணம்..முத்துக் குளிக்கப் போகும் மீனவன் கடலில் மூழ்குவதற்கு முன் தன் மைத்துனனிடம் தான் அவன் கட்டி இருக்கும் கயிற்றின் முனையை கொடுப்பான்.

சினிமாவுல (எந்த பதிவு எழுதினாலும் சினிமா உதாரணம் காட்டாம இருக்க முடியாதே..) இதற்கு ஒரு அருமையான உதாரணம் தான் பொல்லாதவன்.அண்ணனைத் தம்பியே கொல்வான்.சாகும் தருவாயில் அண்ணன் சொல்லும் வசனம் "நான் செத்து போயிட்டா உன்ன உடனே கொன்னுருவாங்கடா.."

இப்படி எனக்கு ஒரு உறவு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால் - முதலில் வருவது தம்பி தான்.

சினிவாவில் ஆரம்பித்து விவாதிக்க முடிந்த எல்லாவற்றையும் விவாதிக்கும் ஒரு நண்பன்.அவனோடு படம் பார்க்கவே நான் விரும்புவேன்.சீட்டு விளையாடும் சமயத்தில் தெரியும் எங்களின் நட்பு.கழுதை என்ற சீட்டாட்டம் விளையாடும் போது நான் பெரும்பாலும் பெரிய சீட்டுகளை ஒளித்து இருப்பேன்.எங்க மாமா பொண்ணு,சித்தி பொண்ணு,சித்தி பையன் யாராவது மாட்டினா அப்ப வெட்டு குடுக்கறதுக்குனே அது இருக்கும்.தம்பி வெட்டு வாங்குற நிலைமை வந்தால் வெட்டு சின்ன கார்டா இருக்கும்.

கிரிக்கெட் விளையாடும் போது எதிரெதிர் அணியில் விளையாடினால் அவன் விளையாட வந்தா நான் பந்துப் போடுவதை தவிர்ப்பேன்.இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்த்து ஒரே அணியில் விளையாடுவோம்.அப்போ எதிர் டீம் வாங்கும் ஹிட்ஸ்களும்,பின்னூட்டங்களும்(ஸாரி அடிகளும்) சொல்லி மாளாது.ரூல்ஸ் அப்படி.ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங் பண்ணலாம்.இரண்டாவது ஆடும் அணி தொட முடியாத அளவுக்கு அவர்கள் உடம்பில் அடி விழும்.

அதே கதை மும்பை வந்தப் பிறகும் நடந்தது.சவுத் வெர்சஸ் நார்த் என்று ஆரம்பித்தார்கள்.நாங்கள் முடித்து வைத்தோம்."மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்" அப்படி ஒரு நிலைமை அன்று உள்ளுக்குள்ளே குமைந்தார்கள்.அந்த மேட்ச் முடிந்தப் பிறகு விளையாடுவதேயில்லை ஒரு வருடம் ஆகி விட்டது கிரிக்கெட் விளையாடி.அன்று மட்டும் அவர்கள் அது போல நடக்காமல் எப்போதும் போல கலந்து ஆடி இருந்தால் அல்லது ஒரு தமிழ் பேசுபவன் அந்த அணியில் விளையாடி இருந்தால் ஆக்ரோஷம் இருந்து இருக்காது.

காரணம் அர்ஜூனனுக்கு எதிராக கிருஷ்ணன் ஆயுதம் எடுப்பதில்லை.அவன் அருகில் இருக்கும் போது ஆயுதமே எடுக்காமல் ஒரு தேரோட்டியாய் அமர்ந்து இருக்கிறான்.பீஷ்மர் ஏவும் ஆயுதங்களைக் கூட அர்ஜூனன் மீது படாமல் அவன் ஏற்றுக் கொள்கிறான்.

வாழ்க இந்த உறவு..

டிஸ்கி :

நிஜத்தில் நான் அர்ஜூனனாக இருந்ததேயில்லை.பதிவுலகத்திற்கு வந்தப் பிறகு நான் அப்படி மாறி விட்டேன்.காரணம் நிறைய கிருஷ்ணர்கள் தரும் அன்பு,பாசம்,உபதேசம் மற்றும் இன்னும் அகராதியில் சேர்க்கப்படாத (சொல்லப் போனால் இன்னும் கண்டுப்பிடிக்காத) உணர்வுகளைச் சொல்லும் வார்த்தைகள்.நான் அதற்கு என்றும் அடிமை.நான் யாரை சொன்னேன் என்று அவர்களுக்கே தெரியும்.அதனால் கிருஷ்ணர்கள் பெயர்கள் சொல்லப்படவில்லை.இன்னும் என்னை செம்மையாக்க அவர்கள் எனக்கு உதவுவார்கள்.

10 comments:

லோகு said...

ஒரே பாச மழையா இருக்கு...

அண்ணன் தம்பின்னா கட்டி புரண்டு சண்டை போடாம இருக்க முடியுமா... எனக்கு நம்பிக்கை இல்ல...

பிரபாகர் said...

தம்பி,

நெகிழ்ச்சியாய் ஒரு பதிவு உங்களிடமிருந்து. மனம் முழுதும் மகிழ்வாய் உணர்கிறேன்.

நீங்களெல்லாம் சாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. எண்ணும் யாவும் உங்களை சேரும்.

தம்பியோடு கொண்டிருக்கும் உமது உறவு போல் தான் நான் என் உடன் பிறந்த த்ம்பியோடு கொண்டிருக்கும் உறவும்... 'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்... 'என்றால் என் போல் நிறைய தம்பிகளை உடையான்? பலமாய் உணர்கிறேன்.

மிக நல்ல பதிவு, வாழ்த்துக்கள் உன் அன்பு அண்ணனிடமிருந்து.

பிரபாகர்.

Purushothaman said...

u know my dear me,
it is the fate that gouravas must be defeated only by the components of NARA NARAYNA. Naran Arjun and Narayan is Lord Krsihna

துபாய் ராஜா said...

அருமை அரவிந்த்.

ரொம்ப டச்சிங்கா இருக்கு...

வாழ்க வளமுடன்.

அன்பே சிவம்.

ஈரோடு கதிர் said...

அர்ஜுனா...ச்சே அரவிந்த்

வலையுலகில் எனக்கும் நிறைய கிருஷ்ணர்கள் உண்டு.

நல்ல இடுகை அரவிந்த்

உங்கள் அன்பு ண்ணன் பிரபாவை கேட்டதாகச் சொல்லுங்கள் (இஃகிஃகி)

துபாய் ராஜா said...

// லோகு said...
ஒரே பாச மழையா இருக்கு...

அண்ணன் தம்பின்னா கட்டி புரண்டு சண்டை போடாம இருக்க முடியுமா... எனக்கு நம்பிக்கை இல்ல...//

லோகு,ஒரு குறிப்பிட்ட வயசு வரைதான் கட்டி புரண்டு சண்டையெல்லாம். அந்த வயசுலகூட நம்ம உடன்பிறப்பு மேல யாராவது கை வச்ச நாம நிச்சயம் பார்த்துகிட்டு இருக்கமாட்டோம்.

அண்ணன் தம்பி உறவென்பது ஆண்டாண்டு காலமானாலும் மாராத ஒரு அற்புதமான உறவு.....

ஆ.ஞானசேகரன் said...

//நிஜ வாழ்வின் உதாரணம்..முத்துக் குளிக்கப் போகும் மீனவன் கடலில் மூழ்குவதற்கு முன் தன் மைத்துனனிடம் தான் அவன் கட்டி இருக்கும் கயிற்றின் முனையை கொடுப்பான்.//

அட அப்படியா?

ஆ.ஞானசேகரன் said...

நெகிழ்ச்சியான இடுகை

Raju said...

டொய்ன்ட்ட டொய்ன்ட்ட டொய்ன்ட்ட டொய்ன்ட்ட டொய்ய்ய்ய்ங்

தினேஷ் said...

என்னாதிது ?

தம்பி அடிக்க போறான்னு சமாதான தூது ஓலையா இது ?