Friday, October 16, 2009

பேராண்மை - திரை விமர்சனம்

எனக்கு இயக்குனர் ஜனநாதன் மீது ஒரு பெரிய மரியாதையே உண்டு.அவர் படங்கள் எல்லாம் தீபாவளியை ஒட்டியே வெளியாகும்.இயற்கை படம் பார்த்த நாளில் இருந்து நண்பர்கள் அனைவரும் அவர் படம் பார்க்க விரும்புவோம்.அதே ஆசையில் இன்று பேராண்மை பார்க்க முடிவு செய்தேன்.முதல் பத்து நிமிடம் போதும் பார்வையாளனைக் கட்டி போட ஆனால் கடைசி வரை அவரால் அதை செய்யவே முடியவில்லை.அந்த அளவிற்கு திரைக்கதையில் தொய்வு.நான் லாஜிக்கே பார்க்க கூடாது என்று நினைக்கும் விஜய் படங்களையே விட்டு வைக்காத நான் எனக்கு பிடித்த இயக்குனரை விட்டு வைப்பேனா.இனி ஒரே வெளுப்பு தான்.

1.ஸார் நீங்க என்ன சொல்ல வர்றீங்க அந்த ஏவுகணையை ஏவினால் பசுமை புரட்சியில் எப்படி மாற்றம் வரும்.நிலாவில் விவசாயம் செய்ய முடிவு செய்து இப்படி ஒரு முடிவை சொன்னீர்களா.தமிழ்நாட்டின் விவசாய நிலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?

2.எருமைக்கு பிரசவம் பார்ப்பது இவ்வளவு எளிதா..நீங்கள் பிரசவம் செய்ய வேண்டாம் நேரிலாவது பார்த்தது உண்டா..(நான் பார்த்து இருக்கிறேன்..சிக்கலான பிரசவம் ஒரு நாளுக்கும் மேல் நீடிக்கும்..)ஹீரோ கை விட்டால் உடனே வந்து விடுமா..கோமணம் கட்டி நடித்தால் அவர் என்ன கமலா..)

3.படம் ஆரம்பித்தப் பிறகு வசனங்களில் தான் எத்தனை சென்ஸார்..ஸார் நான் பாம்பு பார்த்ததேயில்லை..ஏன் இந்த ஆபாசம் ஜனநாதன்..(இயற்கை படத்தில் தொப்புளைக் கூட காட்டாமல் இருந்த காரணத்தினால் தான் அந்த படம் எனக்கு ஒரு ஈர்ப்பையே உண்டாக்கி இருந்தது..)

4.இந்த படத்திற்கு வடிவேல் தேவையா..அவர் என்ன சாதித்து விட்டார்..உங்களின் முதல் இரண்டு படத்தில் பெரிய காமடியனே கிடையாதே..பி மற்றும் சி செண்டரில் ஓட அவர் தேவை என்றால் உங்களுக்கு கதை மீது நம்பிக்கை இல்லையா..

5.ஜெயம் ரவிக்கு எல்லா நவீன ஆயுதங்களையும் இயக்க தெரிகிறதே எப்படி..பொன்வண்ணன் இப்படி சொல்கிறார்..நான் யாருக்கும் ரிவால்வார் கூட குடுத்தது கிடையாது.. உனக்கு தான் தந்து இருக்கிறேன்..ஜெயம் ரவி அவர்களைப் பார்க்க கூட இல்லை..அவர்கள் இந்த காரியதிற்கு தான் வந்து இருப்பார்கள் என்று எப்படி கண்டுப்பிடித்தார்..(படம் பார்க்கும் போது இப்படி சந்தேகம் கேட்ட ரசிகருக்கு அவர் நண்பன் சொன்னது..இயக்குனர் சொல்லியிருப்பார் என்று..)

6.பொன்வண்ணன் விருது வாங்கி கொள்கிறார்..அந்த பெண்கள் கூட உண்மையை சொல்லவில்லையா..(என்ன கொடுமை அரவிந்த் இது..)

7.இது ஆதி காலப் படங்களை எனக்கு நினைவுப் படுத்தியது.தாயம் ஒண்ணு(அர்ஜூன் மற்றும் ஐந்து பெண்கள்) போய் எதிரி முகாம்களை அழிப்பார்கள்.அவரை காதலிக்கும் பல்லவி இறந்து விடுவார்.இங்கு ரவியைக் காதலிக்கும் சரண்யா இறந்து போகிறார்.திரும்பி பார்க்கும் போதே தெரிந்து விடுகிறது அவர் கதை முடிந்து விடும் என்று.

8.ஆயுதங்கள் இல்லாமல் இருக்கும் ஜெயம் ரவி மற்றும் அந்த மூன்று பெண்களைப் பார்த்து மெஷின் கன் வைத்து இருக்கும் வில்லன் ஆட்கள் பயந்து ஓடுகிறார்கள்..

9.துப்பாக்கி சண்டை போடுவது வீடியோ கேம் விளையாடுவதைப் போல் உள்ளது..

10.கமல் நடித்த விக்ரம் படத்தில் வரும் ஏவுகணை,கேப்டன் மகள் படத்தில் வருவது போல் பிரதமரைக் கொல்ல பயன்படுத்தும் ராக்கெட் இப்படி 1980களில் வந்த படங்களின் சாயல் எதற்கு..

11.குறிப்பாக அந்த ஐந்து பெண்களைத் தேர்வு செய்யப்பட்ட காரணத்தை ஊர்வசி கேட்டால் அவர்கள் தான் பயிற்சிக்கு ஒத்துயுழைக்க மறுத்தார்கள் என்று ஒரு காரணம் சொன்னதைக் கேட்டு நான் சிரித்து விட்டேன்.அந்த காட்சிக்கு முன் தனியாக அந்த பெண்கள் மட்டும் கடுமையாக பயிற்சி எடுப்பது போல் ஒரு காட்சி வரும்..என்ன எடிட்டர் இதெல்லாம்..

12.துரத்தி அடிக்கப்பட்டப் பழங்குடியினர் என்ன ஆனார்கள்..(கையால் நடந்து சண்டை போடும் ஜெயம் ரவியின் அண்ணனின் சண்டை அருமை..ரன் படத்தில் வருவதை விட அருமையாக இருந்தது.)

இப்படி இன்னும் பல ஓட்டைகள்..என்னால் சொல்ல முடியவில்லை.(இதுக்கே என் கோமணம் கிழிவது நிச்சயம்..)

மொத்தமாக் வைத்து பார்த்தால் பேராண்மை படம் - காயடிக்கப்பட்ட ஒரு பெரிய காட்டு யானை.(கதை இல்லாமல் வீணாக செலவளித்த ஐங்கரனின் பணம்)

டிஸ்கி :

பேராண்மை - ஆண்மை குறைவு.. காட்டில் சிட்டுக் குருவி லேகியம் கிடைக்குமா..

இதெல்லாம் பத்தாது என்று டயர் பஞ்சர்..தள்ளிக் கொண்டு கடையைத் தேடி அலைந்து அதற்கும் ஒரு தனி செலவு..

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை..யாராவது மேப் தர முடியுமா..ஜெயம் ரவி இப்படிதான் மேப் பார்த்து விட்டு சாதித்தார்.

ஆக மொத்தம் ஐங்கரனுக்கு நேரம் சரியில்லை.இன்னும் ஒரு பதிவு இருக்கிறது..பாய்ந்து வரும் இரண்டு நாட்களில்..பதிவு எழுத ஆரம்பித்த உடன் அதை எழுத இருந்தேன்.

பிற்சேர்க்கை

நான் முதல் நாள் பார்க்கும் படம் எல்லாம் எப்படி மொக்கையாகவே இருக்கிறது என்றே புரியவில்லை.ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது..என் தம்பி தப்பி விட்டான்..(கந்தசாமி பார்த்ததில் இருந்து படத்திற்கு போவது இல்லையாம்).After Effects and Side Effects.

என்ன நடந்தாலும் நான் போவேன்.பார்ப்பேன்..கிழித்து தோரணம் கட்டுவேன்.

சந்தோஷம்

வில்லனுக்கு பிராட் பிட் சாயல்.

சந்தேகம்

வசுந்தராவிற்கும்,இயக்குனருக்கும் சண்டையா ? ஒரு பாடலில் அவர் இல்லை.யாரோ ஒரு துணை நடிகை திரும்பி கொண்டு ஆடுகிறார் .

அதிசயம்

ஜெயம் ரவி இங்கிலீஸ் பேசாமல் இருந்து இருந்தால் அது தான் அதிசயம்.

இன்னொரு டிஸ்கி :

நான் உலகத்தரம் என்று வாயால் வெடிப்போம்.ஆனால் உள்ளூர் தரத்தைக் கூட தாண்ட மாட்டோம்.

13 comments:

Prathap Kumar S. said...

கலக்கல் விமர்சனம் தலைவா...

கோவணத்தை நாறு நாறா கிழிச்சிடீங்க...

//நான் உலகத்தரம் என்று வாயால் வெடிப்போம்.ஆனால் உள்ளூர் தரத்தைக் கூட தாண்ட மாட்டோம்//.
நெத்தியடி


ஆமா ஜெனநாதனுக்கு என்னாச்சு? இயற்கை, ஈ பார்த்துட்டு நானும் இவரின்ரசிகனாயிருக்கேன்..சொதப்பிட்டாரே...

Cable சங்கர் said...

aravind உங்களுக்கு அவ்வளவு மொக்கையாவா இருக்கு..????

இரும்புத்திரை said...

நன்றி நாஞ்சில் பிரதாப்

நன்றி கேபிள் அண்ணா.நான் ரொம்ப எதிர் பார்த்து விட்டேன்.அதான் காரணம் .

Ashok D said...

அரவிந்த்.. ?????????????

Unknown said...

திரை விமர்சனம் போட்டுட்டு, இயக்குனர் ஜனநாதனை விமர்சனம் செய்து இருக்கீங்களே அரவிந்த்???

செ.சரவணக்குமார் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

நண்பர்கள்,,குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

புருனோ Bruno said...

//3.படம் ஆரம்பித்தப் பிறகு வசனங்களில் தான் எத்தனை சென்ஸார்..ஸார் நான் பாம்பு பார்த்ததேயில்லை..ஏன் இந்த ஆபாசம் ஜனநாதன்..(இயற்கை படத்தில் தொப்புளைக் கூட காட்டாமல் இருந்த காரணத்தினால் தான் அந்த படம் எனக்கு ஒரு ஈர்ப்பையே உண்டாக்கி இருந்தது..)//

உண்மைதான். ஆனால் இயற்கையின் வியாபாரம் அவருக்கு பாடம் சொல்லி தந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்

Thiru said...

sariyana araivekkadu vimarsanam ..
peranmaiyin arathame theriyamaal padaththai vimarchikka vanthuviddirkal ..sariyana comedythan unkaloda..thayavu seythu inimel enth padathaiyum vimarchikkathirkal..

Unknown said...

unmayiley miga arumayana vimarsanam... ungalukku en valthukkal

SaMrAT said...

Dubba loose ah nee athu evukanai ah vechi vivasayam ila Sateelite Blog irukuna enna venymnalum ezhuthuveeya :D unoda ariva patha pularikuthu........

250WcurrentIsay said...

Wow good to see a diffrent review.... When I saw the movie everything looked positive for me... ya have pointed out many flaws.... good job.... but yep I was thoroughly entertained so not taking my word back.... Peranmai rocks IMO....

Sam said...

Thirai vimarshanam endru soli vitu kurai vimarshanam than kuduthu irukirirahal.... Neengal komanathai kilika vendum endru oru Mudivodu than kilithu irukeerhal....